நேரம் போய்க் கொண்டிருந்தது. ராஜஸ்தானித் தம்பதிகள் என்னை நீயே டிடியிடம் போய்க் கேட்டு இடம் மாறி உட்காருனு ரொம்பவே வற்புறுத்திக் கொண்டிருந்தனர். எங்கள் சாமான்களை வைக்கவும் இடம் கொடுக்கவில்லை. இரண்டு பக்கமும் கீழே உள்ள இடத்தில் அவர்கள் சாமான்களே நிரம்பி இருந்ததோடு சாப்பிடுவதற்காகப் போடப்பட்டிருந்த சின்ன மேசை மீதும் அவங்க சாப்பாட்டுப் பொருட்களையும், ஒரு கூடையையும் வைத்திருந்ததோடு அதன் கீழே உள்ள இடத்திலும் பைகளால் நிரப்பி இருந்தார்கள். என்ன செய்வாங்க இத்தனை சாமான்களோடு! ஒருவழியாக விழுப்புரமும் வந்தது. அங்கே யாரும் அதிகம் ஏறவில்லை! விழுப்புரம் வந்த சிறிது நேரத்திலேயே டிடி வந்து எனக்குப் பத்தொன்பதாம் எண் கீழ்ப்படுக்கை இருக்கை ஒதுக்கி இருப்பதாகவும், ரங்க்ஸ் மட்டும் இங்கேயே இரண்டாம் நம்பர் மேல்ப்படுக்கையில் படுக்க வேண்டும் எனவும் சொன்னார். எங்க சாமான்களை இங்கே வைக்க ராஜஸ்தானித் தம்பதி இடமே கொடுக்காததால் மேலே வைத்திருந்தோம். அவற்றை எடுத்துக் கொண்டு பத்தொன்பதுக்குப் போய் அங்கே கீழே எல்லா சாமான்களையும் வைத்தோம்.
எதிரே 21 ஆம் படுக்கை இருக்கையில் அமர்ந்திருந்தவர் ரொம்பவே உதவி செய்தார். அவர் ரயில்வே அலுவலர். மதுரையிலிருந்து வருவதாகவும் மேல்மருவத்தூரில் இறங்கிவிடுவேன் என்றும் சொன்னார். அவருடைய இருக்கைக்கு மேலே யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. அதே போல் எனக்கு ஒதுக்கிய 19 க்கு மேல் 20 ஆம் படுக்கைக்கும் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. இங்கே நான் குடியேற்றம் செய்ததும் இருவரும் சாப்பாடு கொண்டு வந்ததைச் சாப்பிட்டோம். பின்னர் ரங்க்ஸ் சிறிது நேரம் கழித்துத் தூக்கம் வருவதாகச் சொல்லிக் கிளம்பிச் சென்றார். எனக்குக் கவலையாக இருந்தது. மேலே கூரையில் ஏறும் இடத்தில் மடிப்பாக வரும். அது அரை அடிக்கு வெளிப்பக்கம் நீட்டிக் கொண்டு இருக்கும். அங்கே குனிந்து கொண்டு ஏறணும். இவரால் அப்படி ஏற முடியாது. என்ன செய்தாரோ என்று கவலை. போய்ப் பார்த்தேன். எப்படியோ எதிர்ப் படுக்கை இருக்கையின் இளைஞன் உதவியோடு மேலே ஏறி விட்டிருந்தார். என்னைப் போய்ப் படுக்கச் சொல்ல நானும் மறுபடி இங்கே வந்தேன். அடுத்துச் செங்கல்பட்டு, தாம்பரத்தில் ஒருத்தரும் ஏறவில்லை. எழும்பூர் வந்தது. இரண்டு, மூன்று பேர் ஏறினார்கள். அதில் ஒரு இளைஞனுக்கு எனக்கு எதிரில் உள்ள 21 ஆம் எண் கீழ்ப்படுக்கையை ஒதுக்கிக் கொடுத்தார் டிடி. எனக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது. இளைஞருக்குக் கீழ்ப்படுக்கையை ஒதுக்கிவிட்டு ரங்க்ஸை மேலே தான் படுக்கணும்னு சொல்லிட்டாரேனு வருத்தமா இருந்தது.
ரங்க்ஸையே வந்து அந்த இளைஞனோட பேசிப் படுக்கையை மாற்றிக்கலாமானு யோசித்துப் போய்ப் பார்த்தால் ரங்க்ஸ் நல்ல குறட்டை. இப்படியாக அன்றிரவு கழிந்தது. இரவு முழுவதும் எனக்கு ஒதுக்கி இருந்த படுக்கை இருக்கைக்கு மேலோ எதிரேயோ யாருமே வரவில்லை. இரவு முழுவதும் காலியாகவே வந்தது. விசாரித்ததில் இந்த ரயில் வாரம் ஒருமுறை செல்லும் ரயில். இதற்கு முந்தைய வாரம் சென்னை வெள்ளத்தினால் ரயில்வே நிர்வாகமே இந்த ரயிலை ரத்து செய்திருந்தது. ஆகவே இப்போதும் போனால் பிரச்னையாக இருக்குமோ என்பதால் பலரும் தங்கள் பயணச் சீட்டை ரத்து செய்துவிட்டதாகச் சொன்னார்கள். காலை எழுந்து வந்த ரங்க்ஸை மேலே யாரும் இல்லை; இங்கேயே உட்காருங்கள் எனச் சொல்ல அவரும் விசாகப்பட்டினத்தில் யாரானும் ஏறலாம்னு சந்தேகப்பட்டார். ஆனாலும் அங்கேயே உட்கார்ந்தார். மெதுவாக அன்றையப் பொழுதும் போய் விட்டது. அப்புறமாய் மாறிய டிடிக்கள் யாருமே எங்களை என்னனு கேட்டுக்கவில்லை. ரங்க்ஸாகப் போய் ஒரு டிடியிடம் விளக்கப் போக அவர் பரவாயில்லை, உட்காருங்கனு சொல்லிட்டார். நிம்மதியாக இருந்தது. மாலை ஆறேமுக்காலுக்கு புவனேஸ்வர் ரயில் நிலையம் போய்ச் சேரும் என்றார்கள். அங்கே எங்களை வரவேற்க மைத்துனரின் நண்பர் ஒருவர் வருவார் எனவும் தகவல் வந்திருந்தது.
ஆகவே புவனேஸ்வரில் இறங்கி சாமான்களை இறக்கியதுமே அந்த நண்பரை எப்படித் தேடுவது என நினைக்கையில் அவரே எங்களைக் கண்டு பிடித்தார். அவருடைய காரிலேயே எங்களைத் தங்குமிடம் அழைத்துச் சென்றார். தங்குமிடம் ஒரு குடியிருப்பு வளாகத்தில் அமைந்திருந்தது. இரு குடியிருப்புப் பகுதிகளை வாங்கி ஒன்றாக்கி விருந்தினர் விடுதியாக மாற்றி இருந்தார்கள். அதுவும் ஐந்தாவது மாடியில் இருந்தது. ஆனால் லிஃப்ட் இருந்தது. ஆகவே கொஞ்சம் நிம்மதி. மேலும் நாளை ஒரு நாள் இங்கே தங்கி ஊரைச் சுற்றிப் பார்த்துட்டுப் பின்னர் நாத்தனார் வீடுக்குப் பயணம். ஆகவே பிரச்னை இல்லை. என நினைத்தோம். அந்த விடுதியைப் பார்த்துக் கொள்பவர் அன்றிரவு ஏதோ கல்யாண வரவேற்புக்குப் போக வேண்டி இருந்ததால் எங்கள் வரவுக்காகக் காத்திருந்தார். நாங்கள் போனதும் அவர் எங்களிடம் தான் திருமண வரவேற்புக்குப் போவதாகவும் மறுநாள் காலை வந்துவிடுவதாகவும் சொன்னார். இதில் என்ன இருக்கிறது, தாராளமாய்ப் போகட்டும் என்று சொல்லிவிட்டு மேலே அறைக்குப் போய் சாமான்களை வைத்துவிட்டு விடுதியைப் பார்த்துக் கொள்பவரிடம் சொல்லிவிட்டு அவரைப் போகச் சொல்லிவிட்டு எங்களை அழைத்து வந்தவரையே ஏதேனும் நல்ல ஹோட்டலில் விடச் சொன்னோம். அப்படியே அவரும் விட எங்கள் இரவு உணவை தவா ரொட்டியுடனும், மிக்சட் வெஜிடபுளுடனும் முடித்துக் கொண்டு ஒரு ஆட்டோ பிடித்துக் கொண்டு மீண்டும் அறைக்கு வந்தோம். அறை நல்ல வசதியாகவே இருந்தது. குளிராக இருந்தபடியால் ஏசி தேவைப்படவில்லை. மின் விசிறியைச் சின்னதாக வைத்துவிட்டுத் தூங்கப் போனோம். காலை நடக்கப் போவதை அறியாமலேயே!
பி.கு. கடுமையான ஜலதோஷத்துடன் கூடிய ஜுரம்! கண்ணில் இருந்து நீர் வடிந்தபடியே இருக்கிறது. தலைவலியும் கூட. கண்களைத் திறக்க முடியவில்லை. ஆகவே தொடர்ந்து இரு நாட்களுக்காவது கடமை ஆத்த முடியாது என்பதை சந்தோஷத்துடன் தெரிவிக்கிறேன். :)

சீக்கிரமே தேறி வாருங்கள் ...
ReplyDeleteரொம்ப நன்றி.
Deleteஒடிஸ்ஸா வங்காளம் பக்கம் போனதில்லை. பார்க்கவேண்டும் என்பது வெகுநாளைய ஆசை. முடியுமாதெரியவில்லை. கிழக்கில் விசாகப்பட்டினம் விஜய நகரம் வரை போயிருக்கோம் உடல் நலம் பேணவும்
ReplyDeleteதக்க முன்னேற்பாடுகள் செய்து கொண்டு செல்லவும். நன்றி ஐயா.
Deleteகாலை என்ன நடந்தது என்று அறிய ஆவல். ஆனால் இப்போது ரெஸ்ட் எடுத்துக் கொண்டு மெதுவாக வாருங்கள்.
ReplyDeleteகாலை என்ன நடந்ததுனு பார்த்திருப்பீங்களே, ஒரு 2,3 பதிவுகள் ஷெட்யூல் செய்திருக்கேன். ஒழுங்கா வரணும். :)
Deleteplease take care. Geetha ma. very much worried.
ReplyDeleteஇப்போப் பரவாயில்லை. இருமல் பிடித்துக் கொண்டது! :)
Deleteஹையா!
ReplyDeleteஅவ்வளவு சந்தோஷமா!
Deleteவணக்கம்
ReplyDeleteநிகழ்வை அற்புதமாக படம் பிடித்து காட்டீயுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
எனது பக்கம் வாருங்கள்
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெர...:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கட்டாயமாய் வரேன் ஐயா. என் பதிவுக்கு வருகிறவங்க பதிவுகளுக்காவது போகணும்னு நினைக்கிறேன். ஆனால் முடியறதில்லை. :(
Deleteஉடல்நலம் தேறி வாருங்கள்! காத்திருக்கிறோம்!
ReplyDeleteஎண் கணக்கில் ஒரு விக்ஸ் வாங்கிக் கொள்ளவும். நேர்ல பாக்கும் போது பணம் தருகிறேன். 😀
ReplyDeleteஎனக்கு விக்ஸே ஒத்துக்காது! ஆகவே நீங்களே வைச்சுக்குங்க!
Deleteவெளியூர் போய்விட்டு வந்தால் இப்போதெல்லாம் எனக்குக் கூட ஜுரம் வந்துவிடுகிறது. இப்போது சரியாகிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். உங்களது முகநூல் பதிவுகள் படித்தேன் அதனால் சொல்கிறேன்.
ReplyDeleteவிக்ஸ் வேண்டாம், வெறும் வெந்நீரில் ஆவி பிடியுங்கள் தலை பாரம் போய்விடும்.
வாங்க ரஞ்சனி, வெளியூர் போனதால் வந்த ஜூரமாகத் தெரியலை. இந்தத் திருச்சி குளிர் ஒத்துக்கலை! :) இப்போது சரியாகிவிட்டது என்றாலும் இருமல் விடவில்லை. விக்ஸ் எப்போதுமே நான் பயன்படுத்துவதில்லை.
Deleteஉடல் நலம் இப்போது எப்படி இருக்கின்றது சகோ?
ReplyDeleteஉங்கள் அடுத்த நாள் என்ன ஆச்சு என்பதை அறிய தொடர்கின்றோம் அடுத்த பகுதிக்கு...
நன்கு தேவலை!
Deleteஆஹா... Adventure trip thaa தான் போலயே. Take care of health pls, அப்புறம் சேத்து வெச்சு எல்லாரையும் வெச்சு செய்வோம், no issues 😄
ReplyDelete