எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, October 09, 2016

ஹாஹா, தலைப்பே இல்லாமல் வந்துடுச்சு! :)

நேத்திக்கு பதிவர் ஆதி வெங்கட் வீட்டுக்குப் போனேன். நம்ம ரங்க்ஸ் தான் கூட்டிப் போனார். ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப தூரம்! அவங்க மாயவரத்திலே இருந்து பொம்மைங்க வாங்கிட்டு வந்ததாச் சொன்னதாலே நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய பொம்மைங்களை எதிர்பார்த்துப் போனால் ம்ஹூம்! அவ்வளவெல்லாம் இல்லை! என்றாலும் நல்லாவே கொலு வைச்சிருக்காங்க. ரோஷிணி சித்திரம் வரையும் வகுப்புக்குச் சென்றிருந்ததால் ஆதி மட்டும் தான் இருந்தார். சற்று நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு வெற்றிலை, பாக்கு பெற்றுக்கொண்டு அடுத்த கலெக்‌ஷனுக்குக் கிளம்பினோம். கீழே ஆதி வீட்டுக் கொலுவின் படங்கள். செல்லில் எடுத்தது. தொ.நு.நி. ஒண்ணும் சொல்லாதீங்கப்பா! 




நம்ம வீட்டிலே நிவேதனத்துக்கு நேத்திக்குக் குணுக்கு செய்தேன். குணுக்குனு பெயர் தானே தவிர கிட்டத்தட்டத் தவலை வடை மாதிரித் தான் கொஞ்சம் சின்ன அளவில் செய்தேன். குணுக்குக்கு எங்க மாமியார் பச்சரிசி மட்டும் போடுவாங்க. அதோடு சேர்த்தே எல்லாப் பருப்புக்களையும் நனைச்சு வைப்பாங்க. நாம தான் தனி ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ ரகமாச்சே, இதிலும் தனியாப் பண்ணலைன்னா எப்பூடி? 

என்னோட செய்முறைப்படி விநியோகத்துக்காகக் குணுக்கு தயாரிக்கையில் எவ்வளவு பேர் வருவாங்க, நீங்க எவ்வளவு தின்னு  தீர்ப்பீங்கனு எல்லாத்தையும் கணக்கிலே எடுத்துக்கணும் இல்லையா? இது போணியாகலைனாலும் கவலை இல்லை. குணுக்காகவோ, அல்லது மாவாகவோ வைச்சுட்டா மறுநாளைக்கு ஒரு கை இல்லை இரண்டு கையாலும் பார்த்துடலாம். ஹிஹிஹி, ஆனால் நேத்திக்குப் போறாமல் போச்சு என்பது தான் உண்மை! அது தனியா இருக்கட்டும். இப்போக் குணுக்குக்கான படங்களும், நம்ம செய்முறையும் பார்ப்போமா!

இட்லி புழுங்கலரிசி ஒரு கிண்ணம் முக்கால் கிண்ணம் பச்சரிரி. இரண்டையும் கழுவிக் களைந்து தனியாக ஊற வைக்கவும். துவரம்பருப்பு முக்கால் கிண்ணம், அரைக்கிண்ணம் கடலைப்பருப்பு ஒன்றாகக் கழுவிக் களைந்து தனியாக ஊற வைக்கவும். அரைக்கிண்ணத்திற்குக் கொஞ்சம் குறைவாக உளுந்து கழுவிக் களைந்து தனியாக ஊற வைக்கவும்.

அரைக்கத் தேவையான பொருட்கள். மி.வத்தல் காரமாக இருந்தால் நான்கு போதும். இல்லை எனில் ஏழு அல்லது எட்டு எடுத்துக் கொள்ளவும். இரண்டு பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம், கட்டிப் பெருங்காயம் எனில் கொஞ்சம் ஜலம் விட்டு ஊற வைக்கவும். கருகப்பிலை, கொத்துமல்லிப் பொடியாக நறுக்கியது இரண்டு டேபிள் ஸ்பூன் வகைக்கு. தேங்காய்க் கீறியது ஒரு மூடி. ஒரு டேபிள் ஸ்பூன் பாசிப்பருப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் உடைத்த உளுத்தம்பருப்பு களைந்து கொண்டு தனியாக ஊற வைக்கவும். தாளிக்கக் கடுகு, உபருப்பு, இஞ்சி, பச்சை மிளகாய்(விதை எடுத்தது)

இரண்டு அல்லது மூன்று மணி நேரம் ஊறியதும் அரிசியை முதலில் மி.வத்தல், பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து அரைக்கவும். அரிசி நன்கு அரை பட்டதும், து.பருப்பு, கபருப்பு சேர்த்துக் கொரகொரவென அரைக்கவும். ரொம்பவே கொரகொரப்பாகப் பருப்புத் தெரியும்படி அரைக்கக் கூடாது. பின்பு அதை ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும். இப்போது அதே மிக்சி ஜாரில் தனியாக ஊற வைத்த உளுந்தைப் போட்டு அரைக்கவும். ஏற்கெனவே உப்புச் சேர்த்து அரைத்து வைத்திருப்பதால் உப்பெல்லாம் மறந்து போய்ச் சேர்க்கக் கூடாது. உளுந்து மாவு தளதளவென அரைபட வேண்டும். விழுது நன்கு அரைபட்டு மேலே கொப்புளங்கள் வருகையில் எடுத்து ஏற்கெனவே அரைத்திருக்கும் மாவுக் கலவையோடு சேர்த்துக் கொண்டு ஊற வைத்த பாசிப்பருப்பு, உடைச்ச உளுத்தம்பருப்பு சேர்த்துத் தேங்காய்க் கீற்றுக்கள், கருகப்பிலை, கொத்துமல்லி சேர்த்து நன்கு கலக்கவும்.  ஒரு இரும்புக்கரண்டியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, உபருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துப் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்,   இஞ்சி சேர்த்து மாவில் கொட்டிக் கலக்கவும். சற்று நேரம் வைத்து விட்டுப் பின்னர் எண்ணெயில் கரண்டியாலோ அல்லது கைகளாலோ உருண்டையாக உருட்டிப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். உங்கள் குணுக்கு விநியோகத்துக்குத் தயார். 


அரைச்ச மாவு, குணுக்குப் போடத் தயார் நிலையில்!


வெந்து கொண்டிருக்கும் குணுக்குகள்!



நிவேதனம் செய்யப்பட்ட குணுக்குகள்! 






பி.கு: இந்த மொக்கைக்குச் சும்ம்ம்ம்ம்ம்மாக் கூட்டம் அள்ளும்! :P :P :P :P :P :P :P

18 comments:

  1. அது சரி.. குணுக்குப் படம் மட்டும் எப்படி நீங்களே போட்டீர்கள்?!!!

    குணுக்கு நான் சென்ற புதன்கிழமை ஒரு வீட்டில் சாப்பிட்டேன்! நேற்று காராமணி சுண்டல். காபி தருகிறேன் என்று சொல்லி பூஸ்ட் தந்தார்கள். வெள்ளிக்கிழமை அன்று நான் சென்ற ஒரு வீட்டில் காபி தருகிறேன் என்றார்கள். கொஞ்சமாகக் கொடுங்கள் என்றேன். நிறைய பேர்கள் காபி என்றால் அரைலிட்டர் பிடிக்கும் டம்ளர் ஒன்றில் தருகிறார்கள். சர்க்கரை ரொம்பக் கொஞ்சமாய் என்றேன். என்னை அனுதாபத்துடன் பார்த்தபடியே உள்ளே சென்றார் அந்த மாமி. டயாபடீஸ் என்று நினைத்திருப்பார். இவர்களுக்கெல்லாம் காபி என்பது கசப்பாகச் சாப்பிட வேண்டிய பணம் என்று தெரியவில்லை என்று நானும் அனுதாபத்துடன் அவர்களை பார்த்தேன். காபி வந்தது. குடித்தேன். நல்லவேளை கொஞ்சமாகப் பாடகி சொன்னதால் தப்பித்தேன். கொஞ்சமாகத்தான் போட்டிருந்தார்கள் - உப்பை!

    ReplyDelete
    Replies
    1. குணுக்குப் படம் காமிராவில் எடுத்தது! அதைப் போடுவதில் பிரச்னை ஏதும் இல்லை! மிச்சம் அடைமாவில் போடும் குணுக்கு இல்லை இது! இது தனிஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

      Delete
  2. குணுக்கு நல்லா வந்திருக்கு. நான் நேற்று அடை மாவு செய்ததில் உள்ள தவறும் தெரிந்துபோச்சு. (க.பருப்பு, து.பருப்பு, உ.பருப்பு, பெருங்காயம், எல்லாத்தையும் ஊறவச்சு ஒண்ணா அரைச்சேன். அதுனால கரகரப்பு போயிடுச்சு)

    கொலு விசிட்ட கலெக்ஷன்னு சொல்லிட்டீங்க. ஒவ்வொரு இடத்திலும் கொஞ்சமா (சுண்டலோ எதுவோ) வாங்கிக்கிட்டால் உடம்புக்கு ஒத்துக்குமா? (இப்படிக்கு.. நவராத்திரிக்கு ஒண்ணும் சாப்பிடக் கிடைக்காதோர் சங்கம்)

    ReplyDelete
    Replies
    1. அடைக்கு அரைக்கையில் அரிசியோடு வற்றல்+பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்துக் கொஞ்சம் அரைத்த பின்னர் பருப்புக்களைச் சேர்த்து அரையுங்கள்! அடை நன்றாக வரும். சாப்பிடலாம் வாங்க பக்கத்தில் அடை செய்முறையும் இருக்கு! ஹாப்பி அடை! :)

      Delete
    2. இந்தப் பத்துநாட்களும் இரவுக்கு மோர் சாதம் தான். தொட்டுக்கச் சுண்டல். அளவாச் சமைச்சுடுவேன். சுண்டல் எடுத்துண்டால் சாதம் குறைச்சுடுவோம். :) நெஞ்சைக்கரிக்காமல் இருக்கத் தான் மோர் சாதம். சுண்டலும் எவ்வளவு கொடுத்துடறாங்க!சின்னக் காகித டீக்கப்பில் தானே இப்போல்லாம் சுண்டல்! ஒரு டேபிள் ஸ்பூன் கொடுத்தால் பெரிசு! :)

      Delete
  3. குணுக்குகள் கேள்விப்படாதது

    ReplyDelete
    Replies
    1. ஒரு சிலர் அடைமாவிலேயே உருட்டிப் போடுவாங்க. ஆனால் இது அப்படி இல்லை! :)

      Delete
  4. ஆஹா! எங்க வீட்டுக் கொலுவும் இங்கே வந்தாச்சு.எங்களால் முடிந்த அளவு வாங்கி வைத்திருக்கிறோம். எனக்கு இதுவே பெரிது. இதை பராமரித்து வந்தாலே போதும். வருடாவருடம் ஒவ்வொன்றாக வாங்கினாலே நிறைய சேர்ந்துடும். அதற்கே இடம் போறாது. நீங்கள் நிறைய எதிர்பார்த்து வந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்...:)

    குணுக்கும் சுவையாக இருந்தது மாமி.

    ReplyDelete
    Replies
    1. பொம்மைகள் வாங்குவதை விட அவற்றைப் பாதுகாப்பது பெரிய விஷயம் தான். அதிலும் ஒவ்வொரு வருஷமும் பொம்மைப் பெட்டியைக் கீழே இறக்கிப் படிகளை அமைத்து!

      Delete
    2. கருத்தை எழுதும்போதே யாரோ வந்துட்டாங்க! பாதியிலே நிறுத்தணும்னு நினைச்சு பப்ளிஷ் கொடுத்திருக்கேன். ஹிஹிஹி, படிகள் அமைத்துப் பொம்மைகளை வைத்து எடுத்து மறுபடி அடுத்த வருஷம் வரை பாதுகாப்பதுனு எல்லாமும் சிரமம் தான்! இங்கே நாங்க இருந்த பழைய குடியிருப்பிலே இருக்கும் மாமி, நவராத்திரி கொண்டாடுவதெல்லாம் painstaking னு சொல்வாங்க. ஆனால் ஆர்வத்துடனேயே செய்து வருகிறேன். :) எனக்குத் தெரிந்த எல்லோருமே ஆர்வமுடன் செய்கின்றனர்.

      Delete
  5. புகைப்படம் நன்று நானெல்லாம் தொழில் நுற்ப நிபுணர் அல்ல.

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, நன்றி கில்லர்ஜி!

      Delete
  6. குணுக்கு அதற்காகவே பிரத்யேகமாகச் செய்த மாவு. ருசிக்குக் கேட்பானேன். போராது போய்விட்டது.குணுக்கு ரஸிகர்கள் அதிகமாகி விட்டார்கள். வாழ்த்துகள். அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. மாவு கொஞ்சமாய் அரைச்சுட்டேன் போல! :) சில சமயம் யாரும் வரதில்லை. எங்க ரெண்டு பேருக்குச் செலவாகிறது கஷ்டம் என்பதால் நிதானமாகவே போட வேண்டி இருக்கு! :)

      Delete
  7. முதன்முதலாய் கேள்விப்படுகிறேன். குணுக்கு என்ற பலகரத்தை.
    படத்தைப் பார்த்து ஆறுதல் அடைந்து கொள்ள வேண்டியது தான்
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. எப்போ வரீங்கனு சொல்லுங்க, செய்து வைச்சுடலாம்! :)

      Delete
  8. கிட்டத்தட்ட இதே போன்றுதான் சற்றுப் பெரிதாக, பச்சரிசி இல்லாமல் திருவனந்தபுரத்தில் காரவடை. வெளியில் நல்ல கரகரப்பாக உள்ளே மெது தன்மையுடன் இருக்கும். எங்கள் வீட்டில் இரண்டும் செய்வதுண்டு. இவை எல்லாம் செய்தால் எங்கள் வீட்டில் ஹும்...அடையை உருட்டிப் போட்டு அதற்கு ஒரு பெயர் என்று சொல்லி விடுவார்கள்...

    கீதா

    ReplyDelete
  9. எங்காத்து மாமி கல்யாணம் ஆன புதிதில் உங்களுக்கு குணுக்கு பண்ணி தாரேன் என்று சொன்னாங்க நானு ஆஹா நாம இதுவரை அறியாதது என்று கனவிம் மிதந்து கொண்டிருந்தேன் சிறிது நேரம் கழித்து உருண்டை உருண்டையாக ஏதோ ஒன்ரை தந்தார்கள் அதை சாப்பிட்ட நான் அடியே அடதோசை பண்ணாமல் அதற்கு பதிலாக அதே மாவை உருட்டி எண்ணெயில் பொரித்து எடுத்து வந்திருக்காய் என்று கேட்டேன் அதற்கு பிறகு நான் வாடை திறந்து ஏதும் சொல்வதில்லை அன்று அவர்கல் பூரிக்கட்டையால் அடித்த அடி யை நினைத்தால் இன்ரும் பயமாக இருக்கிறது

    ReplyDelete