எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, May 24, 2019

நன்றி நவிலல்!

நேற்றைய என் ஆங்கிலப் பிறந்த தேதிக்கு வாழ்த்துச் சொன்னவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இணையத்திலும், அவரவர் பதிவுகளிலும் வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு கண்ணீர் ததும்ப நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நானெல்லாம் பிறந்த நாள்னு கொண்டாட ஆரம்பிச்சதே குழந்தைகளுக்கு விபரம் தெரிந்து தான். பள்ளி நாட்களில் அவசரச் செலவுக்கென நாங்க கொடுக்கும் அவங்களோட கைக்காசிலிருந்து எனக்கு வாழ்த்து அட்டை வாங்கிக் கொடுப்பாங்க. அதன் பின்னர் வெளிநாடு போனதிலிருந்து தொலைபேசி அழைப்புகள், வாழ்த்து மடல்கள் என வரும். நேற்றும் காலையே அழைத்துப் பேசினார்கள்.

முகநூலில் என்னோட டைம்லைனில் நானே நுழைய முடியாத அளவுக்கு ட்ராஃபிக் ஜாம்! ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல முடியவில்லை. ஆகவே இங்கேயும் முகநூலிலும் தனிப் பதிவு போட்டு நன்றி சொல்லிக் கொள்கிறேன். நேற்று என்னை ஆடியோ மெசேஜ் மூலம் வாழ்த்திய ஸ்ரீராம், அவரோட பாஸ், வாட்சப் அழைப்பு மூலம் வாழ்த்திய ரேவதி நரசிம்மன், மற்றும் தொலைபேசியில் அழைத்த பானுமதி ஆகியோருக்கும் என் நன்றி. ரேவதியும், பானுமதியும் அழைத்தபோது கணினி மருத்துவர்கள் வந்திருந்தனர்.  பழைய மேஜைக் கணினியின் ஹார்ட் டிஸ்கைக் காப்பி செய்து அவற்றை எல்லாம் அழித்துவிட்டுப் புதிதாக ஃபார்மட்செய்யவேண்டி அழைத்திருந்தேன். மதியம் வந்து விட்டுச் சாப்பிடச் சென்றனர். மறுபடி மாலை ஐந்து மணிக்கு வந்து இரவு ஒன்பது மணி வரை வேலை சரியாக இருந்தது. இன்னும் சில வேலைகள் முடியவில்லை. திங்களன்று தான் செய்து தருவதாகச் சொல்லி இருக்கின்றனர்.

அதோடு நேற்று அதீதச் சூடு காரணமாக உணவு உட்கொள்ள முடியவில்லை. மதியம் வெறும் மோர் சாதம் மட்டும் ஒரு கைப்பிடி சாதத்தில் சாப்பிட்டேன். இரவு தான் நல்ல பசி எடுத்துச் சாப்பிட்டேன். சப்பாத்தியும் கத்திரிக்காய்க் கறியும். இப்போல்லாம் ஒரு வேளை தான் உணவு உட்கொள்ள முடிகிறது. எப்போவும் மே 22 தேதிக்கெல்லாம் காற்றுக் கூடி வர ஆரம்பிக்கும். இப்போ இந்த வருடம் 24 தேதி ஆகியும் இன்னமும் காற்று ஆரம்பிப்பதற்கான சுவடு தெரியவில்லை.  எங்க வீட்டு வடக்கு ஜன்னல் வழியே பார்த்தாலே மேல் காற்று ஆரம்பிக்கப் போவதற்கான அறிகுறிகள் தெரியும். இந்த வருஷம் இன்னமும் ஆரம்பிக்கவே இல்லை. இனி காற்று ஆரம்பித்து மேகங்கள் கூடிப்பேசிக்கொண்டு மழை வர ஜூன் 10,15 தேதி ஆகும்போல! மழையானும் நல்லபடியாக எப்போதும் போல் பொழிய வேண்டும். ஆனால் நம் தமிழ்நாட்டில் மழை சனியன் என்கின்றனர். அதான் மனதுக்கு வருத்தமா இருக்கு. ஏற்கெனவே தண்ணீர்ப் பற்றாக்குறை. சென்னையில் பிரபலமான ஐடி நிறுவனங்கள் கால வரையற்ற விடுமுறை அளிப்பதாகச் சொல்வது எவ்வளவு உண்மை எனத் தெரியாது. ஆனால் ஓட்டல்கள் பலவற்றில் தண்ணீர்ப் பற்றாக்குறை!

ஏற்கெனவே மழை நீரைச் சேமித்து வைக்கும் வழக்கம் நம்மிடம் அறவே இல்லை. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கொஞ்சம் சுறுசுறுப்புடன் செயல்பட்ட மழைநீர்ச் சேமிப்புத் திட்டம் இப்போது முழு மூச்சாக உறங்குகிறது. எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டாவது நாம் மழை நீரைச் சேமித்தாக வேண்டும். இங்கே உள்ள நீர், நிலைகளை அழித்துவிட்டுக் கர்நாடகமும், கேரளமும், ஆந்திராவும் தரும் தண்ணீருக்காகக் கையேந்திக் கொண்டு அவர்களிடம் சண்டை போட்டுக் கொண்டு கோர்ட்டுக்கு அலைவதில் நமக்கும் பெருமை இல்லை. நம் சந்ததியினருக்கும் பெருமை இல்லை. இறைவன் அளிக்கும் மாபெரும் கொடையான மழையை வரவேற்போம். மழையே வருக!

ஆழிமழைக்கண்ணா! இதை எல்லாம் பார்த்தும் படித்தும் கேட்டும் கொண்டிருக்கும் நீ தான் அருள் புரிய வேண்டும்.


டிஸ்கி: இந்த மொக்கைக்குக் கூட்டம் கூடும் பாருங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :P:P:P:P:P:P:P:P

57 comments:

  1. நாம தண்ணீரை மதிக்காவிட்டால், தண்ணீர் மட்டும் எப்படி நம்மை மதித்து வரும்?

    தென்னகத்தில் நமக்குத்தான் அதிக அளவு மழைநீர். ஆனால் நீர்நிலைகளை பாழ்படுத்துவதிலும், தண்ணீரை அலட்சியப்படுத்துவதிலும், ஆற்று மணலைக் கொள்ளையடித்து, தண்ணீர் தேங்கவிடாமல் செய்வதிலும், மக்களுக்குப் பொதுவான நிலத்தடி நீரை, சுயநலமாகக் கொள்ளையடிப்பதிலும் நம் தமிழகத்தை யாராலும் மிஞ்சமுடியாது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், நெல்லைத்தமிழரே, தண்ணீர் எனில் நமக்கு அலட்சியம் தான்! கொஞ்சமும் எதிர்காலம் குறித்த கவலையோ அச்சமோ இல்லாமல் மணல் அள்ளுகின்றனர்! என்ன சொல்ல முடியும்!:(

      Delete
  2. //மொக்கைக்குக் கூட்டம் கூடும் பாருங்க// - எங்களையெல்லாம் வாங்கன்னு சொல்றீங்களா, இல்லை வராதீங்கன்னு சொல்றீங்களா? ஒண்ணுமே புரியலையே

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, நெல்லைத்தமிழரே, நீங்க என்னை அந்தப் பயணக்கட்டுரை பாதியில் இருக்கு, இந்தப் பயணக்கட்டுரை முடியலைங்கறீங்க! ஆனால் பெரும்பான்மை மக்கள் அதுக்கெல்லாம் வந்து கருத்துச் சொல்வதில்லை. :)

      Delete
    2. நெல்லைத்தமிழருக்கு....
      அதானே...?

      Delete
    3. உங்க 'பயணக்கட்டுரை' வேகத்துக்கு நானே செப்பறை, காசி பயணக்கட்டுரைலாம் எழுதி முடிச்சுடுவேன் போலிருக்கு. எல்லாரும் படிப்பாங்க.

      Delete
    4. அதானே.. இப்போ நான் உள்ளே வரட்டோ வாணாமோ?:))..

      இனிமேலும் இப்பூடி எல்லாம் பில்டப்புக் காட்டுவாவோ கீசாக்கா கர்:)) ஹா ஹா ஹா.

      Delete
    5. கில்லர்ஜி, நெல்லைத் தமிழர் பதிவு எழுதுவது மட்டுமே என்னோட வேலைனு நினைக்கிறார் போல! அதான் சொன்னேன்! :)))))

      Delete
    6. செப்பறைப் பயணக்கட்டுரை எப்போவோ முடிஞ்சாச்சு நெல்லைத் தமிழரே, நீங்க படிக்காமல் இங்கே வந்து புலம்பறீங்க. அதோட காசி பத்தி நான் எதுவும் எழுதலை! ஸ்ரீராம் தான் எழுதிட்டு இருக்கார்! :)))))

      Delete
    7. அதிரடி, இது பில்ட் அப்பா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      Delete
    8. // அதோட காசி பத்தி நான் எதுவும் எழுதலை! ஸ்ரீராம் தான் எழுதிட்டு இருக்கார்! :))))) //

      கர்ர்ர்ர்ர்..... அவருக்குத் தெரியாதா?

      Delete
    9. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அப்போ ஏன் இங்கே சொல்லி இருக்கார்? :))))))

      Delete
  3. ///ஒரு வேளைதான் உணவு// - மனதுக்குக் கலக்கமா இருக்கு. எனக்கும் உணவின் மீதான ஆர்வம் ரொம்ப வேகமாகக் குறைந்துவருகிறது. முதல் தடவையா, எனக்குன்னு ஒரு இனிப்பும் நெல்லையில் வாங்கலை...பிடிக்கலை.

    ReplyDelete
    Replies
    1. இது ஒண்ணும் பெரிய விஷயமே இல்லை நெல்லைத் தமிழரே, நாங்க பயணம் செல்லும்போதெல்லாம் கூட நான் ஒரே வேளை உணவோடு இருந்துடுவேன். ஆனால் நல்ல பழச்சாறு இயற்கையாக எடுத்தது வாங்கிச் சாப்பிட்டுடுவேன். வட மாநிலங்களில் இவை 50 ரூபாய்க்குள் நல்ல தரமான பழச்சாறாகக் கிடைக்கும். இங்கே 75 ரூ கொடுத்தால் கூடத் தண்ணீர் கலந்து தான் கொடுக்கிறாங்க! நல்லவேளையா நான் ஐசெல்லாம் போடாதீங்கனு சொல்லிடுவேன். அதுக்குக் காசு கூட! பின்னே! ஐஸ் போட்டால் எனக்குக் கலக்கும் ஒரு கிளாஸ் ஜூஸை இரண்டு பேருக்குக் கொடுப்பாங்களே!

      Delete
    2. நெல்லை எனக்குமே இப்போ எல்லாம் உணவின் மீது ஆர்வம் மிகவும் குறைந்துவிட்டது. ஒரு வேளை தான் பெரும்பாலும் சாப்பிடுகிறேன். ஆர்வமாகச் சாப்பிடுபவர்களும் வீட்டில் இல்லை. இருந்தால் செய்யும் நமக்கும் ஆர்வம் தொற்றிக் கொள்ளும். அதனால் இங்கு வீட்டிற்கு யாரேனும் வந்தால் வித்தியாசமான உணவு. இல்லைனா நார்மல்...(நான் ஒரு வேளைதான் அதுவும் டிஃபனோ அல்லது சாப்பாடோ ஏதோ ஒன்று....பழம், மோர் என்று போகிறது...

      கீதா

      கீதா

      Delete
  4. சப்பாத்தியும் கத்தரிக்காய் கறியும் - இறைவா... என்ன காம்பினேஷன் இது....ஐயகோ.... உருளை/வெங், மட்டர் பனீர்... வேற வழியில்லைனா சாம்பார்/பருப்பு சாத்துமது மண்டி... இல்லைனா கார எலுமிச்சை... இவை எதுவுமில்லாமல் கத்தரிக்காய் கறியா?

    ReplyDelete
    Replies
    1. நெல்லைத் தமிழரே, என் அம்மா அறுபதுகளிலேயே கத்திரி+உருளை+வெங்காயம் சேர்த்துக் கறி செய்து சப்பாத்திக்குத் தொட்டுக் கொடுப்பார். இத்தனைக்கும் அதில் மசாலாவெல்லாம் இருக்காது. இப்போ நான் செய்தது குஜராத்தி டைப் மசாலா அடைத்த கத்திரிக்காய்க் கறி. இங்கே தான் எங்கேயோ செய்முறை இருக்கு. சுட்டி தேடித் தரேன்.

      Delete
    2. உங்களை மாதிரித் தான் என்புக்ககத்திலும் கத்திரிக்காயில் வெங்காயம் சேர்த்துக் கறியோ கூட்டோ சப்பாத்திக்குப் பண்ணினால் சிரிப்புப் பொத்துக் கொண்டு வரும் அவங்களுக்கு எல்லாம். நான் அதெல்லாம் கண்டுக்கவே மாட்டேன். அம்மாதிரிச் சமயங்களில் எனக்குக் கண்ணும் தெரியாது, காதும் கேட்காது, வாயும் பேசாது. ஊமை! இப்போ அவங்களே பண்ண ஆரம்பிச்சாச்சு! ஃபுல்கா பண்ணும்போதும் சிரிப்புத் தான் வீட்டில்! :)))))

      Delete
    3. https://sivamgss.blogspot.com/2017/07/blog-post.html இங்கே போய்ப் பாருங்க. அங்கேயும் நீங்க கத்திரிக்காய் பிடிக்காது என்று சொல்லி இருக்கீங்க! ஹாஹாஹா, ருசியே தெரியலை உங்களுக்கு!

      Delete
    4. கீசா மேடம்.... வெங்காயம் நாங்க சேர்ப்பது உருளைக்கு மட்டும்தான் (கறி செய்யும்போது). மற்றபடி ஹோட்டல்களில் பீட்ரூட் கறி, வெண்டை கறி, கேரட் கறி என்று வகை தொகையில்லாமல் எல்லாவற்றிலும் வெங்காயம் சேர்ப்பார்கள். அது எனக்கு (எங்களுக்குப்) பிடிக்காது.

      சரி...உங்களை வம்புக்கு இழுக்கறேன். இந்தத் தடவை காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் பயங்கரக் கூட்டம். கியூ ரொம்ப தூரத்துக்கு. இந்தக் கோவிலில் வைணவ திவ்யதேசப் பெருமாள் சன்னிதி இருக்கு. தீவிர வைணவர்கள், பிற தலங்களுக்குச் செல்லமாட்டார்கள் என்பதால், நுழையாமலேயே தரிசனம் செய்ய பெரிய கண்ணாடி வைத்திருக்கிறார்களாம், அதன் வழியாக 'கள்வர்' பெருமானை தரிசனம் செய்துகொள்வார்களாம். நாங்க போயிருந்த 30 பேர் கொண்ட குரூப், அங்கிருந்தவரிடம் அதற்கு அனுமதி அளிக்கும்படி (கியூவில் நில்லாமல் தனியாக தரிசனம் செய்வதுதான் முறை) கேட்டுக்கொண்டும் அவர்கள் அனுமதிக்கலை (காத்திருங்க என்று சொல்லிட்டாங்க).

      Delete
    5. காஞ்சிக்கு சுமார் நூறு முறை போய்க் காமாட்சியை மட்டுமில்லாமல் பெருமாளையும் தரிசனம் செய்திருக்கோம். ஆகவே நீங்க சொல்லும் செய்தி புதுசு இல்லை.

      Delete
    6. கீதாக்கா எங்க வீட்டிலும் கத்தரிக்காய் உருளை போட்டு கறி செய்வாங்க. நீங்க சொல்றா மாதிரி மசாலா போடாம...

      அக்கா குஜராத்தி ஸ்டஃப்டு பெய்ங்கனா பரேலா ரிங்கனு ஷாக் நு சொல்லுவாங்க இல்லையா..நான் நெட்டுல கத்துக்கிட்டு குறிச்சுவைச்சுருக்கேன்...செய்திருக்கேன்..

      .உங்க குறிப்பும் பார்க்கறென் கீதாக்கா..நீங்க என்ன தலைப்பு கொடுத்திருக்கீங்கனு தெரிஞ்சா எடுத்துடலாம்...கூகுள்லயே

      கீதா

      Delete
    7. லிங்க் பார்த்துட்டேன் இங்கு...சென்று பார்க்கிறேன் நீங்க என்ன குறிப்பு...குறிப்பும் பார்த்துட்டேன் ...இது செய்திருக்கேன் ஆந்திரா டைப்புலயும்...

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இப்ப படமே வர மாட்டேங்குது கணில....

      கீதா

      Delete
  5. //ஆழிமழைக்கண்ணா! இதை எல்லாம் // - ஆண்டாள், மார்கழியில்னா மழை கேட்டாள். மழை வந்த காலத்தில் எல்லாம் சேமிக்க மறந்துவிட்டு இப்போ மீண்டும் மழை கேட்கறீங்களே..

    ReplyDelete
    Replies
    1. ஆண்டாள் பின்னால் வரும் மாதங்களுக்கான மழையை மார்கழியில் கேட்டாள். மார்கழியில் தான் கெர்ப்போட்டம் என்று வரும் தெரியுமா? அது குறித்த விளக்கம் ஏற்கெனவே சொன்ன நினைவு. இல்லைனா மறுபடி ஒரு தரம் சொல்றேன். அந்த கெர்ப்போட்டம் சரியா இருந்தாத் தான் நல்ல பருவ மழை இருக்கும்.

      Delete
    2. கெர்ப்போட்டம்???

      Delete
    3. ஶ்ரீராம், மழைமேகங்கள் மார்கழியில் தான் சூல் கொள்ளும். தனுர் மாதம் என அழைக்கப்படும் மார்கழி மாதத்தில் தனுர் ராசி மண்டலத்தில் வரும் நக்ஷத்திரங்களுள் ஒன்றான பூராடத்தைக் கடக்க சூரியனார் 14/15நாட்கள் எடுத்துக் கொள்கிறார். அந்த நாட்களில் தான் மழை மேகங்கள் உற்பத்தியாகி மேகம் கருக்கொள்ளும் நாட்கள் என்கின்றனர். இந்த மார்கழி மாதத்திலிருந்து சரியாகப் பத்து மாதங்களில் புரட்டாசி தாண்டி ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் அடை மழை பொழியும் என்பது தெரியும் தானே! இந்த கெர்ப்போட்ட நாட்களில் மேகங்கள் சரியாக சூல் கொண்டால் தான் நமக்கு வடகிழக்குப் பருவ மழை வேண்டிய அளவு பெய்யும். இதைத் தான் பஞ்சாங்கங்கள் முறையாகக் கணித்து மார்கழி மாதம் கெர்ப்போட்ட ஆரம்பம் எனவும், கெர்ப்போட்ட நிவர்த்தி எனவும் போட்டிருக்கும். பார்த்திருப்பீர்கள். இந்த நாட்களில் மேகங்கள் விரைவாகத் தெற்கு நோக்கி நகரும் என்பதையும் வானத்தை அடிக்கடி பார்ப்பவர்களால் கண்டு கொள்ள முடியும்.

      Delete
  6. வாழ்த்துகள் அம்மா...

    ReplyDelete
  7. ஆம் மழையைப் பற்றிய சிந்தை நம் மக்களிடம் துளியும் இல்லை என்பது வேதனையான விசயம்.

    ReplyDelete
    Replies
    1. மழை வந்தாலும் வானம் கொஞ்சம் இருட்டினாலும், இப்போ இந்த மழையை யார் கேட்டா என்கின்றனர்! :(

      Delete
  8. வாழ்த்துகளுக்கு மத்தியில் பிறந்தநாள் சிறப்பாகக் கழிந்தது போலும்... வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம், வாழ்த்துகள் உற்சாகத்தைக் கொடுத்தன. இல்லை என்னவில்லை. ஆனால் சாப்பாடு! :))) அன்றைய தினம் கிட்டத்தட்டப் பட்டினி! அதோடு கணினி மருத்துவர்கள் வேறே வந்து நாள் முழுவதும் அவங்களோடு செலவு செய்யும்படி ஆகி விட்டது. உருப்படியா ஒண்ணும் பண்ணலை.

      Delete
  9. அந்தமானில் தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டது என்று படித்தேன். இனியாவது தமிழக ஆட்சியாளர்கள் கொஞ்சம் உருப்படியாக வேலைகள் செய்யத்தொடங்க வேண்டும். ஆக்கபூர்வமான பணிகள் எதையுமே செய்யாமல் மணல் திருட்டு, தூர்வாராமல் பொய்க்கணக்கு எழுதுவது போன்றவற்றை விடவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. என்னவோ, நாம் சொல்கிறோம், நடக்குமா தெரியலை. தமிழ்நாட்டு மக்கள் இலவசங்களுக்கு மயங்குகிறவர்கள். அவங்களுக்கு அது போதும். அதிகம் வேண்டாம். ஆகவே இதைப் பற்றி எல்லாம் யாரும் கவலைப்பட மாட்டார்கள். :(

      Delete
  10. சென்னையில் காற்றுக்குப் பஞ்சமில்லை. அவளுக்கும் பஞ்சமில்லை. வெளியில் அமர்ந்தாள் காற்று நன்றாய் வருகிறது. நடுவில் ஒருநாள் மட்டும் மாலை நான்கு மணிக்குதான் காற்று வரத்தொடங்கியது. இல்லையென்றால் பனிரெண்டு மணிமுதலே வரத்தொடங்கி விடும். இன்றும் கூட!

    ஆனால் மழைதான் அபூர்வமாய் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. தட்டச்சுப் பிழை தலை சுத்த வைத்துவிட்டது. "அனலுக்குப் பஞ்சமில்லை.. " சரியா?

      Delete
    2. அனலுக்குப் பஞ்சமில்லை..

      சரி!

      Delete
    3. வெளியில் அமர்ந்தாள்...

      வெளியில் அமர்ந்தால்...

      Delete
    4. நான் கூட இப்போதெல்லாம் மதியங்களில்பெரும்பாலும் நீரூற்றிய சாதமும், சின்ன வெங்காயம் அல்லது காய்ந்த நார்த்தங்காய்தான் சாப்பிடுகிறேன். குழம்பு ரசம் என்று எதுவும் சாப்பிடப் பிடிக்கவில்லை.

      Delete
    5. இங்கே காற்றுச் சுழற்றிச் சுழற்றி அடிக்கும். இந்த வருஷம் கம்மென்று இருக்கிறான் வாயு பகவான். என்ன கோபமோ தெரியலை. மற்றபடி காலை கூட வெறும் நீராகாரம் சாப்பிட்டாலே போதும் போல் இருக்கு,.

      Delete
  11. ஆற்று வெள்ளம் நாளை வரத்தோற்றுதே குறி மலையாள மின்னல் ஈழமின்னல்சூழமின்னுதே என்னும்பாட்டு நினைவுக்கு வருகிறது

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜிஎம்பி ஐயா, அம்மாதிரியான அறிகுறிகளைக் காணோமே!

      Delete
  12. வணக்கம் சகோதரி

    பிறந்த நாள் வாழ்த்துகளுக்கு ஒரு நன்றி பதிவா? தங்கள் நன்றிக்கு நன்றி.. உண்மைதான்.! நீங்கள் எதிர்பார்த்தபடி கூட்டம் கூடித்தான் விடும் போலிருக்கிறது. நான் வரும்போதே 25 ஐ தாண்டித்தான் வந்தேன்.ஹா ஹா ஹா.

    பாவம்.! மழையுந்தான் என்ன செய்யும்? "வேண்டும்" என்போருக்கு பெய்து விட்டு போகலாம் என வரும் போது, நேற்று சகோ ஸ்ரீராம் அவர்கள் பதிவில் சொன்ன மாதிரி, கைவிரல் நகங்களை உரசி "வேண்டாம்" என்போருக்காக பெய்யாமல் தள்ளிச் சென்று நாம் என்ன காரணத்திற்காக உருவானோம்? என்பதை குழப்பத்தில் மறந்து போய் காற்றடிக்கும் திசையோடு கலையவும் முடியாமல், கடைசியில் வங்காள விரிகுடாவின் பாதத்தை சரணடைந்து, கோபத்தில் தன்னை புயலாக மாற்றிக் கொண்டு, வானிலை ஆராய்ச்சி மையத்தின் வாய் மொழிக்காக காத்திருக்கும்.

    இந்த வெயிலுக்கோ என்னமோ, வயிறு பசியெடுக்காமல்தான் இருக்கிறது. ஆனாலும் களைப்பு வராமலிருக்க ஏதோ சாப்பிட வேண்டியுள்ளது. சுண்டைக்காய், மணத்தக்காளி வற்றல் பொடி செய்து சாதத்துடன் கலந்து சாப்பிட்டால்,பசி உணர்வை தூண்டும். வயிற்றுக்கும் நல்லது. உங்களுக்கு தெரியாததா? நானும் இப்படித்தான் சாப்பிட எண்ணியுள்ளேன்.

    மழை வந்தால் மாற்றம் வரும். இங்கு சில நாட்கள் பெய்த கோடை மழைக்கே எல்லோருக்கும் ஜலதோஷம். மழை வந்ததால் தோஷமில்லை. மழை ஜலத்தில், இத்தனை நாள் காத்திருந்த கிருமிகளும் கலந்து வந்ததால் "ஜல"தோஷம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. //நான் வரும்போதே 25 ஐ தாண்டித்தான் வந்தேன்.ஹா ஹா ஹா. //அப்படியா? கமலா, நீங்களும் ஃபேஸ்புக்கியில் இருக்கீங்கனு தெரியாதே! அங்கே உங்கள் வாழ்த்தைப் பார்த்த நினைவும் இல்லை. எ.பி.யில் சொல்லி இருந்தீங்க! அதுக்கு பதிலும் சொன்னேன்.

      மழை கொட்டினால் தான் ஆறுதலாக இருக்கும். ஆனால் எங்கே! சுண்டைக்காய், மணத்தக்காளி வற்றல், வேப்பம்பூப் போட்டு சாதம் எல்லாம் சாப்பிட முடியலை! சும்மா ஜில்லென்று மோரில் அரைக்கரண்டி சாதத்தைப் போட்டுக் கரைத்துக் குடித்தால் போதும் எனத் தோன்றுகிறது.

      Delete
  13. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன், நலமுடன்.

    மழைதான் பெய்ய மாட்டேன் என்கிறதே! போன வருட அக்னி நடசத்திரத்தில் அதன் தாக்கம் தெரியாமல் மழை பெய்தது . இந்த முறை இரண்டு நாள் மழை பெய்து ஏமாற்றி சென்று விட்டது.

    வெயிலுக்கு தண்ணீர் குடித்து குடித்து சாப்பிட தோன்றவில்லைதான்.
    காற்று வேறு இல்லாமல் மிகவும் கஷ்டமாய் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, ஆமாம், காற்றும் இல்லாமல் அனல் காற்றால் சிரமம் தான் அதிகம்!

      Delete
  14. "நீர் சேகரிப்பு முக்கியம்"

    இங்கு ஒருமழை பெய்திருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க மாதேவி, அந்த ஒரு மழை கூட இங்கே பெய்ய மாட்டேன்னு அடம்.

      Delete
  15. மீண்டும் வாழ்த்துகள் கீதாமா. இப்போது உடல் நலம் சரியாக வேண்டி வாழ்த்துகள்.
    எப்போதுமே அக்னி நட்சத்திரம் முடிவதற்குள் ஒரு மழை வரும்.
    இறைவனே மக்கள் துன்பம் பொறுக்காமல்
    அனுப்புவது போல இருக்கும். இந்த வருடம் அதுவும் இல்லையா.
    மிக வருத்தமாக இருக்கிறது கேட்க.
    மழை சீக்கிரம் வரட்டும் மா.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, இந்த வருஷம் மழை என்னமோ போக்குக் காட்டுகிறது. வெயில் குறைந்தால் வயிறு தொந்திரவும் குறையும். மற்றபடி வேறே ஒண்ணும் பிரச்னை இல்லை வல்லி. என்னோட வயிற்றுக் கோளாறு தான் இணைய உலகம் அறிந்த ஒன்றாச்சே!

      Delete
  16. போன வருடமும் இதே போல நன்றி சொல்லி ஒரு போஸ்ட் போட்டதா நினைவு.. இவ்வருடமாவது நமக்கு ஒரு குல்ஃபி ஐஸ் ஆஅவது செய்து தந்திருக்கலாம் ரசமலாய்க்குப் பதில்:)).. மாறவே மாட்டா கீசாக்கா கர்ர்ர்:)) அரைச்ச மாவையே அரைச்சுக்கொண்டு:)).. ஹையோ நேக்கு ரைமாச்சு மோனிங் ஏழியா எழும்போணும்.. மீ நித்திரை கொள்ளப்போறேன்ன்:))

    ReplyDelete
    Replies
    1. நினைவில் இல்லை அதிரடி, போய்ப் பார்க்கிறேன். உங்களுக்காக விரைவில் குல்ஃபி செய்து போஸ்ட் போட்டுப் பீத்திக்கப் போறேன். நீங்க இப்போ விடுமுறையில் போவதால் வரும்போது போடணும். அதான் கொஞ்சம் காத்திருக்கேன். செரியா? நாங்களும் பீத்துவோமில்ல! :))))

      Delete
  17. சிலநாட்களாக முகநூல் பக்கம் வராததால் பிறந்தநாள் தெரியவில்லை இருந்தால் என்ன தாமதமானாலும் பிறந்த நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. பரவாயில்லை ஐயா. தங்கள் வாழ்த்துகளுக்கு என் நன்றி.

      Delete
  18. அக்கா நம் தமிழ்நாட்டில்தான் இத்தனை மோசமாக இருக்கு அக்கா தண்ணீஈர் மேனேஜ்மென்ட்...எதுவும் சொல்வதற்கில்லை...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம்ம்ம்! மக்கள் எதற்கும் கவலைப்படுவதில்லை. டாஸ்மாக் இருக்கே! அது போதும் அவங்களுக்கு!

      Delete