எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, September 11, 2020

மஹாகவிக்கு அஞ்சலி! குஞ்சுலுவின் பிறந்த நாள்!

 Bharathiyar Images Download full HD pictures

மஹாகவி பாரதியில் நினைவு நாள். நூறாவது நினைவு தினம். மஹாகவிக்கு சுமார் ஆறு மொழிகள் தெரியும். எனினும் தமிழைத் தான் அவர் உயர்வாகக் கருதி இருந்தார் என்பது நாம் அனைவரும் அறிவோம். அவர் இன்றிருந்தால் நம் மாணவர்கள் இப்படிக் கோழையாகத் தேர்வுகளை எதிர்கொள்ள முடியாமல் உயிரை மாய்த்துக்கொள்வது கண்டு அதிர்ச்சி அடைந்திருப்பார். வாழ்க்கையில் எத்தனையோ சோதனைகள் வரலாம். அவற்றை எதிர்கொள்வது தானே வாழ்க்கை? இப்படி ஒரு சின்னத் தேர்வையே எதிர்கொள்ள முடியாதவன் மருத்துவப் படிப்புப் படித்து யாரைக் காப்பாற்றப் போகிறான்? வெட்கமாக இல்லையோ?  முதலில் இவர்களால் மருத்துவம் படிக்க முடியுமா என்பதே சந்தேகம்! கையில் கத்தியை எடுத்தால் நடுங்கிப் போவான். எவ்விதத் தகுதியும் இல்லாமல் மருத்துவத்தில் சேர்ந்து அதில் முழுசாக ஆறு வருடங்கள் முடித்துப் பின்னர் பட்டமேற்படிப்பும் படித்த பின்னரே நிலையான வருமானம் பார்க்க முடியும். அத்தனை வருடங்கள் இவனால் காத்திருக்கவே முடியாது. மாணவர்களை இப்படிக் கோழைகளாக ஆக்கி வைத்திருப்பது இன்றைய படிப்பு முறையும், அரசாங்கங்களும் தான். ஒருவர் இறந்துவிட்டால் அவர் குடும்பத்திற்கு உடனே லக்ஷக்கணக்கில் பண உதவி கிடைக்கிறது/கிடைத்து விடுகிறது.  வாழ்க்கையில் அடிபட்டுக் கஷ்டத்தில் இருப்பவர்களுக்குக் கிடைக்கிறதோ இல்லையோ இம்மாதிரித் தகுதித் தேர்வுக்குப் பயந்து உயிர்விடுபவர்களை அரசாங்கம் ஆதரித்துப் பண உதவி அளித்துவிடுகிறது. போகட்டும்! 

***********************************************************************************

 " ஒரு சொற் கேளீர்!

சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்

தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!"  என்றான் பாரதி! ஆனால் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் எங்கே கேட்கிறது?  இதிலே ஹிந்தி வேண்டாம் போடானு சொன்னால் அவங்களுக்குத் தமிழ் உணர்வு (அது என்னனு புரியலை!) அதிகமாம். சொல்றாங்க. சொல்றவங்களும் சரி, ஹிந்தி வேண்டாம்னு சொன்னவங்களும் சரி, நாலைந்து மொழிகள் அறிந்தவர்களே! இதில் தமிழ் தான் அவங்களுக்கு எல்லாம் கஷ்டமான மொழி! சிலருக்குத் தாய்மொழியே சம்ஸ்கிருத வார்த்தைகள் நிறைந்த தெலுங்கு!  தனிப்பட்ட முறையில் நாலைந்து மொழிகளைத் தெரிந்து வைத்துக்கொள்பவர்களும், தங்கள் குழந்தைகளை மும்மொழித் திட்டப் படிப்பில் படிக்க வைப்பவர்களுமே இன்று ஹிந்தி வேண்டாம் என எதிர்க்கின்றனர்.  தமிழகத்தின் தனியார் பள்ளிகளில் ஹிந்தி கட்டாயமாய்க் கற்பிக்கப்படுகிறது. ஹிந்தி தமிழகத்தில் நுழையக் கூடாது எனில் அரசு மூலம் நுழையாமல் இப்படித் தனியார் மூலம் நுழையலாம் என்று பொருள் போலும்! 

**********************************************************************************

இன்று குட்டிக் குஞ்சுலுவுக்கு ஆங்கிலத் தேதிப்படி பிறந்த நாள். அது  பிறந்த ஜன்ம நக்ஷத்திரப் பிறந்த நாள் ஆவணி மாசம் பிறந்ததுமே வந்துவிட்டது. ஆனால் இப்போதைய வசதியை ஒட்டி நாளைத் தான் கொண்டாடுவார்கள். குட்டிக் குஞ்சுலுவுக்கு எல்லா நலங்களும் நிறைந்து சாப்பாடு எல்லாமுமே சாப்பிடும்படி அதிலும் விரும்பிச் சாப்பிடும்படி முன்னேற்றம் காணப் பிரார்த்திக்கிறேன். வெறும் பாலிலேயே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. எப்போவானும் பனானா! அதிலும் ஒன்றே ஒன்று தான்! :(   அதுக்குப் பிடிச்ச மிக்கி மௌஸ் கீழே!


Mickey Mouse - Wikipedia

24 comments:

  1. குட்டிக் குஞ்சுலு அமோகமாக இருக்க வாழ்த்துகள்.
    ஆரோக்கியமும்,
    சாப்பிட ஆசையும் வர ஆசிகள். எங்கள் பெரியவன் இப்படித்தான் இருந்தான்.
    மூன்று வயதாச்சு ஏதாவது வேண்டும் என்று கேட்க.
    அதற்குள் தங்கச்சிப் பாப்பா சாப்பிடுவதைப்
    பார்த்தே போட்டிக்கு சாப்பிடுவான்:)

    மஹாகவியை கீதா நினைவுறாமல் யார் நினைப்பது.?
    அவரை மாதிரி சொல் நேர்மையும்
    செயல் நேர்மையும்
    நம்மிடம் இளைஞர்களிடம் எப்போது வருமோ.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, குஞ்சுலுவோட அம்மா விதம் விதமாச் சமைச்சு ஆசை காட்டினாலும் அது வாயைத் திறக்க மறுக்கிறது. பிடிவாதமாகப் பால் ஒன்று மட்டுமே கேட்டு வாங்கிக் குடிக்கிறது. இரவுகளில் பனானா ஒன்று மட்டும் அதன் உணவு. :( இம்முறை நூறாவது நினைவு தினம் என்பதாலோ என்னமோ பலரும் நினைவு கூர்ந்திருக்கின்றனர்.

      Delete
  2. குஞ்சுலுவுக்கு எல்லா நலனும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

    பாரதியை இணைத்து சொன்னது அருமை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி!

      Delete
  3. குட்டிக் குஞ்சுலு - நாங்களும் பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்லிக்கறோம். விரைவில் உணவு உண்ணும் பேட்டர்ன் மாறட்டும். உங்கள்ட இரண்டு மாதங்கள் இருந்தால் கதை சொல்லி விளையாட்டு காண்பித்து மாற்றியிருப்பீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெல்லை! அதான் ஆறு மாதங்கள் இருந்தோமே!எங்களோடு உட்கார்த்தி வைத்தும் பார்த்துட்டோம். சாதத்தைக் கண்டாலே ஓடும். இட்லி, தோசை எனில் பாதி உள்ளே பாதி தரையில்! சப்பாத்தி, பூரியும் அப்படித் தான்! :(

      Delete
  4. மாணவர்களின் தற்கொலைக்கான வார்த்தைகள் சவுக்கடி.. ஆனாலும் உணர்வற்ற தோலில் ஒன்றும் உறைக்காது..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், இப்போக்கொடுக்கும் பணம் போதாதுனு 50 லக்ஷம் அரசு கொடுக்கணும்னு சொல்றாங்க! கொடுமைதான்!

      Delete
  5. ஆறு மொழிகளை முழுதாக அறிந்த பின்னரே -

    யாமறிந்த மொழிகளிலே தமிழாவது போல் எங்கும் காணோம்.. - என்று பாடினார்..

    இன்றைய நவீன கல்வி பயிலும் தமிழ் (!) மாணாக்கர்களுக்கு மகாகவிக்கு இத்தனை மொழிகள் தெரியும் என்பதே தெரியாது...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்,பாரதி பற்றி இன்றைய மாணவர்கள் அவ்வளவு அறிந்திருக்கவில்லை. ஆனால் தமிழ் உணர்வு உள்ளவர்கள் எனக் காட்டிக் கொண்டவர்கள் தங்கள் டிவிட்டர் கணக்கில் நாலைந்து மொழிகள் தங்களுக்குத் தெரியும் எனச் சொல்லி இருக்கின்றனர். பணத்துக்காகத் தமிழ் மொழிக்கு உயிர் விடுவது போல் நடிப்பு!

      Delete
  6. குட்டிக் குஞ்சுலுவுக்கு அன்பின் நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
  7. அபுதாபியில் இருக்கும் மகளின் இளைய மகள் அடையாளம் கண்டு கொள்கிறாள்...

    தாத்தா..டா செல்லம்!.. என்றால் சிரிப்பு பொங்குகிறது..

    சமயங்களில் கைகளைத் தூக்கிக் கொண்டு ஆ.. ஆ.. என்கிறாள்... தூக்க வேண்டுமாம்...

    இன்னும் என்னை முட்டுவதாக மடிகணினியுடன் முட்டுகிறாள்..

    சந்தோஷம் தான் .. என்றாலும்
    மனம் எல்லாம் வலிக்கிறது...

    ReplyDelete
    Replies
    1. ஆஹா! இங்கேயும் குழந்தை அப்படித் தான் பண்ணுவாள். சந்தோஷமாக இருந்தாலும் கையில் தூக்க முடியலையேனு வருத்தம் இருக்கத் தான் செய்யும்.

      Delete
  8. மகாகவி என்றும் சிறப்பு...

    செல்லத்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு தனபாலன்!

      Delete
  9. அன்பிற் சிறந்த தவமில்லை; அன்புடையார்
    இன்புற்று வாழ்தல் இயல்பு.

    மஹாகவிக்கு வணக்கம்.

    பேத்தி துர்க்காபட்டுக்குட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் !
    வாழ்க வளமுடன் செல்லம்மா.

    பாட்டியின் விருப்பம் போல் நன்கு சாப்பிட்டு உடல் ஆரோக்கியமாய் நன்றாக இருக்கவேண்டும் கண்ணம்மா.
    பாட்டி வித விதமாய் பட்சணம் செய்து தருவார்கள் அடுத்த முறை நீ இங்கு வரும் போது .

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி! போன வருஷம் தீபாவளிக்கு அங்கேயே பண்ணிக் கொடுத்தேனே! தேன்குழல் மட்டும் சாப்பிட்டது! மற்றவை தொடவில்லை. :( உங்கள் வாழ்த்துகளுக்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி.

      Delete
  10. வர்ங்காலத்தில் பாரதிபோல்புகழ் பெற்று வளர வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  11. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. மஹாகவிக்கு பல ஆயிரம் கோடி வணக்கங்கள். தமிழ்"பா"க்களை சரளமாக இயற்றிய பாரதியை மறக்க முடியுமா? அவரைப்பற்றி, அவர் தமிழ் மொழிப்பற்றைப் பற்றி நன்றாக கூறியுள்ளீர்கள்.

    தங்களின் அருமை பேத்திக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். கூடிய விரைவில் சகல குழந்தைகளைப் போல் நன்கு உண்டு, விளையாடி, ஆரோக்கியமாக, நூற்றாண்டுகள் வாழ இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  12. பேத்திக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. குட்டிச் செல்லத்திற்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.

    யாமறிந்த மொழிகளிலே என்று பல மொழி அறிந்த பின் சொல்லிச் சென்ற பாரதி! இன்றைய போராளிகள் பற்றி சொல்லாமல் இருப்பதே மேல்! ஹிந்தி வேண்டாம் எனச் சொல்லும் பலரும் ஹிந்தி அறிந்தவர்களே! “முஜே ஹிந்தி மாலும் ஹே ரே!” என்று உறக்கச் சொன்னவர் உட்பட!

    ReplyDelete
  14. மிகவும் அருமை வாழ்த்துக்கள் பயனுள்ள தகவல். நண்பர்களே இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க, தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க Tech Helper Tamil ஐ பாருங்கள் Tech Helper Tamil https://www.techhelpertamil.xyz/

    ReplyDelete
  15. குஞ்சுலுவுக்கு தாமதமான பிறந்தநாள் வாழ்த்து கள்.வாழ்க நலமுடன் வளமுடன்.

    ReplyDelete