திருவாரூரில் தங்கி இருந்து அனைத்தையும் பார்க்கக் குறைந்தது இரண்டு நாட்களாவது வேண்டும். நாங்க அன்னிக்கு மட்டும் தங்கணும்னு தான் நினைச்சிட்டு இருந்தோம். ஆனால் அன்னிக்குக் காலம்பரக் கிளம்பினதுமே எட்டுக்குடியில் அவர் விழுந்ததும், எல்லா நிகழ்ச்சி நிரலும் மாறிவிட்டது. சீக்கிரமாய்க் கும்பகோணம் போயிட்டு ஊரைப் பார்க்கப் போகலாம் என்று தோன்றிவிட்டது. என்றாலும் வீதிவிடங்கர் வந்த வரலாற்றைத் தெரிந்து கொண்டோம். வன்மீகநாதர் என்னும் புற்றிடங்கொண்டாரைப் பற்றியும் தெரிந்து கொள்ளவேண்டாமா? அவர் வரலாறு பின் வருமாறு:
புண்யபூமியான குருக்ஷேத்திரம். மாபெரும் யாகம் ஒன்று நடக்க ஏற்பாடு ஆகிறது. யாகத்தைச் செய்யப் போகிறவர்களும் சாமானியர்கள் அல்ல, தலைமை ஏற்பவரும் சாதாரணமானவர் அல்ல. யாகத்தைச் செய்யப் போகிறவர்கள் தேவாதிதேவர்கள். தலைமை ஏற்பவரோ சாட்சாத் மஹாவிஷ்ணுவே. பொருட்கள் சேகரிக்கப் பட்டன. யாகத்தின் மூலம் கிடைக்கப் போகும் பெருமையும், புகழும் அனைவருக்கும் சமம் என முன் கூட்டியே தீர்மானிக்கப் பட்டது. ஆனாலும் யாகம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரையில் ஓய்வு எடுக்காமல் இருப்பவரே மிகச் சிறந்தவர் எனச் சொல்லவேண்டும் என்பதற்கும் ஒத்துக்கொண்டனர். அனைவரும் யாகத்தின் தலைமைப் பதவியான யக்ஞ-மான் பதவிக்கு (இன்றைய யஜமான் இதிலிருந்து வந்ததே) திருமாலே ஏற்றவர் என முடிவு செய்தனர். யாகத்தை இறுதிவரையிலும் ஓய்வே இல்லாமல் மிகச் சிறப்பாக நடத்தி வைத்தார் திருமால்.
எனினும் அவர் மனதின் ஓரத்தில் கொஞ்சம் செருக்கும் இருந்தது. தேவர்களை விட்டு விலக நினைத்தார். யாகத்தின் குண்டத்தில் இருந்து பலவகையான அஸ்திரங்கள் வந்தன. வில் ஒன்றும் வந்தது. வில் திருமாலின் இடக்கரத்தைப்போய் அடைய, அஸ்திரங்கள் அவர் வலக்கரத்துக்குச் சென்றது. தேவர்களை இதன் மூலம் அடக்க நினைத்தார் திருமால். மெல்ல மெல்ல அவர்களை விட்டு விலகி இந்தத் தலத்தை அடைந்தார். பராசக்திபுரம் என்ற பெயரால் அப்போது அழைக்கப் பட்டு வந்த இந்தத் திருத்தலத்திற்கு வந்த திருமால் சோர்வு மிகுதியால் வில்லின் நுனியைத் தன் தாடையில் அழுத்தியவண்ணம் தூங்கிவிட்டார். அப்போது தேவர்கள் திருமாலிடமிருந்து தப்பவேண்டி குலகுருவான பிரஹஸ்பதியின் ஆலோசனையின் பேரில் செல்லுருவில் பூமியைத் துளைக்க ஆரம்பித்தனர். துளைக்கும்போது வில்லின் கீழ்க்கயிறு அறுந்து போக வில்லின் நாண் அறுந்து திருமாலின் தலை துண்டானது.
ஏழு உலகுக்கும் சென்ற அந்தத் தலை திரும்பத் திருமால் படுத்திருக்கும் இடமே வந்து விழுந்தது. பயந்து போன தேவர்கள் ஈசனைத் துதிக்க, அவர்கள் துளைத்த பூமியிலிருந்து பெரும் சப்தத்தோடு சிவலிங்க ரூபமாக ஈசன் வெளியே வந்தார். அவரை அனைவரும் அபயம் கேட்க அஸ்வினிதேவர்கள் உதவியுடன் திருமாலின் தலையை உடலோடு பொருத்துமாறு சொல்ல, அவ்விதமே திருமாலின் தலை பொருத்தப் பட்டது. தனக்குத் தலை வழங்கிய ஈசனைத் துதித்தாராம் திருமால். பின்னர் மது, கைடபரை வதம் செய்த திருமாலைத் திருமணம் புரியவேண்டி இந்த மூலட்டானேஸ்வரரைத் துதித்துத் தவம் இருந்தாளாம் ஸ்ரீ என்னும் மஹாலக்ஷ்மி. அவள் தவம் இருந்ததாலேயே இந்த ஊர்க் குளம் கமலாலயம் எனப் பெயர் பெற்றது என்று சொல்வார்கள். மேலும் இந்தத் தலத்தில் தான் இந்திரனின் ஆலோசனைப்படி தசரதன் வன்மீகநாதர் என்னும் புற்றிடம் கொண்டாரைத் தரிசித்துச் சென்றானாம். அதன் பின்னரே புத்ரகாமேஷ்டியாகம் செய்து ராமர் முதலான நாலு புத்திரர்களையும் பெற்றான் என்றும் ஐதீகம்.
கமலாம்பாள் தொடர்கிறாள்.
**********************************************************************************
சென்ற முறை 2010 ஆம் ஆண்டில் சென்றபோது காலங்கார்த்தாலே எட்டுக்குடி கோயிலில் நவகிரஹ சந்நிதியில் விளக்குப் போட்டுப் பிரதக்ஷிணம் செய்ய ஏறிய நம்ம ரங்க்ஸ் இறங்கும்போது கீழே விழுந்து நல்லவேளையாக எக்கச்சகமாக எதுவும் ஆகலை. என்றாலும் கழுத்தில் ஏற்கெனவே இருந்த பிரச்னை கீழே விழுந்த அதிர்ச்சியில் அதிகம் ஆகிவிட்டது. கோயிலில் நவகிரஹ சந்நிதியில் கூட்டம் கூடி விட்டது. மெதுவாகச் சமாளித்துக் கொண்டு எழுந்து கொண்டார்.
கீழே விழுந்ததற்கு முக்கியக் காரணம் காலை வேளையில் நவகிரஹங்களுக்கெல்லாம் (அன்று சனிக்கிழமை) எண்ணெய்/பால்/சந்தனம் போன்றவற்றால் அபிஷேஹ ஆராதனைகள் நடைபெற்றிருந்தன. அந்த நீரும் பாலுமாக எண்ணெயுடன் சேர்ந்து புத்தம்புதிதாக டைல்ஸ் பதிக்கப்பட்ட படிகளில் விழுந்திருந்தது. அதில் கால் வைக்கவும் சறுக்கி விட்டிருக்கிறது. பக்கத்தில் பிடித்துக்கொள்ள எதுவும் இல்லை. படிகளின் கடைசியில் எதிரே இருந்த சூலம் ஒன்றூ தான். நல்லவேளையாகக் குப்புற விழாமல் சமாளித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார். ஆதி காலங்களில் கோயில்களில் இதற்காகத் தான் கல்லால் ஆன படிகளைப் போட்டிருப்பார்கள். ஆனால் நம்ம அறமற்ற நிலையத்துறை அரசு அவற்றை அகற்றிவிட்டுப் புதுப்பிக்கிறேன் என்னும் பெயரில் வழுக்கும் டைல்ஸ்களைப் போட்டு விடுகிறது. பலரும் சொல்லி விட்டார்கள். அதோடு இல்லாமல் அந்தக் கல்படிகளில் பலவும் கல்வெட்டுக்கள். சரித்திரம் சொல்லும் படிகள். அவற்றை எல்லாம் காணாமல் அடித்துவிட்டார்கள்.
இந்தக் காரணத்தால் எட்டுக்குடிக்குப் பின்னர் திருவாரூருக்குப் போய்ப் பார்க்கலாம் என்று போனோம். ஆனால் அவரால் முடியவில்லை. ஆகவே திருவாரூருடன் பயணத்தை முடித்துக் கொண்டு கும்பகோணம் திரும்பி அன்றிரவு வண்டியிலேயே சென்னை திரும்பிட்டோம். அம்பத்தூரில் பிசியோ தெரபி சுமார் ஒரு மாதம் எடுத்துக்க வேண்டி வந்தது.
இம்முறை திருவாரூரில் கமலாம்பிகையைத் தரிசனம் மட்டுமே! சுற்றி எல்லாம் வரவில்லை. அக்ஷர பீடம் பார்க்கவில்லை. :( இதுவே பெரிய விஷயம் என்றாகி விட்டது.
//ஆதி காலங்களில் கோயில்களில் இதற்காகத் தான் கல்லால் ஆன படிகளைப் போட்டிருப்பார்கள்//
ReplyDeleteஉண்மைதான் மேலும் இதில் நடந்து கோயிலை மூன்று
முறை வலம் வரச்சொன்னதும் காலுக்கு அக்குபஞ்சர் சிகிச்சைக்காக தந்தால்...
உங்களுக்கு தெரியாத விடயமல்ல.
இன்று நாகரீகம் என்ற பெயரில் கோயிலின் புனிதத்தையும் கலங்கடித்து விட்டார்கள்.
டைல்ஸ், மார்பிள் போடுவது மூலம் பல லட்சங்கள் செலவு கணக்கு காட்டி கொள்ளை அடிக்க முடியும்.
ஆதீனம் அவர்கள் சொன்னது போல் நாம் கோயில் உண்டியலில் பணம் போடக்கூடாது.
அந்தப் பணத்தை வெளியிலேயே தர்மம் செய்து விடலாம். - கில்லர்ஜி
அர்ச்சகர்களை பலிகடாவாக்கி விட்டார்கள். பல கோயில்களிலும் அர்ச்சகர்கள் படும்பாடு! இறைவன் ஒருவனுக்கே தலை வணங்கிய அவர்கள் இன்று யார் யாருக்கெல்லாமோ தலை வணங்கும்படி ஆகிவிட்டது. சில மூத்தவர்கள் இதற்குச் சம்மதிக்காவிட்டாலும் அவர்கள் பாடு அதோகதி தான்! :(
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. திருவாரூர் கோவிலில் உள்ள வன்மீகநாதர் என்னும் புற்றிடங்கொண்டாரைப் பற்றியும் தெரிந்து கொண்டேன். திருமால் மனதிலும் செருக்கா ? என்னவோ புராண கதைகளை கொஞ்சம் நம்ப முடியாது போகிறது. வைணவ ஸ்தலங்களில், சிவபெருமானின் சில தவறுகளைப்பற்றியும், சிவ ஸ்தலங்களில், திருமாலை குறித்தும் ஏன் ஏற்ற இறக்கமாக கதைகள் உருவாகியிருக்கின்றன என தெரியவில்லை. ஹரியும், சிவனும் என்றும் ஒன்றுதானே...
எட்டுக்குடி கோவிலில் கால் சறுக்கி விட்டதால் தங்கள் கணவருக்கு அதிகப் பிரச்சனைகள் ஏற்படாது காத்த இறைவனுக்கு நன்றி. நல்லவேளை.. என சமாதானபட்டுக் கொண்டாலும், ஒரு மாத காலம் வைத்தியம் எடுத்துக் கொண்டது சிரமந்தான். அப்போது நீங்கள் சென்னையில் இருந்தீர்களா?
கோவிலின் விபரங்கள் நீங்கள் பதிவில் கூறுவதிலிருந்து புரிந்து கொள்கிறேன். நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் அமையும் போவதுதானே அமையும். கோவிலைப் பற்றிய பதிவு ஸ்வாரஸ்யமாக இருந்தது. தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நாம் மனிதர்களுக்கு இருக்கிறாப்போல் செருக்கு தெய்வங்களுக்கும் உண்டு என எண்ணக் கூடாது. பரமாசாரியார் இதற்குத் தக்க பதில் சொல்லி இருக்கார். பார்த்து எடுத்துப் போடுகிறேன். என் கணவருக்கு ஏற்கெனவே கழுத்தில் இருந்த பிரச்னை இந்தக் கீழே விழுந்ததில் இன்னமும் அதிகம் ஆகிவிட்டது. இப்போது கழுத்தை அசைக்கக் கூட முடியாது. :( ஏதோ வண்டி ஓடுகிறது.
Deleteதிருமாலுக்கே கர்வமா? இப்படி ஒரு கதை கேள்விபப்ட்டதில்லை. திருமாலுக்கு ஈசன் உதவுவதும் ஈசனுக்கு திருமால் உதவுவதும் மாற்றி மாற்றி புராணங்களில் சொல்லப்படுகின்றன. இருவரில் யார் பெரியவர் என்கிற விவாதங்களும் நடக்கின்றன!
ReplyDeleteஆணவக்கார மனிதர்களுக்குப் புத்தி புகட்ட இப்படியான சில புராணங்கள் இருக்கின்றன ஸ்ரீராம். விபரமாகப் பின்னர் எழுதறேன்
Deleteகல்வெட்டுகள் பொறிக்கப்பட்ட கற்களைக் காணாமல் அடித்த அறமில்லாதுறையை என்ன சொல்ல... என்ன புத்திசாலித்தனம் இதெல்லாம்... டைல்ஸ் கற்கள் பதித்தாள் சும்மாவே வழுக்கும். நல்லவேளை பெரிதாக ஒன்றும் ஆகவில்லை.. தியாகேசர் கருணை.
ReplyDeleteஉண்மையில் அது இறைவன் கருணை தான் ஸ்ரீராம்.என் வாழ்க்கையில் நான் திரும்பிப்பார்த்தால் இறை அருளால் எத்தனை எத்தனை பெரிய பெரிய ஆபத்துகள்/விபத்துகள் போன்றவற்றில் இருந்தெல்லாம் கடவுள் என்னைக் காத்து ரக்ஷித்து வருகிறார் என நினைத்தால் எனக்கே அது ஆச்சரியமாக இருக்கும். நான் பக்தி என்னும் பெயரால் செய்யும் சின்னச் சின்ன விஷயங்களுக்கே இத்தனை கருணை காட்டினால்! இறைவன் ரொம்பப் பெரியவன் என்பதில் ஐயமே இல்லை.
Deleteஇங்கே ஐயாறப்பர் திருக்கோயிலிலும் மூலஸ்தான முன் மண்டப த்தில் வழவழப்பு மிகுந்த தளம் அமைத்து இருக்கின்றார்கள்.. எண்ணெய் பிசுக்கு ஆபத்தானது தான்.. ஆனாலும்
ReplyDeleteஇப்படியெல்லாம் ஆடம்பரமாக இருப்பதைத் தான் மக்களும் விரும்புகின்றார்கள்..
எப்படியோ போகட்டும்..
இறைவன் காத்தருள்வான்
நாங்க முதல்முதலாக ஐயாறப்பரைத் தரிசிக்கச் சென்றப்போகல் தளம் தான். பின்னாட்களில் 2,3 முறை சென்றப்போ எல்லாமே மாறி விட்டன. :(
Deleteவைஷ்ணவாதிகளும் சைவ சமயிகளும் ஆளுக்கொருபக்கம் சொல்லிக் கொண்டாலும் சங்கர நாராயணர் திருக்கோலம் ஒத்துக் கொள்ளப்படுவது..
ReplyDeleteதஞ்சை பெரிய கோயில் கோஷ்டத்தில் சங்கர நாராயணர் திருமேனியும் சிவலிங்கத்தில் தோன்றும் ஈசனை சங்கு சக்கரங்களுடன் ஸ்ரீ மஹா விஷ்ணு வணங்குவது போலவும் பெரிய அளவில் சிற்பங்கள் அமைந்துள்ளன..
தஞ்சை மேலராஜ வீதியில் சங்கர நாராயணருக்குத் தனியாக கோயிலே அமைந்துள்ளது..
சந்நிதியில் சங்கரநாராயணருக்கு வலப்புறத்தில் ஸ்ரீ கௌரியும் இடப்புறத்தில் ஸ்ரீ லக்ஷ்மியும் விளங்குகின்றனர்..
இந்த விஷயத்தில் வைஷ்ணவர்களை விட சைவர்கள்/ஸ்மார்த்தர்கள் ஆகியோர் பரவாயில்லை துரை. தில்லைக் கோயிலில் பார்த்தீர்களானால் கோவிந்தராஜ ஸ்வாமி சந்நிதிக்கு வரும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் அனைவரும் முகத்தை ஒரு பக்கம் மூடிப்பாங்க. எங்கே நடராஜர் கண்ணிலே பட்டுடுவாரோனு! எனக்குச் சிரிப்பாக வரும் அதைப் பார்த்து. இப்போவும் வேளுக்குடி போன்றோர் சிவ துவேஷம் செய்வதைக் கண்கூடாகப் பார்க்கலாம். சிலர் சிவன் கோயில்களுக்கே போக மாட்டார்கள். மறந்தும் பிற கடவுளரைத் தொழார்கள்
Deleteகல்வெட்டுகள் பொறிக்கப்பட்ட கற்களை அகற்றிவிட்டனர் இவ்வாறு பல சரித்திர முக்கியத்துவங்களை இழந்துவிட்டோம் .எவ்வளவு பெரிய இழப்பு என்பதை பின்புதான் உணர்கிறோம்.
ReplyDelete