எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, July 13, 2022

அனைத்து ஆசாரியர்களுக்கும் நமஸ்காரங்கள்!



வியாசர் பிள்ளையாருடன்
படத்துக்கு நன்றி கூகிளார்

இந்தப் புண்ணிய பூமி கர்ம பூமி, எனவும், ஞானபூமி எனவும் சொல்லப் படுகின்றது. இந்த பாரதத் திருநாட்டை நோக்கி ஞானகுருவான தட்சிணாமூர்த்தி ஸ்வரூபமாகத் திருக்கைலையில் ஈசன் அமர்ந்திருக்கும் கோலத்தில் கைலை தரிசனம் காணலாம். அதனாலேயே ஞானபூமி என்று சொன்னார்களோ என்னவோ? ஆனாலும் ஆதிகுரு தட்சிணாமூர்த்தி என்றாலும், அவர் உபதேசித்தது மெளனத்தின் மூலமே. மெளன குருவான அவர் பேசாத குருவாக இருப்பதால், நம்மிடம் பேசி உபதேசம் பண்ணிய ஒரே குரு, முக்கியமாய் அத்வைத வேதாந்திகளுக்கு ஸ்ரீமந்நாராயணனே ஆசார்யன் ஆவான். அவர்களின் கர்மாக்களின் மந்திரங்களின் முக்கிய இடைவெளியில், "கிருஷ்ண, கிருஷ்ண," என்றோ, "கோவிந்தா, கோவிந்தா" என்றோ அல்லது "நாராயணா, நாராயணா" என்றோ சொல்லி, செய்வதை அனைத்தையும் அவனுக்கே அர்ப்பணிப்பார்கள். 

இந்த ஸ்ரீமந்நாராயணனின் பிள்ளையான பிரம்மா, பிரம்மாவின் பிள்ளை வசிஷ்டர், வசிஷ்டரின் மகன் சக்தி, அவர் மகனும் விஷ்ணு புராணம் எழுதியவரும் ஆன பராசரர், பராசரரின் பிள்ளை வியாசர், வியாசரின் மகன், சுகர், சுகர் பிரம்மச்சாரி. பிறந்ததில் இருந்தே பரப்பிரம்மம். இவருக்குக் கிளி மூக்கும், முகமும் வந்த கதை அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்த சுகர் திருமணம் செய்து கொள்ளாததால், இவருக்குச் சீடர் மட்டுமே உண்டு. அவர் தான் கெளடபாதர். கெளடபாதரோ, சந்யாஸி. ஆகவே இவருக்கும் சிஷ்ய பரம்பரையே வருகின்றது. இந்த சிஷ்ய பரம்பரையில் வந்தவரே கெளடபாதரின் சிஷ்யர் ஆன கோவிந்த பகவத்பாதர். கோவிந்த பகவத்பாதரின் சிஷ்யரே ஆதிசங்கரர். 


                                                         ஆதி சங்கரர் சிஷ்யர்களுடன்

சங்கரருடைய நான்கு சிஷ்யர்கள் ஆன, பத்மபாதர், தோடகர், ஹஸ்தாமலகர், ஸுரேஸ்வரர் போன்றவர்கள் பற்றியும், அவர்கள் சார்ந்த மடங்கள் பற்றியும் ஓரளவு அறிவோம். இப்படிப் பார்த்தால் நம் ஆசாரியர் என்பவர் ஆதிகுருவான விஷ்ணுவின் சாட்சாத் அவதாரம் ஆன வியாசரே ஆவார். "முநீநா மப்யஹம் வ்யாஸ:" என்று கீதையில் கீதாசார்யனே சொல்லி இருக்கின்றான். மேலும் விஷ்ணு சஹஸ்ரநாமாவளியில் "வ்யாஸாய விஷ்ணு ரூபாய" "வ்யாஸ ரூபாய விஷ்ணவே" என்றும் வருகின்றது. 

இந்த வேத வியாஸர் அவதாரம் காரணத்துடனேயே ஏற்பட்டது. பராசர முனிவர், குறிப்பிட்ட நேரத்தில் மச்சகந்தியுடன் கூடியதன் விளைவாக ஒரு த்வீபத்தில் தோன்றியவர் வேத வியாஸர். தீவில் பிறந்ததால் அவருடைய பெயர் "த்வைபாயனர்" என்றும், கறுப்பாக இருந்தமையால், "கிருஷ்ணர்" என்றும், இரண்டையும் சேர்த்தே வேத வியாஸரை "கிருஷ்ண த்வைபாயனர்" என்றும் சொல்லுவதுண்டு. கலி தோன்றப் போகின்றது என்பதாலேயே, வேதங்களைக் காத்து அவற்றைத் தொகுத்து மக்களைச் சென்றடையவேண்டியே பகவான் எடுத்த ஒரு அவதாரமே வியாசர் எனவும் , சாட்சாத் மஹா விஷ்ணுவின் அம்சமே வியாஸர் என்றும் சொல்லுவார்கள். இந்த வியாஸர் வேதங்களைத் தொகுத்தமையால், "வேத வியாஸர்" என்ற பெயர் பெற்றார். மும்மூர்த்திகளின் சொரூபமாயும் வேத வியாஸரைச் சொல்லுவதுண்டு. வியாஸரே "குரு பிரம்மா, குரு விஷ்ணு, குரு தேவோ மஹேஸ்வர:" என்றும் திரிமூர்த்திகளும் சேர்ந்தவர் என்றும் சொல்லுவது உண்டு. 

அதுவரையிலும் கங்குகரை இல்லாமல் இருந்த வேதங்கள் நான்காய்ப் பிரிக்கப் பட்டது வியாஸராலேயே. தம் சிஷ்யர்களில் பைலரிடம் ரிக்வேதத்தையும், வைசம்பாயனரிடம் யஜுர்வேதத்தையும், ஜைமினியிடம் சாமவேதத்தையும், ஸுமந்துவிடம் அதர்வண வேதத்தையும் உபதேசித்து, இவை பரவ வழி வகுத்துக் கொடுத்தார். இதே வியாசர் தான் புராணங்களையும் பதினெட்டாய்த் தொகுத்து அவற்றையும், மஹாபாரதத்தையும் ஸூத முனிவருக்கு உபதேசித்து அவர் மூலம் இவை பரவ வழி வகுத்தார். இந்த ஸூத முனிவர் வழியாய் வந்தவையே நம் பதினெண் புராணங்கள். இந்த ஸுத முனிவர் பிறப்பால் பிராமணர் இல்லை, தேரோட்டி மகன் என்பதும் குறிப்பிடத் தகுந்தது. பிரம்மதத்துவத்தைச் சொல்லும் பிரம்ம ஸூத்திரத்தையும் வேத வியாஸர் ஏற்படுத்தி, சுகப்பிரம்ம ரிஷிக்கு அவற்றை உபதேசித்தார். இந்த பிரம்ம ஸூத்திரத்துக்குப் பாஷ்யம் எழுதியவர்களிலேயே நாம் இன்றைக்கும் பின்பற்றும் ஆசாரிய பரம்பரைக்கு வழி வகுத்த சங்கரர், (அத்வைதம்)ராமானுஜர்,(விசிஷ்டாத்வைதம்) மத்வர், (த்வைதம்), ஸ்ரீகண்டாசாரியார்(சைவ சித்தாந்தம்), வல்லபாசாரியார்(கிருஷ்ண பக்தி மார்க்கம்) போன்றவற்றைத் தம் தம் நோக்கில் எழுதி இருக்கின்றார்கள். 

ஆகவே மூலம் என்பது ஒன்றே. இதில் நமக்கு எதைப் பிடிக்கிறதோ, அல்லது குடும்ப வழி என்று சிலருக்கு வருகின்றதோ, அல்லது இஷ்டம் என்று சிலருக்குத் தோன்றுகின்றதோ அதை எடுத்துக் கொண்டு அதன்படி பயிற்சி செய்து வருகின்றோம். ஆனால் அனைத்துக்கும் மூல காரணம் வேத வியாஸரே. அதனாலேயே குரு பூர்ணிமா என்று ஏற்பட்டு வேத வியாஸருக்கு என்று தனியாகப் பூஜை, வழிபாடுகள் செய்து வருகின்றோம். இன்னும் குடும்ப வாழ்வில் ஈடுபட்டவர்களும், திருமணம் ஆகாத பிரம்மசாரிகளும் ஒருபடி மேலே போய் ஆவணி அவிட்டத்தின்போது, பூணூல் போட்டுக் கொள்ளும் முன்னர், வேத வியாஸரைக் கும்பத்தில் ஆவாஹனம் செய்து வழிபட்டு, நைவேத்தியங்கள் செய்து, அந்தப் பிரசாதத்தை வீட்டில் உள்ள அனைவருக்கும் நினைவாய் எடுத்து வந்து கொடுத்து வியாஸரை நினைவு கூருகின்றார்கள். அதோடு அன்றைய தினம் தர்ப்பணம், ஹோமம், போன்றவையும் செய்து ஆராதிக்கின்றனர். இது முன்னர் அனைத்து வர்ணத்தினராலும் செய்யப் பட்டு வந்திருக்கின்றது, என்றாலும் இன்றும் ஒரு சில வேறு வர்ணத்தினரும் விடாமல் செய்து வருகின்றார்கள். 

ஆனால் சந்யாஸிகள் பூணூல் தரிப்பது இல்லை ஒரு சிலரைத் தவிர. ஆகவே அவர்கள் வியாஸரை நினைவு கூருவதற்காகவே சாதுர்மாஸ ஆரம்பத்தின்போது வியாஸ பூஜை செய்து வழிபடுகின்றார்கள். இந்த ஆவணி அவிட்டம் என்பது அனைவருக்கும் முக்கியமான ஒன்று. ரிக், யஜுர் வேதக் காரர் அனைவருக்கும், ஆவணி மாத அவிட்ட நட்சத்திரத்தில் பெளர்ணமியும் கூடி இருக்கும்போது வந்தால், சாமவேதக் காரர்களுக்கு மட்டும், ஆவணி மாதம் அமாவாசை கழிந்து,(அநேகமாய் பாத்ரபத சுக்ல சதுர்த்தி அன்று) வரும் பிள்ளையார் சதுர்த்திக்கு முதல்நாள் அல்லது பிள்ளையார் சதுர்த்தி அன்று வரும். "வேதாநாம் ஸாமவேதோஸ்மி" என்று கீதையில் கீதாசாரியன் சொன்னது போல் சாமவேதம் மட்டும் தனித்து இருப்பது அதன் ராகங்களுக்காகவோ என்றும் தோன்றுகின்றது.ஆயிரம் சாகைகள் கொண்டதாய்ச் சொல்லப் படும் இவை இசைக்கும் முறையில், அந்த ராகமாகவே ஸ்ரீமந்நாராயணன் விளங்குகிறதாய் அவனே கீதையில் சொல்லுகின்றான். இதனால் மற்ற வேதங்கள் சிறப்பு இல்லை என்று அர்த்தம் இல்லை. இந்த சாமவேதம் மட்டுமே ராகத்தோடு பாடக்கூடியது. அந்த ராகமாகவே ஸ்ரீமந்நாராயணன் விளங்குகின்றான் என்றே அர்த்தம். எப்பொழுதுமே எல்லா கர்மாக்களையும் செய்து முடித்த பின்னரும் ஒவ்வொரு முறையும் செய்த அனைத்தையுமே ஸ்ரீமந்நாராயணனுக்கே சமர்ப்பிக்கின்றோம் இவ்வாறு சொல்லி. /

/காயேந வாசா, மனஸேந்த்ரியைர்வா புத்யாத்மநாவா ப்ரக்ருதேஸ்வபாவாத் கரோமி யத்யத் ஸகலம்பரஸ்மை நாராயாணாயேதி ஸமர்ப்பயாமி// 

இந்தப் பதிவும் அப்படியே, ஸ்ரீமந்நாராயணனுக்கே சமர்ப்பணம். குரு பூர்ணிமாவுக்காக எழுதி எப்போவோ வச்சது. ஆனால் அப்போ வேறே போஸ்ட் போட்டுட்டேன், அதனாலும் இன்றைய நாளின் விசேஷத்தைக் கருதியும் இந்த போஸ்ட்.

                                             ஶ்ரீராமாநுஜாசாரியார்


படங்களுக்கு நன்றி கூகிள்.


ஆசார்ய ஹ்ருதயம்

மேற்கண்ட சுட்டியில் உள்ள வலைப்பதிவு "ஆசார்ய ஹ்ருதயம்" நண்பர்கள் சேர்ந்து ஆரம்பித்து அவரவரால் முடிந்ததை/தெரிந்ததை எழுதி வந்தோம். எல்லாம் கடந்து போனாப்போல் இதுவும் கடந்து போனது.  அந்தச் சமயங்களில் ஒரு குரு பூர்ணிமாவுக்கு எழுதி வைச்ச இந்தப்பதிவு இப்போதும் பொருந்தும் வண்ணம் இருக்கிறது. இந்தக் கரு பிடிச்ச்வங்களுக்கு இது பிடிக்கும்.  மற்றவர்கள் பொறுத்து அருள வேண்டும். மீண்டும் நன்றி. வணக்கம்.

புதுசாக எழுதலையே பல மாதங்களாக எனக் கேட்பவர்களுக்கு இப்போதைய சூழலில் எதைப் பற்றி எழுதினாலும் பிரச்னை ஏற்படுகிறது.  பிரச்னைகளை உண்டாக்குவதில் ஆர்வம் இல்லை. என்ன நடக்குமோ என்ற கவலை இருந்தாலும் கலங்கிய குட்டை ஒரு நாள் தெளிந்த்து தான் தீரணும். 


ஶ்ரீ மத்வாசாரியார்

படத்துக்கு நன்றி கூகிள். 

18 comments:

  1. ச் missing. தலைப்பு ஜாதிப்பேர் ஆயிடுச்சு

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் சொன்ன ஜாதிப் பெயருக்கும் "ச்" வேண்டும்.

      Delete
    2. ஜாதிப்பெயருக்குத் தான் "ச்" வேண்டும் கில்லர்ஜி. நன்றி.

      Delete
    3. @நெல்லை! //ஆசார்ய’ இலக்கணம் : தெய்வத்தின் குரல்// ஆசார்யன்/ஆசார்யர் என்பதே சரி.

      Delete
    4. கீதாக்கா ஆசாரியர் தான் சரியா.....ஓ...

      தெரிந்துகொண்டேன்

      கீதா

      Delete
  2. கீதாக்கா ஆச்சாரியர் டைப்போ ஆகிருக்குன்னு நினைக்கிறேன்.

    எனது வணக்கங்களும்...

    வியாசர் பற்றி இப்போதான் கூடுதல் விவரங்கள் உங்கள் பதிவிலிருந்து தெரிந்து கொண்டேன்.

    கீதா

    ReplyDelete
  3. புதிதாக அறிந்தேன் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி!

      Delete
  4. புதிதாக அறிந்தேன் நன்றி.

    ReplyDelete
  5. ஆழமான அர்த்தபூர்வமான பதிவு.  மனதில் பதியவே மாட்டேன் என்கிறது! அல்பமனம் அலைந்து கொண்டே இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. பதினைந்து வருடங்கள் முன்னால் எழுதினது. இன்றைய /நேற்றைய குருபூர்ணிமாவுக்குப் பொருந்தி வரவே பகிர்ந்தேன்.

      Delete
  6. வணக்கம் சகோதரி

    நல்ல அருமையான பதிவு. பதிவு முழுவதும் ரசித்துப் படித்தேன். தெரியாத பல விஷயங்களை படித்தறிந்து கொண்டேன். குரு ஆச்சாரியார்களை வணங்கி கொண்டேன். ஆன்மிகம் முதல் சமையலாகட்டும், நாட்டு நடப்பாகட்டும், புராணங்கள், கோவில்கள் போன்ற எல்லாவற்றையும் விபரமாக சொல்லுவதில் உங்களுக்கு நிகர் நீங்களே.. .. உங்கள் திறமை, நினைவாற்றல், தெளிவாக ஒவ்வொன்றையும் சொல்லும் முறைகள் கண்டு மிகவும் வியக்கிறேன். உங்களை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை. ஆதலால் என் பணிவான வணக்கங்களை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, பாராட்டுக்கு நன்றி. ஆனால் அப்போதெல்லாம் நண்பர்கள் அனைவருமே போட்டி போட்டுக் கொண்டு ஆன்மிகம், பக்தி, யோகம் குறித்து எழுதிக் கொண்டிருந்தோம். பின்னாட்களில் நண்பர்கள் ஒவ்வொருவராக எழுதுவதை நிறுத்தவே நானும் வேறு விஷயங்களில் மனதைத் திருப்பி விட்டேன். இப்போ நினைச்சுப்பேன்/இதெல்லாம் நாமா எழுதினோம்னு! :( அது ஒரு காலம்.

      Delete
  7. பதிவில் சொல்லப்பட்ட விஷயங்கள் பல அறியாதவை. அறிந்து கொண்டேன்

    ஆசார்யர்கள் அனைவருக்கும் பணிவான வணக்கங்கள்.

    துளசிதரன்

    ReplyDelete
  8. பல விளக்கங்களையும் அறிந்து கொண்டேன். நல்ல பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மாதேவி! நிலைமை இப்போப் பரவாயில்லையா?

      Delete
  9. குரு பூர்ணிமா சிறப்பு பதிவு மிக அருமை.
    நிறைய விஷயங்களை அறிந்து கொள்ள முடிகிறது.

    ReplyDelete