நான் வயிற்றுத் தொந்திரவால் எழுந்திருக்காமல் படுத்திருந்தப்போ, அப்புறமா மருத்துவரிடம் போயிட்டு வந்தப்போ எல்லாம் என்னை எப்படி இருக்குனு கேட்டுக் கொண்டே இருந்தது. அதோடு இல்லாமல் எனக்காக get well soon என்று பூக்களால் படம் வரைந்து எழுதியும் கொடுத்திருக்கு.
அவங்க அம்மா சமைக்கையில் தாத்தா வெண்டைக்காய் நறுக்கிக் கொடுத்தார். அப்போத் தாத்தாவுக்கு வெண்டைக்காயால் அலங்காரம் செய்து பார்த்துவிட்டுச் சிரிக்கிறது. இப்போ முடியாமல் படுத்திருப்பதைப் பார்த்தால் கஷ்டமா இருக்கு.
ஒரு வாரமாக வயிறு வழக்கம்போல் தன் வேலையைக் காட்டி விட்டது. அதோடு கோகுலாஷ்டமியும் வந்து விட்டுப் போயாச்சு. படங்கள் எல்லாம் எடுக்கவே இல்லை. குட்டிக் குஞ்சுலு நான் கோலம் போட்டுவிட்டுக் காய்ந்த பின்னர் காவி இடும்போது தானும் கூடவே வந்து நான் இடுவதைப் பார்த்துக் கொண்டு அதே போல் தானும் காவி இட்டு உதவி செய்தது. அப்புறமாத் தாத்தாவுடன் எங்கள் தளத்தில் எல்லாருடைய வீட்டையும் பார்த்துக் கால் வைச்சிருப்பதையும் கிருஷ்ணா உம்மாச்சியின் பிறந்த நாளை ஏன் இப்படிக் கால் வைச்சுக் கொண்டாடுகிறாங்க என்றும் கேட்டுக் கொண்டது. அன்னிக்குத் தான் கொடைக்கானலில் இருந்து திரும்பி இருந்ததால் அதோட அப்பாவுக்கு ஜுரம். போன தரம் வந்திருக்கும்போதும் ஜூரம். இன்னிக்கு இப்போது குஞ்சுலுவுக்கும் நல்ல ஜுரம்.
குஞ்சுலு, குஞ்சுலு பாட்டி அப்டேட்ஸ் இப்போதுதான் படித்தேன். தாத்தாவுக்கு வெண்டை ஆபரணம் என்னமோ ஆதீனத்தின் தலையில் ருத்ராக்ஷம் போல்.. பேட்டியின் கலைவண்ணம்! பாட்டிக்கும் பேத்திக்கும் உடம்பு சட்டுபுட்டுனு தேறட்டும். மேலும் படிக்க கதைகள் வரட்டும்!
ReplyDeleteவாங்க ஏகாந்தன், எப்போவோ வரீங்க. உங்க பதிவுகளை நான் படிச்சாலும் கருத்திட முடியறதில்லை. வேர்ட் ப்ரஸ் அனுமதிப்பதில்லை. காமாட்சி அம்மாவின் பதிவிலும் இப்படித்தான் இருந்தது. கடைசியில் முகநூல் மூலமா போறேன். நீங்க அங்கே இருக்கீங்களா இல்லையானு தெரியாது. இருந்தால் உங்க பதிவுகளுக்கும் முகநூல் வழியா வரலாம்.
Deleteஇன்னிக்கு இங்கே வந்ததுக்கும் கருத்துச் சொன்னதுக்கும் மிக்க நன்றி.
வர்ட்ப்ரெஸ் சிலரைத் தொந்திரவு செய்கிறதுபோலும்.
Deleteமுகநூலில் நான் இருக்கிறேனா என்று என்னையே நான் கேட்டுக்கொள்கிறேன். ஏகாந்தன் டெல்லி என்று ஒரு அக்கவுண்ட் இருக்கு என்பதும் இப்போ நினைவுக்கு வருகிறது! ட்விட்டரிலும் ஒரு அக்கவுண்ட் உண்டு. நான் அங்கேயெல்லாம் அடிக்கடி செல்வதில்லை. பொதுவாக எதுவும் செய்யாமலிருப்பதே சுகமாக இருப்பதாக அடிக்கடி தோன்றும்..
குஞ்சுலு விரைவில் நலம் பெற வேண்டும்..
ReplyDeleteநன்றி தம்பி துரை
Deleteவருவதும் இருப்பதும் சில நாட்கள் மட்டுமே.. அதிலும் ஜூரம் என்றால் மனதுக்கு மிகவும் கஷ்டமாகத் தான் இருக்கும்..
ReplyDeleteஒன்றும் கவலை வேண்டாம்.. எல்லாம் சரியாகி விடும்..
ஆமாம், அதுவும் இன்னிக்குத் தொந்திரவு ஜாஸ்தியாவே இருக்கு. இப்போ மருத்துவரிடம் போய்க் காட்டிவிட்டு வரப் போகிறார்கள்.
Deleteஉடல் நலத்தை கவனிக்கவும்.
ReplyDeleteநன்றி கில்லர்ஜி.
Deleteஉங்கள் உடல் நலமும், துர்கா, உங்கள் மகன் உடல் நிலை விரைவில் நலமாக வேண்டும்.
ReplyDeleteதாத்தாவுக்கு வெண்டைக்காய் நகைகள் அழகாய் செய்து இருக்கிறார் குட்டித் தங்கம்.
தாத்தாவுடன் எல்லோர் வீடுகளில் கண்ணன் காலதடம் கண்டு வந்தது மகிழ்ச்சி.
விரைவில் எல்லோரும் நலமாகி மகிழ்வாய் இருக்க வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்.
துர்காவின் கைவண்ணம் அருமை. வாழ்த்து அட்டை நன்றாக இருக்கிறது.
எனக்கு இன்னமும் சரியாகலை கோமதி. மருத்துவரிடம் போயிட்டு வந்தாச்சு. அவர் போனால் போகட்டும். வயிற்றிலுள்ள கழிவுகள் வெளியே வரட்டும் என்று சொல்லிவிட்டார். ஓஆர் எஸ் அடிக்கடி எடுத்துக்கறேன். எலுமிச்சைச் சாறு உப்புச் சேர்த்துக் குடிக்கிறேன். மோர் சாதம் தான் சாப்பிடச் சொல்லி இருக்கார். இட்லி எடுத்துக்கலாம்னார். ஆனால் இட்லி சாப்பிட்டதில் தான் இது ஆரம்பிச்சது என்பதால் நான் மோர்சாதமே சாப்பிட்டுக்கலாம்னு இருக்கேன்.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteஇப்போது எப்படியிருக்கிறீர்கள்? நலமா? தங்கள் பேத்திக்கும், மகனுக்கும் ஜுரம் குறைந்துள்ளதா? விபரங்கள் படிக்கவே எனக்கு மனதுக்கு கஷ்டமாக இருந்தது. தங்களுக்கும் அவர்கள் வந்த இடத்தில் உடல் நலமில்லையென்றால் எவ்வளவு மனதுக்கு வருத்தமாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஜுரம் குறைந்து சீக்கிரம் நலமடைய இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.தாங்களும் எந்தவித உடல் பிரச்சனைகளுமின்றி தங்கள் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கவும் இறைவனை மனதாற பிரார்த்தித்து கொள்கிறேன்
தாத்தாவுக்கு பேத்தி அணிவித்த நகைகள் நன்றாக உள்ளது. வைர வைடூரியங்களை கொண்டு அவள் நகைகள் செய்து தந்தாலும் இதற்கு ஈடு இணை இல்லை. தாத்தாவின் முகத்தில் அவ்வளவு சந்தோஷம் தெரிகிறது. இதைப் பதிவாக எங்களுக்கு தங்கள் பேத்தியின் குறும்புகளை விவரித்த தங்களுக்கு நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பேத்திக்கும் பிள்ளைக்கும் பரவாயில்லை கமலா. எனக்குத் தான் இன்னமும் சரியாகலை, பொதுவாகவே வந்தால் உடனே குணமாகாது. இம்முறை ஒரு வாரமாகப் படுத்தல். இன்னிக்குக் காலம்பர எழுந்துக்க முடியலை. அதுக்கப்புறமா மருத்துவரிடம் போய்க் கேட்டு விட்டு வந்ததில் சாப்பாடு எல்லாம் ஒரு மணி நேரம் தாமதம்.வைர, வைடூரியங்கள் எல்லாம் திருடு போகுமே! இதை யாரும் எடுத்துப் போக மாட்டாங்க இல்லையோ!
Deleteதுரை அண்ணன் சொல்லி இருபிப்பதுதான் எனக்கும் தோன்றியது. வந்து சேர்ந்து இருக்கும் நாட்களே கம்மி. அதிலும் உடல்நிலை சரியில்லாமல் போவது மனஸுக்கு கஷ்டமா இருக்கும். சீக்கிரம் தேறி வாருங்கள்.
ReplyDeleteஆமாம். இங்கே தங்கும் நாட்கள் மொத்தமே 20 நாட்கள் தான். அதிலும் ஒரு வாரம் பழனி, கொடைக்கானலில் போயாச்சு. இந்த வாரம் உடம்புப் படுத்தல். என்னவோ போங்க!
Deleteகுழந்தைகளே வரம். அதிலும் பெண்குழந்தை பெருவரம். அவர்கள் சுவாரஸ்யங்களும் புத்திசாலித்தனங்களும் ஜீனில் இருக்கிறது.
ReplyDeleteஉண்மை ஸ்ரீராம். பெண் குழந்தைகள் இருப்பதால் வீடேவெளிச்சம் போட்டால்போலிருக்கும். எனக்கும் முதலில் பெண் குழந்தை தான் ஆசையாக இருந்தது ஆனால் என் மாமனார்/மாமியாருக்குப் பிள்ளை தான் பிறக்கணும்னு எண்ணம். பெண் பிறக்கவும் அவங்களுக்குக் கோபம். என்னைக் கருவிலிக்குக்குழந்தையோடு அழைக்க எட்டு மாசம் ஆச்சு. அது கூட எல்லோருடைய வற்புறுத்தலினால். ஆனால் நான் வேலையில் சேரணும்னு 50 நாட்களில் கிளம்பிச் சென்னை வந்துட்டேன். அதுவும் அவங்களுக்குக் கோபம் என்ன செய்வது? ஊருக்கு மட்டும் கூப்பிடவே மாட்டேன்னுட்டாங்க! அப்போச் சென்னை வரலைனால் அப்புறமாச்சம்பளத்திலிருந்து போனஸ் வரை இழக்கும்படி இருக்கும்.
Deleteமனதிலிருப்பதை உடனே ஆவணபப்டுத்தி விடும் போல குழந்தை. தாத்தாவுக்கு வெண்டைக்காய் அலங்காரம் சூப்பர்.. என்ன சுவாரஸ்யம்! தாத்தா (மாமா)வும் மிகவும் ரசித்திருப்பார்...
ReplyDeleteஹாஹாஹா வெண்டைக்காய் அலங்காரம் உண்மையிலேயே அருமை தான். தாத்தாவும் ரசிச்சுக் காட்டி கொண்டிருந்தார்.
Deleteஅக்கா உங்க வயிறு இப்ப ஒகேவஆ? குஞ்சுலு, உங்க பையர் எப்படி இருக்கிறார்கள்? பாவம் வந்த இடத்தில் இப்படி ஜுரம். அலைச்சல் தண்ணி மாற்றம் இருக்கலாம். தாத்தாக்கு வெண்டைகாய் நகை!! குஞ்சுலு சமத்து தாத்தாவுக்கு என்ன சந்தோஷம் பாருங்க..குஞ்சுலுவின் கேள்விகள், உங்களுக்கு உதவியது, படங்கள் வரைந்தது எல்லாம் தங்கமான தருணங்கள். பேத்தி இருந்தாலே வீடு கலகலதான்.
ReplyDeleteபாவம் அதுக்கும் உங்கள் பையருக்கும் உங்களுக்கும் விரைவில் குணமாகிட வேண்டும்.
கீதா
குஞ்சுலுவுக்கும் பையருக்கும் தேவலை தி/கீதா. எனக்குத் தான் இன்னமும் பூரணமாகச் சரியாகலை. எப்போத் தான் சரியாகுமோனு நினைச்சுக்கறேன். எனக்கு நினைவு தெரிந்ததில் இருந்து வயிற்றுப்பிரச்னை இருந்து கொண்டே தான் இருக்கு. ஒரு மாசம் தொடர்ந்து சரியா இருந்தா பெரிய விஷயம். நானும் மிகவும் கவனமாகத் தான் சாப்பாடு சாப்பிடறேன்.
Deleteகுஞ்சுலுவும் மகனும் நலம் என அறிந்து மகிழ்ச்சி .நீங்களும் விரைவில் நலமடைந்து குழந்தைகளுடன் மகிழ்ந்திருக்க வேண்டுகிறேன்.
ReplyDeleteவாங்க மாதேவி. பேரன் பாட்டியை வேலை வாங்கறானா?
Deleteமாண்டசரி போய் வருகிறான் . வேலையும் வாங்குவான் :)
Deleteஇப்போது தான் வலைத்தளம் வந்து உங்களின் பதிவைப்படித்தேன். இப்போது வயிற்றுப் பிரச்சினைகள் சரியாகி விட்டதா? நலமாகி விட்டீர்களா?
ReplyDeleteகொஞ்சம் பரவாயில்லை மனோ. பத்து நாட்களுக்குப் பின்னர் இன்று தான் உட்கார்ந்து சாப்பிட்டேன். நேற்று வரையிலும் கஞ்சி தான். புழுங்கலரிசியைக் களைந்து வறுத்துக் கொண்டு கஞ்சியாகப் போடுவேன். கஞ்சி கரையும்போதே சுக்குப்பொடி, மிளகு, ஜீரகப்பொடி, பெருங்காயம், உப்பு, கஞ்சிக்குத் தகுந்தாற்போல் ஒரு தக்காளி பொடியாக நறுக்கிச் சேர்த்துடுவேன். நன்கு கரைந்ததும் தொட்டுக்கச் சுண்டைக்காய், மணத்தக்காளி வற்றல் ஆகியவற்றை வறுத்துக் கொண்டோ அல்லது மிளகு அப்பளம் சுட்டோ நெய் சேர்த்துக் கொண்டு குடிச்சுடுவேன். வாய்க்கும் இதமாக இருக்கும். தெம்பும் தரும். தேவைப்பட்டால் கொஞ்சம் போல் பாசிப்பருப்பும் வறுத்துச் சேர்த்துக் கரைய விடலாம்.
Deleteஉங்கள் உடல் நிலை இப்போது சரியாகிவிட்டதா? முந்தைய பதிவையும் வாசித்தேன்.
ReplyDeleteபேத்தி வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கும். பேத்தி தாத்தாவுக்கு செய்திருக்கும் அலங்காரத்தில் அன்பும் பாசமும் வெளிப்படுகிறது. பேத்திக்கும் மகனுக்கும் உடலநலம் சரியாகி இருக்கும் என்று நம்புகிறேன். நீங்களும் எல்லோரும் நலமுடன் மகிழ்வுடன் இருக்க வேண்டும். பேத்தியோடு நேரம் மகிழ்ச்சியாக இருக்கும் அதுவே உங்களுக்கு மனத்தெம்பைக் கொடுக்கும்.
துளசிதரன்
நன்றி துளசிதரன் இப்போது உடல்நலம் பரவாயில்லை. பேத்தி திரும்ப நைஜீரியாவுக்குக் கிளம்பிப் போய்க் கொண்டிருக்கிறாள்.
Deleteசட்னு மதுரை ஆதீனமான்னு பார்த்தேன் ருத்ராட்ச மாலையோட
ReplyDeleteஇஃகி, இஃகி, இஃகி, இஃகி!
Deleteகுஞ்சுலு குட்டிப்பெண். அதற்குள் ஜுரமா? ஐயோ பாவம்
ReplyDeleteகுழந்தைகளுக்கு உடம்பு படுத்தி ஜூரம் வந்து பார்த்ததே இல்லையோ? எங்க பையருக்கு 45 நாட்களில் டபுள் நிமோனியா வந்து ஆக்சிஜனெல்லாம் வைச்சு அமர்க்களமா ஆகிவிட்டது. அடிக்கடி ஜூரம் வந்து படுத்துப்பார் இப்போவும் ஆள் பார்க்க உசரமா ஆஜாநுபாகுவாத் தெரிவார். ஆனால் உடல் நலம் சுமார் தான்.
Delete