இந்த வருஷம் கோகுலாஷ்டமிக்கு பக்ஷணங்கள் வெளியே வாங்கினாலும் நிவேதனத்துக்கு எனக் கொஞ்சமாக முறுக்கு, தட்டை, கர்ச்சிக்காய், பாயசம், வடை, திரட்டுப்பால் ஆகியவை செய்தேன். அன்றே உடம்பு சரியில்லாமல் இருந்தது அதுக்கப்புறமா சுமார் ஒரு வாரம் வயிறும்/உடம்பும் மாறி மாறிப் படுத்தல். இந்த அழகில் காலில் வேறே வீக்கம் மறுபடி ஆரம்பிச்சது. குழந்தைங்க வந்திருக்கும்போது இப்படி இருக்கேனு நினைச்சுக் கொண்டே இருந்தோம். சாப்பாடு ஓரிரு நாட்கள் மருமகள் பண்ணினாலும் வந்த இடத்தில் வேலைச்சுமைகளை ஏற்ற வேண்டாம்னு காடரர் மூலமா சாப்பாடு ஏற்பாடு பண்ணச் சொன்னேன். வீட்டில் சாதம் மற்றும் ஏதேனும் காய் மட்டும் மருமகள் பண்ணிடுவாள். அவங்க ஊருக்குப் போகும் இரண்டு நாட்கள் முன்னர் குலதெய்வம் கோயிலுக்குப் போனப்போக் கூட நான் போகலை. என்னை வரவேண்டாம்னு சொல்லிட்டாங்க. அலைச்சல் ஒத்துக்காது என்பதோடு வயிறு நிலைமையும் இரண்டுங்கெட்டானாக இருந்தது. புழுங்கலரிசிக் கஞ்சி தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். கோகுலாஷ்டமி அன்னிக்குப் படமெல்லாம் எடுக்க முடியலை. என்ன செய்ய முடியும்? பையர்/குஞ்சுலு ஆகியோருக்கும் ஜூரம். இரண்டு நாட்கள் கழிச்சு மருமகளும் படுத்துக் கொண்டாள். :( வீடு முழுக்க மருத்துவர் சிகிச்சையாக இருந்தது. கடைசியில் உடம்பு கொஞ்சம் சரியானது. எல்லோரும் திங்களன்று மடிப்பாக்கம் கிளம்பிப் போனாங்க. இன்னிக்கு நைஜீரியாவுக்கு விமானம் ஏறப் போறாங்க. நைஜீரியா நேரப்படி வியாழனன்று மதியம் போய்ச் சேருவாங்கனு நினைக்கிறேன்.
அப்பம், வடை, கொழுக்கட்டை, இட்லி வகைகள், பாயசம், சாதம், பருப்பு நெய்யுடன்
பூஜை முடிஞ்சு தீபாராதனை.
இன்னிக்குப் பிள்ளையார் சதுர்த்திக்கு நல்லபடியா எல்லாம் பண்ணணுமேனு ஒரே திகைப்பு! காலையில் அதற்கேற்றாற்போல் வேலை செய்யும் பெண்மணி ஒரு மணி நேரம் தாமதம். மடமடவென சமையலறை, பூஜை அறை ஆகியவற்றை மட்டும் பெருக்கித் துடைத்துவிட்டுக் குளிச்சுட்டு வந்து வேலைகளை ஆரம்பிச்சேன். முடிச்சுட்டுக்கொழுக்கட்டை வேலைகளைச் செய்தேன். பனிரண்டு தேங்காய்ப் பூரணக் கொழுக்கட்டை, பனிரண்டு உளுந்துப் பூரணக் கொழுக்கட்டை பண்ணுவதற்குள்ளாக மணி பதினொன்று ஆகிவிட்டது. வடை நான்கு அப்பம் நான்கு தட்டி நிவேதனத்துக்குனு வைச்சுட்டு அடுப்பை அணைச்சுப் பின்னர் மத்தியானமாப் பண்ணிக்கலாம்னு நினைச்சேன். ஆனால் எழுந்து வந்து பூஜையில் கலந்துக்கவே முடியலை. கால்களெல்லாம் நடுக்கம். உடலில் ஓர் பதட்டம். எதையாவது கீழே போட்டுடுவேனோ அல்லது நானே விழுந்துடுவேனோனு பயம். சாப்பிட உட்கார்ந்தால் ஒரு பிடி கூட இறங்கவில்லை. ஒரு கைப்பிடி சாதத்தில் ரசத்தை விட்டுச் சாப்பிட்டுவிட்டு ஒரு கரண்டிப் பாயசமும் சாப்பிட்டுவிட்டு எழுந்தால் முடீயவே இல்லை. சட்டுனு மனதில் ஏதோ தோன்றி ரங்க்ஸிடம் சொல்லிட்டுச் சாப்பாடு மிகுந்தது மற்றும் கொழுக்கட்டை மாவு, பூரண வகைகள், வடை மாவு, அப்பம் மாவு எல்லாவற்றையும் வேலை செய்யும் பெண்ணைக் கூப்பிட்டுக் கொடுத்துட்டுப் போய்ப் படுத்துட்டேன். 3 மணி வரையிலும் கால்களில் எண்ணெயைத் தடவிக்கொண்டு ஓய்வில் இருந்த பின்னர் எழுந்து வந்து அடுப்பைச் சுத்தம் செய்து சமையலறை சுத்தம் செய்து கோலம் போட்டுவிட்டுக் காஃபி த்யார் செய்தேன். இரவுக்குக் காலை சாதமும் இட்லியும் இருக்கு. அதை வைச்சு ஒப்பேத்திடலாம்.
குஞ்சுலுவோடு மகிழ்வாய் இருந்த நினைவுகளே போதும்.
ReplyDeleteஉடல்நலம் பார்த்துக் கொள்ளவும்.
வயதும் காரணம், மனமும் காரணம். அதான் அடிக்கடி படுத்துகிறது என்கிறார் மருத்துவர். என்றாலும் என்னை நானே அவ்வப்போது தேற்றிக் கொள்ளத்தான் செய்கிறேன்.
Deleteஇனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள். அண்ணன் மகனுக்கு குழந்தை பிறந்திருப்பதால் நாங்க கொழுக்கட்டை பூஜை செய்யவில்லை. மாமியாரை விட்டு சிம்பிளாக ஒரு விநாயகருக்கு பூ போட்டு பழம் நைவேத்தியம் மட்டும்! 1/3
ReplyDeleteஅண்ணனின் பேரனுக்கும் அவன் பெற்றோருக்கும் எங்கள் ஆசிகள்/வாழ்த்துகள். ஆமாம் இந்த விருத்தித் தீட்டு (புருண்டு) என்பார்கள். அத்தனை பார்க்க மாட்டார்கள் என்றாலும் உம்மாச்சிக்குச் செய்வது கூடாது தான். எங்க பெரிய பேத்தி பிள்ளையார் சதுர்த்தி அன்றே பிறந்தாள். அம்பேரிக்க நேரப்படி முதல்நாள் இரவு. இங்கே நாங்க பூஜையை முடிச்சுட்டோம். பேரனோ/பேத்தியோ பெண் வயிற்றுக்குழந்தையானாலும் மூன்று நாட்கள் தீட்டு உண்டே!
Deleteசாதாரணமாக உடம்பு சரியில்லாமல் போவதே சிரமம். அதிலும் அன்பு மகன், மருமகள், பேத்தி வந்திருக்கும் அந்த சந்தோஷத்தை அனுபவிக்க முடியாமல் இது என்ன கொடுமை... 2/3
ReplyDeleteகொடுமை தான். போன முறை பையர் மருமகள் இரண்டு பேரும் கொரோனா வந்து படுத்துக் கொண்டார்கள். குழந்தையை நான் தான் கவனித்துக் கொண்டேன். சமர்த்தாக இருந்தது. ஆனாலும் அவங்க யாரானும் கிட்டே இருக்கணும் என்று கத்தும். அவங்க அறையை விட்டு வெளியே வர முடியாது. இரண்டு பேருக்கும் தனித்தனி அறையில் தனித்தனியான தட்டு/கிண்ணங்களில் சாப்பாடு எடுத்துக் கொடுத்துக் காலைக் காஃபி முதல் இரவு படுக்கும் வரை பார்த்துக்கொள்ளும்படி ஆயிற்று. சுமார் பதினைந்து/இருபது நாட்கள். மருமகளுக்கு நெகடிவ் ரிபோர்ட் வந்த உடனே அவங்க அப்பா வந்து சென்னை கூட்டிச் சென்று விட்டார். அதன் பின்னர் பையர் உடல் நலம் தேற மேலும் 10 நாட்கள் ஆச்சு. :( இம்முறையும் அவங்களுக்கெல்லாம் ஜூரம் வரவும் இரண்டு பேருக்குமே பயம். நல்லவேளையாக சாதாரண ஜலதோஷ ஜூரத்தோடு போச்சு!
Deleteஅடடே... கொழுக்கட்டை எல்லாம் செய்திருக்கிறீர்களே... வெரிகுட்! இப்போ தேவலாமா? கடைசி படம் அவுட் ஆப் போகஸ்! அதனால் என்ன.. கொழுக்கட்டை படம் தெளிவாகத் தெரிகிறது! 3/3
ReplyDeleteஸ்ரீராம், கொழுக்கட்டை இல்லாமல் பிள்ளையார் சதுர்த்தியா? நேத்திக்குனு பார்த்து மாவு பிரமாதமாகப் பட்டுத்துணியைப் போல் வழுக்கிக் கொண்டு வந்திருந்தது. சின்னச் சின்னதாகச் சொப்புப் பண்ணிப் பூரணம் அடைச்சு வைச்சுச் செய்யணும்னு இருந்தேன். காலை பண்ணின பனிரண்டு கொழுக்கட்டைகள் தான். அதுக்கு மேலே என்னால் முடியலை. வேலை செய்யும் பெண்ணிற்கு அந்த மாவில் கொழுக்கட்டை நேற்றுப் பண்ணிச் சாப்பிட்டுவிட்டு அவங்க மாமனாருக்கும் கொடுத்திருக்கா. எல்லோருக்கும் இப்படி மிருதுவாக மெலிதாகக் கொழுக்கட்டை பண்ண முடியுமானு ஆச்சரியமா இருந்ததாம். அவங்கல்லாம் மாவு தானே அதிகம் வைப்பாங்க. மோர்க்குழம்பில் தான்கள் போடாமல் வடை மாவையே உருட்டிப் போட்டிருந்தேன். எலுமிச்சம்பழ ரசம் வைச்சிருந்தேன். கடைசியில் ஒரே ஒரு கரண்டி ரசத்தோடு சரி. எல்லாத்தையும் தூக்கிக் கொடுக்கும்படியா ஆச்சு. எப்படியோ பண்டம் வீணாகாமால் போச்சே! அதுவரை சந்தோஷம் தான்.
Deleteஇன்றும் கஞ்சிதானா/? இவ்வளவும் செய்தும் சாப்பிட முடியவில்லையா? என்ன சாப்பிட்டீர்கள்? வேறென்ன கோளாறு என்று மருத்துவரைப் பார்த்தீர்களா? 4
ReplyDeleteஇல்லை ரசம் சாதம் சாப்பிட்டேன்னு சொல்லி இருக்கேனே/ மருத்துவரிடம் இரண்டு தரம் போயிட்டு வந்தாச்சு. அவர் போகிறவரை போகட்டும். உள்ளே உள்ள (பாக்டீரியா?) இருந்து எல்லாம் வெளியேறினதும் தானே சரியாயிடும் என்று சொல்லிவிட்டு வயிற்று வலிக்கு மட்டும் குறைய மாத்திரைகள் கொடுத்தார்.
Deleteதலைப்பைப் படித்த உடனே.. இந்தத் தடவை பிரசாதங்கள் சொதப்பிவிட்டன என நினைத்தேன்.
ReplyDeleteஹாஹாஹாஹா!
Deleteகர்ச்சிக்காய்னா சூப்பிதானே?
ReplyDeleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நெல்லை கர்சிக்காய்னா சோமாசி...அரை வட்ட வடிவத்துல உள்ள இனிப்பு பூர்ணம் வைச்சு பொரிக்கறது...
Deleteகீதா
சூப்பி அல்லது சீப்பி பற்றி ஒரு பதிவே போட்டிருக்கேன், சாப்பிடலாம் வாங்க பக்கத்தில்.
Deleteதி/கீதா சொல்லும் சோமாசியைக் கர்ச்சிக்காய் என்றே தென் மாவட்டங்களில் சொல்லுவோம். பொட்டுக்கடலை/நாட்டுச்சர்க்கரை/தேங்காய்./கசகசா/ இன்னும் சில சாமான்கள் சேர்த்துப் பூரணமாக வைப்பாங்க. நல்ல பெரிதாக இருக்கும். என் அம்மா இதில் சிறப்பு நிபுணத்துவம் பெற்றவர். ஆனால் கர்ச்சிக்காய் எனில் தஞ்சை மாவட்டத்தில் அரிசி மாவில் துளி உப்புச் சேர்த்து வெந்நீர் விட்டுப் பிசைந்து கொண்டு நல்லெண்ணெய் ஓரிரு முட்டைகள் விட்டு நன்கு பிசைந்து சற்று நேரம் மூடி வைச்சுடுவாங்க. பின்னர் மாவில் ஓரிரு தேக்கரண்டி வறுத்த உளுத்த மாவு சேர்த்துப் பிசைந்து கொண்டு கொழுக்கட்டைச் செப்பு மாதிரிக் கிண்ணங்கள் தயார் செய்வார்கள். அதற்கான பூரணம் தேங்காய்ப் பூரணத்தில் எள்/கடலைப்பருப்புப் போன்றவற்றைச் சிவக்க வறுத்துப் பொடி செய்து சேர்ப்பார்கள். கைகளால் கொழுக்கட்டைச் செப்பு மாதிரி செய்து அதனுள்ளே இந்தப் பூரணத்தை வைச்சு நீளவாட்டில் (மோதகம் மாதிரி இல்லாமல்) மடிச்சு மூடிப் பின்னர் எண்ணெயில் போட்டுப் பொரிக்கணும்.
Deleteஓ... சோமாசி எனக்கு அவ்வளவாகப் பிடிக்காது. அதில் உள்ள பூரணம் மட்டும்தான் பிடிக்கும். பிள்ளையார் கொழுக்கட்டை (இனிப்பு உப்பு) எனக்கு ரொம்ப இஷ்டம். ஆலையில்லா ஊருக்கு, நான் அவசர அவசரமாக இனிப்பு கொழுக்கட்டை செய்தேன்.
Deleteஇப்போத் தான் இரண்டு நாட்களாக உடம்பு முக்கியமாய் வயிறு கொஞ்சம் பரவாயில்லை. ஆனாலும் கட்டுப்பாடான உணவு தான் எடுத்துக்கறேன். :( விரைவில் சரியாகணும்.
Deleteபடங்கள் அழகாகவே வந்திருக்கின்றன. பிரசாதங்களும் அருமை
ReplyDeleteநன்றி, நன்றி.
Deleteகொழுக்கட்டைகளோடு இட்லியுமா? நான் செய்த கொழுக்கட்டை ஷேப் சிரிக்கும்படி இருந்தது. மாவு சரியா வரலை
ReplyDeleteஆமாம், பச்சரிசியை ஊற வைச்சு உளுந்தும் சேர்த்து அரைத்து பச்சரிசி இட்லி பண்ணுவோம். வரலக்ஷ்மி விரதக் கொழுக்கட்டைகளோடு கூடவே இட்லியும் உண்டு. இங்கேயும் இட்லி வடை அப்பம் அல்லது அதிரசம், சுண்டல் என உண்டு. சுண்டலை எல்லாம் நிறுத்தியாச்சு.
Deleteஅக்கா ரொம்ப உடம்பைப் படுத்துகிறதே. அதற்கிடையிலும் இத்தனையும் செஞ்சுருக்கீங்களே அதுவே பெரிய விஷயம். இதுதான் உங்களைப் போன்ற பெரியவங்களின் மனதிடம். இதை நான் கற்க வேண்டும். நான் என் பாட்டிகளிடம் அம்மா அத்தைகளிடம் கற்றதும் இதுதான். இனியும் அப்படி நான் இருக்கனும்னுதான் நினைக்கிறேன்.
ReplyDeleteகுட்டி குஞ்சுலுவோட அம்மாவுக்கும் உடம்பு சரியில்லாமல் வீடு கொஞ்சம் டல்லாக இருந்திருக்கும். இப்ப எல்லாரும் ஊருக்கும் போயாச்சு. வெறிச்சுனு இருக்கும் ..
குட்டி குஞ்சுலுவோட எஞ்சாய் பண்ணியதை நினைச்சுக்கோங்க...உடம்பைப் பார்த்துக்கோங்க அக்கா
கீதா
நேரம்! ரொம்பவே படுத்தல் இரண்டு வருஷங்களாக. நான் பாட்டுக்கு ஏதோ இருந்தேன். இப்போ எனக்கும் பிரச்னை/மத்தவங்களுக்கும் பிரச்னை.
Deleteஅடடா செய்தும் சாப்பிட முடியாமல் போய்விட்டதெ கீதாக்கா...குட்டி குஞ்சுலு மகன் மருமகள் எல்லாரும் வந்திருந்த போது இப்படி...சரி மருத்துவரிடம் போனீங்களா இபப்படித் தொடர்ந்து சாப்பிட முடியாமல் ஆகிறதே...
ReplyDeleteபக்ஷணனங்கள் எல்லாம் நல்லா வந்திருக்கு கீதாக்கா.
நானும் நாலு வகை கொழுக்கட்டை செய்தேன். தேங்காய், எள்ளு, உளுந்து, கடலைப்பருப்பு பூர்ணம் நு
கீதா
தி/கீதா, சாப்பிட முடியாட்டி என்ன? நல்லா வந்திருந்த கொழுக்கட்டைகளை மறுபடி பண்ணி முடிக்க முடியாமல் போச்சேனு தான் வருத்தம். நாலு வகைக் கொழுக்கட்டை அம்மா வீட்டில் உண்டு. இங்கே கிடையாது.
Deleteநாலுவகை கொழுக்கட்டை செய்தும் இந்த கீதா ரங்கன்(க்கா) படங்கள் கூட அனுப்பலை.
Deleteகொழுக்கட்டை சாப்பிடணும்னு ஆசை வருதே
கீசா மேடம்... உங்களுக்கு முடியலை என்பதெல்லாம் எனக்கு மனதில் வருத்தம்தான். அதைப் பற்றி எழுதாமல் வெறும்ன கடந்துபோயிடறேன். மாமாவின் படம் பார்த்ததும், சட்னு அவருக்கு அதிக வயதானமாதிரி எனக்குத் தோன்றியது. நேரில் பார்த்தால் ஜைஜாண்டிக்கா நல்ல ஆளுமையுடன் கூடியவர் அவர்.
Deleteநாலு வகைக் கொழுக்கட்டை என்ன இரண்டு வகை கூட பண்ண முடியலை. மாமாவுக்கும் வயது ஆகத்தானே செய்யும். என்னைவிட ஏழு/எட்டு வயது பெரியவராச்சே! பையரும் அப்படித்தான் இருப்பார். இப்போத் தொந்தியெல்லாம் வந்து விட்டது! :(
Deleteஓ பண்ண முடியாமல் போனது வருத்தமாகத்தான் இருக்கும்
Deleteகீதா
குழந்தை ஊருக்கு போய் விட்டாளா? வந்த நாளில் எல்லோருக்கும் உடம்பு சரியில்லை என்றால் மனதுக்கு வருத்தமாக இருக்கும். அதுவே உடலை பாதிக்கும்.
ReplyDeleteநானும் பண்டிகையை ஒதுக்க கூடாது என்பதால். மோதகம், கொழுக்கட்டை , சுண்டல், இட்லி செய்து கும்பிட்டேன். தங்கை கொஞ்சம், பூரணம் செய்து கொடுத்தாள், அதை வைத்து மோதம் கொஞ்சம் செய்து விட்டேன். அவல் உருண்டை, கடலை உருண்டை எல்லாம் கொஞ்சம் கொடுத்தாள் அதை வைத்து பண்டிகை கொண்டாடி விட்டேன்.
அண்ணன் வீட்டிலிருந்து அப்பம், எள் உருண்டை, சுண்டல், மோதகம், கொழுக்கட்டை எல்லாம் வந்தது சமைக்கவில்லை, கொழுக்கட்டை விரதம் நேற்று.
படங்கள் நன்றாக இருக்கிறது .
உடல்நலத்தை பார்த்து கொள்ளுங்கள்.
வாங்க கோமதி. அண்ணன் வீட்/தங்கை வீடு எனப் பக்கத்தில் இருப்பது நல்லது தானே! அவங்களோட உதவியும் கிடைக்கிறது அல்லவா? உங்களுக்கும் கொஞ்சமானும் மனதில் தெம்பாக இருக்கும்.
Deleteபண்டிகை எளிமையாகக் கொண்டாடி இருக்கீங்க. படங்கள் ஏதோ எடுத்தேன். சில படங்கள் எடுக்கும்போது கைகள் ஆடியதால் சரியா வரலை. அவற்றை நீக்கிவிட்டுத் தேறியது இந்த 3 படங்கள் தான்.
விளாம்பழத்தை எப்படிச் சாப்பிட்டீங்க? நான் கயாவில் விளாம்பழத்தை விட்டுவிட்டேன். எனக்கு அதில் வெல்லம் சேர்த்துக் கலந்து சாப்பிட ரொம்பப் பிடிக்கும். பிடித்த பழத்தை விடணும் என்பதால் அதனை விட்டுவிட்டேன்
ReplyDeleteவிளாம்பழம் இன்னிக்குத் தான் உடைச்சுப் பச்சடி பண்ணினேன். சாப்பிடும்போது தொட்டுண்டோம். நன்றாக இருந்தது. வெல்லம் சேர்த்துத் தான் பச்சடி.
Deleteவிளாம்பழப் பச்சடி ரொம்பப் பிடிக்கும் வெல்லம் சேர்த்து....எங்கு கண்டாலும் வாங்கிவிடுவதுண்டு..
Deleteகீதா
வணக்கம் சகோதரி
ReplyDeleteநலமா? இப்போது எப்படியிருக்கிறீர்கள்? குழந்தைகள் ஊரிலிருந்து வந்திருக்கும் போது இப்படி உடம்பை படுத்தினால், மனதுக்கு எந்த அளவுக்கு வேதனையாக இருக்குமென்பதை நானும் உணர்கிறேன்.
விநாயகர் சதுர்த்தி படங்கள் அனைத்தும் அழகாக உள்ளது. ஏதோ உங்களால் முடிந்த அளவிற்கு பூஜைகளை செய்து கொண்டாட வைத்தான் இறைவன் என மனச் சமாதானம் அடைய வேண்டியதுதான். ஆனால் அன்று முழுவதும் நீங்கள் சாப்பிடாமல், கொள்ளாமல் உடல்நிலை பாதித்து படுத்திருந்ததுதான் மனதை வருத்தமடையச் செய்கிறது. இப்போது எப்படியிருக்கிறீர்கள்? ஓரளவு குணமாகியுள்ளதா? குழந்தைகள் நலமாக ஊருக்குப்போய் சேர்ந்த விபரம் வந்ததா?
நானும் ஒரு வாரத்திற்கு மேலாக வலைப்பக்கம் வர இயலவில்லை. காரணம் என் பதிவாக வெளியிட்டுள்ளேன். எனக்கும் விநாயகர் சதுர்த்தி முதல் நாளிலிருந்து பல் வலி, ஒரு பக்க கன்னம் வீக்கம் என ஒரே அவதி. அத்துடன் விநாயகர் சதுர்த்தி கழிந்தது இப்போதுதான் அனைவரின் பதிவுகளுக்கும் வந்து கொண்டிருக்கிறேன். தங்கள் உடம்பை கவனமாகப் பார்த்துக் கொள்ளவும். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா. தாமதமாகப் பதில் கொடுப்பதற்கு மன்னிக்கவும். குழந்தைகள் போன முறை வந்தப்போ பிள்ளை/மாட்டுப் பெண் இருவருக்கும் கொரோனா வந்து கஷ்டப்பட்டார்கள். இம்முறை நான் ஒரு வாரத்துக்கும் மேல் கஷ்டப்பட்டேன் வயிற்றுத் தொந்திரவால். அவங்களுக்கும் எல்லோருக்கும் ஜூரம் வந்திருந்தது. நல்லவேளையாக ஜலதோஷ ஜூரம் தான்.
Deleteஅடிக்கடி உடல் நலம் பாதிக்கிறது கவனமாக இருங்கள் வேலைகளை குறையுங்கள்.
ReplyDeleteகுஞ்சுலு வந்து நின்றது மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.
வாங்க மாதேவி! மருத்துவரும் 3 வருஷங்களாக வேலைகளை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள் என்கிறார்! எங்கே! :( அப்போத் தான் அதிகம் உழைப்புத் தேவைப்படுகிறது.
Delete