அவற்றுக்கு என உள்ள வரிசையில் தசமஹா தேவியர் பற்றி எழுதறேனானு தெரியலை. என்றாலும் இப்படியும் எழுதிப் படிச்சிருக்கேன். நவராத்திரியில் அம்பிகை வழிபாடு பற்றி முன்னரும் பல பதிவுகள் எழுதி இருக்கேன். அவற்றின் சுட்டிகளைத் தேடிப் போடறேன்.
தசமஹாதேவியரில் இன்னிக்குப் பார்க்கப் போவது தாரா தேவி. காற்றை விடக் கடிதாக விரைந்து வந்து அருள் புரிவாள். வாழ்க்கையில் ஒற்றுமையாக இருக்க இவளை வழிபட்டால் போதுமானது. இந்தத் தாரா தேவியின் பூரண அருளினாலேயே ஸ்ரீராமன் ராவணனை வதம் செய்ய முடிந்தது என்பார்கள். இந்தத் தேவியின் அருள் பெற்றவர்களுக்குக் கவிதை தாரையைப் போல் கொட்டும். இவர்களுக்கு அனைத்திலும் வெற்றியே கிட்டும். எப்போதுமே பக்தர்களைக் காக்கும் இவளை உக்கிரமான காலங்களிலும் "உக்ரதாரா" என்னும் பெயரில் வழிபடுவார்கள். ஆதி அந்தமற்ற இவள் பிரளய காலங்களில் தேவாதி தேவர்களைக் காத்திடுவாள் என்பார்கள். தீபாவளி வரும் நரக சதுர்த்தசியோடு அமாவாசையும் சேர்ந்து வரும் நாள் தாராதேவியை வழிபட மிகச் சிறந்த நாள் என்பார்கள். அதே போல் செவ்வாய்க்கிழமை அமாவாசையோடு சேர்ந்து ஏற்படும் சூரிய கிரஹண நாளும் தாராதேவியை வழிபடச் சிறந்த நாளாகும். இந்தத்தாரா தேவியை ஜைனர்களும்/பௌத்தர்களும் கூட வழிபடுவதாக அறிகிறோம். முற்காலத்தில் ரிஷிகளால் முக்கியமாய் வசிஷ்டரால் வழிபடப்பட்டவள் இந்தத் தாரா தேவி.
மூன்றாவதாக வரும் தேவி ஸ்ரீவித்யா. இவளை பிரம்மா, விஷ்ணு, சிவன், சூரியன், கணபதி, முருகன், அகத்தியர், குபேரன், அத்ரி மஹரிஷி, துர்வாசர், அகத்தியர் மனைவி லோபாமுத்திரை, தத்தாத்திரேயர், புத பகவான், பரசுராமர் ஆகியோர் வணங்கி வழிபட்டு ஆசிகளைப் பெற்றிருக்கிறார்கள். எல்லாம் வல்ல ஆதி பராசக்தியான லோக மாதாவையே ஸ்ரீவித்யா சொரூபத்தில் வழிபட்டதாகச் சொல்லுவார்கள். இவளையே ஸ்ரீலலிதா பரமேஸ்வரியாகவும், இவளையே ஸ்ரீமாதாவாகவும் வழிபடுவார்கள். இவள் வாசம் செய்யும் இடம் நம் அனைவருக்குமே நன்கு தெரிந்த ஸ்ரீபுரம். மஹாமேருவின் சிகரத்தில் உள்ளது. இவளுக்கான மந்திரத்தை ஸ்ரீவித்யை எனச் சொல்லுவார்கள். யந்திரம் நாம் அனைவரும் அறிந்த ஸ்ரீசக்ரம், இவள் சிம்மாசனமோ ஸ்ரீசிம்மாசனம்.
இந்த ஸ்ரீசக்ரத்தின் சிறப்பைப் பற்றி ஏற்கெனவே அறிந்திருக்கிறோம். சிவமயமான சக்காங்கள் நான்கு, சக்தி மயமான ஐந்து சக்கரங்கள் ஆகிய ஒன்பது சக்கரங்களை உடைய இணைப்பே ஸ்ரீசக்ரம் என்பார்கள். இந்தச் சக்கரத்தில் அம்பிகையைக் காமேஸ்வரருடன் இணைந்து இருக்கையில் செய்யப்படும் வழிபாடே நவாவரண வழிபாடு என்பதாகும்.இதனால் உலகுக்கு நன்மை உண்டாகும். மனதிலுள்ள வீண் அச்சங்கள் அகலும்.
தகவல்கள் சிறப்பு தொடர்ந்து வருகிறேன்...
ReplyDeleteநன்றி கில்லர்ஜி.
Deleteநற்குண மங்கையரை மதித்தாலே போதும்..
ReplyDeleteஅம்பிகையின் அருட் கலைகள் அனைத்தும் நம்முடன் உடனாகி - சங்கடமான சூழ்நிலைகளில் அவற்றுக்கு ஏற்ற வகையில் வித்யா ரூபங்கள் நம்மைக் காத்தருளும்..
போகங்களை அருள்பவள் அவளே..
யோகங்களைத் தருபவளும் அவளே!..
உண்மைதான் தம்பி. ஆனால் இன்றைய நாட்களில் பெண் என்பவள் போகப் பொருளாகவே இருந்து வருகிறாள்.
Deleteநல்ல தகவல்கள்.
ReplyDeleteநன்றி ஶ்ரீராம்.
Deleteநவராத்திரி ஆரம்பமானதும் கீசாக்காவைத்தான் நினைச்சேன், தினமும் என்னென்ன உணவு படைக்கோணும் எனப் போடுவீங்களெல்லோ.. இன்று 4ம் நாளாக படையல் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது எங்கட புது வீட்டில்:)).. நாங்களும் இன்னொரு புது வீடு வாங்கி வந்து 6-7 மாதங்களாகிறது..:))
ReplyDeleteவாங்க அதிரடி, அதிரடியா நீங்க வந்து இறங்கினதைப் பார்த்து பயந்து எனக்கு உடம்பு வந்துடுச்சாக்கும்.! :)))))) இங்கே எனக்கு இந்த வருஷ நவராத்திரி ரொம்பவே டல்! :( எங்கே! எழுந்தே உட்காரமுடியலை! :(
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. நவராத்திரி தேவிகளைப்பற்றி விளக்கங்கள் அருமையாக உள்ளது. தாரா தேவி, ஸ்ரீ வித்யா தேவிகள் பற்றி அறிந்து கொண்டேன். ஸ்ரீ சக்ர மகிமை பற்றி விவரித்ததும் அருமை. படிக்க படிக்க பக்தி தரும் நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி. தொடர்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ரொம்ப நன்றி கமலா. நானே சுருக்கமாக எழுதணும்னு நினைச்சு ஆரம்பிச்சது. முடிக்க முடியலை. பார்ப்போம். அந்த அம்பிகை கண் திறக்கட்டும்.
Deleteஅருமையான் பதிவு.
ReplyDeleteமிக துன்பமான காலங்களில் அன்னையை நினைத்தால் எல்லா பயத்தையும் போக்குவாள்.
துன்பத்தை துடைத்து காப்பாற்றும் தாய் .
ஆமாம், கோமதி. தினம் தினம் அந்த மாரியம்மன் தாலாட்டுத்தான் படிச்ச வண்ணம் இருந்தேன். அதிலும் திங்களன்று காலை அரிப்பு வந்ததில் இருந்து புதன்கிழமை வரை வேப்பிலையும், குப்பை மேனியும் தான் அரைத்துத் தடவினேன். எல்லாம் அவள் அருள். எவ்வளவோ உடம்பு வந்து படுத்தாலும் மாலை வெற்றிலை, பாக்குக் கொடுக்க எழுந்து உட்கார்ந்துடுவேன். இந்த வருஷம் அதுவும் முடியாமல் போச்சு! :(
Deleteபதிவு அருமை. தேவி பற்றிய விவரங்கள் அருமை. அறியாதது பல அறிய முடிந்தது. உங்கள் உடல் நலம் பார்த்துக் கொள்ளுங்கள், சகோதரி. உடல்நலம் பற்றிக் கேள்விப்பட்டேன்.
ReplyDeleteதுளசிதரன்
Feeling better. Thank You Thulasidaran.
Delete