“அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்ரிகிட தித்தோம்.”
"ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி,இவ் வையம் தழைக்குமாம்;
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;
நாணும் அச்சமும் நாட்கட்கு வேண்டுமாம்;
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்கடிப் பெண்ணின் குணங்களாம்;
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்டிரோ!”
பாரதியார் இன்னிக்கு இருந்தால் இப்படிப் பாடி இருப்பாரா சந்தேகம் தான். :(
காலம்பர எழுத உட்கார்ந்தால் ஒரு சில அவசர வேலைகள்! பொதுவாய் ஒரு வாரம் முன்னரே ஷெட்யூல் பண்ணி வைப்பேன். இந்த முறை உடல்நலக் குறைவும் ஒரு காரணம். அதோடு சிலர் செப்டெம்பர் 12 தான் என்கின்றனர். பலர் செப்டெம்பர் 11 என்கின்றனர். என்றாய் இருந்தால் என்ன? இரு நாட்களுக்கும் சேர்த்து அஞ்சலி செலுத்துவோம். தமிழக அரசு இந்நாளை "மஹாகவி நாள்" என அறிவித்துள்ளதாகப் பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன.
பாரதியார் இன்று இருந்திருந்தால் இப்படிப் பாடி இருப்பாரா சந்தேகம்தான்//
ReplyDeleteஅக்கா ஹைஃபைவ்.! நானும் இதையேதான் நினைத்துக் கொண்டே வாசித்தேன் கடைசியில் நீங்களும் அதையேதான் சொல்லியிருக்கீங்க!
கீதா
பாரதியாரை இருக்க விட்டிருப்பாங்களா என்பதே சந்தேகம் தான். :(
Deleteகீதாக்கா, எந்த நாளாக இருந்தால் என்ன - நீங்க சொல்லியிருக்காப்ல, அஞ்சலிசெலுத்துவோம்.
ReplyDeleteஇந்தப் பாடல் ஆழமான அர்த்தமுள்ள பாடல். அதுவும் முதல் நான்கு-ஐந்து வரிகளும்....
கீதா
11 இல்லை 12 எனச் சிலர் சொல்லவும் கொஞ்சம் யோசித்தேன். ஆனால் இத்தனை வருஷங்களாகப் பதினோராம் தேதி தான் போடுகிறேன்.ஆகையால் போட்டு விட்டேன்.
Deleteமுகநூலில் ஒரு நண்பர் பாரதியாரின் இறப்புச் சான்றிதழ் காபியை பிரசுரித்திருந்தார். அதில் செப் 12 என்றுதான் இருக்கிறது. ஒருவேளை செப் 11 நள்ளிரவு இரண்டு மணிக்கு மேல் மரணம் என்பதால் இருக்கலாம்!
ReplyDeleteஆமாம். நள்ளிரவு பனிரண்டு மணிக்குப் பின்னர் ஆங்கிலக் காலண்டர் படி மறு நாள் பிறந்து விடுகிறது. அந்தக் கணக்கை எடுத்துக் கொண்டிருக்கார்கள். ரயில், பேருந்து, விமானப் பயணங்களுக்கும் இந்தக் கணக்குத் தான் செல்லும். ஒரு சிலர் புரிஞ்சுக்காமல் போய்விட்டுப் பயணத்தைத் தவற விட்டிருக்காங்க. எங்களுக்கும் விமானப் பயணத்தில் இந்தக் குழப்பம் வரும். ஆகவே அநேகமாகக் காலை/அதிகாலை கிளம்பும் விமானமாகப் பார்த்துப் பதிவு செய்து கொள்வோம். இப்போத் தான் எங்கேயும் போக முடியறதில்லையே! பிரச்னையே இல்லை! :))))))
Deleteநம்ம இந்தியப் பஞ்சாங்கப்படி இரவு மணி இரண்டரைக்குப் பின்னரே மறுநாளாகக் கணக்கிடப்படும். ஆகவே அதன்படி செப்டெம்பர் 11 தான் வரும்.
Deleteதமிழக அரசு அப்படி அறிவித்திருக்கிறதா என்று பார்க்கவில்லை. அறிவித்திருந்தால் மகிழ்ச்சி.
ReplyDelete2,3 தினசரிச் செய்திகளில் பார்த்ததால் அறிவிச்சிருப்பாங்க என்றே நம்பறேன்.
Deleteபாரதியார் இன்று இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்? அவர் கோபத்தை தாங்க முடிந்திருக்காது. ஊடகங்கள் அவரைப் பற்றி புறம்பேசி புண்படுத்தியிருக்கும். சேனலுக்கு நான்கு அல்லக்கைகள் அவரைப் பற்றி வாங்கிய காசுக்கு கூவியிருப்பார்கள். இன்னும் சிலர் சாதி வட்டத்துக்குள்ள அவரையும் அடைத்து அசிங்கப்படுத்தி இருப்பார்கள்.
ReplyDeleteஹையோ! கடைசியாச் சொன்னீங்களே! அது நிச்சயம் நடந்திருக்கும். இப்போதும் மறைமுகமாகச் சிலர் சொல்லத்தானே செய்கின்றனர்! :(
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteஅருமையான நல்ல கருத்துள்ள பாடல். அவர் நினைவுகளை நாம் என்றும் தவறாது போற்றுவோம். நீங்களும் உங்கள் பதிவுகளில் தவறாது அவர் நினைவு நாளில் பதிவொன்று போடுவீர்களே இன்று காணவில்லையே எனப் பார்த்தேன். பதிவிட்டு விட்டீர்கள். நல்ல பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா. கொஞ்சம் சுணக்கம் வந்து விட்டது பதிவு போடுவதில். நேற்று நினைத்துக் கொண்டேன் ஷெட்யூல் பண்ணணும்னு. பின்னர் எதிர்வீட்டில் கங்கா பூஜை எனக் கூப்பிட்டதால் அங்கே போயிட்டோம். அதில் மறந்தும் போச்சு. காலம்பர உட்கார்ந்தப்போவும் போட முடியலை. மத்தியானம் நினைவாகப் போடணும்னு போட்டுட்டேன் ஒரு வழியா! :(
Deleteஇந்த முறை நானும் குழம்பி விட்டேன்... அப்புறம் தான் நினைவுக்கு வந்தது - அவர் தான் இறக்கவில்லையே - என்று..
ReplyDeleteவாழ்க பாரதி!..
ஆமாம். எல்லோருமே 12 ஆம் தேதி என்றே சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
Deleteமகாகவி இன்றிருந்தார் எனில் -
ReplyDeleteயாமறிந்த மொழிகளிலே!..
நாங்க வந்து தான் அவருக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தோம்.. என்று ஒரு கூட்ட்ம் ஊடால வந்திருக்கும்...
சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்!..
பெரிய பச்சே கிட்ட கையூட்டு வாங்கிகிட்டுத்தானே இப்படிப் பாடறே!.. ந்னு, இங்கே ஒருத்தருக்கு கழுத்து நரம்பு எல்லாம் புடைச்சிருக்கும்..
சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேர நன்னாட்டிளம் பெண்களுடனே!..
அழகிகளை கடத்தினார் என்று அள்ளிக் கொண்டு போய் உள்ளே போட்டிருக்கும் நிர்வாகம்...
சுட்டும் விழிச்சுடர் தான் கண்ணம்மா!..
உலக்கை நாயகன் ஒன்றும் புரியாமல் புதுத் தமிழ் பேசி வைக்க -
முண்டாசைக் கழற்றி வைத்து விட்டு காணாமல் போயிருப்பார்!..
சரியாகச் சொன்னீர்கள் தம்பி. இன்றைய நாட்களில் பாரதிக்கு இது தான் நேர்ந்திருக்கும்.
Deleteசிறு வயதிலிருந்தே " பாரதியின் ' துன்ப நினைவுகளும் சோர்வும் பயமு மெல்லாம்,
ReplyDeleteஅன்பில் அழியுமடீ! - கிளியே. - அன்புக் கழிவில்லை காண்" என்ற வரிகளைப் படித்துப் படித்து வளர்ந்தவள் நான். நானும் உங்களுடன் சேர்ந்து அஞ்சலி செலுத்துகிறேன்!!
ஆமாம், எனக்கும் மூன்றாம் வகுப்பில் இருந்து (ஏழு வயது அப்போ) பாரதி அறிமுகம். வாத்தியாரும் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பாரதி பாடல்களைப் பாடிக் காட்டுவார். அப்போதில் இருந்து பாரதி என்றால் மனம் நெகிழ்ந்து கண்களில் கண்ணீர் சுரக்கும். நான் கல்யாணம் ஆகி வந்தப்போ ஏதோ பேச்சு வாக்கில் பாரதி பாட்டைக் குறிப்பிட மாமியாருக்குக் கோபம்/பயம் எல்லாமும். பாரதியை எல்லாமா படிப்பே? என்று கேட்டு என்னை ஏதோ புரட்சிக்காரியைப் போல் பார்த்தார்கள். :)))))
Deleteபாரதியாரை போற்றி வணங்குகிறோம்.
ReplyDelete'பாரதி இன்றிருந்தால்'.... .. நிச்சயமாக நெருப்பு கவிதைகள் தான்.