சென்னைப் புறநகர் ரயில் நிலையத்தில் மீண்டும் ஒரு படுகொலை. காரணம் அதே ஒரு தலைக்காதல் தான். கொடூரமாகப் பெண்ணை ரயில் வரும்போது பிடிச்சுத் தள்ளி இருக்கான் படுபாவி. அந்த அதிர்ச்சியில் அந்தப் பெண்ணின் தந்தையும் விஷம் குடித்து இறந்திருக்கார். இத்தனைக்கும் காவல்துறையில் வேலை பார்ப்பவர்களின் குழந்தைகள். திருமணம் நிச்சயம் ஆகி இருந்த அந்தப் பெண் எத்தனை எத்தனை கனவுகளோடு இருந்திருப்பாள்? இப்போதெல்லாம் இளவயதுச் சாவுகள் அதிகம் ஆகிக் கொண்டிருக்கின்றன. காதல் தோல்வி, தேர்வில் தேர்ச்சி பெறாமை எனப் பல காரணங்கள் மொத்தத்தில் யாருக்கும் எதையும் எதிர்கொண்டு போராடி ஜெயிக்க வேண்டும் என்னும் எண்ணமே இல்லை. கிடைக்கலையா? உடனே உயிரை விடணும். அவ்வளவு தான்.
தன்னைப் பிடிக்காத பெண்ணை வற்புறுத்துவதே தப்பு எனத் தெரியலை அந்தக் கொலைகாரனுக்கு. தனக்குக் கிடைக்கலைனா யாருக்கு ம் கிடைக்கக் கூடாது என்னும் கெட்ட எண்ணமே! அப்படியே வற்புறுத்தித் திருமணம் செய்து கொண்டாலும் சந்தோஷமாக வாழ முடிந்திருக்குமா? இது ஏன் ஆண்கள் மனதில் இப்படி ஒரு கொலைவெறி வருகிறது? இரு மனங்களும் ஒத்து இருக்க வேண்டாமா? பிடிக்காத பெண்ணை வற்புறுத்தி அந்தப் பையனுக்குக் கட்டி வைத்தால் அவன் மனம் என்ன பாடு படும்? அது போலத்தானே அந்தப் பெண்ணிற்கும்? இவனைப் பிடிக்கலை. அவள் மனதிலும் ஆசாபாசங்கள் இருக்கக் கூடாதா? இவன் வற்புறுத்தினால் உடனே சம்மதம் தான் சொல்லணுமா என்ன?
இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் சின்னஞ்சிறு சிறுவர்கள்/சிறுமிகள் நட்ட நடுச் சாலையில் பேருந்திற்காகக் காத்திருக்கும் வேளையில் தாலிகட்டித் திருமணம் செய்து கொள்வதும் அதை நண்பர்கள் படம் எடுத்து வாட்சப்பில் போடுவதும். திருமணத்தின் மதிப்பு என்னவென்றே தெரியாத இளம் வயதில் இவங்க திருமணம் செய்து கொண்டு எங்கே/எப்படி வாழப் போகின்றனர்? இதை என்னமோ விளையாட்டு என நினைத்துவிட்டார்களா? நாள் பார்த்து நேரம் குறித்துப் பொருத்தங்கள் பார்த்துச் செய்யும் திருமணங்களே நிலைப்பதில்லை. இவங்க திருமணம் என்ன பாதிப்பை ஏற்படுத்தும்? அந்தப் பெண்ணிற்குத் திருமணம் பற்றியோ அதன் பொறுப்புக்கள் பற்றியோ என்ன தெரியும்? அடுத்த வேளைக் காஃபி அல்லது தேநீருக்குப் பெற்றோரைத் தேட வேண்டிய வயது.
திருமணத்தின் பொறுப்புக்கள் என்னவென்று இருவரும் அறிவார்களா? சும்மா இப்படி எல்லாம் செய்து தங்களைக் கதாநாயகன்/கதாநாயகி எனக் கருதிக்கொள்ளும் வெற்று வேட்டுத்தனம் தான். அடுத்த வேளைச் சாப்பாட்டுக்குக் கூடப் பெற்றோரை எதிர்பார்க்கும் வண்ணம் இருக்கும் அந்தச் சிறுவன் இதன் மூலம் தான் பெரிய திரைப்படக்கதாநாயகன் ஆகிவிட்டோம் என எண்ணிக் கொள்கிறானோ என்னமோ! நல்லவேளையாக அவனைக்கைது செய்திருப்பதாகத் தகவல்கள் சொல்லுகின்றன. மேலே என்ன நடக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மாணவ மாணவியருக்குச் சிறு வயதில் இருந்தே நீதி, நேர்மை, தர்மம், நியாயம் எனச் சொல்லிக் கொடுக்காமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் அதில் வரும் ஆடல்/பாடல்/கூத்துக்களையும் பார்க்க வைத்து இது தான் உலகம் என்று சொல்லிக் கொடுத்த பெற்றோரே இதற்குக் காரணமான குற்றவாளிகள். தொலைக்காட்சி ஊடகங்களின் பல்வேறு விதமான நிகழ்ச்சிகள், தொலைக்காட்சித் தொடர்கள் போன்றவையே குழந்தைகள் மனதில் சின்ன வயசிலேயே நஞ்சை ஊட்டி விட்டு விடுகிறது. மின்மினியைப் போல் சில கண நேரமே ஒளி கொடுக்கும் இவை குழந்தைகள் மனதை அடியோடு கெடுத்து விடுகிறது. இவற்றிலிருந்து இளைஞர்களை மீட்பது எங்கனம் சாத்தியம்? வருங்காலம் என்பது இவர்களைப் போன்றவர்களால் எப்படி இருக்கும்? ஒரே ஆறுதல் இதை எல்லாம் பார்க்க நானெல்லாம் இருக்க மாட்டேன் என்பதே!
தொடரலாம்.
This comment has been removed by the author.
ReplyDeleteம்ம்ம்ம், தப்பாய் எதுவும் சொல்லலை. :)
Deleteசிந்திக்கக் கற்றுக் கொடுக்காத கல்வி முறை...
ReplyDeleteஅற நூல்களை அப்புறப் படுத்தியது..
பேருந்து நிறுத்தத்தில் தாலு கட்டியதைப் படம் பிடித்துப் போட்டவனுக்கு வயது ஐம்பது என்று செய்தி..
அதுகள் தான் கழிசடைகள் என்றால் இவன் அதுகளுக்கும் மேலே..
ஆமாம்,மனப்பாடம் பண்ணிக் கக்கும் முறை ஒன்று தான் தெரியும் குழந்தைகளுக்கு! :( எல்லாம் மதச்சார்பு என்று சொல்லிக் கொண்டு முற்றிலும் ஒழித்துக் கட்டி ஆகிவிட்டது. கடந்த ஐம்பது வருடங்களாக இரண்டு தலைமுறைகளே வீணாகி விட்டன.
Deleteஅண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 40 வருடங்களுக்கு முன்பு சக மாணவனைக் கொன்று துண்டு துண்டாக வெட்டி பெட்டிக்குள் வைத்த பாவிக்கு என்ன தண்டனை கிடைத்தது?.
ReplyDeleteவெளிநாட்டு வாசம்.
Deleteமுன்பு குவைத் சென்ற வேளைகளில் தாம்பரம் திரிசூலம் நிலையங்களில் சற்று நேரம் இருக்கும் நேரத்தில் கண்டதுண்டு..
ReplyDeleteபொதுவெளியில் ஒருவருக்கொருவர் தடவிக் கொண்டும் கொஞ்சிக் கொண்டும் இருப்பார்கள்..
வெளியூர்களில் இருந்து வந்து இறங்கி குழந்தைகளுடன்
கடந்து செல்பவர்கள் உள்பட - அனைவருமே நமக்கென்ன என்று செல்வார்கள்..
இந்த மாதிரியான சூழ்நிலைகளில் பிள்ளைகள் நல்லவர்களாக வளர்வது கடினம்...
நான் இதை எல்லாம் பார்த்ததே இல்லை. ஆனால் குழந்தைகளோடு வள்ளுவர் கோட்டம் போனப்போ நிற்க முடியலை. குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியே வந்துட்டேன்.
Deleteகிழவனுங்க கதாநாயகனுங்களா நடிச்சப்ப எல்லாம் இந்த மாதிரி அக்கிரமங்கள் நடந்ததில்லை
ReplyDelete81 ல் வெளியான
படம் ஒன்றில் காட்டப்பட்ட வக்கிரத்தைத் தொடர்ந்து
அதே மாதிரியும் அதற்கு மேலாகவும் வந்தவைகளின் தாக்கம் தான் இதெல்லாம்...
திரைப்படம் மட்டுமில்லாமல் இப்போ நட்ட நடுவே உட்கார்ந்திருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியும் காரணம்.
Deleteஅதற்கப்புறம் சைக்கோ பயல் ஒருவன் பெண்களை மயக்கி வீழ்த்தி அதைப் படமெடுத்து அதை வேறொரு காட்டுமிரண்டிப் பயலுக்குப் போட்டுக் காட்டுவதைப் போல ஒரு கதை...
ReplyDeleteஎப்படியெல்லாம் நமது சமுதாயம் சீரழிக்கப்பட்டிருக்கின்றது!?..
இன்னமும் நிற்கவே இல்லையே!
Delete/// பெற்றோரே ///
ReplyDelete100% உண்மை...
நன்றி திரு தனபாலன்.
Deleteகீதாக்கா உங்கள் ஆதங்கம் வருத்தம் மிக மிக நியாயமானதே. ஆதரிக்கிறேன்.
ReplyDeleteஇப்போது பள்ளிகளில் நல்லொழுக்க வகுப்புகள் என்பதே இல்லை. கிரியேட்டிவ் ரைட்டிங்க் எனும் வகுப்புகள் இல்லை. வாசிப்பு எனும் வகுப்புகள் இல்லை. கேம்ஸ் வகுப்புகள் இல்லை. மதிப்பெண் மதிப்பெண் மதிப்பெண்.
பள்ளி ஒருபுறம்....பெற்றோர்? பெற்றோரின் வளர்ப்பும் சரியான பாதையில் இல்லை. டிவி, சினிமா எல்லாம் ஒரு பொழுது போக்கு அம்சமே. அதைப் பெற்றோர் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி சரியாகக் கையாள வேண்டும். பெற்றோர் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும்.
அதுவும் கோவிட் சமயத்திற்குப் பின் பள்ளி வந்த குழந்தைகளின் மன மாற்றத்தை வயதிற்கு மீறிய தேவையற்ற மனவளர்ச்சி...அதைக் கண்டு அதிர்ந்த ஆசிரியர்கள்....மைதிலி எனும் பதிவர் - ஆசிரியர்மிக அழகாகச் சொல்லியிருந்தார், தற்போதைய தமிழ்நாட்டுக் கல்விக்கொள்கைக்கு பரிந்துரைகள் கேட்டதற்கு ஒரு கடிதமாக அவர் எழுதியதை பதிவு செய்திருக்கிறார். அருமையான பரிந்துரை.
கீதா
பெற்றோர்களே சரியில்லை. அப்படி இருக்கையில் குழந்தைகளும் அதைத் தானே பின்பற்றி வளரும்! :(
Deleteகடைசிப் பத்தியை அப்படியே டிட்டோ செய்கிறேன் பெற்றோர் குற்றவாளிகள் என்று சொன்னதை....இங்கு கருத்தாக எழுத நினைத்ததை நீங்களும் சொல்லிவிட்டீங்க....
ReplyDeleteஅப்படியே டிட்டோ....
கீதா
ஆமாம்.. பெற்றோர் இதைப் பற்றி எல்லாம் பெருமையாக நினைப்பதே முக்கியக் காரணம். ஆங்காங்கே ஓரிரு குழந்தைகளைப் பற்றி நல்ல செய்திகளைப் படிக்கையில் மனம் ஆறுதல் அடைகிறது.
Deleteநானும் இந்த செய்திகளையெல்லாம் படித்தேன். வருந்தினேன். இவையெல்லாம் மட்டுமா? ஒரு தாயே தன் குழந்தைகளை இன்னொருத்தனுக்காக கொல்வது, மனைவியும் இன்னொருத்தனுக்காக தன் கணவனையே கொல்வது. இதெல்லாமும் நாளிதழ்களில் வந்து கொண்டிருக்கின்றன.
ReplyDeleteமொத்தத்தில் அடிவேர்கள் சரியில்லை. [பெற்றோரின் வளர்ப்பு]
அதற்கப்புறம் பள்ளி, ஆசிரியர்கள், நண்பர்கள் சேர்க்கை !
நல்ல பெற்றோர்கள், ஆசிரியர்கள், நட்புகள், நல்ல வழி நடத்துதல் என்று நாமெல்லாம் பொற்காலத்தில் வாழ்ந்து விட்டோம் என்பது தான் ஆறுதல்!
ஆமாம், இப்போதும்/இன்னமும் தொடர்கிறதே! கேரளாவில் பாருங்க! கல்வி அறிவு பெற்றவர்களில் 100 சதவீதம் என்னும் பெருமை! ஆனால் நரபலிக்காக இருவரைக் கொலைசெய்திருக்காங்க. படிப்பு இதையா சொல்லிக் கொடுத்திருக்கு?
Deleteநல்ல பதிவு. இளைஞர்களின் எதிர்காலம் எப்படி இருக்குமோ ! நன்றாக இருக்க வேண்டும் என்று நம்மை போல் உள்ளவர்கள் இறைவனிடம் பிரார்த்தனை மட்டுமே செய்ய முடியும்.
ReplyDeleteஉண்மை. பிரார்த்தனை மூலமாவது நல்ல வழி கிடைக்கட்டுமே!
Deleteவாட்சப்,தொலைக்காட்சி இவைகளை உபயோகிக்காமல் இருந்தாலே நமக்குக் கவலைகள் வராது.
ReplyDeleteபிள்ளையைப் பெத்தவங்களுக்கே அவங்களைப்பத்தி அக்கறை இல்லை. அப்புறம் ஏன் உங்களுக்குக் கவலை
நேற்றிலிருந்து இணையம் இல்லை என்றாலும் அதனால் பிரச்னை ஒன்றும் இல்லை. ஒரு சில முக்கியமான வாட்சப் செய்திகள் போய்ச் சேரவில்லை என்பதே கவலையாக இருந்தது.
Deleteஒரு காணொளியில், வகுப்பில் ஆசிரியரைப் பார்த்து கையை நீட்டுகிறான் மாணவன். கேவலமாகப் பேசுகிறான்.
ReplyDeleteஇனி அரசுப்பள்ளிகளில், குடித்து வாழ்க்கையை அனுபவிக்க என்று ஒரு பீரியட் கொண்டுவரலாம்.
ஆமாம், பெண்களும் இப்போ ஆரம்பிச்சாச்சே! இருவருக்கும் ஆசிரியர்களே விநியோகம் பண்ணலாம். ஆசிரியர்கள் ஒண்ணும் சளைத்தவர்களாக இல்லை. :(
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteநீங்கள் கூறிய இரண்டாவது நிகழ்வை நானும் மேலோட்டமாக (தலைப்பு மட்டும்) படித்தேன். விபரமாக படிக்க மனம் கூசியது.
வரவர நல்ல நல்ல விஷயங்களே பார்வையில் படுவதில்லை. காரணம் நீங்கள் கூறுவது போல் தொலைக்காட்சிகளிலும், சினிமாக்களிலும் வன்முறைகள், பகை, சூழ்ச்சி போன்றவைகளின் அடிப்படையில் காட்சிகள் வருவதுதான் இன்றைய இளைஞர்களை கெடுத்து விட்டது. இப்போது சிறு குழந்தைகளையும் அது பீடித்து வருகிறது. என்ன செய்வது? இந்த சமுதாய சீர்கேடுகளை பெற்றோர்தான் பார்த்து, தத்தம் மக்களை சீர்படுத்த வேண்டும். செய்வார்களா? காலத்தின் மீது பழியைப் போடும் மக்கள் திருந்த வேண்டும். திருந்துவார்களா? சந்தேகத்துக்குரிய கேள்விகளாக போய் விடுமா? காலந்தான் பதில் சொல்ல வேண்டும். நியாயமான பகிர்வுக்கு மிக்க நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்
மக்கள் மனம் மாறினால் தான் குழந்தைகள் திருந்துவார்கள். இன்னமும் அதிகமாகவே போய்க் கொண்டிருக்கிறதே! இளம்பெண்ணை ரயிலில் பிடித்துத் தள்ளிய வாலிபனுக்கு ஆதரவாக இப்போதே பேச்சுக்கள் தொடங்கிவிட்டன. இனி அவனுக்குப் பணமும் கொடுத்துப் பிழைக்கத் தையல் மிஷினும் கொடுத்து அனுப்புவார்கள். மனித உரிமை!
Deleteஇந்த இழிநிலைக்கு காரணம் நமது சமூகமே... ஆம் ஒரேயொரு பிள்ளை வேண்டும் அதுவும் ஆண் குழந்தை மட்டும் வேண்டும். பெண் குழந்தைகளையும் பெற்று அக்கா, தங்கை என்று அன்று சகோதர உணர்வுகளை பட்டி வளர்த்தார்கள்.
ReplyDeleteஇன்று பெண்களை போதைப் பொருளாகத்தான் பார்க்கின்றனர் காரணம் பெற்றோரே... மேலும் இன்றைய திரைப்படங்களும் முக்கிய காரணம்.
வீட்டுக்கு தெரியாமல் தாலி கட்டி எப்படி வாழ்வது என்று புதுமையான சித்தாந்தத்தை காண்பிக்கின்றானாம். அவனது வீட்டில் இப்படி நிகழ்தால் வலி தெரியும்.
உண்மை கில்லர்ஜி. இந்த ஒரே குழந்தைக் கலாசாரம் தான் குழந்தைகளைச் சீரழிக்கிறது. தெரிந்த/அறிந்த பலரிடமும் இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ளச் சொல்லி வற்புறுத்தி இருக்கேன். ஆனால் கேட்பவர்கள் யார்?
Deleteசிதம்பரம் பஸ்ஸ்டாப்பில் திருமணம் காணொளி அதிர்ச்சியூட்டியது. ஏற்கெனவே இப்படி மாணவத்திருமணம் இன்னும் ஒன்றிரண்டு பார்த்திருந்த நினைவு. காலம் கெட்டுப்போய்க்கொண்டிருக்கிறது. சென்னை ஆதம்பாக்கம் கொலை கொடூரத்தின் உச்சம். அயோக்கிய ஆண்மைத்தனம். தாய் வயிற்றில் பிறக்காதவர்கள்.
ReplyDeleteஅதான் திரைப்படங்களே பள்ளிச் சீருடையோடு மாணவி காதலிப்பதாக எல்லாம் எடுத்திருக்காங்களே. இது ஒண்ணும் புதுசு இல்லை.
Deleteசிதம்பரம் தீட்சிதர்கள் வீட்டில் நடந்த குழந்தைத்திருமணம் தடை செய்யப்பட்டு சிலர் கைது செய்யப்பட்டிருப்பதாய் செய்தி பார்த்தேன்.
ReplyDeleteபல நீதிமன்றத் தீர்ப்புகள், முக்கியமாய் உச்ச நீதிமன்றத் தீர்ப்பெல்லாம் இருந்தும் இவங்களுக்கு இன்னமும் புத்தி வரலை. எங்களுக்குத் தெரிந்து அந்தக் கோயிலில் இளைஞர்கள் பிரம்மோபதேசம் ஆனதும் திருமணம் செய்து கொண்டால் தான் கோயிலில் வழிபாடு செய்ய முடியும். இல்லை எனில் அவனுக்குக் கோயிலில் கிடைக்கும் பங்கு கிடைக்காது. அவன் ஜீவனத்திற்கு இது வழி என்பதால் உச்ச நீதி மன்றமே ஏற்றுக்கொண்டு தமிழக அரசு இதில் தலையிடக் கூடாது என்றெல்லாம் சொல்லியும் இவங்க விடலை. பார்ப்போம் என்ன நடக்கிறது என்று!
Deleteநானும் பார்த்தேன் கீசாக்கா, இதில் திட்டுவதா விதியை நோவதா என இருக்கு, நான் நினைப்பது நமது கர்மாத்தான் எல்லாமும், நமக்கு இப்படித்தான் மரணம் என இருந்தால் அது அப்படித்தான் நடக்கும்போலும். இந்தச் சம்பவம் நடப்பதற்கு முதல் நாள்தான், கனடாவில் ஒரு சம்பவம், அதுவும் எங்கட ஊரைச் சேர்ந்தவர்கள் [இலங்கையில்].
ReplyDeleteகுடும்பத்தில் இரு பிள்ளைகள் ஒரு மகனும் மகளும் இருவரும் யூனியில் படிக்கும் பிள்ளைகள் என்கின்றனர், மகனின் பிறந்தநாளாம், அதனால அவர்களின் அம்மம்மாவைப் பார்க்க பக்கத்து ஊருக்குப் போய்க்கொண்டிருந்த போது, மிகச் சரியாக கிறீன் லைட் வந்தபின்பு காரை எடுக்கின்றனராம், எங்கிருந்தோ வந்த ட்ரக் ஒன்று ரெட் லைட்டில், மின்னல் வேகத்தில் வந்து அப்படியே இக்காரத்தள்ளிக்கொண்டுபோய் நொருக்கி விட்டதாம், வீடியோவாகப் பதிவாகியிருக்குதாம் நான் பார்க்க வில்லை. இரு பிள்ளைகளும் அதிலேயே சரி.. இதில் யாரை நோவது.. நான் விதியைத்தான் நினைக்கிறேன்...
வேதனை தான்! என்ன சொல்லுவது! இரு பிள்ளைகளுக்கும் இப்படி ஒரே நேரத்தில்! விதி இருவரையும் ஒரேநேரத்தில் தான் அழைக்கணுமா?
Deleteஎன்னாச்சு பதிவுகளை காணோம் ? தேவகோட்டை பக்கமும் காணோம்...
ReplyDeleteஎழுதணும் தான். ஆனால் மனம் பதியவில்லை. ரொம்ப நேரம் உட்காரவும் முடியறதில்லை. :(
Delete