நேற்று என்னோட மொபைலுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது. 8453234693 என்னும் எண்ணில் இருந்து நாங்க மின்சாரக் கட்டணம் கட்டவில்லை என்பதால் நேற்று இரவு 9.30 மணிக்கு எங்கள் மின் விநியோகம் நிறுத்தப்படும் எனவும். போன மாச மின் கட்டணமும் நாங்கள் கட்டியதற்கான சான்று இல்லை எனவும் அதையும் அப்டேட் செய்யும்படியும் உடனே 9353544193 என்னும் எண்ணைத் தொடர்பு கொள்ளும்படியும் சொல்லி இருந்தது அந்தச் செய்தியில். அதில் மின் விநியோகம் பெறும் வாடிக்கையாளரின் பெயரோ, அவருடைய பதிவு எண்ணோ எதுவும் இல்லை. எந்த டிவிஷன் என்பதும் சொல்லவில்லை. எந்த ஊர் என்றும் சொல்லி இருக்கலை. சரி இது ஏதோ ஏமாற்றுச் செய்தி என்பது புரிந்து பேசாமல் இருந்துவிட்டோம்.
இன்று சற்று முன்னர் அந்த 9353544193 எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. நான் தான் எடுத்தேன். எடுத்துப் பேசியதுமே வட இந்தியக் குரல் என்பது புரிந்தது. எலக்ட்ரிசிடி என்பதும் புரியவே செல்லை நம்மவரிடம் கொடுத்துட்டேன். அவரிடம் பேசிய அந்தப் பேர்வழி மின் கட்டணத்தை உடனே கட்டும்படி சொல்லி இருக்கார். இன்னிக்கோ ஞாயிற்றுக்கிழமை. விடுமுறை தினம். அலுவலக நாட்களிலேயே அவ்வளவு சுறுசுறுப்பாகப் பணம் வசூலிக்காத மின் வாரிய ஊழியர்கள் இன்னிக்கு ஏன் கூப்பிடறாங்க? நம்மவரோ அவரிடம் எந்த ஊர், எந்த டிவிஷன் என்றேல்லாம் கேட்க சென்னை, கோடம்பாக்கம் எனச் சொல்லி இருக்கார். எங்களுக்கு அங்கே வீடே கிடையாது நாங்க ஏன் பணம் கட்டணும் என நம்மவர் கேட்க அவர் திரும்பத் திரும்ப வற்புறுத்த உடனே நம்ம ரங்க்ஸ் சரி, கட்டறேன். நீங்க வாடிக்கையாளர் பெயர், வீட்டு விலாசம். பணம் கட்ட வேண்டிய வாடிக்கையாளரின் பதிவு எண் எல்லாம் சொல்லுங்க. இல்லைனா எஸ்.எம்.எஸ். பண்ணுங்க என்றதும் அதெல்லாம் கொடுக்க முடியாது எனச் சொல்லி இருக்கார். பின்னர் எந்த நோக்கத்தில் பணம் கட்டச் சொல்றீங்க? உங்களோட சுய விபரத்தோடு மேற்கண்டவற்றையும் அனுப்பினால் அதன் பிறகு பேசலாம் என்று சொல்லி விட்டார்.வேறே வழியே இல்லாமல் அந்த நபர் செல்லைத் துண்டித்தார். பின்னர் நானும் கூகிள் பண்ணி எல்லாம் பார்த்ததில் மேற்படியான எண்களே இல்லை எனச் செய்தி வருது. ஏமாந்தவர் கிடைச்சால் எப்படி வேணா ஏமாத்துவாங்க போல!
இதே போல் அடிக்கடி ஸ்டேட் பாங்க் எனச் சொல்லிக் கொண்டு உங்க கணக்கை ப்ளாக் செய்திருக்கோம். உடனே தொடர்பு கொள்ளுங்க மேல் அதிக விபரத்துக்கு என்றெல்லாம் செய்திகள் வரும். நாம் கண்டுக்கலைன்னா உடனே ஒரு தொலைபேசி அழைப்பு. வங்கியில் இருந்து மானேஜர் பேசறேன் என யாரானும் கூப்பிடுவாங்க. எந்த வங்கி எனக் கேட்டால் சில சமயம் சொல்லுவாங்க. பெரும்பாலும் உடனே ஃபோனை வைச்சுடுவாங்க. ஒரு தரம் ஸ்டேட் வங்கி என்றதும், எந்த ஊர், எந்த ப்ரான்ச் எனக் கேட்டதும் பதிலே இல்லை. பல சமயங்களில் நானும் அந்த வங்கியில் இருந்து தான் பேசறேன். அங்கே தான் இருக்கேன் எனச் சொல்லிடுவேன். உடனே தொலைபேசி வைக்கப்படும்.
மொத்தத்தில் திருடர்கள்/ புதுப் புது வழி கண்டு பிடிக்கிறாங்க. கவனமாக இருக்க வேண்டியது நாம் தான்.
சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னால் இதே செய்தி எனக்கு வாட்ஸாப்பில் வந்தது. அதில் DP ஃபோட்டோ வேறு இருந்தது. நான் லட்சியமே செய்யவில்லை. செய்தியில் அன்று நள்ளிரவே இணைப்பு துண்டிக்கபப்டும் என்று இருந்தது. எங்கள் வீட்டு க்ரூப்பில் போட்டு எச்சரிக்கை செய்துவிட்டு விட்டு விட்டேன்.
ReplyDeleteஎங்களுக்கு இப்போத் தான் முதல்லே வந்தது. மற்றபடி வங்கி மானேஜர், வங்கி ஊழியர்னு பேசி ஏமாற்றப் பார்த்திருக்காங்க. என்றாலும் நான் அதிக நேரமெல்லாம் பேசாமல் உடனே தொடர்பைத் துண்டித்துவிடுவேன்.
Deleteஆனால் அதற்கும் முன்னால் இதுபோல வட இந்திய ஆசாமி ஒருவன் என் வாங்கி கார்டில் தவறு இருபிப்பதாக சொல்லி எண் எல்லாம் கேட்டு பேசினான். ஒரு பத்து நிமிடம் அவனோடு பொழுது போக்கினேன்!
ReplyDeleteஉங்களைப் போலவே நம்ம ரங்க்ஸும் ஹிந்தியிலேயே பேச ஆரம்பிப்பார். சமயங்களில் நான் சத்தம் போட்டு நிறுத்துவேன்.
Deleteநல்லவேளை எனக்கு இப்படி அலைபேசி வரவில்லை
ReplyDeleteவந்து இருந்தால் நான் உடனே பணத்தை கட்டி ஏமாந்து இருப்பேன்.
நிஜம்மாவா சொல்றீங்க கில்லர்ஜி? கவனமாக இருக்கணுமே. தனியா வேறே இருக்கீங்க. கவலையா இருக்கு! :(
Deleteஅக்கா நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எனக்கும் இப்படி எஸ் எம் எஸ் வரும். இன்னும் ஒரு மணி நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று. அட போயா துண்டிச்சா துண்டிச்சுக்கன்னு சொல்லிக்குவேன்...என் பெயரிலோ, என் மொபைல் நம்பர் கொடுத்தோ மின் வாரியத்துடன் தொடர்போ இல்லாத போது எப்படி வரும். ஸோ இது ஏமாத்து வழிகள். இப்படி வங்கி, மொபைல், வீட்டு மனைக்கு எப்ப மீது அட்வான்ஸ் கொடுக்கப் போறீங்க என்றும் வரும். கண்டு கொள்ளவே மாட்டேன்.
ReplyDeleteகீதா
நாங்க யாரையும் தொடர்பு கொள்வதில்லை. வரும் அழைப்புக்களை என்னதான் எண்களைப் பார்த்துட்டு எடுத்தாலும் சில சமயங்கள் இப்படி ஆகிவிடும்.
Deleteஇனிமேல் அப்படியான எண்களைத் தொடர்பு கொள்ளாதீங்க கீதாக்கா. அறியாத நம்பர் அல்லது இப்படி எஸ் எம் எஸ் மூலம் செய்தி அனுப்பிவிட்டு அதே எண்ணில் இருந்து அழைப்பு வந்தாலோ இனி தயவு செய்து அதை எடுத்துப் பேசாதீங்க. ஏனென்றால் நாம் கட்டியதற்கான பில், செய்தி எல்லாம் நம்மிடம் இருக்கும் போது அதுவும் ஆன்லைனில் இருக்கும் போது...அல்லது பில் இருக்கறப்ப இதைப் பத்திக் கவலைப்படாதீங்க அக்கா.
ReplyDeleteஎந்த தெரியாத எண்ணையும் எடுக்காதீங்க. அது அவங்களுக்கு ஒரு வழி உங்ககிட்டருந்து தகவல் பெற்று....அல்லது வேறு ஏமாற்று வேலைகள் இருக்கும் ப்ளீஸ் இனிமேல் தெரியாத நம்பர் எதுவும் எடுக்காதீங்க....இப்படி வர மெசேஜஸை இக்னோர் பண்ணுங்க.
வீட்டு வாசலுக்கு வந்து கேட்டாலும் க்ரில் கதவு உண்டு என்று நினைக்கிறேன் அதைத் திறக்காம பதில் சொல்லுங்க... நீங்க சொல்லிடுங்க நாங்க தொடர்பு கொள்ளவேண்டியவங்களைத் தொடர்பு கொள்றோம்னு ....
கீதா
வீட்டுக்கெல்லாம் அப்படி சுலபமாக வந்துட முடியாது. கீழே செக்யூரிடி இருக்காங்க. அவங்க கேட்டுக் கொண்டு தான் அனுப்புவாங்க. விருந்தினர் வரதைக் கூட முன்னாடியே சொல்லி வைப்போம். மேலும் பெரும்பாலும் மெயின் கதவைப் பூட்டுப்போட்டுப் பூட்டிடுவோம். சாயங்காலமாச் சில மணி நேரங்கள், காலை காடரர் வர வரைக்கும்னு திறந்திருக்கும். அப்போக் கூட மரக்கதவைச் சார்த்திடுவேன்.
Deleteஇந்த மாதிரி போன் அழைப்பு வந்தால் நெடுநேரம் அவர்களுடன் பேச கூடாது என்றும் சொல்கிறார்கள். சந்தேகம் தரும் நம்பர்களை எடுக்க கூடாது, எடுத்தாலும் உடனே கட் செய்து விட வேண்டும் என்று சொல்கிறார்கள்.
ReplyDeleteகவனமாக இருப்பது நல்லதுதான். கவனமாக இருக்க வேண்டிய காலம் இது.
ஆமாம், கோமதி, நானும் சொல்லுவேன். ஆனால் நம்மவர் கேட்பதில்லை,. ஒரு ஐந்து/பத்து நிமிடங்களாவது பேசுவார். பேசப்பிடிக்கும் என்றாலும் இதெல்லாம் தேவை இல்லை என்பது என் கருத்து.
Deleteகலியுகத்தில் கற்றவர்களே திருடர்கள்..
ReplyDeleteபுதுப் புது வழியை கண்டுபிடித்துக் கொண்டு வருகின்றார்கள்.. .
கவனமாக இருந்து கொள்ள வேண்டியது நாம் தான்.
வணக்கம் சகோதரி
ReplyDeleteஇந்த மாதிரி ஏமாற்று செய்திகள் கைப்பேசியில் வருவதாக எங்கள் குழந்தைகளும் கூறியுள்ளனர். எதற்கும் நாம் எச்சரிக்கையாக இருந்து விட்டால் தப்பித்து விடலாம். ஆனால் இதை தவிர்க்க என்ன வழிகள் உள்ளன என்றுதான் அப்போதைக்கு யோசிக்க வேண்டியுள்ளது. இந்த மாதிரி சக மனிதர்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பதை ஒரு மனிதன் தவறு என உணர்வது எப்போதோ? சொல்லப்போனால் இது அந்த காலத்திலிருந்தே தொடர்கிறது.
"நான்தான் இவரின் மகன் எனக்கூறிக் கொண்டு ஒருவர் வந்து எங்கள் அம்மா வீட்டில் நிறைய பணம் பெற முயற்சி செய்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. வேறு வழியின்றி அப்போதைய பணத்தில் இருபது ரூபாய் அன்றைய தினத்தில் நாங்கள் இழந்திருக்கிறோம் . (அதன் மதிப்பு அப்போது எங்களுக்கு அதிகம்) அதன் பின் அவரே வேறொரு தடவை தன் மகனை அழைத்து வரும் போதுதான் முன்பு வந்தவர் போலி என அறிந்து வேதனையடைந்தோம். இப்போது முகமறியாமல் பேசும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு இப்படி ஒரு நவீன திருட்டு. உண்மையில் கலி முத்தித்தான் வருகிறது. கவனமாகவே இருங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.