பெயரிலே என்ன இருக்குனு சிலர் சொல்றாங்க. ஆனால் பெயரிலே தான் எல்லாமே இருக்கு இல்லையா? எங்க வீட்டிலே பாருங்க எந்தப் பெயரைச் சொன்னாலும் அந்தப் பெயரிலே யாராவது ஒருத்தர் இருக்காங்க. இப்போப் பாருங்க, அன்னிக்கு ஒருநாள் அம்பி அங்கிள் தொலைபேசிலே கூப்பிட்டு ஸ்டைலா ஸ்ரீராம்னு சொல்லி இருக்கார். ஸ்ரீராம்ங்கற பேரிலே எங்களுக்கு சொந்தங்கள் நாற்பது பேர்னா நண்பர்கள் பத்துப் பேராவது இருப்பாங்க. யாருனு எடுத்துக்கறது? நம்ம ரங்ஸுக்கு அந்தக் கவலையே இல்லை, குழப்புவார். என்னங்கறீங்க?? ஸ்ரீராமை,பொருத்தமே இல்லாத வேறே பெயராலே, கிருஷ்ணன், சேகர்னு ஆக்கிடுவார். அதோட இல்லாமல் அழுத்தம் திருத்தமா நம்மட்டே அடிச்சுச் சொல்லுவார். அவங்க வீட்டிலேயே போய் அவர் புரிஞ்சுட்ட பேராலேதான் கூப்பிடுவார். அவங்களும் பாவம்னு வந்துடுவாங்க. சிலர் மட்டும் அசடு வழிஞ்சுண்டே(நியாயமாப் பார்த்தா இவர் வழியணும், இங்கே எல்லாமே மாறிடும்) ஹிஹிஹி, என் பேர் சேகர் இல்லை ஸ்ரீராம்னு சொல்லுவாங்க. ஓஹோ, அப்படியானு கேட்டுப்பார். ஆனாலும் விடாம இவர் வச்ச பேராலே தான் கூப்பிடுவார்ங்கறது வேறே விஷயம்.
இதைவிடக் கூத்து ஒண்ணு நடந்துச்சே. ஒருநாளைக்கு திராச சார் கூப்பிட்டார். அவர் திராசனு சொல்லி இருந்தாலே இவர் புரிஞ்சுட்டிருக்க மாட்டார்ங்கறது வேறே விஷயம். அவரோ சந்திரசேகர்னு சொல்லிட்டார். சந்திரசேகர்ங்கற பேரிலே எனக்கு அக்காவீட்டுக்காரர் ஒருத்தர் இருக்கார். அதோட இவரோட நெருங்கின நண்பர்கள் இரண்டு பேர் சந்திரசேகர். இவங்க எல்லாரும் அவரை விடப் பெரியவங்க. ஆனாலும் இவர் நண்பர்கள்ங்கற ஹோதாவிலே ரொம்ப உரிமையா, "என்னப்பா, எப்படி இருக்கே??" னு எல்லாம் கேட்டுட்டு இருந்தார். சரிதான் அவரோட நண்பராக்கும்னு நினைச்சேனா?? தொலைபேசியை என் கையிலே கொடுத்து சந்திரசேகர்டி, உன்னோட பேசணுமாம். ஹிஹி அவர் நினைச்சது சந்திரமெளலியைப் போல. சரினு நானும் தொலைபேசியை வாங்கிட்டு ஹலோனு சொன்னால் எதிர்முனையில் திராச சார் பேசறார். இப்போ அசடு வழியவேண்டிய முறை என்னோடதாச்சு. இத்தனைக்கும் நம்மாளு அசரவே இல்லை. ஹிஹிஹி,இது பங்களூரிலே இருக்காரே உன்னோட நண்பர் மெளலி, அவர்னு நினைச்சேனேனு சமாளிப்பு.
நல்லவேளையாக் கொத்தனார் கூப்பிட்டப்போ "கொத்தனார் பேசறேன்னே சொல்லிட்டார். அவர் பேரிலே எங்க வீட்டிலே "என்னடா, டேய்"னு அதட்டற ரேஞ்சுக்குப் பசங்க இருக்காங்களா? பேர் சொல்லி இருந்தா மனுஷன் முழி முழினு முழிச்சிருப்பார். தி.வா.வேறே ஒருநாள் வாசுதேவன்னு சொல்லவே,அன்னிக்குத் தொலைபேசியை நான் தான் எடுத்தேன், இருந்தாலும் அது என்னோட ஓர்ப்படி பையர்னு நினைச்சுட்டேன். டேய் வாசுனு கூப்பிட்டிருக்கணும், (நல்லவேளையா, எனக்குத் தான் நல்லவேளை! :P) அப்புறம் தான் ஏதோ குரலில் மாற்றம் இருக்கேனு நினைச்சுட்டு, "யாரு"னு திரும்பக் கேட்டால் கடலூர்னு பதில் வந்ததோ பிழைச்சேன். இல்லாட்டி அன்னிக்கு ஒரு வழி பண்ணி இருப்பேன் எங்க பையர்னு நினைச்சு.
கணேசன் கேட்கவே வேண்டாம், எக்கச்சக்கமா இருக்காங்க. டேய்னு கூப்பிடறதிலே இருந்து மரியாதையாக் கூப்பிடற வரைக்கும் இருக்காங்க. பாலாங்கற பேரும் ரொம்ப காமன். அந்தப் பேரிலே நல்லவேளையா இணையத்திலே யாரும் அதிகமா இல்லையோ பிழைச்சாங்க. எங்க பால்காரர் பேரு என்னமோ முனுசாமினு. ஆனால் இவர் வச்சிருக்கிற பேரு என்னமோ அன்பழகன். அன்பழகன் இல்லை முனுசாமினு சொன்னாலும், பால்காரரைப் பார்த்தால் அன்பழகன்னு தான் தோணுதாம். ஆனால் என்ன பேரு அவங்க வீட்டிலே வச்சிருந்தாலும் நம்ம ரங்க்ஸ் கூப்பிடறதென்னமோ அவர் தானாய் செலக்ட் பண்ணிண்ட ஒரு பெயரிலே தான். இப்படி எத்தனை பேரைக் குழப்பி இருக்கார்னு நினைச்சீங்க? எல்லார் பேரையும் இஷ்டத்துக்கு மாத்திடுவார். இது வரைக்கும் அவர் மாத்தாத பேர் என்னோடதுதான்னு நினைக்கிறேன். மாத்தினாச் சும்மா விட்டுடுவோமா???
இப்போ எல்கே தாத்தா வேறே கார்த்திக்னு பேரிலே வந்திருக்காரா? கார்த்திக் என்னோட அண்ணா பையர் பேரு. இவர் கார்த்திக்னு சொன்னால் அவ்வளவு தான். என்னடானு கேட்போம். மீனாங்கற பேரிலே எங்க வீட்டிலே தடுக்கி விழுந்தால் ஒருத்தர் இருக்காங்க. அதனாலே ஒவ்வொரு மீனாவுக்கும் ஒரு அடைமொழி உண்டு. யு.எஸ்ஸிலே மட்டும் எங்களுக்குத் தெரிஞ்சு 3,4 மீனா உண்டு எங்க பொண்ணைச் சேர்க்காமல். இதிலே நம்ம கவிநயா தொலைபேசினாங்கன்னா எதிர்ப்பக்கம் சத்தமே வராது. நம்ம பேச்சுத் தான் எதிரொலிக்கும். அப்போப் புரிஞ்சுடும் அவங்கதான்னு. மத்தவங்க யாரானும் மீனானு சொன்னால் எந்த மீனானு கேட்டுக்கணும். அவ்வளவு ஏன்? என்னோட ஒரிஜினல் பேரான சீதாலக்ஷ்மிங்கறதே எங்க அப்பா வீட்டிலே பிறக்கிற எல்லாப் பொண்ணுங்களுக்கும் வச்சிருக்காங்களா? ஒரே சீதாலக்ஷ்மி மயம் தான் வீட்டிலே. நல்லவேளையாக் கூப்பிடற பேரு எல்லாருக்கும் மாத்தி மாத்தி வச்சுட்டாங்களோ பிழைச்சோம். இல்லைனா சீதாலக்ஷ்மினு கூப்பிட்டால் குறைந்தது நாங்க ஐந்து, ஆறு பேர் திரும்பிப் பார்ப்போம். இது ஒரு பரம்பரைத் தொடர்கதை! இரண்டு தலைமுறையா வந்துட்டு இருக்கு. :D
ஹிஹிஹி, இந்தப் பயங்கர ஆராய்ச்சிக்கட்டுரை தொடர்ந்தாலும் தொடரும்! எதுக்கும் கொஞ்சம் கவனமா இருங்க!
கொஞ்சம் மொக்கையும் கூடப் போட்டுக்கலாம்னு நினைச்சேன். ஆனால் இதுவும் 12 வருஷப் பழசு தான். இதிலே வரவங்க யாருமே இப்போத் தொடர்பில் இல்லை. :( அவ்வப்போது தி.வா. மட்டும் கூப்பிடுவார்.
பெயரில் என்ன இருக்கா?...
ReplyDeleteபெயரில் தான் எல்லாமே இருக்கு.. எல்லாம் தெரிஞ்சவங்களுக்குத் தெரியும்.. புரியும்..
நல்ல பதிவு..
வாழ்க நலம்..
ஆமாம். முன்னெல்லாம் கடவுள் பெயர்களைத் தான் வைப்பாங்க. அல்லது முன்னோர்களின் பெயர்கள். இப்போ எல்லாம் மாறிப் போச்சு!
Deleteபெயர்களை இப்படியா குழப்புவது ?
ReplyDeleteஎனது பெயரை மாற்றி விடாதீர்கள் அப்புறம் தெய்வகுற்றமாகி விடும் சொல்லிட்டேன்... ஆமா...
சேச்சே! உங்க பெயர் யாருக்குமே கிடையாதே! அப்படி எல்லாம் மாற்ற முடியாது. :D
Deleteசில பெயர்கள் ரொம்ப காமன். ஒரே பெயரில் வெவ்வேறு நபர்களை செல்லில் சேவ் செய்யும்போது அவர்கள் தொழிலோடு அல்லது இன்னார் நண்பர்னு குறிப்போடு சேமித்து விடுவேன். அப்படியும் இடைவெளி விழுந்து விட்டால் கொஞ்சம் குழம்பிடும்!
ReplyDeleteஆமாம், நானும் அப்படித்தான் செய்வேன். அடைமொழி ஒன்றைத் தேர்ந்தெடுக்கணும்.
Deleteமுன்னால் குமுதத்தில் குப்பாச்சு குழப்பாச்சு என்று ஒரு பகுதி வரும். புத்திசாலித்தனமாக யோசித்து எழுதினால்தான் அதை எழுத முடியும். சுவாரஸ்யமாக இருக்கும். சிரிக்கவும் வைக்கும்.
ReplyDeleteஅரைகுறை நினைவாய் இருக்கு ஸ்ரீராம். படிச்சிருப்பேன். நினைவில் வரலை.
Deleteஎன்னாது.. உங்க ஒரிஜினல் பேரு சீதாலெட்சுமியா? இனி அப்படியே கூப்பிடறேன் சீதாலட்சுமி அக்கா.
ReplyDeleteக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அந்தப் பெயர் கல்யாணப்பத்திரிகையோடு நின்னாச்சு. ஆனால் இதிலிருந்து தெரிவது என்னவெனில் நீங்க என்னோட, "கீதா கல்யாணமே வைபோகமே!" மின்னூலைப் படிக்கலை என்பது தெரிந்து விட்டது.
Deleteநல்ல ஆய்வு...
ReplyDeleteநன்றி திரு தனபாலன் அவர்களே!
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. ரசித்து எழுதியிருக்கிறீர்கள். நானும் படித்து ரசித்தேன். ஒரு பெயரைத்தான் அவர் யார் என்பது பற்றி புரியாமல், இல்லை அவசரத்தில் குறிப்பிடும் போதோ எத்தனை சங்கடங்கள் வருகிறது ஒரே குடும்பத்தில் பெயர்கள் ஒரே மாதிரி இருந்து விட்டால், யார், யார் என்ற குழப்பம் வருவது சகஜம்தான். சிலர் சிலருக்கு வேறு சில பட்ட பெயர்கள் வைத்து விடுவார்கள். (அதுவும் அவர்கள் அறியாமலே. அதை அறியும் போது சில சமயம் அவர்கள் நகைச்சுவையாக எடுத்துக் கொள்வதும் உண்டு. சில சமயம் அவர்கள் சிறு கோபத்தில் அந்த பட்டப் பெயர் வைத்தவரின் உறவே வேண்டாமென விட்டு விடுவதும் உண்டு. ) சிலர் வசிக்கும் ஊரின் பெயரை உடன் வைத்து விடுவார்கள். அதன்படி நான் இப்போது பெங்களூர் கமலா. இன்னொருவர் சென்னை தாம்பரம் கமலா. (எங்கள் மன்னியின் அக்கா. அவர்கள் இப்போது தற்சமயம் இல்லை.)
உங்கள் பெயர் நன்றாக உள்ளது. எங்கள் தாய்வழி,பாட்டியின் பெயரும் அதேதான். எனக்கு மிகவும் பிடித்தமான பெயர் அது. எங்கள் தந்தை வழி பாட்டியின் பெயர்தான் எனக்கு. இப்போது இந்த மாதிரி வழிவழியாக பெயர்கள் வைப்பதில்லை. தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி பெயர்களை தங்கள் குழந்தைகளுக்கு வைத்துக் கொள்கிறார்கள்.
இப்போது உங்கள் தலைப்புக்கு வருகிறேன். பெயரில் என்ன வந்தது? நன்றாக ஆயுள் ஆரோக்கியத்தோடு நலமோடு இருந்தால் போதும். பதிவை நீங்கள் சொன்ன விதத்தை ரசித்தேன். நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, நீங்க சொல்லுவது சரியே! நாங்களும் இப்படிப் பல அடைமொழிகளுடன் சிலரின் பெயர்களை நினைவில் கொள்வோம். எனக்கும் என் அப்பாவழிப் பாட்டியின் பெயர் தான். ஆனால் இந்தப் பெயர் சொல்லிக் கூப்பிடவே இல்லை யாருமே. என் தாத்தா (அம்மாவின் அப்பா) ஒருத்தர் தான் கூப்பிடுவார். உங்கள் பெயர்க்காரணமும் புரிந்தது. நீங்கள் சொல்வது போல் அனைவரும் ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருந்தாலே போதுமானது.
Deleteஹாஹாஹாஹா சிரித்துவிட்டேன் கீதாக்கா.
ReplyDeleteஅதுவும் மாமா பெயர் மாத்தறது நினைச்சு....
எங்க வீட்டுலயும் ஸ்ரீராம் பெயர் ரொம்பவே. எனவே நம்ம ஸ்ரீராம் - எபி ஸ்ரீராம்னே போட்டு வைச்சிருவேன். என் தங்கை கணவர் ஸ்ரீராம் அதனால தங்கையின் பெயரோடு சேர்த்து ஸ்ரீராம்னு போட்டு வைச்சிருப்பேன், இப்படி ஒவ்வொரு பெயரோடும் சேர்த்து ஒரு அடைமொழி!!!!
கீதா
இஃகி, இஃகி, தி/கீதா. நம்மவர் பிடிவாதமாகத் தான் நினைக்கும் பெயரையே பிறருக்குச் சூட்டிவிட்டுப்பேசும்போது எதிராளி தர்மசங்கடமாக உணர்வார். இவர் கண்டுக்கவே மாட்டார். அதை எல்லாம் நேரில் பார்த்து ரசிக்கணுமாக்கும்!
Deleteஎனக்குக் குழப்பம் வரது வந்து எபி ஸ்ரீராம்னு போட்டு அவர் பாஸை எபி ஸ்ரீராம் சுஜான்னு வேற போட்டு வைச்சிருப்பேன்...ரெண்டு பேர் குரலும் கிட்டத்தட்ட ஒரே போல இருக்கும். நான்வேற மொபைல்ல அழைப்பு வரும் போது எபி ஸ்ரீராம்னு முதல்ல கண்ணுல படுமா...உடனே சொல்லுங்க ஸ்ரீராம்னு சொன்னா அது பாஸ்!!!! சில சமயம் ரெண்டு பேரும் ஒரு ஃபோன்ல பேசுறப்ப குழம்பி மாதி பெயரை சொல்லிட்டு....ஹிஹிஹி!!! தான்...
ReplyDeleteகீதா
ஸ்ரீராமும் நிறையவே உண்டு. நம்ம ஸ்ரீராமை எ.பி. ஸ்ரீராம்னு போட்டு வைச்சிருக்கேன். நெல்லையை "முரளி"னு சொன்னால் தான் நம்மவர் புரிஞ்சுப்பார். இப்போல்லாம் நெல்லைத் தமிழன் தொலைபேசி அழைப்பு என்றாலே புரிஞ்சுக்கறார். :))))
Deleteஅட! உங்க பெயர் சீதா லக்ஷ்மியா!!! இதுவும் ரொம்ப காமன் தான்!!
ReplyDeleteகீதாக்கான்னு சொல்றதுக்குப் பதில் சீதாக்கான்னு சொல்லிட்டா போச்சு!! ஒரு எழுத்துதானே மாத்தணும்!! ஹிஹிஹிஹி
கீதா
எனக்கு பாளையங்கோட்டைல என்னோட டைப்பிங் படித்த சீதா லக்ஷ்மி மேல ஒரு கண் இருந்துச்சு. ரொம்ப வருடங்களுக்கு அப்புறம் இன்றுதான் சீதாலக்ஷ்மி என்ற பெயரைக் கேட்கறேன்.
Deleteக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், தஞ்சாவூர்ப்பக்கம் வீட்டுக்கு வரும் புது மருமகளுக்குப் பெயரை மாத்துவாங்களாம். ஆகையால் என்னோட கடைசி மைத்துனனும் என் பெயரை மாத்தியே ஆகணும்னு ஒரே பிடிவாதம். நான் ஒத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டேன். கடைசியில் பெயர் மாற்றும் வழக்கம் இல்லாத எங்க வீட்டில் மன்னி பெயர் "பட்டு" என இருந்ததை ஒரிஜினல் பெயரான ராஜம்னு கூப்பிட ஆரம்பிச்சாங்க. ஏனெனில் எங்க வீட்டுப் பட்டுக்குஞ்சுலுவை (எங்க பெண்) எல்லோருமே பட்டுனு கூப்பிடுவாங்க, அதான்.
Deleteநீங்களும் மீள் பதிவை ஆரம்பிச்சுட்டீங்களா?
ReplyDeleteநான் எழுத நினைப்பதை எல்லாம் எழுத முடியாது நெல்லை. அதனால் கொஞ்சம் இல்லை நிறைய யோசனை! :(
Deleteஎன் பெயரை, மனைவியின் உறவினர்களிடத்தில் மனைவி பெயரோடு சேர்த்துத்தான் சொல்லுவேன், என் பெயர் common என்பதால். நிறைய பேர் என் அப்பாவின் கடைசிப் பெயரைத்தான் என் பெயர் என்று நினைத்துக் கூப்பிடுவார்கள். அதுவும் uniqueதானே என்று இருந்துவிடுவேன்.
ReplyDeleteஆமாம், நெல்லை. நாமெல்லாம் குடும்பப் பெயர் வைச்சுக்காததால் வடக்கே எல்லாம் அப்பா பெயர் சேர்ந்து வரும் என்பதால் அப்பா பெயரைச் சொல்லித் தான் கூப்பிடுவாங்க. அதனாலேயே எங்க மாப்பிள்ளை/பையர் இருவருமே சர்நேம் ஐயர் என்பதைச் சேர்த்துக் கொண்டு விட்டனர்.
Deleteபெயர்க்குழப்பம் ஸ்வாரஸ்யம். எனக்கும் பெயர் மறந்துவிடும். சமீபத்தில் WhatsApp வழி ஒரு செய்தி - "என் அலைபேசி எண் மாற்றி இருக்கிறேன் - சுஜாதா". எனக்கோ நான்கு ஐந்து சுஜாதா நட்பு வட்டத்தில்...... வேறு வழி இல்லாமல் அவரிடமே கேட்க, சற்றே மனவருத்தம் :(
ReplyDeleteசெல் வாங்கின புதுசில் வாட்சப்பில் எ.பி. ஸ்ரீராம் செய்தி கொடுக்கும்போதெல்லாம் அதை வேறு ஸ்ரீராம் என்றே நினைச்சு பதில் கொடுப்பேன். ஒரு தரம் அவருக்கு என்னடா இது! வெறுத்தே போச்சு. பின்னர் அவர் பெயரோடு நான் எ.பி.யைச் சேர்த்து சேமித்தேன். இதெல்லாம் அப்போத் தெரியாத காரணத்தால் குழப்பமாகத் தான் இருந்தது. :))))) உங்க பெயரிலே என்னோட அண்ணா, சித்தி பிள்ளை, பெரியப்பா பிள்ளைனு இருந்தாலும் நீங்க அப்பா பெயரைச் சேர்த்திருப்பதால் பிரச்னை இல்லை. :))))
Delete