உ.வே.சா. வாழ்க்கையின் சிறப்பு
உ.வே.சா. என்று அழைக்கப்படும் உ.வே சாமிநாத ஐயர், உழைத்திராவிட்டால் தமிழுலகிற்குச் சிலப்பதிகாரத்தைப் பற்றித் தெரியாமலே போயிருக்கும். அகநானூற்றிற்கும் புறநானூற்றிற்கும் வேறுபாடு தெரிந்திருக்காது. மணிமேகலை மண்ணோடு மறைந்திருக்கும். இப்படி நூற்றுக்கணக்கான நூல்களை அழிவிலிருந்து காப்பாற்றிப் பதிப்பித்துத் தந்தவர் என்னும் பெருமை உடையவர். உ.வே.சா. மேலும், தன்னுடைய சொத்துகளையும் விற்றுப் பல தமிழ் இலக்கிய நூல்களைப் பதிப்பித்தார். இத்தகைய அரிய சேவைக்காக அவரின் சீரிய முயற்சிகள் தாராளம், பட்ட சிரமங்களோ ஏராளம். இருந்தும் மனம் தளராது இச்சேவையில் ஈடுபட்டு வெற்றியும் கண்டார்.
சங்க இலக்கியங்களைப் பற்றி இன்று நம்மால் பேசமுடிவதற்கு உ.வே.சா. பெரும் காரணமாவார். சங்க கால மக்களின் வாழ்க்கை, பண்பாடு போன்றவற்றைப் பற்றி இன்று நமக்குத் துல்லியமாகத் தெரிய இவருடைய உழைப்புப் பெரிதும் உதவியது.
இவர் ஏட்டுச்சுவடிகளைப் பார்த்து அப்படியே அவைகளைப் பதிப்பித்தல் மட்டும் செய்யவில்லை. சிதைந்து மறைந்துவிட்ட அடிகளையும் சொற்களையும் கண்டு முழுப்பொருள் விளங்கும்படி செய்தார். ஆசிரியர் குறிப்பு, நூற்குறிப்பு போன்ற செய்திகளையும் தொகுத்து வழங்கி, இந்த நூல்களைக் குறித்த முழுபுரிதலுக்கும் வழிவகுத்தார். அவர் தோன்றிய காலத்தில் இருந்த தமிழின் நிலைக்கும் அவர் மறைந்த காலத்தில் உயர்ந்து நின்ற தமிழின் நிலைக்கும் பெரிய வேறுபாடுள்ளது.
சீவகசிந்தாமணியைக் கற்றுக் கொடுக்க முயன்ற போது ஏட்டுச்சுவடியிலிருந்த நூலை மிகுந்த சிரமத்திற்கிடையில் கற்றுப் பாடம் சொல்லிக் கொடுத்ததால் இந்த நூலில் உள்ள செய்திகளை உணர்ந்தவர், இந்த நூலை 1887-ஆம் ஆண்டு முதன்முதலாக வெளியிட்டாா். தமிழர்கள் அளித்த நல்லூக்கம் இப்பணியை அவர் தொடர்ந்து செய்ய காரணமாயிற்று. இவருடைய வாழ்க்கை வரலாறு தமிழ்பால் அன்பு கொண்ட அனைவரும் போற்றும் ஒரு கருத்துக் கருவூலமாக இருக்கின்றது.
நன்றி விக்கிபீடியா
சிறிய வயதில் இவரிடம் யாராவது ஆங்கிலம் இவ்வுலக வாழ்விற்கும், வடமொழி அவ்வுலக (ஆன்மீக) வாழ்விற்கும் பயன்படும் என அறிவுறுத்தினால், என் அன்னை தமிழானது இவ்வுலகம் மற்றும் அவ்வுலக வாழ்வு இரண்டிற்கும் இன்றியமையாதது எனக் கூறுவாராம்.
இவர் குடும்பம் தீராத வறுமையில் வாடியது. தமது குடும்பம் பிழைப்பதற்கும் இவர் கல்வி கற்பதற்கும் இவர் தந்தை மிகுந்த முயற்சி எடுத்துள்ளார்கள். அக்காலத்தில் இவர் குடும்பம் ஓர் ஊரில் நிலையாகத் தங்குவதற்கு வசதியில்லாமல் ஊர்ஊராகச் இடம்பெயர்ந்து வாய்ப்புகளைத் தேடி அலைந்துள்ள போதிலும், மனம் தளராமல், இவ்வளவு கடினமான சூழ்நிலையில் தமிழை விடாமுயற்சியுடன் கற்றுக் கொண்டுள்ளார். இவர் பிற்காலத்தில் அடைந்த இமாலய வெற்றிக்கு இவர் கற்ற கல்வியும், குடும்பத்தின் தியாகமும், விடாமுயற்சியும் பெரும் அடித்தளமாக அமைந்தது.
தமிழாசிரியர் எங்குக் கிடைப்பாரோ என்று தேடித்தேடி, அதன் தொடர்ச்சியாகக் குடும்பம் முழுவதும் தமிழாசிரியர் இருக்கும் இடத்திற்குக் குடி பெயர்ந்து விடும். படித்த புலவர்கள் யாரைப் பார்த்தாலும் இவரிடம் தமிழ் கற்றுக் கொள்ள முடியுமா என்றுதான் தம் உள்ளம் ஏங்கியதாக இவர் குறிப்பிட்டுள்ளார்கள். “இவர்கள் பெரிய வித்துவான்களாக இருக்க வேண்டும். இன்று பல விசயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று உ.வே.சா. பதிவுசெய்கிறார்
தாத்தாவைப்பற்றிய மலரும் நினைவுகள் நன்று.
ReplyDeleteவாங்க கில்லர்ஜி, நன்றிங்க.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteஅருமையான பதிவு. உ. வே. சாமிநாதய்யர் அவர்களைப்பற்றி தெரிந்து கொண்டேன். தமிழுக்கு அவர் ஆற்றிய தொண்டு அளவிட இயலாதது. இன்று அவரைப் பற்றிய பல சிறந்த கருத்துக்களை பகிர்ந்து அவரின் தமிழ் பற்றை உயர்வாக்கி விட்டீர்கள்.
இந்தப்பதிவு இப்போதுதான் காண்கிறேன். காலையில் என் நண்பர்கள் பதிவுக்கு வலவில்லையே..!! பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா. உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி. நேற்றுத் தான் தாத்தாவின் நினைவு நாள் என்பதால் நேற்றைய தினம் வெளியாகும்படி ஷெட்யூல் செய்திருந்தேன். அது என்னமோ சரியாக வெளியாகாமல் தொங்கிக் கொண்டிருந்தது. நேற்றுப் பூராவும் வந்து பதிவு வந்துவிட்டதானு பார்க்க முடியலை. இன்னிக்குக் கருத்துரைகள் வந்திருக்கும்னு நினைச்சால் பதிவையே காணோம். அப்புறமா உலுக்கிக் குலுக்கித் தேடிக் கண்டு பிடிச்சுப் போட்டேன். தேதி மாற மாட்டேனு சொல்லிடுத்து. சரி, எப்படியும் நேற்று வெளியாகி இருக்கணும் தானேனு விட்டுட்டேன்.
Deleteஉ.வே.சாஅவர்களின் வாழ்க்கை வரலாறு விடாமுயற்சிக்கும் கல்வி கற்பதில் ஆர்வமும், தமிழ் தொண்டும் நன்கு விளங்கும். ஒவ்வொரு வருடமும் அவரை நீங்கள் நினைவுகூர்வது மகிழ்ச்சி.
ReplyDeleteஉ.வே.சா அவர்களின் தந்தை தன் மகன் கல்வி கற்க மிகவும் பாடு பட்டு இருக்கிறார், சிறு வயதில் விளையாடகூட விடாமல் எப்போது கல்வி கற்பதில் கவனமாக இருந்து இருக்கிறார். அவர் குடும்பம் உ.வே.சா கல்வி கற்க நிறைய தியாகங்கள் செய்து இருக்கிறது.குடும்ப பாரத்தை தந்தை ஏற்றுக் கொண்டு இவரை கல்வி கற்க அனுமதித்து இருக்கிறார்கள்.
படித்தவர்களை தேடி தேடி பாடம் கற்று இருக்கிறார்.
அவற்றை பதிபித்து தமிழுக்கு தொண்டு செய்த தாத்தாவுக்கு வணக்கங்கள்.
அந்தக் காலத்தில் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்துப் படித்ததால் தானே தாத்தாவால் இத்தனை உழைப்புடன் கூடிய செயல்களைச் செய்ய நேர்ந்திருக்கிறது. அந்தக் காலத்து மனிதர்கள் மன உறுதியும் உடல் உறுதியும் பெற்று வாழ்ந்திருக்கின்றனர். தன் பிள்ளையைத் தமிழ்த்தாய்க்கு அளித்து அழகு பார்த்திருக்கிறார் தாத்தாவின் தந்தை. மனைவியின் உறுதுணையும் தாத்தாவுக்குக் கிடைத்திருக்கும்.
Deleteதாத்தா வியக்க வைக்கிறார். என்ன ஒரு மனம் தளராத அபார உழைப்பு! அசாதாரணமானவர்!
ReplyDeleteவாசித்த போது மெய்சிலிர்த்தது கீதாக்கா. ஒவ்வொரு முறையும் நீங்கள் எழுதுவதை வாசிக்கும் போது...
தாத்தாவை நினைவு கூர வேண்டும்!
கீதா
வாங்க தி/கீதா, தாத்தாவை எத்தனை வருஷங்கள் போற்றினாலும் தகும். அந்த அளவுக்கு உழைப்பைக் கொடுத்திருக்கார் தமிழுக்காக.
Delete// என் அன்னைத் தமிழானது இவ்வுலகம் மற்றும் அவ்வுலக வாழ்வு இரண்டிற்கும் இன்றியமையாதது எனக் கூறுவாராம்.//
ReplyDeleteமுற்றிலும் உண்மை..
இங்கே
தாத்தாவை சிறுமைப்படுத்தி அல்ப சுகம் காண்கின்றனர் சிலர்..
சரியாகச் சொன்னீர்கள். உவேசாவை "வந்தேறி" என்று கூறி விடுவார்கள். திருக்குறளை எள்ளி நகையாடியவரை "தந்தை" என்ற அடைமொழியோடும், "கம்ப ரசமா அல்லது காம ரசமா" என்று குதர்க்கம் செய்தவரை "பேரறிஞர்' என்றும், சினிமா வசனகர்த்தாவை "முத்தமிழ் அறிஞர்' என்றும் (80 கோடி செலவில் கடல் நடுவே பேனா வேறு) கொண்டாடுவர்.
Deleteவாட்சப்பில் உவெசா அவர்களின் பிறந்தநாள் பற்றியவைகளைப் படித்தபோது, எங்க கீசா மேடம் எழுதக் காணோமே என்று நினைத்தேன். சரி... முடியவில்லை போலிருக்கு என்று நினைத்துக்கொண்டேன்.
ReplyDeleteஇப்போ பார்த்தால் ஒரு பதிவு எழுதியிருக்கீங்க.
இவர் மாத்திரம் பிராமண குலத்தில் பிறக்காமலிருந்தால், அரசு என்ன என்ன சிறப்புகள் இவருக்குச் செய்திருக்கும் என்று யோசிக்கிறேன். இவர் வாழ்வில், அனேகமாக பிராமணர்கள் அல்லாதோர் பலர் இவருக்கு எத்தனையோ உதவிகள் செய்து இவர் வளர உதவியிருக்கின்றனர். அந்தக் காலம் போல் இனி வரவே வராது.
தாத்தாவை வெகு சிலரே இந்நாளில் நினைவுகூர்கிறார்கள். அவர்களின் மனமாச்சர்யங்கள் காரணம். நீங்கள் விடாமல் இந் நாட்களில் பதிவிடுவது சிறப்பு.
ReplyDelete