இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் படங்களைப் பார்க்க வாய்ப்பு இருந்தும் அவ்வளவு மனம் ஒன்றவில்லை.முன்னால் இரண்டு படங்கள் பார்த்துட்டு எழுதி இருந்தேன். அதற்குப் பின்னர் கொஞ்ச நாட்கள் படங்களே பார்க்கும் ஆவல் வரலை. திடீர்னு ஒரு நாள் ஒவ்வொரு படங்களைப் பற்றியும் படிக்கையில் இந்த யூ டர்ன் படம் கண்ணில் பட்டது. சரினு பார்க்க ஆரம்பித்தேன். விறுவிறுப்பான படம் தான். நடிகர்கள் யாரும் யாரெனத் தெரியலை. முற்றிலும் புதிய நடிகர்கள். ஆனாலும் நடிப்பும், கதையும், காட்சிகளும் ஒன்றோடு ஒன்று ஒன்றிப்போய்ப் பார்க்க வைத்தது. அப்படியும் 2,3 நாட்களாகத் தான் கொஞ்சம் கொஞ்சமாகப் பார்த்து முடித்தேன். குறிப்பிட்டதொரு தேசிய நெடுஞ்சாலையில் ஓர் இடத்தில் பாலத்துக்கு மேலே யூ டர்ன் எடுக்கவே கூடாத இடத்தில் இரு சக்கர, நாலு சக்கர வாகனப் பயணிகள் அங்கே போட்டிருக்கும் கான்க்ரீட் பாறைகளை நகர்த்தி விட்டு வழி உண்டாக்கிக் கொண்டு யூ டர்ன் எடுத்துச் செல்கின்றனர். அப்படிச் செல்கின்றவர்கள் ஒவ்வொருவராக அன்றே இறக்கின்றனர்.
பத்திரிகையாளராக இருக்கும் ராதிகா பக்க்ஷிக்கு இதைக் குறித்து ஆய்வு செய்ய ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது. சாலைப் பயணங்களில் நடைபெறும் விபத்துக்களையும் அதோடு கூடவே ஆய்வு செய்கிறாள். அப்போது இந்த யூ டர்ன் பற்றித் தெரிய வந்ததும் அது குறித்த தேடலில் மும்முரமாய் இறங்குகிறாள்விசித்திரமான சம்பவங்கள் மட்டுமின்றி போலீஸ் ஆய்வாளர் அர்ஜுன் ராதிகாவே இவற்றுக்குக் காரணமாய் இருப்பாளோ என சந்தேகப்படுகிறார். கடைசியில் உண்மையை ராதிகாவும் அர்ஜுனுமாகச் சேர்ந்து பேசுகையில் இருவருக்குமே புரிய வருகிறது. நம்பவே முடியாத உண்மை. மிச்சத்தை இணையத் திரையில் காணுங்கள்.
அதுக்கப்புறமாப் பார்த்தப்போ "கோஸ்டி" நன்றாக இருக்குமெனப் போட்டிருந்தாங்க. காஜல் அகர்வால் தான் கதாநாயகி. காஜல் அகர்வால் குழந்தையாய் இருந்தப்போ ஐபிஎஸ் அதிகாரியாய் இருந்த அவர் தந்தை ஒருபோக்கிரிகள் கோஷ்டித்தலைவனைப் பிடித்து வந்து சிறையில் அடைத்துத் தண்டனையும் வாங்கிக் கொடுக்கிறார். ஆனால் காஜல் அகர்வாலின் தந்தை இறக்க அதன் உண்மையான காரணத்தைக் கண்டுபிடித்துப் பழி வாங்கணும்னு நினைச்சு அவரும் ஒரு போலீஸ் அதிகாரியாக ஆகிறார். இந்த வழக்கை எடுத்துக் கொண்டு ஆய்வுகளைத் தொடர்கிறார். ஆனால் இவரை ஒரு தீவிரமான போலீஸ் அதிகாரியாகக் காண முடியாமல் காமெடி என்னும் பெயரில் சொதப்பி இருக்காங்க. படம் ஹிந்தியில் இருக்குமோனூ பார்த்தால் கிடைக்கலை. தமிழில் தான் பார்க்க வேண்டி வந்தது. அறுவைனா அறுவை அம்புட்டு அறுவை. பேய், பிசாசுங்க எல்லாம் வந்தாலும் திகிலாக எல்லாம் இல்லை. தலையில் அடிச்சுக்கத் தான் தோன்றியது. இதில் தேவ தர்ஷினியைப் போட்டு வீணடித்திருக்கிறார்கள். யாரோ யோகி பாபுவாம். முதலில் உயிரோடு வந்து விட்டுப் பிறகு பேய், பிசாசாக வருகின்றனர். காமெடி என்னும் பெயரில் இது ஒரு கொடுமை. படத்தை அதற்கு மேல் பார்க்கப் பிடிக்கலை என்பதால் விட்டுட்டேன். காஜல் அகர்வாலும் ஒரு போலீஸ் அதிகாரிக்குரிய கம்பீரமோ, தீவிரமான மனப்பான்மையோ இல்லாமல் அச்சுப்பிச்சென்று நடித்திருக்கார். அவரோடு கூட ஊர்வசியும், இன்னொருத்தரும். மூன்று பேரும் காமெடி என்னும் பெயரில் அறுவை போடுகின்றனர்.
விடுதலை, பத்துத்தல, அயலி, அயோத்தி, ருத்ரன் எனப் பல தமிழ்ப்படங்கள் இருந்தாலும் பார்க்கத் தோன்றவில்லை. எப்படி இருக்குமோனு ஒரு பயம். அயோத்தி பற்றி நிறைய விமரிசனங்கள் வந்தன. பார்க்க வேண்டாம்னு முடிவெடுத்துட்டேன்.
***********************************************
நேற்றுப் பல மாதங்களுக்குப் பின்னர் வெளியே ஒரு பூணூல் கல்யாணத்துக்குப் போனோம். ஆத்து வாத்தியார் பிள்ளைக்குப் பூணூல். குழந்தைக்கு ஏழு வயது தான் இருக்கலாம். மழலை மாறவில்லை. மொட்டை அடித்துக்கொண்டு பூணூல் போட்டுக்க வந்தபபோத் தூக்கி எடுத்துக் கொஞ்சத் தான் தோன்றியது. அந்தச் சத்திரத்துக்குள் போக எக்கச்சக்கமான படிகள். வாசல் படிகளில் ஏறும்போதே ஒரு இடத்தில் படி உடைந்து அதைக் கவனிக்காமல் ஏறிச் சறுக்கிக் கொண்டு போய்ப் பக்கத்துக் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு சாய்ந்து விட்டேன். அதில் நடு நெஞ்சில் நல்ல அடி பட்டுப் படுக்கவோ, உட்காரவோ முடியலை. இரும முடியலை.வலிக்கு எண்ணெய் தேய்த்துக் கொண்டு இருக்கேன். அதன் பிறகு பூணூல் நடக்கும் மண்டபம் போக ஒரு பத்துப் படிகள். அங்கிருந்து சாப்பிடும் இடம் போக ஐந்தாறு படிகள். எல்லாமாகச் சேர்ந்து கசரத் வாங்கியதில் முடியலை. சாப்பாடு வேறே சரியில்லை.
மெனு என்னமோ நல்ல மெனு தான்.பால் பாயசம், தயிர்ப்பச்சடி, இனிப்புப் பச்சடி, உ.கி.பொடிமாஸ், அவரைக்காய்க் கறி, பூஷணிக்காய்க் கூட்டு,மாங்காய் ஊறுகாய், வடை, பதிர்பேணி, புளியோதரை, வறுவலுக்குப் பதிலாக மிக்சர், கதம்ப சாம்பார், ரசம்,மோர். பறிமாறினவங்க யாருக்கும் பரிமாறவே தெரியலை. சாம்பாரை முடிச்சுட்டு ரசத்துக்கு மணிக்கணக்கா உட்கார்ந்திருந்தேன். ரசம் ஊற்றுபவர் அந்த வழியாகவே நாலைந்து தடவைகள் போய் வந்தும்,எனக்கு ரசம் ஊற்றவே இல்லை. பின்னர் கத்தினத்துக்கப்புறமா வந்து அரைக்கரண்டி ரசத்தை ஊத்திட்டு அந்தப்பக்கம் பரிமாறுபவர்களோடு மும்முரமாய்ப் பேச ஆரம்பிச்சுட்டார். வந்த கோபத்துக்கு எழுந்துடலாம்னு தோணியது. ஆனால் இந்தப்பக்கம் நாலு பேர், அந்தப்பக்கம் நாலு பேர்னு எழுந்துக்க முடியாத நிலைமை. சாப்பிட்டோம்னு பேர் பண்ணினேன்.சாப்பாடு வயித்துக்கும் ஒத்துக்காமல் ஒரே தொந்திரவு. மிளகு ரசம் வைச்சுச் சாப்பிட்டதும் கொஞ்சம் பரவாயில்லை. நம்ம ரங்க்ஸுக்குக் கூட்டிப் போகவே இஷ்டமில்லை. வராதேனு சொன்னேனே என்று சொல்லிக் கொண்டே இருந்தார். :(
யு டர்ன் ரொம்பப் பழைய படம். பரவாயில்லை, நன்றாகவே இருக்கும். காஜல் அகர்வால் படம் பயங்கர போர். நானும் பார்த்தேன்.
ReplyDelete@ஸ்ரீராம்! கன்னடத்தில் சில ஆண்டுகள் முன்னர் வந்ததாய்ச் சொன்னார்கள். கிட்டத்தட்ட அதே கதை தான். நடிக, நடிகையர் தயாரிப்பு மட்டும் வேறே. இதுவும் விறுவிறுப்பாக இருந்ததால் பரவாயில்லை ரகம்.
Deleteஎனக்கும் பத்துதல, விடுதலை போன்ற படங்கள் பார்க்க பிடிக்கவில்லை. நேற்று ஒரு தெலுங்கு ஹாரர் படம் ஆரம்பித்து பாதியில் நிற்கிறது!
ReplyDeleteஎனக்கும் ஆர்.ஆர்.ஆர்., அகிலன், ஊஞ்சாயி, போன்ற படங்கள் பாதியிலேயே நிற்கின்றன. திருச்சிற்றம்பலம், வாத்தி கூடக் கிடைத்தாலும் பார்க்க யோசனை.
Deleteபோன இடம் சரியில்லை, படிசரியில்லை, சாப்பாடு சரியில்லை, பரிமாறியது சரியில்லை... எத்தனை சரியில்லைகள்!
ReplyDeleteசில சமயங்களில் சில நாட்கள் அப்படிப் படுத்தி எடுக்கும். முன்னெல்லாம் செவ்வாய்க்கிழமைகளில் தொடர்ந்து பிரச்னைகள் வரும். இப்போ புதன் கிழமை. போன வாரம் மே 17 ஆம் தேதியன்று காலை எழுந்துக்கும்போதே தண்ணீர் வரலை. யாருமே புகாரும் கொடுக்கலை. ஒருத்தருமே எழுந்துக்க மாட்டாங்க போல. நாங்க தான் செக்யூரிடியிடம் சொல்லி மோட்டார் போட வைச்சோம். முன்னெல்லாம் ஆட்டோ பம்பிங். யாரும் போட வேண்டாம். இப்போ அதை எடுத்துட்டாங்க போல! அடிக்கடி பிரச்னை. பின்னர் வரும் தண்ணீர் ஒரே கறுப்பாக, அழுக்காக வரும். அதைச் சுத்தம் செய்து நல்ல நீர் வரும்வரை எல்லாக்குழாயையும் திறந்து வேறே வைக்கணும். :(
Deleteயு டர்ன் என்றதுமே ஆஹா நாம பார்க்க நினைச்ச படமாச்சே என்று கதையை வாசிக்கவில்லை. நீங்கள் முழுவதும் சொல்லிடுவீங்க. அது சஸ்பென்ஸ் படம் எனப்தால் வாசிக்கவில்லை...!!!!!!!!
ReplyDeleteகீதா
முழுசாய்ச் சொல்லலை. முடிவையும் சொல்லலை.
Deleteஅட! ராமா.....இப்ப எப்படி இருக்கு வலி? கீதாக்கா.
ReplyDeleteஇப்போடு சாப்பாட்டினால் ஏற்பட்ட பிரச்சனை தேவலமா?
கீதா
வயிறு மிளகு ரசம் பண்ணிச் சாப்பிட்டதும் சரியாச்சு. வலி இன்னமும் இருக்கத்தான் செய்கிறது. இரும/தும்ம, விக்கல் வந்தால் விக்க முடியலை. :( படுத்தால் திரும்பிப் படுக்கவும் கஷ்டமாக இருக்கு.
Deleteகீசாக்கா இது எப்போ தொடக்கமாக்கும் பட ரிவியூவும் பண்ணத்தொடங்கிட்டீங்கள் ஹா ஹா ஹா நல்ல விசயம்தான், இடைக்கிடை படமும் பார்க்கோணும். யூரேன் நல்ல மூவி, நானும் கொஞ்சக்காலம் முன் பார்த்தேன், அலுப்பில்லாமல் தொடர்ந்து பார்த்து முடிக்கும் ஆவலைத் தூண்டியது. மற்றப் படங்கள் ஏதும் பார்க்கவில்லை... இன்னும் தொடருங்கோ ரிவியூக்களை.
ReplyDeleteஅதிரடி, அத்தனை அழகாய் என்னோட பதிவுகளைப் படிக்கிறீங்க. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆரம்ப காலங்களிலும் நான் அம்பேரிக்காவில் இருந்த காலங்களிலேயும் எத்தனை படங்கள் பத்தி விமரிசனம் எழுதி இருக்கேன் தெரியுமோ?
Deleteஎன்ன கீசாக்கா இது, எங்க போனாலும் சறுக்கி விழுறதும் வழுக்கி விழுறதுமாக இருக்கிறீங்க, கவனம் பத்திரமாக இருங்கோ, ஸ்டைல் பார்த்து எதையும் பிடிக்காமல் நடக்காமல், எதையாவது அருகில் இருப்பதைப் பிடிச்சபடியே படி ஏறுங்கோ, நடவுங்கோ... மாமா திட்டியதிலும் தப்பில்லை:)) ஒயுங்கா வீட்டில இருந்திருக்கலாமெல்லோ:))..
ReplyDeleteமெனுப்பற்றிப் பேச ஒருவர் வருவார் பாருங்கோ ,அதனால நான் அதைப்பற்றிப் பேசவில்லையாக்கும்.. நான் நெ த நைச் சொல்லவில்லை...ல்லை..ல்லை..ல்லை...:)
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் படி ஏறும்போது அந்தக்கைப்பிடியைப் பிடிச்சுண்டு ஏறினதில் தான் சறுக்கிவிட்டு அந்தக் கைப்பிடியே குத்தி விட்டது. நான் ஸ்டிக் எடுத்துப் போயிருக்கணும். ஆனால் படிகளில் ஏறும்போது ஸ்டிக் சரியா பயனாவதில்லை என்பதால் எடுத்துட்டுப் போகலை.
Deleteஒரு திருமணம் விசேஷத்துக்குப் போனால், என் ப்ரையாரிட்டி டிஃபனோ இல்லை உணவோ முதலில் சாப்பிட்டுவிடுவது. இல்லையென்றால் ஆறியிருக்கும், சில ஐட்டங்கள் இருக்காது. கீசா மேடம் சொன்ன மெனுவில், பால்பாயசம் என்பதை எல்லோரும் வெறும் பாலைச் சுட வைத்து ஜீனி போட்டு, பண்ணிய சாதத்தில் கொஞ்சம்போல் எடுத்துக் கலந்தால் சரி என்று நினைக்கிறார்கள் என்பதால் விசேஷத்தில் எனக்குப் பால்பாயசம் பிடிப்பதில்லை (அதிரா... மறக்காமல் குருவாயூர் போகும்போது, அங்கு கோவிலில் பிரசாதமாக விற்கும் பால்பாயசம் வாங்கிச்சாப்பிட மறக்காதீர்கள். மிக அருமையா இருக்கும், கொஞ்சம் அடிபிடித்த வாசனையோடு. கோவிலுக்குள்ளேயே பிரகாரத்தில் அதனை விறகடுப்பில், 10 அடி குறுக்களவுள்ள அண்டாவில் தயாரிப்பதைக் காணலாம்). பதிர்பேணி, நன்றாகத் தயாரிக்கப்படுவதில்லை. ஏதோ கடைகளில் வாங்கிக்கொண்டு வந்து அதில் சூடான பால் மற்றும் ஜீனிப் பொடியைப் போட்டால், பதிர்பேணி என்று கதை பண்ணுகிறார்கள். இதுவும் எனக்குப் பிடிப்பதில்லை.
Deleteஅதுசரி அதிரா... சாம்பார் போட்ட உடனேயே கடகடவெனச் சாப்பிட்டுட்டு அடுத்து ரசம் வரும்போது தயாரா இருக்கணும். அதைவிட்டுவிட்டு, கீசா மேடம், pause பண்ணி pause பண்ணி படம் பார்ப்பதுபோல மெதுவா ஒண்ணொண்ணா ருசி பார்த்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தால், சாம்பார் சாதம் கீசா மேடம் சாப்பிட ஆரம்பிப்பதற்குள் மற்றவர்களுக்கு ரசம் விட்டுவிட்டுப் போயிருப்பார். அவங்க மோர் பறிமாறும் நேரத்தில், எங்கே ரசம் எங்கே ரசம் என்று பாட்டுப் பாடிக்கொண்டிருந்தால், அவர்களும்தான் என்ன செய்வார்கள்? ஹா ஹா ஹா
Deleteநெல்லை, எங்க வீட்டுக்கு வாங்க, நல்ல சுவையான பால் பாயசம்பண்ணி வைக்கிறேன். இங்கே பூணூல் கல்யாணத்திலும் நன்றாகவே இருந்தது. நாங்க முஹூர்த்தம் லேட் என்பதால் (அபிஜித் முஹூர்த்தம்) ஒன்பது மணிக்கு மேல் தான் கிளம்பிப் போனோம்.டிஃபனை எதிர்பார்க்கவே இல்லை. சாப்பாடும் முதல் பந்தியில் தான் சாப்பிட்டோம். நானெல்லாம் சாம்பார் சாதம் என்றால் சாதத்தில் சாம்பாரை விட்டுப் பிசைந்து எல்லாம் சாப்பிட மாட்டேன். பிசைந்த பருப்புச் சாதத்தில் கொஞ்சமாக ஒதுக்கிக் கொண்டு அரைக்கரண்டி சாம்பார் தான் விட்டுப்பேன். தொட்டுக் கொண்டு தான் சாப்பிடுவேன். ஆகவே ரொம்பவே மெதுவாக எல்லாம் சாப்பிடலை. எல்லோரும் அடுத்து மோர்க்குழம்புனு சாப்பிடும்போது நான் ரசம் கேட்டதால் உட்கார்ந்திருந்தேன். ஆனால் அதுக்காக அந்த மனுஷன் சுமார் பத்து நிமிஷம் உட்கார்த்தி வைச்சுட்டார். ஒழுங்காய்ப் பரிமாறவே தெரியலை. சொல்லவும் சொல்லிட்டேன்.பதிர்பேணி எல்லாம் அங்கேயே சமையலறையில் தயார் செய்து வைத்திருந்தார்கள்.
Deleteயூ டர்ன் படம் பார்த்து விட்டேன் நானும் பார்த்து பல மாதங்கள் ஆகிறது.
ReplyDeleteபூணூல் கல்யாணத்திற்கு போய் கீழே விழுந்து விட்டீர்களா? இப்படியா உடைந்த படையை சரி செய்யாமல் வைத்து இருப்பார்கள்? இப்போது எப்படி இருக்கிறது வலி? நெஞ்சில் அடி பட்டு இருக்கிறது என்று சொல்கிறீர்கள் மருத்துவரிடம் போக வில்லையா?
உடம்பை பார்த்து கொள்ளுங்கள். விரைவில் நலம்பெற பிரார்த்தனைகள்.
வாங்க கோமதி. பொதுவாக நான்கு வீதிகளுக்குள் இருக்கும் சத்திரங்களே சுமாராகத் தான் இருக்கும். இது கீழச் சித்திரை வீதியில் இருந்த ஒரு பழங்காலத்து வீடு. அங்கே எல்லாம் வீடுகளில் படிக்கட்டுகள் ஏறித்தானே போயாகணும். வலி கொஞ்சம் பரவாயில்லை. மருத்துவரிடம் போகலை. தசை வலி தான் என நம்புகிறேன். பார்ப்போம்.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteஇப்போது தங்கள் உடல்நலம் எப்படி உள்ளது? படிகளில் ஏறும் போது கவனமாகத்தான் ஏற வேண்டும். ஆனால் படியே சரியில்மல் நமக்கென்று இப்படி அமைய வேண்டுமா? உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள். வலி குறையும் வரை மிக கடினமான வேலைகளை செய்ய வேண்டாம். பதிவில் நீங்கள் எழுதியதை படிக்கும் போது மனதுக்கு மிகவும் கஸ்டமாக இருந்தது.
நானும் அப்படித்தான்..! எங்காவது வெளியில் அதிசயமாக செல்லும் போது கீழே விழுந்து விட்டு வந்து விடுகிறேன். அது ஒருமாத கணக்கில் படுத்தி எடுக்கிறது. கீழே விழுந்து வலியுடன் உள்ளோமே என நமக்கென்று உள்ள கடமைகளை செய்யாமலும் இருக்க இயலவில்லை. உங்கள் உடல் நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் கூறிய யூ டர்ன் படம் நானும் முன்பு பார்த்துள்ளேன். திகிலாக இருக்கும். ஆனால் எந்த படங்களும் பார்க்க மனதில் தோன்றுவதில்லை. இப்போது ஒரு படம் (சொப்பன சுந்தரி) ஏதோ ஜோக்காக உள்ளதென்று குழந்தைகள் கூறவே அதை ஐபேடில் பார்த்தேன். சுமாராக இருந்தது. பொ. செ 2 வந்தால் பார்க்கலாமென்று நினைத்துள்ளேன். உங்கள் உடல் வலி பூரணமாக குணமடைய இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.
அன்புடன்
கமலா ஹரிஹரன்.
நானும் சுமார் ஒரு வருஷம் கழித்து வெளியே தலை காட்டினேன். இடையில் மருத்துவரிடம் போனதைத் தவிர்த்து. முன்னால் ஏறிக் கொண்டிருந்தாங்க. ஆகவே அந்தப் படி உடைஞ்சிருப்பதைப் பார்க்க முடியலை. இரண்டு நாட்களாக நல்ல வலி. இப்போத் தான் மாத்திரைகளும் ஆயின்ட்மென்டும் வாங்கி வந்தார். சாப்பிட்டிருக்கேன். இனி பார்க்கணும். வெறும் தசை வலி தான். முன்னாடி யூ டர்ன் எனப் படம் வந்ததே தெரியாது. இதைப் பார்க்கும்போது தான் விக்கி பீடியாவில் போட்டிருந்ததைப் பார்த்தேன்.
Deleteநேரம் சரியில்லை என்றால், ரொம்பவே கவனமாக இருக்க வேண்டாமா?
ReplyDeleteஏறும்போதே படியில் தடுக்கி விழுந்து அடி பட்டுக்கொண்டு, அந்த ரணகளத்திலும் மெனுவை விவரிக்கிறீர்களே..
விழுந்தது விழுந்தாச்சு. அடியும் பட்டுக் கொண்டாச்சு. அடுத்தது என்ன? வந்த காரியத்தைப் பார்த்துக் கொண்டு வீட்டுக்குப் போய்த் தானே என்னனு பார்க்க முடியும். புலம்பிண்டா இருக்க முடியும்? இஃகி,இஃகி,இஃகி!
Deleteஇப்போது சரியாகிவிட்டதா? கொஞ்சம் கவனமாக இருந்துகொள்ளுங்கள். இதற்கு வீட்டிலேயே இருந்திருக்கலாம். போரடிக்கிறது என்று சென்றிருப்பீர்கள்.
ReplyDeleteநெல்லை, சொந்தக்காரங்க வீட்டுக் கல்யாணம், பூணூல், கிரஹப்ரவேசம் எனப் பல விசேஷங்களைப் போக முடியாமல் தவிர்த்து வந்திருக்கேன். இது உள்ளூர் தானேனு நினைச்சேன். மாமாவும் சந்தேகமாகவே கேட்டார். நீ வரப்போறியானு! வரப் போறேன்னு சொல்லிட்டுப் போனேன். ம்ஹூம்! எல்லாம் நேரம்! வலிக்கு இன்னிக்குத் தான் மாத்திரை சாப்பிட்டிருக்கேன்.
Deleteஎந்த விசேஷத்துக்கும், ஆற அமர சாப்பிடச் செல்லக்கூடாது. இது பால பாடம். இதையெல்லாம் மறந்துவிட்டீர்களா?
ReplyDeleteமுதல் வரிசையில் அமர்ந்துவிட்டால் (முதல் பந்தியில்), எல்லா ஐட்டங்களும் வரும். பிறகு இருப்பதைப் பொறுத்து வரமாட்டாங்க, கேட்காத மாதிரி இருப்பாங்க. இதெல்லாம் உங்களுக்குத் தெரியாதா?
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், முதல் பந்தி தான். நாங்க முஹூர்த்தம் லேட் என்பதால் தாமதமாய்ப் போனோம். எங்களுக்குப் பின்னர் பலர் வந்தனர். சாப்பாட்டுக் கூடம் செல்லப் படிகள். அவங்கல்லாம் ஏறிடுவாங்க. நான் ஏற வேண்டாமா? பொதுவாகவே நான் இம்மாதிரிப் பொது விசேஷங்களுக்குப் போனால் முண்டி அடித்துக் கொண்டு போக மாட்டேன். நிதானமாய்த் தான் போவோம். ஜெயேந்திர ஸ்வாமிகள் எங்களை எல்லாம் கூப்பிட்டுக் கயிலைப் பயணம் சென்று வந்ததுக்கு விருதுகள் கொடுத்துக் கௌரவித்தப்போ அங்கேயும் எல்லோருக்கும் சாப்பாடு இருந்தது. ஆனால் முண்டி அடித்துக்கொண்டும், சண்டை போட்டுக் கொண்டும் பலர் உள் சென்றனர். நாங்க சிறிது நேரம் நின்று பார்த்துட்டு இன்னும் கூட்டம் அடுத்த பந்திக்கு இப்போவே இடம் போடச் சென்றதைப் பார்த்ததும் பேசாமல் நடையைக் கட்டினோம். பக்கத்தில் பாலாஜி பவனில் சாப்பாடு சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குப் போனோம்.
Deleteஉடைந்த படியை
ReplyDeleteபுரிஞ்சது கோமதி.
Deleteஎப்படியோ படம் பார்த்து விமர்சனம் எழுதி இந்த படங்கள் உங்களால் வெற்றி பெறட்டும்.
ReplyDeleteஎனது தளத்தில் கோயில் விஷேசம் காண வாருங்கள்.
முன்னாடியே பார்த்தேன். படிச்சேன். கருத்துச் சொல்லத் தான் தாமதம். நேற்று வந்து சொல்லிட்டேன்.
Deleteஇப்போது நலமா?
ReplyDeleteஎனக்கும் படங்கள் பார்க்க அவ்வளவாக பிடிப்பதில்லை. மிஸிஸ் சட்டர்ஸி பார்த்தேன். உண்மை சம்பவத்தை வைத்து எடுத்த படம் . பிடித்திருந்தது.
மிஸஸ் சட்டர்ஜி பழைய படம் இல்லையோ? நானும் பார்த்திருக்கேன்.
Deleteஎங்கேயாவது போனால் கீழே விழுந்து வாராமல் வருவதில்லை என்று சங்கல்பமா? ஜாக்கிரதை! நீங்கள் விவரித்திருப்பதை பார்த்தால் உங்கள் குடியிருப்புக்கு எதிரே இருக்கும் மண்டபமோ என்று தோன்றுகிறது. அங்குதான் ஏகப்பட்ட படிகள் இருக்கும். இப்போதெல்லாம் காடரிங் ஆட்கள் பரிமாற யாரையோ பிடித்துக் கொண்டு வருகிறார்கள். அவர்கள் முறையான பரிசாககர்கள் கிடையாது, அதனால் பறிமாறத் தெரிவதில்லை. எனக்கும் பத்து தலை பார்க்க தைரியம் இல்லை. அயோத்தி .டி.வி.யில் போட்ட பொழுது பார்த்தேன். ஸ்ரீராம் அளவுக்கு நெகிழவில்லை என்றாலும் படம் பிடித்திருந்தது. அயிலி வெப் சீரீஸ் நன்றாக இருந்தது.
ReplyDeleteவாங்க பானுமதி. ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க. இப்போ சமீபத்தில் எங்கேயும் போகலை. அதனால் விழவே இல்லையே! இது கொஞ்சம் அஜாக்கிரதையால் நடந்தது. சத்திரம் எங்க வீட்டுக்கு எதிரே/பக்கத்தில் இருப்பதெல்லாம் ரொம்பவே லேட்டஸ்ட். நாங்க பூணூலுக்குப் போன சத்திரம் கீழச்சித்திரை வீதியில் ஒரு வீடு, சத்திரமாக மாற்றப் பட்டது. கோமதிக்கு எழுதின பதிலில் கூடச் சொல்லி இருப்பேனே! பரிமாற ஆட்களா அது? கஷ்டம்! என்னைக் கேட்டால் இந்தச் சாப்பாட்டையே நிறுத்திடலாம்னு நினைக்கிறேன்.
Delete