இன்னிக்குச் சோதனைக்குக் கொடுத்திருக்கேன். என்ன முடிவு வரப் போகுதோ தெரியலை. கீழே விழுந்ததில் ஏற்பட்ட வலி கணிசமாகக் குறைந்து விட்டது. இப்போக் கொஞ்சம் இல்லை நிறையப் பரவாயில்லை. போன வாரமே விழுந்த அன்னிக்கேக் காட்டிட்டு வாங்கிச் சாப்பிட்டிருக்கலாம். தசை வலி தானே சரியாயிடும்னு நினைச்சு நாட்களை வீணாக்கிட்டேன். :( நாட்டில் ஆங்காங்கே நடக்கும் விஷயங்கள் திகிலை ஏற்படுத்துகிறது. ஏற்கெனவே நேர்மையான அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டிருக்கார். அது தொடர்பான விசாரணகள் நடந்து முடியும் முன்னரே அடுத்தடுத்து இந்த அதிகாரிகள், வி.ஏ.ஓ. போன்றோருக்கு உயிருக்கு ஆபத்தான தாக்குதல்கள். அரசு அதிகாரிகளாகப் பணி புரிவோர்க்கு எந்நேரமும் ஆபத்துத் தான் காத்திருக்கிறது. அதிலும் நேர்மையான அதிகாரிகள்னால் கேட்கவே வேண்டாம். பதவியில் இருப்பவர்கள் கண்டும் காணாமல் இருக்க வேண்டி உள்ளது. திருடனாகப் பார்த்துத் திருந்தினால் தான் உண்டு.
இன்னிக்கு அக்னி நக்ஷத்திர முடிவு நாள். வெயில் என்னமோ கொளுத்துகிறது. காற்று ஆரம்பித்தாலும் அவ்வளவு மும்முரமாய் இல்லை. பருவக்காற்று இன்னமும் சுறுசுறுப்பாகத் தன் ஆட்டத்தை ஆரம்பிக்கலை. ஏசியைப் பகலில் எல்லாம் வைச்சுக்கறதில்லை. அப்புறமா அந்த அறையிலிருந்து வெளியே வரும்போது வெளிச்சூடு தாக்கிவிடும் என்பதால் இரவில் மட்டும் தான் ஏசி. அதையுமே விடிகாலையில் மூன்று மணி போல் அணைச்சுடுவோம். எழுந்திருப்பதற்குள்ளாக உடல் வெளியே உள்ள வெப்ப நிலைக்குப் பழகணுமே! 22 டிகிரியில் வைச்சுட்டு இருந்தோம். அப்புறமா அணைச்சுட்டு மின் விசிறியைப் போட்டால் வியர்க்க ஆரம்பிக்கிறது. ஆகவே இப்போ 24 டிகிரிக்கு வைச்சுட்டுக் கூடவே மின் விசிறியையும் போட்டுக்கறோம். அறை முழுவது நல்ல சில்லென்ற காற்று. காலம்பர அணைச்சாலும் எதுவும் தெரியலை. இதிலே மின்சாரம் வேறே மிச்சம் ஆகும் என்கின்றனர். பார்ப்போம்.
என்னோட சித்தி பையர் சத்யாவில் ஏசி வாங்கி இருக்கார். இன்ஸ்டாலேஷன் சார்ஜஸ் 850 ரூபாயோ என்னமோ சொன்னாங்களாம். வீட்டுக்கு வந்து ஏசியைப் பொருத்தும்போது அது இதுனு சொல்லிக் கடைசியில் கிட்டத்தட்ட 2000 ரூபாய்க்குக் கொஞ்சம் கீழே ஆகி இருக்கு! சேவையும் ரொம்பவே சுமார் என்கிறார். இதனாலேயே நாங்க இந்த ஆஃபர் கொடுக்கும் கடைகளுக்கே செல்லுவதில்லை. நேரடியாக எல்ஜியைத் தொடர்பு கொண்டே இரண்டு ஏசிக்களையும் வாங்கினோம். பதிவாக ஒருத்தர் வந்து எப்போதும் வேலைகளைச் செய்து கொடுப்பார். வேறே யாரையும் கூப்பிடறதில்லை.
செங்கோல் பற்றிப் பலரும் பலது சொல்கின்றார்கள். உண்மையில் இது 1947 ஆம் ஆண்டில் இந்திய சுதந்திர தினத்தன்று திருவாவடுதுறை ஆதீனம் அவர்களால் நேருவுக்குப் பரிசாக வழங்கப்பட்டது. இதை நேரு அலஹாபாதில் ஆனந்த பவனத்தில் உள்ள காட்சிப் பொருட்களோடு வைத்திருந்ததாய்க் கேள்வி. மவுன்ட்பேட்டனிடம் யாரும் கொடுக்கவும் இல்லை. பின்னர் அவர் நேருவிடம் கொடுக்கவும் இல்லை. அப்படி நடந்ததாக ஒரு சலவைக்கல்வெட்டு வாட்சப்பில் திருவாவடுதுறை ஆதீனத்தின் பெயரால் சுற்றுகிறது. எது உண்மை என்பது அந்தச் சமயம் இருந்தவங்களுக்குத் தான் தெரியும்.
பிரதமர் தலைமை வகித்துப் பங்கேற்கும் விழாக்களுக்கு ஜனாதிபதியை அழைப்பது மரபு/சம்பிரதாயம் இல்லை. ஏனெனில் ஜனாதிபதி பிரதமரை விட உயர்ந்த பதவி. முதல் குடிமகன். ஜனாதிபதி பார்லிமென்ட் திற ப்பு விழாவுக்குப் பங்கேற்கச் செல்லாததில் எந்தவிதமான அரசியல் காரணங்களும் இல்லை. பார்லிமென்டில் குறிப்பிட்ட சில சமயங்கள் மட்டுமே ஜனாதிபதி கலந்து கொள்வார். அதன் முறை/சம்பிரதாயமும் கூட. இந்தக் காரணங்களால் தான் அவரை அழைக்கவில்லை என்றாலும் அவரின் வாழ்த்துச் செய்தி அரசுக்கு வந்துள்ளது.
முன்னர் இப்போதைய முதலமைச்சரின் தந்தை முதலமைச்சராக இருந்தப்போ அவருக்கும் செங்கோல் வழங்கப்பட்டது எத்தனை பேருக்கு நினைவில் இருக்கு? அதற்கு இப்போது சொல்லும் சப்பைக்கட்டு அது கட்சிப் பணத்தில் இருந்து வாங்கியதாம். இது அப்படி இல்லையாம்? கட்சிக்கு ஏது பணம்? கட்சித்தொண்டர்களான பொதுமக்களிடம் வசூலித்தது தானே? அது கொடுக்கலாம். இது வலிந்து ஓர் ஆதீனத்தால் எழுபது வருடங்கள் முன்னரே அப்போதைய பிரதமருக்குப் பரிசாகக் கொடுக்கப்பட்டது இப்போது மீட்கப்பட்டுப் பொதுவில் உள்ள சொத்துக்களில் ஒன்றாக ஓர் நினைவுச் சின்னமாக வைக்கப்பட்டுள்ளது. எது சரி? இது மதவாதமாம்! எல்லா மதத்தினரையும் அரவணைத்துச் செல்லுவதே உண்மையான மதச் சார்பின்மை. ஆனால் இங்கேயோ சநாதன தர்மத்தை அழிப்பேன் என்று சொன்னால் மதச் சார்பின்மை. சநாதனத்தைக் கொண்டாடினால் மதவெறி! என்னவோ போங்க! ஒண்ணுமே புரியலை, உலகத்திலே!
ராஜராஜ சோழன் சிவபாத சேகரனாகத் தான் கடைசிவரை வாழ்ந்தான். தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டினான். அதற்காக யாரும் அவனுக்கு மதவெறி என்று சொன்னதாகத் தெரியலை. ஜைன, பௌத்த மடங்களுக்கும், மற்ற மதங்களுக்கும் உரிய மரியாதையையும் கொடுத்து வந்தான். தில்லை வாழ் அந்தணர்கள் தான் சோழ அரசனுக்குப் பட்டம் கட்டும் உரிமையைப் பெற்றிருந்தார்கள். ஸ்ரீரங்கம் கோயிலுக்கும் வேறுபாடுகள் பார்க்காமல் திருப்பணிகள் செய்து வந்தனர் சோழ அரசர்களும், மற்ற அரசர்களும். உண்மையான மதச் சார்பின்மை என்பது முன் காலத்தில் இருந்தது. இப்போது சுயநலம் பிடித்தவர்களால் ஆளப்படும் நாட்டில் மதச்சார்பின்மை என்பது பொருளற்றுப் போய்விட்டது.
நான் இன்னும் பசங்க ரூமுக்கு ஏசி போடலை. முதலிலேயே போட்டிருக்கணும். கடந்த 2 1/2 மாதங்கள் வெக்கையாக இருக்கு. அதனால் நான் அதிகாலையிலேயே நடைப்பயிற்சிக்குப் போய்விடுகிறேன். வெயில் வந்த பிறகு நடந்தால் சோர்வு அதிகமாகிறது
ReplyDeleteநாங்க வடக்குப் பார்த்த ஜன்னல் இருக்கும் கம்ப்யூட்டர் ரூமுக்குத் தான் போடலை. போட வேண்டாம்னு எண்ணம். அந்த ஜன்னல் வழியே பருவக்காற்று சமயங்களில் இயற்கைக்காற்று பிய்ச்சுக்கும். குளிர்நாட்களில் நல்ல குளிர் தெரியும்.
Deleteசெங்கோல் பற்றி ஏகப்பட்ட வாட்சப் செய்திகள், படங்கள்னு பார்த்தாச்சு. எதிர்கட்சிகள் இதில் வெற்று அரசியல் செய்கின்றனர். ராகுலை உள்ளே கூப்பிடமாட்டார்கள். சோனியாவிற்கு 3வது வரிசையில்தான் இடம். அதனால தன்னோட கட்சியை கலந்துகொள்ளவேண்டாம்னு சொல்லிட்டாங்க. இழவு வீட்டிலும் தாங்கள்தான் பிணமாக இருக்கணும் என்று நினைக்கும் கும்பலல்லவா?
ReplyDeleteஆமாம், ஆனால் உண்மை இதுதான் என எத்தனை பேருக்குத் தெரியும்? அதோடு கம்யூனிஸ்டுகள் மற்றும் காங்கிரஸுக்குச் சொந்தமான கட்டிடங்களில் கோடிக்கணக்கில் வாடகை கொடுத்துக் கொண்டிருக்கும் அரசு அலுவலகங்கள் எல்லாம் இந்தப் புதுக்கட்டிடத்துக்கு வந்துவிடும். வாடகை மிச்சம். இந்தப் புதுக்கட்டிடம் கட்ட ஆன செலவுக்கு ஈடாகி விடுமே! இதெல்லாம் எப்படிப் பொறுப்பாங்க?
Deleteகீதாக்கா எல்லாம் நல்ல முடிவாகவே வரும். கவலைப்படாதீங்க.
ReplyDeleteஇப்ப வலி குறைந்திருப்பது மிக நல்ல விஷயம்
கீதா
நல்ல முடிவாக வந்திருக்கு ரெண்டு பேருக்கும். எனக்கு முக்கியமா கிரியாட்டினைன், யூரியா, யூரிக் ஆசிட் இதற்குத் தான் கவலை/பயம். போன முறை யூரிக் ஆசிட் கொஞ்சம் அதிகம். ஆனாலும் குறிப்பிடும் அளவுக்குக் கீழே தான் என்றாலும் இம்முறை குறைந்திருக்கு. கிரியாட்டினைனும் யூரியாவும் குறிப்பிட்ட அளவுக்குக் கீழேயே இருக்கு.
Deleteகீதாக்கா இனி உடனுக்குடன் நிவாரணம் ஆக்ஷன் எடுத்துருங்க. தாமதிக்காதீங்க.
ReplyDeleteஅதிகாரி கொலையான விஷயம் வாசித்தேன். என்ன நடக்குது இங்க? என்ன சொல்ல? மிகவும் வேதனையான விஷயம்.
ஆமாம் 24ல் வைச்சா மின்சாரச் செலவு குறையும் என்கிறார்கள்தான். இங்கும் இந்த வருடம் கொஞ்சம் சூடு கூடுதல்தான் ஆனால் வீட்டிற்குள் பிரச்சனை இல்லை. அது போல வெளியிலும் ஒரு சில மணி நேரங்கள் வெயில் தெரிந்தாலும் சமாளிக்க முடிகிறது.
கீதா
ஒண்ணும் கேட்காதீங்க. இன்னிக்குக் கூட தினசரிகளில் ஆர்.ஐ. மீது கொலைவெறித்தாக்குதல் எனச் செய்தி. காவல்துறையினரோ பாதுகாப்புக் கொடுப்பது அரசு அதிகாரிகளுக்கு அல்ல. பொதுமக்கள் பிடிச்சு அடைச்சு வைச்சாலும் கட்சிக்காரர் எனில் மீட்டுக் கொண்டு போய் விட்டு விடுகிறார்கள்.
Deleteஅக்கா உங்க உடல் நலனைக்கவனிச்சுக்கோங்க...அதுதான் முக்கியம்.
ReplyDeleteகீதா
நிச்சயமா/ இந்த இடிச்சுண்டதுக்கே உடனே போயிருக்கணும். கொஞ்சம் அலட்சியமாத்தான் இருந்திருக்கேன். கிட்டத்தட்ட ஐந்து நாட்களுக்குப் பின்னர் இன்னிக்குத் தான் மல்லாக்கப் படுக்க, புரண்டு படுக்க முடிஞ்சது. எவ்வளவு ஆறுதலாகவும், வலி இல்லாமையால் சந்தோஷமாயும் இருக்கு தெரியுமா?
Deleteஅது சரி, பட்ட பகலில் கொலை. அப்ப கொலையாளிகள் அடையாளம் ஈசியா தெரியுமே பிடிச்சிட்டாங்களா?
ReplyDeleteகீதா
தெரிஞ்சாலும் பிடிப்பாங்களா என்ன?
Deleteசநாதனம்..
ReplyDeleteஆரியம், ஆரியன் ஒழிக..
செங்கோலாவது கொடுங்கோலாவது!..
எல்லாம் வெங்கோல் தான்!....
பிரதமரை ஒரு சாரார் அழைப்பதே வெங்கோலன் என்று தானே? இதில் ஓர் மகிழ்ச்சி அவங்களுக்கு! :))))))
Deleteசெங்கோள், செங்கோழ்.. என்றுதான் எல்லாரும் சொல்கின்றனர்..
ReplyDeleteவாள்க டமிழ்..
ஆமாம், நேற்றைய செய்தி வாசிப்பு வாசித்தவர்கள் அனைவருமே, புதிய பாராளுமன்றக் கட்டிடம் திறந்திருக்கக் கூடிய என்றே சொன்னார்கள். திறந்து வைக்கப்பட்டதை எவருமே குறிப்பிடவில்லை. :(
Deleteமாற்று சமயத்தின் ஆண், பெண் பெயர்களில் நூற்றுக்கணக்கான நாலாந்தர கருத்துகள்..
ReplyDeleteசமூக வலைத் தளங்களில்!..
சீ.. என்றிருக்கின்றது..
என்னவோ போங்க!
Deleteகோலுக்கும் தடிக்கும் 6 வித்தியாசம் உண்டு. கொடுக்கப்பட்டது தண்டம் அல்லது தடி என்று சொல்லலாம். கோல் மெலிதாக பிரம்பு போல் எப்போதும் கையில் வைத்திருக்க கூடியதாக இருக்கும் என்பது என் புரிதல். தண்டாயுத பாணி (பழனி) பிடித்திருப்பதை பாருங்கள்.
ReplyDeleteJayakumar
தண்டத்தைக் கையில் வைத்திருப்பதால் தான் அவன் தண்டாயுதபாணி!
Deleteவேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
ReplyDeleteகோலொடு நின்றான் இரவு.
நன்றி
ReplyDeleteஎன்ன செய்தாலும், எதிலும் குற்றம் தேடும் எண்ணம்தான் அரசியல்வாதிகளிடம் உள்ளது.
ReplyDeleteஆமாம். எல்லாம் பதவிப் பித்துப் பிடிச்சிருப்பதால் தான்.
Deleteஉடம்பை பார்த்து கொள்ளுங்கள். மருத்துவரிடம் போய் வந்தது நல்லது.இனி படிபடியாக வலி குறைந்துவிடும். வீடு, நாடு, உலக நன்மைக்கு வாழ்த்தி கொண்டு இருப்போம். அது ஒன்றே நம்மால் முடிந்தது.
ReplyDeleteநன்றி கோமதி.
Deleteஏதோ உடம்பு கொஞ்சம் தேறி வரும்போது மற்றொரு பாதிப்பு வந்து விடுகிறது. கொஞ்சம் எச்சரிக்கையுடன் நடமாடுங்கள். பத்திரம். சோதனை முடிவுகள் நல்லபடியாகவே இருக்கட்டும்.
ReplyDeleteசோதனை முடிவுகள் நல்லபடியாகவே வந்திருக்கின்றன. மேலே தி/கீதாவுக்கும் சொல்லி இருக்கேன், பாருங்க ஸ்ரீராம்.!
Deleteசென்னையில் வெப்பம் அனல் பறக்கிறது. தாங்க முடியவில்லை. பகலிலும் ஏ ஸி போட்டுக்கொள்ள வேண்டியதாயிருக்கிறது. நான் அலுவலகத்தில் அவஸ்தை, எங்கள் சென்ட்ரலைஸ்ட் ஏ ஸி எங்கள் டவரில் வேலை செய்யவில்லை. எனவே பெரும் அவஸ்தை. இளநீர், மோர், தண்ணீர் என பொழுது போகிறது. இப்பவும் சுடுதண்ணீர்தான் குடிக்கிறேன்!
ReplyDeleteஇங்கே ஸ்ரீரங்கத்தில் காலை வேளையில் வெயில் தெரியாது. ஆனால் இப்போ ஒரு வாரமாகக் காலம்பர எழுந்துக்கும்போதே அனல்! இன்னிக்கும் நல்ல சூடான வெயில். தாங்க முடியலை.
Deleteஏ ஸி 25 அல்லது 26 ல் வைத்து நாள் முழுக்கக் கூட ஆனில் வைத்திருக்கலாம். இதமாக இருக்கும். மின்சாரமும் அதிகம் செலவாகாது. ஒரு மின்விசிறிக்கான மின்சாரம்தான் செலவாகும் என்பார்கள். ஆனால் ஏ ஸி போட்டிருக்கும் மின்விசிறி போடக்கூடாது என்றுதான் சொல்வார்கள். யார் கேட்கிறார்கள்!
ReplyDeleteநாங்க ஏசி மெகானிக்கைக் கேட்டுக்கொண்டே மின் விசிறியைப் போட்டுக்கறோம். 25 அல்லது 26 இல் வைச்சுப் பார்க்கலை.
Deleteசெங்கோல் பற்றி நிறைய செய்திகள் படிக்கிறேன். போற்றியும், தூற்றியும் வழக்கம்போல பார்வேர்ட்ஸ் வருகின்றன. இரண்டையும் படித்து விட்டு கடந்து விடுகிறேன்!
ReplyDeleteஆமாம் வேறே என்ன செய்ய முடியும்?
Deleteஆஆஆஆஆ உடம்பு முடியல்ல கொமெண்ட்ஸ் எழுத முடியல்ல என எங்கள் புளொக்கில் சொல்லிப்போட்டு:), இங்கு பார்த்தால் எந்தாப்பெரிய போஸ்ட்.. ஹா ஹா ஹா அதிரா வந்திட்டேனெல்லோ கேள்வி கேய்க்க:)).. சரி சரி உடம்பு முடியவில்லை என சும்மா இருந்தால் இன்னும் முடியாததுபோலத்தான் இருக்கும், அதனால விடாமல் போஸ்ட் எழுதுங்கோ கீசாக்கா, மனம் உற்சாகமாக இருந்தால் உடம்பு தானாகச் சரியாகிடும்.
ReplyDeleteஹாஹா, கம்ப வாரிசு! உங்களைப் பார்த்தாலே உற்சாகம் தானாகத் தொற்றிக் கொள்கிறது, உண்மையில் நீங்க சொல்றாப்போல் அசதியையும், மனச் சலிப்பையும் தூக்கி எறிஞ்சுட்டு எழுதணும்னு தான் தோணுது. உங்கள் ஊக்கம் கொடுக்கும் சொற்களுக்கு நன்றி.
Deleteஓ இனி வெயில் தணியப்போகிறதோ... நல்ல விசயம், போன ஜூலை ஓகஸ்ட்டில் நாங்கள் போயிருந்த டெல்கி வீட்டின், கிச்சினில் ஏசி இருக்கவில்லை, நான் கிச்சினில் நிற்கும்போது பிரிஜ் டோரைத் திறந்துவிட்டு, அந்தக் காத்தை முகத்தில் பட விடுவேன் இடைக்கிடை... தண்ணி எல்லாம் ரப்பில் சுடச்சுட வந்தது.. தாங்க முடியவில்லை, உங்களுக்கு ஏசி இல்லாமல் உடம்பு பழகியிருக்கும்... ஆனா ஒன்று என் வெயிட் கடகட என இறங்கியது அப்போ, வேர்த்துக் கொட்டியதால்:).
ReplyDeleteசமையலறையில் எல்லாம் இங்கே ஏசி இல்லை. அதெல்லாம் அம்பேரிக்கா, துபாய் போன்ற வெளிநாடுகளில் தான். இங்கே சென்ட்ரலைஸ்ட் ஏசியும் இல்லை. படுக்கை அறைகளுக்கு மட்டும் தான் ஏசி. சமையலறையில் மின் விசிறி இருக்கு. அதைப் போட்டுக் கொண்டு வேலை செய்வேன்.
Deleteஎனக்கென்னமோ, நாம் மதம்கள் பற்றிப் பேசாமல் இருந்தாலே அது நாம் மதத்துக்குக் கொடுக்கும் மரியாதை எனத்தான் நினைப்பேன்... யார் என்ன சொல்லியும் எதுவும் மாறிவிடப்போவதில்லையே...
ReplyDeleteஉண்மைதான். இங்கே யாரும் அதைக் கேட்பதில்லை.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteநலமா? தற்சமயம் நீங்கள் படியில் கால் தவறி விழுந்த அடி குணமாகி இருப்பதற்கு மிகவும் சந்தோஷம். எனினும் இப்படி எங்காவது செல்லும் போது கவனமாக சென்று வாருங்கள். மருத்துவ ரிசல்ட் நல்லபடியாக வந்தற்கும் மகிழ்ச்சி.
இங்கு எங்கள் வீட்டில் ஏசி அமைக்கவில்லை. இரண்டு மாதமாக வெய்யில் கொளுத்தியது. இப்போது ஒரு வாரமாக நல்ல மழையும் அவ்வப்போது பெய்வதால், இரவு மின்விசிறி காற்றே ஒரளவு நன்றாக உள்ளது.
நான் அரசியல் சம்பந்தபட்டவை களை அவ்வளவாக பார்ப்பதே யில்லை. பொதுவாக டி. வி யே நான் மட்டும் அவ்வளவாக பார்ப்பதில்லை. எப்போதாவதுதான்...! நேரமும், காலமும் நம்மை நம் கவலைகளைப்பற்றி கவலைப்படாமல் கடந்து செல்கிறது. இறைவன் அனைவருக்கும் துணையாக இருப்பான் என்ற நம்பிக்கை மட்டும் பழுதின்றி மனதில் உள்ளது. தங்கள் உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இங்கே வெயில்கொளுத்தும்போதெல்லாம் என் கணவர் பெண்களூரில் வீடு பார்த்துட்டு வேண்டாம்னு சொன்னதைத் தான் சொல்லிக் கொண்டே இருக்கார். :))) இங்கே ஆனாலும் அதீதமான வெயில். வெள்ளை வெயிலாகச் சுட்டெரிக்கிறது. மழைனு பெயரில் இடியும் மின்னலும் வந்து பயமுறுத்திட்டுப் போயிடும்.
Deleteஉடல் நலன் முக்கியம். நலமாக இருக்க எனது பிரார்த்தனைகள்... நாட்டு நடப்பு குறித்து ஒன்றும் சொல்வதற்கு இல்லை. கேடுகெட்ட அரசியலாக இருக்கிறது.
ReplyDeleteஉங்க பதிவுகளை எல்லாம் படிச்சு வந்தாலும் கருத்துச் சொல்லவில்லை. சேர்ந்து போயிடுச்சு. இப்போப் புதுசாக வந்திருக்கும் கடைசி 3 பதிவுகள் இன்னமும் படிக்கலை.
Delete