மிசஸ் அன்டர்கவர் பார்த்துட்டேன். படம் நன்றாகவே இருந்தது. சாதாரண மனிதன் என்னும் பெயரில் பழிவாங்கும் வில்லன். அவனை யாரெனக் கண்டு பிடிப்பதே இந்தத் தனிப்படையின் வேலை. ராதிகா ஆப்தே குடும்பப் பெண்ணாகவும் தான் ஓர் ரகசிய ஏஜென்ட் என்பதை அறிந்து கொண்டும் அடக்கி வாசித்ததையும் பின்னர் பொங்கி எழுந்ததையும் அழகாக வெளிப்படுத்தி இருக்கார். தன் கணவன் தனக்குச் செய்யும் துரோகத்தைக் கண்டு பிடித்ததும் அவர் மனம் படும் பாட்டைக் கண்களிலேயே காட்டி விடுகிறார். படம் முடிவில் எடுத்துக்கொண்ட மிஷன் முடிஞ்சதும் மறுபடி எல்லாம் அப்படியே தொடரும் எனச் சொல்லுகின்றனர். அது ராதிகாவின் வேலை முடியாதத்தைக் காட்டுகிறது. ராதிகாவின் கணவனாக நடிப்பவர் மனைவியிடம் மன்னிப்புக் கேட்பதும் ரசிக்கும்படி இருந்தது.
அடுத்து ஊஞ்சாயி. இதுவும் பார்த்துட்டேன். விட்டு விட்டுப் பார்த்தாலும் அதிக நாட்கள் இல்லாமல் மூன்றே நாட்களில் பார்த்து முடித்துவிட்டேன். படம் நல்ல விறுவிறு. அனைவரின் நடிப்பும் போட்டி போட்டுக்கொண்டு நன்றாக அமைந்து விட்டது. அமிதாப் தன் உடல்நிலையை மறைப்பதும் அது சமயம் பார்த்துத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டதும், நண்பர்கள் அதுக்காக அவரைக் கடிந்து கொள்வதும் அருமை எனில் நீனா குப்தா ஆசை ஆசையாய் மகளுடன் அவள் பிறந்த நாளில் தங்கி மகிழ்வுடன் சில நாட்களைக் கழிக்கவேண்டும் என்னும் எதிர்பாப்புடன் வந்து விட்டுப் பின்னர் அடைந்த ஏமாற்றம், அனுபம் கேர் தன்னுடைய ஹவேலியை வர்ணித்துக் கொண்டு வந்து ஆசை ஆசையாய் விட்டுச் சென்ற உறவினர்களிடம் உறவைப் புதுப்பிக்க முயல அது அவருக்குக் கெட்ட பெயரை உண்டாக்க, தன் உறவினர்களின் மாறிய மனதை நினைத்து வருந்திய அனுபம் கேர் அங்கே தங்கவே வேண்டாம் என முடிவு செய்து கிளம்புவது ஒரு சோகம்.
கடைசியில் எப்படியோ மலை ஏற்றத்தில் இணைந்து விடுகின்றனர். அப்போது தான் மாலா திரிவேதி என்னும் பெயரில் லக்னோவில் வந்து சேர்ந்து கொண்ட பெண் இறந்து போன டானியின் (படத்தில் பூ பேன்) பால்ய சிநேகிதி என்பதும், இருவரும் திருமணம் செய்ய நினைத்ததும், பின்னர் முடியாமல் போனதும் வெளிப்படுகிறது. அதிலிருந்து மாலா திரிவேதியும் இவர்கள் மூவருடன் தானும் பூபேனின் கடைசி ஆசையை நிறைவேற்றவே வந்திருப்பதாய்க் கூறுகிறர். மலை ஏற்றத்தின் போது நடக்கும் நிகழ்வுகள் அந்தக் குழுவின் தலைமையாகச் செயல் படும் பெண் அமிதாபையும் அவர் எழுதும் கதைகளையும் குற்றம் கூறுவது, அமிதாபின் தன்மானம் அடிபட்டுப் போவது எல்லாமும் இயல்பாகப் பொருந்தி இருக்கு.இந்த இரு படங்களுக்குப் பின்னர் வேறே படம் இன்னமும் பார்க்க ஆரம்பிக்கவில்லை. தமிழ்ப்படங்கள் பார்க்க யோசனை. விடுதலை, ருத்ரன் எல்லாமும் இருக்கிறது. ஆனால் நடிகர்கள் எல்லோருமே புதுசு. தாஜ் பார்க்கலாமா என ஆசை. பார்ப்போம்.
*********************************************************
வந்து விட்டது. வந்தே விட்டது. மறுபடியும் அக்கி. இம்முறை வலது முழங்கைப் பக்கம். இதோடு இது நான்காம் முறை. அவ்வப்போது மனதில் கவலையும் பயமும் வரும். இந்தச் சூட்டுக்கு எங்காவது அக்கி வராமல் இருக்கணுமேனு. கடைசியில் பார்த்தால் இரண்டு நாட்களாக வந்திருக்கு. முதலில் வேர்க்குரு என்றே நினைச்சேன். அப்புறமாப் பார்த்தால் கண்ணெல்லாம் வைச்சுண்டு இருக்கு. ரங்க்ஸ் பார்த்துட்டு உறுதி செய்தார். நல்லவேளையாகக் கண்ணால் பார்க்க முடியாத இடத்தில் இல்லை. போன இரு முறைகளும் முதுகில் வந்திருந்தது. அதற்கு முன்னர் முதல் முறை முகத்தில்/நெற்றியில் வந்திருந்தது. இப்போது இங்கே! :(
அக்கியா? என்ன செய்யும்? வலிக்குமா, எரியுமா? எத்தனை நாட்கள் படுத்தும்? என்ன ஏதாவது மாற்றி மாற்றி வந்து கொண்டே இருக்கிறது?
ReplyDeletehttps://www.healthline.com/health/shingles#What-is-shingles?
Deleteநான் இன்னும் மிஸஸ் அண்டர்கவர் பார்க்கவில்லை. மிஸஸ் என்று தொடங்கினாலே டவுட் ஃபயர்என்றுதான் நினைவுக்கு வருகிறது.
ReplyDeleteடவுட்ஃபையர் இரண்டு, மூணு தரம் பார்த்தேன். நன்றாக இருந்தது. அப்போல்லாம் ஸ்டார் + சானலில் அதிகம் ஆங்கிலப் படங்கள் போடுவாங்க. நான் சொல்லுவது கேபிள் டிவி அறிமுகம் ஆன புதுசில். அப்போப் பார்த்தது. தொண்ணூறுகளின் கடைசியில்.
Deleteஆனால் நான் டவுட்பயரும் பார்க்கவில்லை!!
DeleteSuper picture!
Deleteஇன்று ஒரு படம் பார்த்தேன். என் அபிமான மனோ பாஜ்பாயி நடித்த படம். உண்மை சம்பவங்களின் அடிப்படையில் அமைந்த படம். ஒரு சாமியாரை மாட்ட வைக்க PC சோலங்கி (மனோஜ் பாஜ்பாய்) போராடும் படம். ராம்ஜெத்மலானி, சுப்பிரமணியம் ஸ்வாமி எல்லாம் கிட்டத்தட்ட அதே மாதிரி பெயர்களில் வருகிறார்கள் - சாமியாரைக் காப்பாற்ற. ஆசாராம் பாபு கதை. கோர்ட் சீன்கள்தான் பெரும்பாலும். ஆனாலும் ரசிக்க வைத்தது.
ReplyDeleteபடத்தோட பெயர் சொல்லவே இல்லையே!
DeleteSir ek Bandaa Kaafi hai. Posted a mini review in FB
DeleteOh! That one! watching!
Deleteரசித்தீர்களா?
Deleteyet to be completed. court scenes are simply superb!
Deleteஊஞ்சாய் படம் பற்றி நான் எழுதி இருந்ததை படித்தீர்களோ.. வசனங்கள் ரொம்பவே ரசிக்க வைக்கும். அமிதாப் டாப்..
ReplyDeleteபடிச்சேனே, அங்கேயே பதிலும் சொல்லி இருந்தேனே!
DeleteYes.. Yes..
Deleteஅப்படியே குட் பை படமும் பார்த்து விடுங்கள். அருமையான படம்.
ReplyDelete"குட்பை" படம் தேடலில் தேடி எடுத்துத் தான் பார்க்கணும்னு நினைக்கிறேன். என்னிடம் உள்ள படங்களின் பெயர்களில் குட்பை பெயர் இல்லை. தேடிப் பார்க்கிறேன். அமிதாபின் இன்னொரு படம் பார்க்க நினைச்சிருக்கேன்.
Deleteஅமிதாப்பின் இன்னொரு படமா... அது என்ன நான் பார்க்காத படம்? புதுசா, பழசா?
DeleteI think it is Jhund! Will check.
Deleteஇந்த வெயில் காலம் மிகவும் மக்களை கஷ்டப்படுத்தி விட்டது.
ReplyDeleteஉடல்நலம் கவனம்.
நன்றி கில்லர்ஜி!
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. நீங்கள் திரைப்படங்களை பார்ததற்கு மிகவும் மகிழ்ச்சி. அந்த திரைப்படங்களின் விமர்சனமும் அழகாக செய்துள்ளீர்கள். கடந்த வாரம் பொ. செ 2 வந்துள்ளது. எங்கள் வீட்டில் பார்த்து விட்டோம் என்றார்கள். நான் இன்னமும் பார்க்கவில்லை.
தங்கள் உடம்பை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். எல்லாம் பருவநிலை மாற்றத்தினால் வரும் தொந்தரவுகள்தான். பயங்கர வெயில்.. தெ. மே. பருவ மழையை இன்னமும் காணவில்லை. உடல் சூடு மிக அதிகமானால்தான் இந்த மாதிரி உபத்திரவங்கள் வரும்..! எனக்கு வேறு மாதிரி படுத்தும். உங்களுக்கே இதற்கான குணப்படுத்தும் மருந்துகள் தெரியுமே..! உடம்பின் சூடு குறைக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். கவனமாக இருங்கள். விரைவில் உடல்நலம் பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
அன்புடன்
கமலா ஹரிஹரன்.
அமேசான் படங்கள் எல்லாம் பணம் கட்டணும் என்பதால் அந்தப் பக்கமே போவதில்லை. எனக்கு ஜியோ சினிமாவும் பிஎஸ் என் எல் சினிமா+ ம் இலவசமகாக் கிடைப்பதால் அவற்றில் வரும் படங்களைப் பார்த்தாலே போதும்.
Deleteவிரைவில் அக்கி குணமாகப் ப்ரார்த்தனைகள். தொடர்ந்து ஏதேனும் பிரச்சனை வந்துக்கிட்டிருக்கே உங்களுக்கு.
ReplyDeleteஎல்லாம் சனி பகவானின் வேலை. இத்தோடு விடறாரேனு சந்தோஷம் தான். இது விரைவில் சரியாயிடும் என நம்பறேன். பார்க்கலாம்.
Deleteநீங்கள் சொல்லியிருக்கும் படங்கள் பார்க்கும் பொறுமையோ வாய்ப்போ இல்லை.
ReplyDeleteநீங்களாவது பார்த்து ரசிக்கறீங்களே. பாராட்டுகள்.
எப்படித்தான் பொ.செ.1+2, திருச்சிற்றம்பலம், வாத்தி எல்லாம் பார்க்கறீங்களோ? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இரண்டும் என்னோட படங்கள் வரிசையில் இருக்கின்றன. ஆனாலும் நான் பார்க்கவில்லை.
DeleteUunchaayi படம் நானும் பார்த்தேன். எனக்கும் பிடித்தது.
ReplyDeleteஅக்கி...... கவனமாக இருங்கள். அம்மாவுக்கும் ஒரு முறை முதுகில் வந்து மிகவும் கஷ்டப்பட்டார்.
வாங்க வெங்கட், முகத்தில் ஒரு முறையும் முதுகில் இருமுறைகளும் வந்தாச்சு. இது நான்காம் முறை. இதுக்குத் தடுப்பு ஊசி இருப்பதாகப் பெண் சொல்கிறாள். மருத்துவரிடம் கேட்கணும். இப்போக் கைகளில் முழங்கைப்பக்கம் வந்துள்ளது. வலியோடு அரிப்பும் சேர்ந்து கொள்வதால் பிரச்னை தான்.
Deleteவந்து விட்டது. வந்தே விட்டது. மறுபடியும் அக்கி. ///
ReplyDeleteதங்களது உடல் நிலை நன்றாக இருக்க வேண்டும்...
முருகா.. முருகா..
நன்றி தம்பி துரை. எனக்குப் பழகி விட்டது என நம்மவர் கேலி செய்கிறார்! :)))))
Deleteஉனவில் புளியை தவிர்த்து விடுங்கள்..
ReplyDeleteஉப்பு, மிளகாயைக் குறைத்துக் கொள்ளுங்கள்..
காலையில் நீராகாரத்துடன் கூடிய பழையது தான் காலை ஆகாரம். மதியம் அரைக்கரண்டி குழம்பு, ஒரு கரண்டி ரசம். மோர் சாதம் கொஞ்சம் அதிகமா! காயெல்லாம் பீர்க்கை, புடலை, பூஷணி, வெள்ளரி, வாழைப்பூ இப்படியானவை தான். அவ்வப்போது ஓ ஆர் எஸ். இளநீர் குடிக்கலாம்னா இங்கே கிடைக்கலை. ஒரு கிமீ போகணும். ஆகவே அந்தப் பக்கம் போனால் வாங்கி வருவார்.
Deleteபறவாயில்லையே கீசாக்காவுக்கு இப்போ படம் பார்க்கவெல்லாம் நேரம் கிடைக்குது.
ReplyDeleteஅதுசரி இப்போ குட்டிக்குஞ்சுலு என்ன செய்கிறா, வீடியோக்கோலில் பேசுவாவோ...
அங்கு அதிக வெக்கைதான் காரணம் கீசாக்கா, நீங்கள் பகலிலும் ஏசி போட்டு, வீட்டுக்குள்ளேயே இருங்கோ, எல்லாம் சரியாகிவிடும்.
ஹாஹா, அதிரடி, தாமதமாய் பதிலளித்தால் உங்களுக்குப் பிடிக்காதே! ஆனால் வேறே என்ன செய்வது? குட்டிக்குஞ்சுலுவை வீடியோ அழைப்பில் பார்க்கிறோம். க்ளே வைத்து ஏதானும் பண்ணிக் கொண்டிருக்கும். அல்லது படங்கள் வரைந்து கொண்டிருக்கும். எங்களிடம் காட்டும். இப்போ லீவுக்கு வரப் போகிறதே அப்பா, அம்மாவுடன்.
Deleteபட விமர்சனம் நன்றாக செய்து இருக்கிறீர்கள்.
ReplyDeleteஊஞ்சாயி நானும் பார்த்தேன். எனக்கும் பிடித்தது.
உடலை பார்த்து கொள்ளுங்கள்.குளிர்ச்சியாக ஏதாவது குடித்து வாருங்கள், இளநீர் , நீர் மோர் எல்லாம் குடிங்க. மண்பானை செய்பவர்களிடம் எழுதி வருவார்களே! அப்படி செய்ய முடியும் என்றால் செய்யலாம். விரைவில் நலமாக பிரார்த்தனைகள்.
வாங்க கோமதி. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். அப்புறமும் சில படங்கள் பார்த்தேன். இப்போப் பார்க்கலை ஒரு வாரமாக. அதோடு வீட்டில் சுத்தம் செய்யும் வேலைகள். ஒரு சில பொருட்கள் வாங்கி வைக்கும் வேலைகள் என இருக்கின்றன. ஆகவே நேரம் கிடைக்கும்போது தான் இணையத்துக்கு வருகிறேன்.
Delete