குளிக்கப் போகும் முன்னர் எல்லாம் எடுத்து வைச்சிருந்த படம். சம்புடங்களில் பக்ஷணங்கள். ரிப்பன் பகோடா, மிக்சர், பாதுஷா, லட்டு ஆகியவை மட்டும். வீட்டில் நான் செய்த பாதம் பர்ஃபி அல்வா, என்னும் பெயரில். மருந்துப் பொடி கடையில் வாங்கியது இந்த வருஷம் அதைக் கிளறினால் கமர்கட் மாதிரி வந்திருக்கு. என்னோட தீபாவளி மருந்துக்கு ரசிகர்கள் நிறைய உண்டு ஒரு காலத்தில் பாராட்டினவங்க எல்லோரும் இதைப் பார்த்தால் நீயா செய்தது எனக் கேட்டு வியப்பார்கள். :( வயசாச்சு/அதான் உனக்கு முடியலைனு எல்லோரும் சொன்னாலும் அது நொண்டிச்சாக்கு என எனக்குத் தோணும்.
எல்லோரும் தீபாவளி கொண்டாடி இருப்பீங்க. இங்கேயும் தீபாவளிக் கொண்டாட்டங்கள் முடிஞ்சது. ஒரு வாரமாகவே வெடிச் சப்தம் தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது. சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் பயங்கரமான வெடிச் சப்தம். நேற்று மத்தியானமெல்லாம் படுக்கவே முடியலை. சாயந்திரமாக் குஞ்சுலு வந்தப்போப் பேசவே முடியலை. அதுக்கும் வெடிச் சப்தம் கேட்கணும்னு இருந்ததாலே கேட்டுட்டு இருந்தது. இரண்டு, மூன்று நாட்களாகவே தீபாவளி பற்றிய சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டிருந்தது குஞ்சுலு. என்னிடம் பாட்டி, தீபாவளி கொண்டாடியதும் எனக்குப் படம் எடுத்து அனுப்பு என்றது.
நான் இந்த வருஷம் எந்த பக்ஷணமும் பண்ணவில்லை. போன வருஷம் தேன்குழல் மட்டும் பண்ணிட்டு லாடு ஏதோ பிடித்தேன். இந்த வருஷம் பாதம் பர்ஃபி பண்ணலாம்னு பண்ணினால் அது பாதாம் அல்வாவாக வந்திருக்கு. சரினு பெயரை மாத்திட்டு அதையே எல்லோருக்கும் கொடுத்தாச்சு. நம்ம ரங்க்ஸ் நீ தேன்குழலெல்லாம் பண்ணாதேனு திட்டவட்டமாகச் சொல்லிட்டார். அதை மீறிட்டு என்ன செய்ய முடியும்? காடரர் கிட்டே ஆர்டர் செய்த பக்ஷணங்களையே எல்லோருக்கும் கொடுத்தாச்சு.
குட்டிப் பட்டுக் குஞ்சுலு நாங்கல்லாம் சொன்னதைக் கேட்டுக் கொண்டு நேத்திக்கு அதுவாகவே சீக்கிரமாய் எழுந்து கொண்டு அவ அம்மாவிடம் எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டச் சொல்லிக் குளித்துப் புது ட்ரஸ் எல்லாம் போட்டுக் கொண்டு எங்களிடம் காட்டியது. பாட்டி, நீ சொன்ன மாதிரி நானும் தீபாவளி கொண்டாடினேன் என்று சொன்னது. பட்டாஸுகள் வெடிப்பதைக் கேட்க வேண்டும்/பார்க்க வேண்டும் என்று ஆசை. நமக்கோ அந்தப் புகையே ஒத்துக்காது. என்ன செய்யலாம்னு யோசிச்சப்போ நம்ம வளாகத்தின் வெளியே மேற்குப் பக்கமாக வெடி வெடிக்க அனுமதி கொடுத்திருந்தாங்க. உள்ளே வெடிச்சால் கார் பார்க் நிரம்பி வழிஞ்சது. ஆகவே பாதுகாப்பைக் கருதி வெளியே வெடிச்சாங்க. அதை அசோசியேஷன் தலைவர் வீடியோ எடுத்துப் பகிர்ந்திருந்தார். சரினு குஞ்சுலுவுக்கு அதை அனுப்பிட்டேன். அதுவும் பார்த்து ரசிச்சது.
சென்னையை விட்டு வந்தப்புறமாச் சுண்டல் கலெக்ஷன் குறைஞ்ச மாதிரி தீபாவளி கலெக்ஷனும் குறைஞ்சு போச்சு. எதிர் வீடுங்க இரண்டு மட்டும் தான் கொடுக்கல்/வாங்கல். ஆகவே பக்ஷணங்களை என்ன செய்யலாம்னு மண்டைக்குடைச்சலும் இல்லை. காடரர் கொடுத்திருக்கும் பக்ஷணங்களை விநியோகம் போக மீதம் சாப்பிட்டாலே போதுமானதுனு ஆயிடுச்சு. இப்படியாக இந்த வருஷ தீபாவளியைக் கொண்டாடி முடிச்சாச்சு. எல்லோருக்கும் தாமதமான இனிய தீபாவளி வாழ்த்துகள்..
நேத்திக்குக் காலம்பர 3 மணிக்கே எழுந்து கொண்டு வாசல் பெருக்கிக் கோலம் போட்டேன். பாரத்தவங்க எல்லாம் இத்தனை பெரிய கோலத்தை உங்களால் குனிஞ்சு போட முடிஞ்சுதானு ஆச்சரியப்பட்டாங்க. அந்த நேரம் பகவான் கொடுத்த தெம்பில் முடிஞ்சது. பின்னர் வீடு பெருக்கித்துடைச்சு, (வேலை செய்யும் பெண் தீபாவளிக்கு லீவு) இன்னிக்குத் தான் வந்திருக்காங்க. உம்மாச்சிக்கு எல்லாம் எடுத்து வைச்சு, எண்ணெய் காய்ச்சி, சீயக்காய் கரைச்சு மஞ்சள் பொடியோடு எடுத்து வைச்சுப் புடைவை வேஷ்டி எல்லாமும் எடுத்து வைச்சேன். இந்த வருஷ தீபாவளிப் புடைவைங்க எல்லாம் ஓ.சி. புடைவை தான். பையர் மைசூர் போனப்போ குஞ்சுலு செலக்ஷனில் ஒரு புடைவை வாங்கி வந்திருந்தார். அதைத் தான் கட்டிக் கொண்டேன். குஞ்சுலு பிங்க் கலரில் எடுத்திருக்கு. அதுவுமே நேத்திக்குப் பிங்க் கலர் ட்ரஸ் தான் போட்டுக் கொண்டிருந்தது. மும்பையிலிருந்து வந்த என் ஒண்ணு விட்ட ஓர்ப்படி ஒரு புடைவை கொடுத்தாங்க. அதை நவராத்திரிக்கே கட்டிண்டாச்சு. செப்டெம்பரில் நடந்த உறவினர் திருமணத்தில் ஒரு புடைவை, நவராத்திரியில் நாத்தனார் பெண் ஒரு புடைவையும் கொடுத்திருந்தாங்க. நான் பையர் வாங்கின புடைவையையே சிறிது நேரம் கட்டிக் கொண்டேன். நான் தீபாவளி ஜவுளி மட்டுமல்ல, பொதுவாகக் கடைகளுக்குப் போயே 3 வருஷங்கள் ஆகின்றன. எல்லாக் கடைகளிலும் சுமார் 15/20 படிகள் ஏறணும். பிடிச்சுக் கொள்ளப் பிடிமானமும் இல்லை. ரங்க்ஸ் முதலில் மேலே ஏறிக் கொண்டு பின்னர் என்னை மேலே ஏத்தணும். சுற்றிலும் உள்ளவங்க என்னையே பார்ப்பாங்க. சில கோபக்கார மாமிகள் அவரே முடியாமல் இருக்கார், நீ அவரைப் போய் ஏன் தொந்திரவு பண்ணறே? ஏன் வெளியே வாசல்லே வரேனு கேட்டுச் சத்தமும் போட்டிருக்காங்க. ஆகவே நான் மருத்துவரைப் பார்க்க வேண்டியது தவிர்த்த மற்ற இடங்களுக்கு இப்போதெல்லாம் போவதில்லை.
///எல்லோருக்கும் தாமதமான இனிய தீபாவளி வாழ்த்துகள்..///
ReplyDeleteதாமதமானாலும்
நெகிழ்வான தீபாவளி வணக்கங்கள்..
நன்றி தம்பி துரை.
Deleteதீபாவளி பண்டிகையை நல்லபடியாக நிறைவு செய்து விட்ட மன நிறைவு தெரிகிறது.
ReplyDeleteகோலம் பெரிதாக போட்டது மன பலத்தால். பேத்தி தேர்ந்து எடுத்த பிங்க் கலர் புடவை அருமை
நானும் ஒரு தடவை பாதம் பர்பியை அவசரபட்டு தட்டில் கொட்டி விட்டேன். இறுகி பர்பியா வரவில்லை, அப்புறம் பட்டர் பேப்பரில் அழகாய் பாதம் ஹல்வா என்று . மடித்து கொடுத்து விட்டேன்.
பண்டிகை வாழ்த்துகள். பேத்திக்கு ஆசிகள், வாழ்க வளமுடன்
ஆமாம், பேத்தியும் எல்லாம் கேட்டுக்கொண்டு செய்திருக்காள் அல்லவா? அதான். புடைவை நிஜம்மாவே நன்றாக இருக்கு. இதுக்கு முன்னாடி எல்லாம் பாதாம் பர்ஃபி பண்ணி இருக்கேன். இந்தத் தரம் தான் சொதப்பல். :) உங்கள் அனைவரின் ஆசிகளும் பேத்திக்கு வேண்டும்.
Deleteஇந்த முறை தீபாவளி கிடையாது. எனவே தீபாவளி மருந்து எங்கள் வீட்டில் மிஸ்ஸிங்! என் மாமியார் ஆர்வமுடன் செய்வது அது. நன்றாகவே இருக்கும்.
ReplyDeleteஎண்ணெய் தேய்த்துக் குளித்துப் புதுசு கட்டிக்க மாட்டோமே தவிர்த்து பக்ஷணங்கள் ஏதேனும் ஒன்றிரண்டு பண்ணுவோம். நமக்குக் கொடுக்கிறவங்களுக்குத் திருப்பிக் கொடுக்கணுமே. மருந்தெல்லாம் நாங்களும் பண்டிகை இருந்தால் தான் பண்ணுவோம்.
DeleteThis comment has been removed by the author.
Deleteஉங்கள் மனோநிலை புரிகிறது. எல்லாம் காலம் செய்யும் கோலம் தான். விரைவில் மாற்றம் வரப் பிரார்த்திக்கிறோம்.
Deleteஉங்கள் புடைவைகளை இன்னும் க்ளோசப்பில் படம் எடுத்திருக்கலாம்! கேமிரா செட்டில் ஆவதற்கு முன்னரே எடுத்து விட்டீர்கள் போல - என்னைப்போல! அலலது வெளிச்சம் போதவில்லை!
ReplyDeleteஎன்னவோ போங்க. முன்னெல்லாம் போடும்போது ஜேகே வந்து புடைவை நிறம் சரியில்லை, துணி சரியில்லை என்பார். இப்போல்லாம் வரதே இல்லை. போகட்டும். பின்னர் ஒரு நாள் புடைவையைப் பிரிச்சுப் படம் எடுத்துப் போடப் பார்க்கிறேன்.
Deleteஎங்கள் ஏரியாவில் வெடிச்சத்தம் குறைவுதான். ஓரளவு நிம்மதி. இப்போதெல்லாம் தீபாவளி அன்று காலை யாரும் வெடிப்பதில்லை. மாலைதான். தூக்கம் பிரதானமாகி விடுகிறது.
ReplyDeleteஹையோ! நேத்திக்கு வரை இங்கே வெடிச் சப்தம் தான். இன்னிக்குத் தான் ஓய்ஞ்சிருக்கு. மார்க்கெட்டும் க்டந்த இரு நாட்களாகத் திறக்காமல் சில காடரர் சாப்பாடு நேத்தி வரை கொடுக்கலை. இங்கே/திருச்சியில் நான் வந்தப்போ இருந்து பார்க்கிறேன். தீபாவளியை க்ரான்டாக ஒரு வாரம் கொண்டாடுகின்றனர். கார்த்திகைக்கும் வெடி வெடிப்பாங்க.
Deleteதீபாவளி என்றாலே பக்ஷணம், புதுத்துணி, பட்டாசு, மத்தாப்புகள் தான். புதுத்துணி மோகமும் பட்டாசு, மத்தாப்பு மோகமும் மெல்ல மெல்லக் குறைந்து கொண்டு வரும்படியான மனோநிலைக்கு நம் அனைவரையும் கொண்டு வந்துவிட்டன ஊடகங்களும் அரசுகளும் வெடி வெடிப்பதைப் பற்றிய பிரசாரங்களும், கோர்ட் உத்தரவுகளும். :( பாரம்பரியத்தை நழுவ விட்டுட்டு நாம் அதில் பெருமையும் கொள்கிறோம்.
Deleteபழைய வீட்டில் போஸ்ட்மேன் முதல், குப்பை எடுத்துச் செல்பவர் வரை எல்லோரும் தீபாவளி இனாம் கேட்டு வருவார்கள். இங்கு யாருமே வராதது ஒரு ஆச்சர்யம். நாங்களாக குப்பை அள்ளும் பெண்மணிக்கு வீட்டில் வேலை செய்பவருக்கும் தீபாவளிக்கு புடைவை எடுத்துக் கொடுத்தோம்.
ReplyDeleteஇங்கேயும் சென்னை/அம்பத்தூரையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் சென்னையில் மிகக் குறைவு. குப்பை வண்டிக்காரர்களுக்கு மொத்தமாகப் பணம் கொடுத்துப் பிரித்து எடுத்துக்கச் சொல்லுவோம். மற்றபடி வேலை செய்யும் பெண்ணிற்கு அநேகமாகப் பணம் தான். சம்பளத்தில் பாதி கொடுத்து வந்தேன். இங்கே அப்படி இல்லை. காஸ் சிலிண்டர் கொண்டு போடுபவர், இன்வெர்டருக்கு டிஸ்டில்ட் நீர் ஊத்துபவர், அபார்ட்மென்டைப் பெருக்கும் 3 பெண்மணிகள், 3 செக்யூரிடிகள், ஒரு குப்பைக்காரர், வீட்டு வேலை செய்யும் பெண், துணிகளை அயர்ன் செய்யும் பெண் இப்படி நிறையப் பேர் இருக்காங்க. வீட்டு வேலை செய்யும் பெண்ணிற்கு ஒரு மாசச் சம்பளம் போனசாகக் கொடுக்கணுமாம். இந்த வருஷம் இந்த வேலை செய்யும் பெண் மார்ச் மாதத்தில் இருந்து தான் வேலை செய்வதால் சம்பளத்தில் பாதி ஆயிரம் ரூபாய் கொடுத்தேன். நல்லவேளையா ஒண்ணும் சொல்லலை.
Deleteதீபாவளி என்றால் நாங்கள் எப்போதுமே வேலை செய்பவருக்கு இரட்டை சம்பளம்தான்.
Deleteஎன்னது...வீட்டு வேலை செய்பவருக்கு இரட்டைச் சம்பளமா?
Deleteஆமாம் நெல்லை. இது புதுக்கலாசாரம். சென்னை வரை போகலைனு நினைச்சேன். ஸ்ரீராம் கொடுப்போம் என்கிறார், என் தம்பி மனைவி பதினைந்து வருஷங்களுக்கும் மேல் வேலை செய்து கொண்டிருக்கும் பெண்ணுக்குச் சம்பளம் 1500 தான் கொடுக்கிறாள். தீபாவளிக்கும் அநேகமாகப் புடைவை தான். எப்போவேனும் தான் பணம்.
Deleteபிறகு வருகிறேன். எங்க பட்சணங்களைப் பார்த்தால் ஆராய்ச்சி பண்ண ஆரம்பிக்கிறோம் என்பதால் மூடி போட்டு சம்புடத்தில் வைத்துவிட்டீர்கள் போலிருக்கு
ReplyDeleteஅதெல்லாம் இல்லை, திறந்து வைத்தால் எறும்புகள் படை எடுக்கும் அபாயம் இருந்ததால் திறக்கலை. மற்றபடி நிறையவெல்லாம் பக்ஷணங்கள் வாங்கவும் இல்லை.பண்ணவும் இல்லை. பக்ஷணங்கள் தீரப் போகிறது. சீக்கிரமா வாங்க. :)
Deleteதீபாவளி சிறப்பாக கடந்து முடிந்திருக்கிறது - மகிழ்ச்சி.
ReplyDeleteராமர் படம் - அங்கே மின்சார விளக்கு ஒன்று எப்போதும் ஒளிருவதால் அதன் பிரதிபலிப்பு படத்தில் வருவதை தவிர்க்க முடியாது. மின்சார விளக்கை அணைத்து விட்டு எடுக்க வேண்டாம் என்பதால் எடுக்கவில்லை.
அனைவருக்கும் தீபாவளி சிறப்பாக நடந்து முடிந்திருக்கும்! நல்லதே நடக்கட்டும்...
நன்றி வெங்கட், உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள் தாமதமாக. ஆனால் பக்ஷணம் வந்து சேர்ந்துடுத்து போலவே! :)
Deleteஇப்போதெல்லாம் பலரும் கேடரர் கிட்ட அல்லது கடைகளில் பட்சணங்கள் ஆர்டர் செய்கிறார்கள், அதையே பிறருக்கும் கொடுக்கின்றனர். சொந்தமாகச் செய்வது குறைந்துவிட்டது. காலத்தின் மாற்றம்தான்..வேறு என்ன சொல்ல?
ReplyDeleteநெல்லை நான் நின்று கொண்டு பாதாம் பர்பி கிளறியதில் அன்று பூரா இடக்கால்க் கணுவில் வீக்கம் வலி. ரொம்ப வேதனையாப் போச்சு. ஆகவே தான் நம்மவர் நீ மேற்கொண்டு ஒண்ணும் செய்ய வேண்டாம் என்று சொல்லிட்டார். எப்படியும் தேன்குழல் செய்யணும்னு இருந்தேன். கண்டிப்பாக வேண்டாம்னு சொல்லிட்டார். டின் டின்னாக பக்ஷணங்கள் பண்ணின காலம் போய் இப்பொச் சின்னச் சம்புடங்களில் போட்டு வைக்கவே பண்ண முடியலை. என்ன செய்யறது!
Deleteமுன்னெல்லாம் கடையில் பக்ஷணன்கள் வாங்கிக் கொடுக்கும் நபர்களைப் பார்த்துச் சிரிச்சிருக்கேன். இப்போ அதுக்கு தண்டனை தான் எனக்கு! :((((((
Deleteகாடரர் கொடுத்த பட்சணங்களைப் பற்றிய விமர்சனத்தைக் காணோமே... நீங்க சுலபமா எதையும் ஒத்துக்கொள்ள மாட்டீர்களே
ReplyDeleteஎல்லாம் கால்/கால் கிலோ தான் நெல்லை. மிக்சர் மட்டும் அரைக்கிலோ. கொடுத்தும் சாப்பிட்டும் தீர்ந்து விட்டன. ரிப்பன் பகோடாவும் மிக்சரும் மட்டும் தான் வாங்கினோம். லட்டு, பாதுஷா ஸ்வீட். வேலை செய்யும் பெண்ணில் இருந்து ஆரம்பித்துக் கொடுத்ததில் செவ்வாய்க்கிழமையே தீர்ந்து விட்டது. மிக்சரும், நான் பண்னிய பாதாம் ஸ்வீட்டும் மட்டும் கொஞ்சம் போல் இருக்கு.காடரர் போன வருஷமும் இவர் தான் கொடுத்தார். ஓகே ரகம். தூக்கி எறியும்படி இல்லை. கோகுலாஷ்டமிக்குப் புதுசா ஒருத்தர்ட்டே வாங்கிட்டு யாருக்கும் கொடுக்கவும் முடியலை/ தூக்கி எறியவும் மனசில்லாமல் போச்சு.
Deleteவெளியே கடைகளுக்குப் போகாததும் சரிதான். இப்போல்லாம் எங்கேயுமே பல படிகள் ஏறவேண்டியிருக்கும். அதுவும்தவிர தீபாவளி கடை நெரிசல் உங்களுக்கு ஒத்துக்காது.
ReplyDeleteஆமாம், நெரிசல் ஒத்துக்காது தான். கல்யாண ரிசப்ஷனுக்கே போகாதேனு மருத்துவர் அறிவுரை. கோவிப்பார். ஆகவே சீக்கிரமாய்ப் போயிட்டு சாப்பாட்டுக்கு உட்காராமல் வந்துடுவோம். கடையில் போய்த் துணி எடுத்து நாலு வருஷங்களுக்கு மேல் ஆகின்றன.
Deleteஇனிய தாமதமான தீபாவளி வாழ்த்துகள்.
ReplyDeleteவேலை சரியாகி விட்டது மற்ற அபீஸியல் பேப்பர் சரியானதும் நம்பர் வாங்கி விடுவேன்.
அலுவலகம் எனக்கு கொடுத்து இருக்கும் போனை பர்சனலுக்கு உபயோகிப்பதில்லை.
வந்து கொண்டு இருக்கும் எனது பதிவுகள் ஊரில் செட்யூல் செய்தது.
நான் இணையம் வருவது சற்று தாமதமாகும் மன்னிக்கவும் நன்றி.
வாங்க கில்லர்ஜி. எமிரேட்ஸில் போய்ச் சேர்ந்து வேலைகளை ஆரம்பித்து விட்டீர்கள் அல்லவா? பழைய நண்பர்களைப் பார்க்க நேர்ந்ததா?? வேலை வசதியாக எளிதாக இருக்கா? நீங்கள் அங்கே போய் முழுமையாக வேலைகளை ஆரம்பித்ததும் உங்கள் சொந்தத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பதிவுகள் எழுதுங்கள். எல்லாம் நன்றாக நடக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
Deleteஎப்படி விட்டுவிட்டேன் பதிவை....
ReplyDeleteகீதாக்கா பரவால்லக்கா பாதாம் இனிப்பு எப்படி வந்தால் என்ன? வாய்க்கு ருசியா இருந்தா போதும். கடிக்கும்படி இருந்தா என்ன மென்றால் என்ன......மருந்தும் தான். கமர்கட் அதுவும் தனிச் சுவைதான் கீதாக்கா.... கூடக் கொஞ்ச நேரம் வைச்சிருந்திருப்பீங்களா இருக்கும் போனா போகுது. இதுவும் நன்றாகத்தான் இருக்கும்.
எப்படியோ தீபாவளி புதுத்துணிகளுடன் இனிதாக முடிந்ததே.
கீதா
ஹை! பட்டுக்குஞ்சுலு பாட்டி சொல்லைத் தட்டாதே என்பது போல் அழகா எழுந்து கொண்டாடியிருக்கிறதே! சமத்துக் குட்டி.
ReplyDeleteஇங்கு தீபாவளிக்கு யாரும் எதுவும் கேட்கவில்லையே அதான் தெருவில் குப்பை எடுப்பவர்கள் யாருமே. இப்பகுதியில் யாரும் வரவில்லை. பழைஅ வீட்டுப்பகுதியில் வருவாங்க...
கீதா
அக்கா, நாம் செய்யும் பட்ஷணங்கள் கொஞ்சம் அப்படியும் இப்படியும் வந்துவிட்டால் நமக்கா அதைச் சமாளிக்கத் தெரியாது!!! பெயர் கூட புதுசா வைச்சு, புதிய ஐட்டம்னு சொல்லி சாமளித்துவிட்டு அதற்குச் செய்முறையும் சொல்லிக் கொடுத்துவிடலாம்!! அம்புட்டுத்தேன்...
ReplyDeleteகீதா
உடல் நலமில்லாமல் இருந்தபோதும் தீபாவளி கோலமும் பெரிதாகப் போட்டு சிற்றுண்டியும் செய்து கொண்டாடி விட்டீர்கள்.
ReplyDeleteபடங்களும் பகிர்ந்து கொண்டீர்கள் . கண்டு மகிழ்ந்தோம்.