எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, November 28, 2023

கார்த்திகை நல்லபடியா முடிஞ்சது! இறைவனுக்கு நன்றி!


 



 


  


கார்த்திகை தீபத்திருநாள் படங்கள். இம்முறை கார்த்திகை மன நிறைவுடனும், மகிழ்வுடனும் கொண்டாடினேன் எனில் அது குட்டிக் குஞ்சுலுவால் தான். கார்த்திகைக்கு முன்னாலும் தீபாவளிக்குக் கேட்டுக் கொண்டாற்போல் அது என்னிடம் எல்லாமும் கேட்டு வைத்துக் கொண்டது. அதே போல் ஞாயிறன்று கார்த்திகை தீபம் அங்கே நைஜீரியாவிலும் ஏற்றிக் கொண்டாடினார்கள். பட்டுப்பாவாடை, ப்ளவுஸ் போட்டுக் கொண்டு என்னிடம் காட்டியது. ஒரே ஆட்டம் தான். கொண்டாட்டம் தான். அது மட்டும் இங்கேயே இருந்திருந்தால் என்னும் எண்ணமும் வரத்தான் செய்தது. என்றாலும் இத்தனை ஈடுபாட்டுடன் நம் பாரம்பரியப் பண்டிகைகளைக் கொண்டாடுவதில் அதுக்கு இருந்த சந்தோஷம் அளவிட முடியாத ஒன்று.  குஞ்சுலு என்னிடம் பாட்டி, நீ எத்தனை விளக்கு ஏத்தினே? எனக் கேட்டது. சுமார் 20/25 இருக்கும் என்றேன். அதுங்கிட்டே பத்து விளக்குகள் தானாம். ரொம்ப சோகமாச் சொன்னது. அடுத்த வருஷம் நிறைய ஏத்தலாம்னு சொல்லிட்டு இருந்த விளக்குகளை அவ அம்மா ஏத்தினாள். இது கூடவே நின்னுண்டு பார்த்துட்டு இருந்தது. நிலைப்படியில் எல்லாம் நான் வைச்சிருக்கிறதைப் படத்தில் பார்த்துட்டு அதே போல் அங்கேயும் வைக்கச் சொன்னது. ஒரே ஆட்டம், பாட்டம், குதியாட்டம் தான். கோடி துக்கம் போகும் குழந்தை முகத்திலே என்பார்கள். அதை ஞாயிறன்று அனுபவித்தேன்.

கார்த்திகைக்கு முன்னாலிருந்தே ரங்க்ஸின் உடம்பு சரியில்லாமல் இருந்தது. சரியாக சனிக்கிழமை அன்று காலை ஒரே தலை சுற்றல், நிற்க முடியவில்லை. என்னை இறுக்கப் பிடித்துக் கொண்டிருந்தவர் கீழே விழுந்து விடுவார் போல் இருந்ததால் நல்லவேளையாகப் பக்கத்தில் இருந்த நாற்காலியை மெதுவாக நகர்த்தி அதில் உட்கார வைத்தேன். பின்னர் மருத்துவரிடம் அவர் தானாகவே தான் சென்றார். மருத்துவரோ ஜூரம் மிக அதிகமாக இருப்பதாகச் சொல்லித் தனியே வந்ததுக்குத் திட்டி விட்டுப் பின்னர் மருந்தை ஐவி மூலம் ஏற்றித் தக்கத்துணையோடு வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அன்று படுத்தவர் நேற்றுக் கொஞ்சம் பரவாயில்லை என்னும்படி இருந்தார். நான் ஏதோ முடிந்ததைச் சமைத்துப் பொரிப் பாகு செலுத்திக் கார்த்திகை தீபத்தை நிறைவேற்றினேன். குழந்தையின் வரவும் அதன் சந்தோஷமும் தான் மனதுக்கு ஆறுதலைக் கொடுத்தது. இன்று காலை வரை சரியாக இருந்தவருக்கு மத்தியானத்தில் இருந்து தலையில் மீண்டும் வலி. அவரை நேரில் பார்த்தவர்களுக்கு அவருக்குக் கழுத்துப் பிரச்னை இருப்பது தெரிந்திருக்கும். அதனால் ஏற்பட்ட வலி தலை முழுவதும் வியாபித்துப் பொறுக்க முடியாமல் இருக்கு. 
நாளை நியூரோ மருத்துவரிடம் போக நேரம் கேட்டு வாங்கி இருக்கேன். நாளைக்காலை போகணும். திடீரென ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றத்தினால் வீட்டில் யாருக்குமே ஒண்ணுமே ஓடலை. பார்க்கலாம் இறைவன் நினைப்பு என்னனு. 

13 comments:

  1. சாருக்கு உடல் நலமாக பிரார்த்தனைகள்.
    கார்த்திகை தீபம் பண்டிகை நல்லபடியாக பேத்தியும் நீங்களும் வைத்தது மகிழ்ச்சி.
    பேத்தியின் மழலை பேச்சு அனைத்து கவலைகளையும் போக்கிவிடும்.
    நியூரோ மருத்துவரிடம் சென்று வந்தால் வலி குறைந்து விடும்.

    ReplyDelete
  2. படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
    நானும் இன்று மருத்துவரிடம் போய் வந்தேன். இடுப்பு வலி, இரண்டு காலும் நடக்க முடியாமல் வலி. கார்த்திகை பூஜைக்கு வேலைகள் பார்த்தது , கோலம் போட்டது எல்லாம் வலியை அதிகமாக்கி விட்டது. 12 மணிக்கு போய் வீட்டுக்கு வரவே இரண்டு மணிக்கு மேல் ஆகி விட்டது.

    ReplyDelete
  3. கழுத்துவலியால் ஏற்படும் தலைவலி சீக்கிரம் சரியாய் போய்விடும்.  மாமாவுக்கு சீக்கிரம் குணமாகிவிடும்.  இது இப்போ சீசன் அக்கா.  நான் உட்பட நிறையபேர் இந்த தொல்லையை அனுபவிக்கிறோம்.  கவலை வேண்டாம் அக்கா.  இந்த சீசனில் ஏ சி யில் படுக்க மாட்டீர்கள் என்றாலும் ஒருவேளை அபப்டிக் படுத்து சிறிது நேரமேனும் ஏசியில் இருந்தால் அதுவே இது போல தலைவலியைக் கொடுக்கும்.  என் அனுபவம் இது.  ஆவி பிடித்தால் கொஞ்சம் வலி குறையும்.+

    ReplyDelete
  4. வெர்டின் மாத்திரை எடுத்துக் கொள்கிறாரா மாமா?  வாசலுக்கு நேராகவோ, ஜன்னலைத் திறந்து வைத்தோ அமராமல் இருக்கச் சொல்லுங்கள்.

    ReplyDelete
  5. கார்த்திகைக் கொண்டாட்டம் அருமை.  பேத்தி ஈடுபாட்டுடன் இவற்றில் ஈடுபடுவது சந்தோஷம் தருவது.

    ReplyDelete
  6. கார்த்திகை தீபம் மன நிறைவுடனும் மகிழ்ச்சியாகவும் அமைந்ததது பற்றி மகிழ்ச்சி கீதாக்கா. அதுவும் மாமாவின் உடல் நலம் சரியில்லாமல்...

    கார்த்திகை தீபம் படங்கள் மிக அழகு.

    கீதா

    ReplyDelete
  7. கழுத்துவலி இருந்தால் தலைவலி வரும் படுத்தும்...மாமாவின் உடல் நலம் விரைவில் சரியாகப் பிரார்த்தனைகள்.

    நியூரோ மருத்துவர் என்ன ச்ொன்னார்? மாமாவுக்கு இப்ப தேவலாமா? கழுத்து, தோள்பட்டைக்கான பயிற்சிகள் மெதுவாகச் செய்தால் சரியாகும் கீதாக்கா

    கீதா

    ReplyDelete
  8. சந்தோஷமும் வருத்தமும் ஒன்றையொன்று தொடர்ந்து வருகிறதே....

    கோலம் நன்றாக இருக்கிறது (உட்கார்ந்து கஷ்டப்பட்டுப் போட்டிருக்கவேண்டும்)

    ReplyDelete
  9. படங்களை எபி வாட்சப்பில் பார்த்து மகிழ்ந்தேன்.

    இந்தத் தடவை பொரி உருண்டைலாம் இங்க பண்ணலை.

    ReplyDelete
  10. நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள். கு கு வின் சந்தோசம் ஒரு பக்கம். மாமாவின் ஆரோக்கிய நிலை மறு பக்கம்.

    ஆதி வெங்கட் அவர்களையும் கூப்பிட்டுக் கொள்ளுங்களேன். டாக்டரிடம் போக வர கொஞ்சம் உதவியாக இருக்கும்.
    Jayakumar​

    ReplyDelete
  11. // கோடி துக்கம் போகும் குழந்தை முகத்திலே என்பார்கள்..///

    உண்மை தான்...
    தீப மங்கல ஜோதி நமோ நம..

    ReplyDelete
  12. கவலை வேண்டாம்...

    இறைவன் துணை உண்டு..

    ReplyDelete
  13. வணக்கம் சகோதரி

    தொடர்ந்து பண்டிகைகள் நல்லபடியாக கொண்டாடியது பற்றி மகிழ்ச்சி. தங்கள் அன்பு பேத்தியின் ஆர்வங்கள் வியக்க வைக்கிறது. ஆனால், தங்கள் கணவருக்கு அன்றே உடல்நிலை சரியில்லாமல் போனது குறித்து பதிவில் படிக்கும் போதே மனதிற்கு மிகவும் வருத்தம் தந்தது. கவலைப்படாதீர்கள். இறைவன் துணை உண்டு. விரைவில் தங்கள் கணவர் பூரண நலம் பெற இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். கண்டிப்பாக குணமடைந்து விடுவார்.

    அன்புடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete