அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்ரிகிட தித்தோம்.”
துன்பம் நெருங்கி வந்த போதும்-நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா!
அன்பு மிகுந்ததெய்வ முண்டு-துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!
மகாகவிக்கு பிறந்தநாள் வணக்கங்கள்.
ReplyDeleteநல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி.
துன்பம் வரும் போது சோர்ந்து விடாமல் தெய்வத்தின் துணை இருக்கிறது
அவர் பார்த்து கொள்வார் என்று தைரியமாக இருக்க வேண்டும்.
இன்று என் பதிவில் நீங்கள் பதிவு போடுவீர்கள் என்று சகோ தேவகோட்டை ஜியிடம் சொன்னேன்.
அது போல உங்கள் பதிவு கண்டு மகிழ்ச்சி.
சார் நலமுடன் வீடு வந்தது அறிந்து மகிழ்ச்சி.
எமது நினைவாஞ்சலியும்கூடி...
ReplyDeleteமகாகவியின் நினைவைப் போற்றிடுவோம்.
ReplyDeleteசிறப்பான பதிவு..
ReplyDeleteவாழ்க பாரதி!..
வணக்கம் சகோதரி
ReplyDeleteதங்களது பாரதியாரின் நினைவை போற்றும் பதிவை இன்று கண்ட பின் மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
தங்கள் கணவர் இப்போது பூரண நலம் பெற்று இருப்பதாக சகோதரி கோமதி அரசு அவர்களின் பதிவில் இன்று மதியம் அதை படித்ததிலிருந்தே மனதுக்கு மகிழ்வாக இருந்தது. அவர்தான் இன்று சகோதரி கீதா சாம்பசிவம் அவர்கள் பாரதியின் நினைவுடன் பதிவொன்று போடுவார் எனக் கூறியிருந்தார். அதன்படி பதிவை போட்டு விட்டீர்கள். கடவுள் அருள் நமக்கு என்றும் உண்டு. தங்கள் கணவர் பழையபடிக்கு முற்றிலும் நன்றாக குணமடைய இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். .
/துன்பம் நெருங்கி வந்த போதும்-நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா!
அன்பு மிகுந்ததெய்வ முண்டு-துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!/
இது அனைவருக்குமே நிதர்சனமான வரிகள். மகாகவி பாரதியின் நினைவை நாம் என்றும் போற்றுவோம். அவரை மறவாமல் அவரையும், அவர் தமிழார்வத்தையும் அடி பணிந்து போற்றி வணங்குவோம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.