நான் தான் முடியாமல் அடிக்கடி படுத்துப்பேன் என்பதால் எனக்கு முடியலைனால் யாரும் அதைத் தீவிரமாக எடுத்துக்கறதில்லை. ஆனால் இம்முறை நம்ம ரங்க்ஸ் படுத்து விட்டார். நவம்பர் 25ம் தேதிக்கு முன்னாடி இருந்தே முடியலை, முடியலைனு சொல்லிட்டு இருந்தார். மருத்துவரிடம் போகச் சொன்னால் போகமாட்டேன் என அடம். அன்னிக்கு சனிக்கிழமை காலம்பர மறுநாள் கார்த்திகைக்கு வேண்டிய பொருட்களை வாங்கி வரச் சென்றபோது மார்க்கெட்டில் வண்டியைப் போட்டுக் கொண்டு விழுந்திருக்கார். சொல்லவே இல்லை. எங்கே எப்படி அடிபட்டதுனு தெரியலை. வீட்டுக்கு வந்து படுத்துக் கொண்டு விட்டார். குளிக்கலை. உம்மாச்சிங்களுக்குப் பூக்கள் எடுத்து வைக்கலை. என்னனு கேட்டால் முடியலை தொந்திரவு பண்ணாதே என்றார். சரினு விட்டுட்டேன். பதினோரு மணிக்கு எழுந்தவர் குளிக்கக் கிளம்ப நான் வற்புறுத்தி மருத்துவரிடம் அனுப்பி வைத்தேன். அங்கேயும் வண்டியில் போயிருக்கார். வண்டியை ஸ்டான்ட் போட்டு நிறுத்த முடியாலை பின்னர் மருந்துக்கடைக்காரர் பார்த்துட்டு உதவி செய்து மருத்துவரிடம் அனுப்பி வைத்தால் 102க்கு மேல் ஜூரம் இருந்திருக்கு. மருந்தை ஐவியில் செலுத்தி எச்சரிக்கை செய்து ஒரு சில பரிசோதனைகளுக்கு எழுதிக் கொடுத்திருக்கார். வீட்டுக்கு வந்து ரசம் சாதம் சாப்பிட்டு மருந்துகளை எடுத்துக் கொண்டு படுத்தவர் சாயந்திரம் தான் எழுந்தார். இப்போ ஒண்ணும் இல்லைனும் சொன்னார்.
மறுநாள் கார்த்திகைக்கு வேன்டிய ஏற்பாடுகளையும் செய்து கொண்டு நடு நடுவே இவரையும் பார்த்துக் கொண்டு இருந்தேன். கார்த்திகை அன்னிக்குக் காலம்பர இருந்து எழுந்துக்கவே இல்லை. ஆனால் என்னிடம் நீ தனியா எப்படி எல்லாவிளக்கையும் ஏத்திக் கொண்டு வைக்கப் போறேனு மட்டும் கேட்டார். எல்லா விளக்குகளையும் ஏற்றவில்லை. கொஞ்சமாத்தான் ஏத்தப் போறேன்னு சொல்லிட்டுக் கார்த்திகைப் பண்டிகையையும் கொண்டாடி முடிச்சாசு.
திங்களன்று பரிசோதனை முடிவுகளுடன் மருத்துவரைப் பார்க்கலாம் என்றால் அவர் வேறொரு மருத்துவரைச் சொல்ல சரினு அவரைப் பார்க்க இருவரும் போனோம். அப்போக் கூட என்னை வர வேண்டாம், நான் மட்டும் போறேன்னு தான் சொன்னார். நான் பிடிவாதமாகக் கூடவே சென்றேன்.முதல் நாளில் இருந்தே தலையில் குத்துவலி மண்டையை உடைக்கிறாப்போல் இருக்குனு சொல்லிட்டு இருந்தார். இந்த மருத்துவர் பார்த்துட்டு ஒரு ஊசி போட்டு அனுப்பினார். சாயந்திரம் கொஞ்சம் சரியாப் போனாப்போல் இருந்தது திடீரென அதிகமாக ஒரே கத்தல், புலம்பல். இரவு நரகமாக இருந்தது. அதுக்குள்ளே இது நரம்பு சம்பந்தமான பிரச்னை என்பதால் அதற்கேற்ற ஒரு மருத்துவ மனை நியூரோ ஒன் என்னும் பெயரில் சத்திரம் பேருந்து நிலையம் அருகே இருப்பதாகவும் அவங்களைத் தொடர்பு கொள்ளும்படியும் நம்ம ரங்க்ஸே சொல்ல அவங்களைத் தொடர்பு கொண்டுப் பேசினேன். உடனே வரச் சொன்னாங்க. ஆனால் நம்மவரோ அன்று செவ்வாய்க்கிழமை என்பதால் மறுத்து விட்டார். இருந்த மாத்திரைகளை வைத்துக் கொண்டு வலியைக் கொஞ்சம் குறைக்க முயற்சி செய்தோம். ஆனால் அன்றிரவு முதல் நாளை விட மோசமாக ஆகி விட்டது. நடு இரவில் திடீரெனப் படுக்கையில் ஆளைக் காணோம். திகிலுடன் தேடினால் குரல் மட்டும் வருது, ஆள் எங்கேனு தெரியலை. அப்புறம் பார்த்தால் பொதுக் கழிவறை ஒண்ணு உண்டு. அதில் விளக்கே போடாமல் கம்மோடில் போய் உட்கார்ந்திருந்தார். மெல்ல மெல்ல பேசிப் பாதி தூக்கி, பாதி இழுத்துக் கொண்டு வந்து படுக்கையில் சேர்த்தேன். இரவெல்லாம் தூங்காமல் விழித்திருந்து விடிந்ததும் முதலில் அந்த மருத்துவமனைக்குத் தொலைபேசி மருத்துவரைப் பார்க்க நேரம் குறித்துக் கொண்டேன். பத்தரைக்கு மேல் தான் வருவாராம்.
மனடில் கவலை/பயம். பையர், பெண், என் மைத்துனர் ஆகியோருக்குத் தகவல் கொடுத்துட்டு எதிர் வீட்டு மாமா உதவியுடன் மருத்துவமனை கிளம்பினேன்.
தனியாக அத்தனையும் பார்த்து கொண்டது இறைவன் தந்த மன பலம் தான். சரியான நேரத்தில் மருத்துவரிடம் அழைத்து சென்றதும் துணைக்கு எதிர்வீட்டு மாமா வந்தது மகிழ்ச்சி.
ReplyDeleteசாரின் தம்பி வந்ததும், மகன், வந்ததும் மேலும் பலம் உங்களுக்கு.
இப்போது எல்லோரும் உடன் இருக்கிறார்களா? ஊருக்கு போய் விட்டார்களா?
இறைவன் அருளால் விரைவில் பூரண நலம் பெற பிரார்த்தனைகள்.
தனியாகப் பார்த்துக் கொண்டது பெரிசில்லை. அம்மா, மாமியார், நாத்தனார்கள் ஆகியோருக்கெல்லாம் மருத்துவமனை சேவை நிறையச் செய்திருக்கேன். ஆனாலும் அதெல்லாம் இப்போ எடுபடாமல் போனதோடு, நீயெல்லாம் எப்படிப் பார்த்துக்கொண்டே! அதுவே பொய்! சும்மாவானும் காதில் பூ சுத்தும் வேலை இது என்றெல்லாம் விமரிசனங்கள். எல்லாவற்றையும் எதிர்கொண்டவண்ணம் இன்றைய தினம் வரை செய்து வருகிறேன். :(
Deleteசார் படுத்து விட்டதால் உங்கள் உடல்நலக்குறைவுகளை பற்றி சிந்திக்க நேரமோ, நினைப்போ இருக்காது. முழு கவனமும் சாரை கவனிப்பதில் இருந்து இருப்பீர்கள்.
ReplyDeleteஉங்கள் உடல் நலத்தையும் பார்த்து கொள்ளுங்கள்.
உண்மையில் நான் சரியாகச் சாப்பிட்டு, காஃபி அல்லது தேநீர் குடித்துப்பல நாட்கள் ஆகிவிட்டன. ஏதோ இருந்தால் குடிச்சுப்பேன். இல்லைனா இல்லை தான். இன்னும் அவருடைய சாப்பாடு ஒரு கட்டுக்குள்ளாக வரலை. நேத்து ப்ரெட் சாப்பிட்டாரே என இன்னிக்குக் கொடுக்க முடியலை. எது ஒத்துக்கும், எது ஒத்துக்காது என்பதே குழப்பமாகி விட்டது. :(
Deleteபடிக்கும்போதே திகிலாகவும், கவலையாகவும் இருக்கிறது. ஜுரம் இருக்கும்போதே குளித்து, அலைந்து அதிகப்படுத்திக் கொண்டு விட்டார் போல... துணைக்கு ஆளில்லாமல் இருவரும் மட்டும் இருக்கும் நிலையில் ரொம்ப பயமாக இருந்திருக்கும்.
ReplyDeleteஎனக்குக் கால் வீங்கி நடக்க முடியாமல் இருந்தப்போவே மாமனார் திதி, பதினெட்டாம் பெருக்கு, கிருஷ்ணன் பிறப்பு எல்லாம் வந்து ஓரளவுக்குக் கொண்டாடினேனே. ஆகவே இப்போ என்னோட கால்களையும் உடம்பையும் மறந்து விட்டேன். இரவு படுக்கும்போது தான் பிரச்னை கடுமையாக ஆரம்பிக்கும்.காலையில் சுத்தமாக தள்ளிவிட்டுவிட்டு நடமாட ஆரம்பிப்பேன். இல்லைனா ரொம்ப மோசம். இந்த அழகில் எங்க இருவருக்கும் ஒரு பயம் திடீர்னு நான் போயிட்டால் அவர் என்ன பண்ணுவார் என்பது தான். நொடிக்கு ஒருதரம் கூப்பிட்டுக் கொண்டே இருப்பார்/இருக்கார். அதான் கவலை. கைக்குழந்தையைப் பார்த்துக்கறாப்போல் தான் பார்த்துக்க வேண்டி இருக்கு.
Deleteஏன் வேண்டாத எண்ணமெல்லாம்? மனசே பாதி மருந்து. உற்சாகமாக இருங்கள். படிக்கும்போது கஷ்டமா இருக்கு.
Deleteஆண்டவன் அருளால் மாமவுக்கு இப்போது உடல்நிலை கம்ப்ளீட்டா நார்மலாக ஆகியிருக்கும் என்று நம்புகின்றேன்.
ReplyDeleteஓரளவு நார்மல் தான். கழிவறைக்கு எங்க உதவி இல்லாமல் போய்விட்டு வருகிறார். எழுந்துக்க வசதியாக ஒரு சாதனம் அமேசான் மூலம் வாங்கிப் போட்டிருப்பதால் இரு பக்கமும் பிடித்துக் கொண்டு அவரே எழுந்துக்கலாம். தூக்கி விட்டுக் கொண்டிருந்தோம். வாக்கர் உதவியோடோ அது இல்லாமலோ வீட்டுக்குள்ளாகவே பத்து, இருபது நிமிடங்கள் நடக்கிறார். பால் கணக்கு மற்றக் கணக்குகள் எல்லாம் சரியாகக் கவனிச்சுப் பார்க்கிறார். இன்னும் தலை சுற்றல், மயக்கம் தீர்ந்துஎழுந்து உட்காரணும். பிசியோதெரபிஸ்ட் வந்து கை, கால் அசைவுகளுக்கும் கழுத்துப் பிடிப்புக்கும் கழுத்துப் பக்கம் எலும்பு கடினமாக ஆகி இருப்பதற்கும் சிகிச்சை கொடுத்து வருகிறார்.
Deleteகேட்க கொஞ்சம் நிம்மதியாவும் சந்தோஷமாவும் இருக்கு. நல்லபடி ட்ரீட்மெண்ட் எடுத்து முழுவதும் சரியாக வேண்டும். __/\__
Deleteஹப்பா கீதாக்கா இதை வாசிக்க சந்தோஷமாக இருக்கு. கொஞ்சம் நிம்மதியாகவும் இருக்கு. விரைவில் சரியாகிவிடுவார்.
Deleteபிரார்த்தனைகள்
கீதா
வணக்கம் சகோதரி
ReplyDeleteநலமா? எப்படியிருக்கிறீர்கள்? பதிவை படிக்கும் போதே மனதுக்கு கஸ்டமாக இருந்தது. தீடிரென உங்கள் கணவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அதுவும் பண்டிகை சமயத்தில் உங்கள் மனம் என்ன பாடு பட்டிருக்கும் என்பதை என்னால் உணர முடிகிறது. குழந்தைகளையும் உடனே வரவழைக்க இயலாத சூழ்நிலைகள். மிகவும் மனத்தளர்ச்சி அடைந்திருப்பீர்கள் . இறைவனின் மேல் உள்ள தங்கள் நம்பிக்கையும், இயல்பான தங்கள் மன தைரியமும் பக்கபலமாக நின்று உதவியிருக்கின்றன.
இப்போது மாமா பூரண குணமடைந்திருப்பார் என நினைக்கிறேன். உடல் உபாதைகள் இல்லாத வாழ்வை உங்களிருவருக்கும் இறைவன் அருளவும் மனதார பிரார்த்தித்துக் கொள்கிறேன். இறைவன் துணை எப்போதும் நமக்கு நல்லதை மட்டுமே நடத்தி தரட்டும். பிரார்த்திக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
அன்புடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, மெதுவாக நலம் பெற்று வருகிறார். சாப்பாடு தான் இன்னமும் பிரச்னை. நேற்றுச் சாப்பிட்ட ப்ரெடோ, கஞ்சியோ இன்னிக்கு ஒத்துக்கறதில்லை. சில சமயங்கள் வயிற்றுப் போக்கு வந்து விடுகிறது. பையர் ஏற்கெனவே டிசம்பரில் எட்டுத்தேதி வாக்கில் இந்தியா வர இருந்ததால் அதைக் கான்சல் செய்து விட்டு டிக்கெட்டை முன் தேதி போட்டு வாங்கி டிசம்பர் மாத ஆரம்பத்திலேயே வந்துட்டார். பெண் பின்னால் டிசம்பர் 15 தேதி போல் வந்தாள்.
Deleteஇப்போது உங்கள் கணவருக்கு எப்படியிருக்கிறது கீதா? நலமாக வீடு திரும்பி விட்டார்களா? எல்லாம் சரியாகி விடும். கவலைப்படாமல் இருங்கள்.
ReplyDeleteநல்லபடியாக வீடு திரும்பி விட்டார் மனோ சாமிநாதன். கவலைகளை வெளிக்காட்டிக்கொள்ள மாட்டேன். அதுவே பல சமயங்களில் பிரச்னையாகவும் ஆகி விடும்.
Deleteபதிவை படிக்கின்ற போதே வருத்தமாக இருக்கின்றது..
ReplyDeleteஇறைவன் அருளால் விரைவில் பூரண நலம் பெற பிரார்த்தனைகள்..
அக்கா தாங்களும் தங்கள் உடல் நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள்..
இறைவன் துணை..
இறை அருளால் குணம் பெற்று வருகிறார். விரைவில் சரியாகும் என் எதிர்பார்க்கிறோம். நன்றி தம்பி.
Deleteஇப்ப இதை வாசிக்கிறப்ப லேட்டஸ்ட் நியூஸ் இப்ப பரவாயில்ல கொஞ்சம் இம்ப்ரூவ் ஆகி வருகிறார் என்று நீங்க சொல்லி இருந்தாலும் ஆனா இப்ப இதை வாசிக்கும் போது எவ்வளவு நீங்க அன்னிக்கு அந்த முதல் நாள் எவ்வளவு சிரமப்பட்டு இருக்கீங்கன்னு தெரிகிறது யாரும் பக்கத்துல இல்லாம நீங்களும் இவ்வளவு சிரமத்தோட உங்களுக்கும் உடல்நல பிரச்சினைகள் இது இடையில மாமாவையும் கவனிச்சிட்டு இருந்திருக்கீங்க நிஜமாகவே உங்களுக்கு மனோ தைரியமும் மனோ சக்தியும் இருந்திருக்கிறது அந்த மாபெரும் சக்தி உங்களுடன் இருந்திருக்கிறது .
ReplyDeleteகீதா
வாங்க தி/கீதா, ரொம்ப நன்றி. அடிக்கடி வாட்சப் மூலம் விசாரிக்கும் உங்களுக்கும், கோமதி அரசுக்கும், நெல்லைக்கும், ஸ்ரீராமுக்கும் என் மனமார்ந்த நன்றி.
Deleteஅவர் உடனே போயிருந்தா கொஞ்சம் நல்லா இருந்திருக்கும் ரொம்ப தன்னை வருத்திக் கொண்டு விட்டார் என்று தெரிகிறது. வயசான காலத்துல அதுவும் ரெண்டு பேரும் வயசானவங்க அப்போ நாம சில விஷயங்கள்ல நம்ம கொஞ்சம் உடனேயே நடவடிக்கை எடுக்கணும் அதுதான் நல்லது.. இப்ப மாமா குணமடைந்து இருப்பார் என்று நினைக்கிறேன் அல்லது குணமடைந்து வந்து கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.. பிரார்த்தனைகள். உங்க உடல்நலத்தையும் கவனிச்சுக்கோங்க கீதா அக்கா உங்க பையர் இப்ப கூட இருப்பார் என்று நினைக்கிறேன்
ReplyDeleteகீதா
ஐயோ அக்கா அன்று கூகுள் குரல் வழி பதிவு செய்ததுனால 'அவர் உடனே மருத்துவமனை போயிருந்தா நல்லா இருந்திருக்குமே...என்று சொன்னதில் மருத்துவமனை விட்டுப் போயிருக்கே.....பிரார்த்தனைகளுடன்.....துளசியின் கருத்தைப் போட வந்தப்ப இப்ப தான் கவனிச்சேன்.
Deleteகீதா
ஹாஹா, நான் சரியாப் புரிஞ்சுண்டேன். எல்லோரும் ஊருக்குப் போயாச்சி. இப்போ நாங்க மட்டும் தான். காலை நாலரைக்கு எழுந்தால் கூட மதியம் பனிரண்டு வரை நேரம் பறந்து விடுகிறது. சில நாட்கள் முக்கிய அலுவல்களுக்காகக் கணினியைத் திறப்பேன். இல்லைனா முடியவே முடியாமலும் போகும். ஏதோ நேரம் ஓடிக் கொண்டிருக்கிறது. நானும் அதோடு ஓடுகிறேன்.
Deleteபுரிந்து கொள்ள முடிகிறது கீதாக்கா. ஓ தனியா இருக்கீங்களா ரெண்டு பேரும்.....நாங்கள் எல்லாரும் எங்கேயோ இருக்கோம். பக்கத்தில் கூட இல்லை ஏதோ ஏதாவது உதவலாம் என்றால்...பல சமயங்களில் நினைத்துக் கொள்கிறேன் கீதாக்கா. பிரார்த்தனையில் கண்டிப்பாக இடம் உண்டு.
Deleteகீதா
இந்த வய்திலும் தைரியமாக எதிர்கொள்வது நல்லதுதான் என்றாலும் இறைவன் உங்களுடன் எப்போதும் இருப்பார். இருக்கிறார். பதிவை வாசித்த போது வயதாகும் போது எத்தனை பிரச்சனைகள் என்று தெரிகிறது. உங்கள் கணவர் விரைவில் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.
ReplyDeleteதுளசிதரன்
நிச்சயமாய், அந்த இறைவன் துணை இல்லாமல் நான் இத்தனை வருடங்கள் குடும்ப வாழ்க்கை வாழ்ந்திருக்க முடியாது. அதை ஒவ்வொரு நிமிடமும் உணர்ந்து வருகிறேன். நன்றி திரு துளசி அவர்களே!
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteஇப்போது தங்கள் கணவர் நல்லபடியாக நலம் பெற்று வருகிறார் என்பதை தங்களின் பதில்கள் மூலமாக தெரிந்து கொண்டேன். மனதிற்கு நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் உள்ளது அவர் உடல் நலத்தை தாங்கள் கவனமாக கவனிப்பதோடு தங்கள் உடல் நலத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள். உதவிக்கு உறவில் நெருக்கமானவர்கள் யாரையாவது கொஞ்ச நாட்கள் உடன் வைத்துக் கொள்ளலாம். ஆனால் இப்போதைய காலகட்டத்தில் உதவி என்றாலே உறவுகள் ஒதுங்கி விடுகின்றனர். இறைவன் ஒருவனே துணையாக இருந்து நலமாக நடத்தித் தருவார் என நம்பிக்கை கொள்வோம். நானும் உங்கள் கணவர் பூரண குணமடையவும், உங்கள் நலத்திற்காகவும் இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி சகோதரி.
அன்புடன்
கமலா ஹரிஹரன்.