தெரியாத்தனமா ஜியோ மார்ட்டில் பழம் வாங்க ஆர்டர் கொடுக்கும்படி ஆச்சு. நம்ம ரங்க்ஸுக்கு மாத்திரைகள் சாப்பிடும்போது தொண்டையில் மாட்டிக்கும். அதை உள்ளே தள்ள வாழைப்பழம் தேவைப்படும் சோதனையாக நான்கு நாட்களாக வாழைப்பழமே கிடைக்காமல் யாரைக் கேட்டாலும் காயாக இருக்குனே சொல்லவே ஜியோவில் ஏலக்கியும் ரொபஸ்டாவும் செவ்வாழையும் ஆர்டர் பண்ணினேன், பணம் 138 ரூபாய்க்குள் தான் வந்தது, ஜிபே பண்ணிடலாம்னு பார்த்தால் உங்க வீடு இந்த உலகில் இருக்கும் லொகேஷனை ஷேர் பண்ணுனு கேட்டது. சரினு சொல்லவே இது இல்லைனு ஒரே மறுப்பு, சரினு போட்டால் அதையும் ஒத்துக்கலை, மறுபடி அடியில் இருந்து ஆரம்பிச்சு வந்தால் ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ பழங்களே ஸ்டாக் இல்லையாம். எல்லாம் வித்துப் போச்சாம். இது என்னடா புதுசா இருக்கேனு மறுபடி போனால் ஜியோ வராமல் ஸ்மார்ட் பஜாரோ பிக்பஜாரோ ஏதோ ஒண்ணு வந்தது. இம்முறையும் 200 ரூபாய்க்குக் கீழே வந்தது. அப்போ பில்லை எடிட் செய்தால் தானாக இரண்டு இளநீரும் அதில் சேர்ந்து 228 காட்டியது, ஆனமட்டும் முயன்று அதை நீக்கப் பார்த்தால் போகவே இல்லை.
பேமென்டுக்கு போயிடுச்சு. தொலையட்டும் இளநீர் தானே ஆளுக்கு ஒண்ணாக் குடிச்சுத் தொலைக்கலாம்னு பேமென்ட் பண்ணிட்டு அன்னிக்குப் பூராப் பார்த்தால் ஒண்ணுமே வரலை. க்ர்ர்ர்ர்ர்னு எனக்கு நானே சொல்லிட்டு அவங்க மெசேஜைப் பார்த்தால் ட்ராக்கிங் லிங்க் இருந்தது. என்னோட மொபைலோ அதை ட்ராக் செய்யாதே ஏதோ புறம்போக்குப் போலத் தெரியுதுனு சொல்லுது. இருந்தாலும் தைரியமாப் போய்ப் பார்த்தால் 12 ஆம் தேதி ஆர்டரை 14 ஆம் தேதி தான் அனுப்புவாங்களாம். சரியாப் போச்சுனு நினைச்சேன். உள்ளூர் அண்ணாச்சி கடையிலேயே பார்த்த உடனே வாங்கிடலாமேனு நினைச்சேன். இனி ஒண்ணும் செய்ய முடியாதுனு காத்திருந்தேன். ரொம்பப் பெருமையா நேத்திச் சாயங்காலம் ஒரு பையர் வந்து ஓடிபி கேட்டுக்கொண்டு பழங்களைக் கொடுத்தார். ஏன் இவ்வளவு தாமதம் எனக் கேட்டதுக்கு பதில் இல்லை. அதில் என்னமோ பத்து ரூபாய் திருப்பிக் கொடுக்கிறாங்களாம். ஏன்னு புரியலை. அக்கவுன்டில் கிரெடிட் ஆகும்னு மெசேஜ் வந்தது.
இன்னிக்கு மத்தியானம் நோன்பு எல்லாம் ஆகி ரங்க்ஸுக்கும் சாப்பாடு கொடுத்துட்டு ஒன்றரை மணி அளவில் அப்பாடானு படுத்தால் உடனே ஃபோன். ஜியோவிலிருந்து ஒருத்தர் கீதா மேடம்னு கூப்பிடவே, சொல்லுங்கனு சொன்னேன். ஏன் 218 ரூபாய்க்குப் பொருள் வாங்கினீங்க? இது யார் சொல்லி ஆர்டர் கொடுத்தீங்க? நீங்களாக் கொடுத்தீங்களா? யாரானும் சொன்னாங்களானு எல்லாம் ஆராய்ச்சியை ஆரம்பிச்சார். எனக்கு வந்த கடுப்பில் நான் ஆர்டர் செய்தவை எனக்கு நேத்திக்கே வந்தாச்சு. அத்தோடு ஆளை விடுங்கனு சொல்லிட்டுத் தொலைபேசியை அணைச்சுட்டு மறுபடியும் படுத்துட்டேன். சரிதானே? என்னோட தேவை வாழைப்பழங்கள் மட்டும். அவங்க கிட்டே ஆயிரம் பொருட்கள் இருந்தால் எல்லாத்தையுமா வாங்க முடியும்? தேவையான வாழைப்பழங்களை மட்டும் யாரையும் கேட்டுக்காமல் நானாக ஆரடர் செய்தேன். இதுக்குப் போய் எம்புட்டு ஆராய்ச்சி? என்னவோ போங்க. இந்த பிக் பாஸ்கெட், பிக் பஜார், ஜியோ மார்ட், டி மார்ட் இதெல்லாமே ஏனோ எனக்கு அவ்வளவு உகந்ததாய்த் தெரியலை, நேத்திக்குப் பாருங்க காஃபி பவுடர் வேணும்னு எப்போவும் வாங்கற கடையிலே வாட்சப் மூலம் செய்தி கொடுத்ததும் சாயங்காலமே வந்துடுத்து.இதல்லவோ வியாபாரம்!
நோன்பு படங்கள் அருமை. நீங்கள் வருஷக்கணக்காய் செய்து வருவதை என்று தொடருங்கள்.
ReplyDeleteபேத்தி வந்து பார்த்து கருத்து சொல்லி இருப்பார். பிரசாதம் நன்றாக இருப்பதாக சொல்லி இருப்பார்.
சார் நல்லபடியாக குணமாகி வருகிறார் என்று நினைக்கிறேன்.
பேத்தி பார்த்துட்டு சாவித்திரி கதையை விபரமாக இன்னும் முழுமையாக அம்மாவிடம் கேட்டுத் தெரிந்து கொண்டதாய்ச் சொன்னாள். அவளும் பள்ளியில் இருந்து வந்ததும் குளித்துவிட்டு நோன்புச் சரடு கட்டிக் கொண்டதாகவும் சொன்னாள். பிரசாதம் எல்லாம் அவளுக்கு அவ்வளவு விருப்பம் இல்லை. சாப்பாடு ரொம்ப சுமார் ரகம் தான். காரமாக சிப்ஸ், காராபூந்தி, அடை, தோசை+தக்காளி சட்னி என்று சாப்பிடுவாள்.
Deleteஆன்லைன் ஆர்டர்களில் பல குழப்பங்களும் உள்ளன. நான் கால்வலி என்று பையரிடம் சொன்னதற்கு அவன் ஆன்லைனில் அமேஜானில் ஒரு பாத, கால் மாசேஜ்ர் (10000ரூ) ஆர்டர் செய்து எனக்கு திருவனந்தபுரத்தில் டெலிவரி செய்தார்கள். அது பவர் ஆன் ஆக மாட்டேங்கிறது. யாரை காண்டாக்ட் செய்யணும் என்று தெரியவில்லை. பையருக்குத் தான் தெரியப்படுத்தவேண்டும். விற்றவர் யார் என்று தெரியவேயில்லை.
ReplyDeleteJayakumar
எனக்குப் பல வருஷங்களாகத் தெரிந்த காய்கறிக்கடை பக்கத்திலே தான் இருக்கு. தொலைபேசியில் சொன்னால் போதும் மாலைக்குள் அனுப்பிடுவாங்க. இது பெண்/பிள்ளை/மைத்துனர் ஆகியோரின் தொந்திரவு தாங்க முடியாமல் வாங்கினேன். கடைசியில் இதிலும் தகிடுதத்தம் உண்டு எனப் புரிந்தது. உங்கள் கருத்துக்கு நன்றி. நான் ஆன்லைன் வியாபாரமே வைச்சுக்கறதில்லை. இனிமேலும் வைச்சுக்க மாட்டேன்.
Deleteமசாஜ் மெஷின் அமேசான் மாற்றிக் கொடுத்து விட்டது. ஹீட்டர் வசதியும் உண்டு. கால்களை இதமாக பிடித்து விடுகிறது.
DeleteJayakumar
இருந்திருந்து நீங்கள் ஆன்லைனில் பொருட்கள் வாங்க ஆரம்பித்தால் எவ்வளவு சோதனை! பழங்களை ஸ்விக்கியிலோ, ஜோமாட்டோவிலோ போட்டால் அன்றே கிடைக்கும்.
ReplyDeleteஹாஹாஹா, ஸ்ரீராம், பாருங்க நம்ம அதிர்ஷ்டத்தை! ஸ்விகி//ஜொமோட்டோவில் பழங்கள் வாங்குவது பற்றித் தேடினாலும் கிடைக்கலை. விட்டுட்டேன். ஆனால் எங்க பழக்கடைக்காரர் நேற்றிரவு கூட மாதுளம்பழங்கள் அனுப்பி வைச்சார். :) ஆகவே இதே போதும்னு விட்டுட்டேன்.
Deleteசெவ்வாழையில் ஒரு கஷ்டம். வாங்கும் சமயம் உடனடியாக சாப்பிடக்கூடிய நிலையில் இருக்காது. அந்நிலைவ் அததும் விரைந்து அழுகி விடும்!
ReplyDeleteவாழைப்பழங்கள் விரைவில் செலவாகிடும்.ஆகவே இங்கே பிரச்னை இல்லை. சில சமயம் கிடைப்பதில்லை. அப்போதான் பிரச்னை.
Deleteகாரடையான் நோன்பு வாழ்த்துகள். சிறப்பாக எளிமையாக கொண்டாடி விட்டீர்கள்.
ReplyDeleteThank You Sriram.
Deleteகாரடையான் நோம்பு படங்கள் அருமை. சீக்கிரமே மாமா பூரண குணம் அடையப் பிரார்த்தனைகள்.
ReplyDeleteThank You Surya!
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteநலமா? பதிவு அருமை. இந்த மாதிரியான சௌகரியங்கள் இப்போது ஒவ்வொருவருக்கும் இயல்பாகி விட்டன. நமக்குத்தான் இன்னமும் வெளியில் நடந்து சென்று தேடித்தேடியோ இல்லை, நமக்கு பழக்கமான கடைகளில் வாங்கி வருவதோ பிடித்தமானதாக உள்ளது.
இதில் நாம் கேட்கும் சாமான்களை உடனடியாக வரவழைப்பதும் உள்ளதே!! ஒரு நாள் கழித்து வரவழைக்கும் வசதியும் உள்ளது. எங்கள் குழந்தைகள் எப்போதும் இந்த ஆன்லைன் வியாபாரங்கள்தான் சுலபம் என்கிறார்கள்.
நேற்று நோன்பு நல்லபடியாக நடைபெற்றது குறித்து மகிழ்ச்சி. தங்கள் பேத்திக்கு இந்த நோன்பிற்கான காரணங்களை சொல்லி விட்டீர்களா? ஆர்வத்துடன் கேட்டு பல கேள்விகளையும் எழுப்பி அதற்கான விடைகளையும் பெற்றிருப்பாள் .
நோன்பு படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. அழகான ஸ்ரீ ராமரை தரிசித்துக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, வரவுக்கும் கருத்துக்கும் நன்/றி. பேத்திக்கு சத்யவான்/சாவித்ரி கதையைச் சொல்லி இருந்தேன். அதை முழுமையாக அவள் அம்மாவிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு நேற்றுப் பள்ளியிலிருந்து வந்ததும் குளிச்சுட்டுச் சரடும் கட்டிக் கொண்டிருக்காள். குழந்தைக்கு இதில் எல்லாம் ஈடுபாடு இருப்பது சந்தோஷமாகவும் இருக்கு. இது தொடரணுமேனு கவலையாவும் இருக்கு. பார்ப்போம். ஆன்லைன் வியாபாரங்கள் எனக்கெல்லாம் சுலபம் இல்லை. இப்போத் தான் மாமாவுக்காகச் சில சமயம் டிஃபன் ஸ்விகி மூலம் வரவழைப்பேன். அதுவும் கடந்த இரண்டு மாதமாகத் தான்.
Deleteநமது பணத்தில் பொருள் வாங்க நமக்கு உரிமை இல்லையா ?
ReplyDeleteவாங்க கில்லர்ஜி, பார்த்தே பல நாட்கள் ஆகி விட்டன. மீண்டும் துபாய் வாழ்க்கை நன்றாகப் போகும்னு நம்பறேன். ஆன்லைன் வியாபாரத்தில் ஏன் வாங்கறோம்/எதுக்கு வாங்கறோம்/யாரானும் சிபாரிசு செய்தாங்களா? ஏன் குறைவான பணத்தில் வாங்கறோம்/மற்றப் பொருட்கள் வேண்டாமானு எல்லாத்துக்கும் பதில் சொல்லணுமாம். போயிட்டு வாங்கப்பானு அனுப்பி வைச்சுட்டேன். இஃகி,இஃகி,இஃகி,இஃகி
Deleteநோன்பு படங்கள் அழகு தரிச்னம்... நல்ல நாட்கள் தொடரட்டும்..
ReplyDeleteஆன் லைன் ஆட்டுக்குட்டி லைன் இதெல்லாம் நமக்கு ஒத்துவராதவை.. நான் ஈடுபடுவதில்லை.
நோன்பு படங்கள் நன்று.
ReplyDeleteஆன்லைன் ஆர்டர் - சில சமயங்களில் இப்படி படுத்திவிடும். இங்கே ஆர்டர் செய்த சில நிமிடங்களில் பொருட்களை டெலிவரி செய்யும் வசதிகள் உண்டு - Zepto, Blinkit என பல செயலிகள் இருக்கின்றன. அதிகபட்சம் 30 நிமிடங்களில் பொருட்கள் வீட்டு வாசலில் வந்து சேர்ந்துவிடுகின்றன.
நோன்பு படங்கள் பிரசாதங்கள் அருமை.
ReplyDeleteகுட்டிக் குஞ்சுலு படங்கள் பார்த்து மகிழ்ந்திருப்பாள்.
நலமாக இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.