எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, June 06, 2024

தேர்தல் முடிவுகள்

 தேர்தல் முடிவுகள் அனைவரின் கணிப்பையும் பொய்யாக்கி உள்ளது. மோதிக்கு வெற்றியா எனில் தனிப்பட்ட முறையில் வெற்றி தான்,. ஆனால் பொதுவில் பார்த்தால் இம்முறை அவர் பிரசாரம் சரியில்லை, தனிமனிதத் தாக்குதல்கள் இருந்தன. பேச்சில் கொஞ்சம் கர்வம் தலைதூக்கி இருந்ததோ? அதோடு இல்லாமல் அயோத்தியில் பல பழமை வாய்ந்த ஆகம முறைப்படியான கோயில்கள் இடிக்கப்பட்டதில் மக்களுக்கு அதிருப்தி. மேலும் இம்முறை எதிர்க்கட்சிகள் கூட்டணியில் உ.பியின் அகிலேஷும், ராகுலும் நன்றாக உழைத்தனர். போதாததற்கு சோனியாவின் உணர்வு பூர்வமான பேச்சும் சேர்ந்து கொண்டது.

ராஜிவ் காந்தியைப் பற்றியும் இந்திரா காந்தியைப் பற்றியும் பேசியதை மக்கள்   ரசிக்கவில்லை. ஆக இந்த வெற்றியானது கஷ்டப்பட்டுப் பெற்ற வெற்றியே அன்றி மோதிக்காக வந்தது இல்லை. அதோடு இல்லாமல் நிதிஷ்குமாரையோ, சந்திரபாபு நாயுடுவையோ எவ்வளவுக்கு நம்பலாம்? சந்தேகமே! இப்போதே நிதிஷ் குமார் இந்தியா கூட்டணியுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக அரசல், புரசலாகச் செய்திகள் வருகின்றன. ஒரே ஆறுதல் நிதிஷ்குமார் பிரதமர் ஆவதற்கு இந்தியா கூட்டணியில் அனைவரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதும் அங்கே பிரதமரைத் தேர்ந்தெடுப்பதில் உள்ள சிக்கல்களும் தான்.

 எல்லாவற்றையும் மீறிக் கூட்டணி ஆட்சி அமைத்தால் ஒரு வருடம் ஓடினாலே பெரிய விஷயம். என் டி ஏ கூட்டணியும் கூட இரு வருஷங்கள் தாக்குப் பிடித்தால் பெரிய விஷயம். கூடிய விரைவில் மீண்டும் பாராளுமன்றத் தேர்தலைச் சந்திக்க வேண்டி இருக்குமோனு தோணுது. இப்போதைய தேர்தலில் பாஜக அதிக அளவில் மாபெரும் வெற்றி பெறாததுக்குக் காரணம் தேர்தல்கள் விட்டு விட்டு நடந்தவையும் ஒரு காரணம். ஒரு வாரத்துக்குள்ளாக அனைத்துப் பகுதிகளுக்கும் தேர்தல் நடந்திருந்தால் கருத்துக் கணிப்புகள் பலித்திருக்கும். இப்போது இடைவெளி நிறைய இருந்ததால் மக்கள் சிந்திக்கத் தலைப்பட்டிருக்கலாம். ஆனாலும் தமிழ்நாட்டைப் பற்றி ஒண்ணும் சொல்வதற்கில்லை. யானைக் கதை தான்.

5 comments:

  1. தேர்தல் பிரச்சாரத்தில் நீங்கள் முதலில் சொல்லியிருப்பதுதான் எனக்கும் தோன்றியது.

    என்னைப் பொருத்தவரை எந்தக் கட்சியாக இருந்தாலும், எந்தத் தலைவராக, கட்சி ஆளாக இருந்தாலும் மற்ற கட்சிகளையோ தலைவர்களையோ தாக்கிப் பேசாமல், அவர்கள் அப்படிப் பேசினாலும் அதைக் காதில் வாங்காமல், அப்படிப் பேசுவதற்குப் பதிலாக என்ன செய்யப் போகிறார்கள் எதையெல்லாம் முன்னேற்ற வேண்டும் மக்களுக்காக என்ன திட்டங்கள் வைத்திருக்கிறார்கள், கல்வி, மருத்துவம் என்றெல்லாம் அதிகம் பேசியிருந்தால் ஆரோக்கியமாக இருந்திருக்கும். இருக்கும். சுயதம்பட்டங்கள் இல்லாமல் இருந்திருக்க வேண்டும். மத்தியோ மாநிலமோ எதுவாக இருந்தாலும்...

    கீதா

    ReplyDelete
  2. நீண்ட இடைவெளி. மாமா எப்படி இருக்கிறார். தானே நடக்க முடிகிறதா?
    Jayakumar

    ReplyDelete
  3. என்னவோ காரணங்கள்... ஏதோ நடந்து விட்டது. தமிழ்நாட்டு நிலை இன்னும் மோசம்!

    ReplyDelete
  4. எப்படியோ நீங்கள் மகிழ்ச்சியானால் மகிழ்ச்சியே....

    இதோ டோல்கேட் கட்டணம் உயர்ந்து விட்டது.

    தமிழ் நாட்டில் 40 நபர்களின் வாழ்வாதாரம் உயர்ந்து விட்டது அதில் சிலர் அமைச்சர்கள் ஆகலாம் ஆனால் மக்களுக்கு பயன் ?

    ReplyDelete
  5. வணக்கம் சகோதரி

    நலமா? தாங்களும், தங்கள் கணவரும் நலமாக இருக்கிறீர்களா? குழந்தைகள் உதவிக்கு வந்திருக்கின்றார்களா ? உங்கள் பதிவை பார்த்ததும் மகிழ்வாக உள்ளது. உடல்நிலையை கவனித்துக் கொள்ளுங்கள். எப்போதும் போல் மேலும் பல பதிவுகளை தர வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete