எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, November 04, 2024

தீபாவளிக் கொண்டாட்டம் முடிஞ்சது.

இந்த வருஷம் நவராத்திரிக்கு ஏதானும் எழுதணும்னு ஆரம்பிச்சுக் கடைசியில் ஒண்ணுமே எழுதலை. நேரம் சரியாகப் போய் விட்டது. அதோடு ஹோம்கேர் பெண்களுக்காகப் போட்டிருந்த கான்ட்ராக்டும் முடிஞ்சுடுத்து என்பதால் தாற்காலிகமாக மேல்கொண்டு கான்ட்ராக்டை நீட்டிக்கவில்லை. ஆகவே இப்போது பெண்கள் வருகையும் இல்லை. எப்படியோ சமாளித்துக் கொண்டிருக்கேன். மருத்துவமனை செல்லும்போது மட்டும் ஹோம்கேரிடம் கேட்டுக் கொண்டு யாரானும் ஒரு நர்சிங்க் உதவியாளரை அனுப்பச் சொல்லிக் கூட்டிப் போகிறேன். இந்த அழகில் நவராத்திரிக்கு வருபவர்களைக் கவனிச்சு அனுப்பினாலே போதும்னு ஆயிடுத்து. தினமும் அநேகமாகச் சுண்டல் என்னமோ பண்ணினேன், அவருக்கு நல்லதாச்சே. வருபவர்களுக்கு மட்டும் வெற்றிலை, பாக்கு வைச்சுக் கொடுத்தேன் கொலு என்னும் பெயரில் என் தம்பி எப்போவோ பாண்டிச்சேரியில் இருந்தப்போ வாங்கின டெரகோட்டா பிள்ளையார்களை வைச்சுட்டேன். அயோத்தி ராமரும்,பழைய கொலு பொம்மையில் ஒரு இசைக்கும் மிருகமும் மட்டும் கிடைச்சது. இன்னமும் எடுக்கிறேன்னு வேலை செய்யும  பெண் சொன்னார்தான்,. ஆனால் இடம் இல்லை. துவே தொலைக்காட்சிப் பெட்டியைக் கொடுத்துட்டோம் இல்லையா? அந்த இடத்தில் வைச்சேன். சரஸ்வதி பூஜை அன்னிக்குப் படத்தை வைத்துச் சில புத்தகங்கள் மட்டும் வைத்தேன். ரங்க்ஸால் உட்கார்ந்து பூஜை எல்லாம் பண்ண முடியாதே. ஆகவே பூவைப் போட்டுட்டு தீபாராதனை மட்டும் காட்டினேன். ரவிக்கை, புடைவை வைக்க மறந்து விட்டது.  பூஜை தான் பண்ணலையேனு மனதை சமாதானம் செய்து கொண்டேன், வேறே வழி








நவராத்திரிக் கோலம்





பொம்மைகள்


 


சரஸ்வதி பூஜை



அடுத்து தீபாவளி வருதே! என்ன செய்யறது? காட்டன் புடைவைகள் 2,3 இருந்தது தான். ஆனால் அவை தினப்படிக்காக வாங்கினவை. தீபாவளிக்குனா நாங்க அநேகமா விஜயதசமி அன்னிக்குப் போய் வாங்குவதை வழக்கமாக வைச்சிருந்தோம், எனக்குக் காலில் பிரச்னை வந்ததில் இருந்தே அது முடியாமல் போச்சு. புடைவைக்காரர் வீட்டுக்கு வருவார்/அல்லது பக்கத்தில் இருக்கும் கடைக்கு முக்கி, முனகிக் கொண்டு நான் வர ரங்க்ஸ் அழைத்துப் போவார். பக்ஷணங்கள் செய்ய வேண்டாம்னு ஏற்கெனவே முடிவு பண்ணிட்டோம். ஏனெனில் என்னால் சாப்பாடு பண்ணும்போது நிற்பதே சிரமமாகப் போய் விட்டது. ஆகவே பக்ஷணங்கள் ஆர்டர் கொடுத்துட்டோம். எல்லாம் கால் கிலோ தான்.  வீட்டில் எண்ணெய் வைக்கணும்னு பஜ்ஜியும், மைசூர்ப்பாகும் மட்டும் பண்ணலாம்னு நினைச்சிருந்தேன். அதே போல் பண்ணிட்டு மருந்தும் கிளறிட்டேன்.


இந்தப்புடைவை விவகாரமும், ரங்க்ஸுக்கு வேஷ்டி எடுப்பதும் மட்டும் தான் பிரச்னை. ரங்க்ஸ் காதியில் தான் எடுத்துப்பார். ஸ்ரீரங்கத்திலேயே காதி பண்டார் இருப்பதால் எடுத்துடலாம். ஆனால் யார் போவது? அவராலும் முடியாது. என்னாலும் முடியாது. வேலை செய்யும் பெண்மணி கை கொடுத்தார். அவங்க வீட்டில் அவங்க கணவருக்கு அவர் தான் போய் எடுத்து வருவாராம். அதே காதி கடையில். ஆகவே நீங்க சொல்லுங்க நான் எடுத்துட்டு வரேன்னு சொல்லிட்டு ஒரு நல்ல நாள் பார்த்து எடுத்து வந்துட்டார். அன்றே நான் கோ ஆப்டெக்ஸில் நெகமம் காட்டன் புடைவைகளைப் பார்த்து ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஆர்டர் கொடுத்தால் பேமென்ட் டிடெயில்ஸே வரலை. அப்புறம் யதேச்சையாகப் பெண்ணிடம் சொல்ல அவள் உடனே கோ ஆப்டெக்ஸ் வெப்சைட்டில் போய் அந்தப் புடைவையைத் தேர்ந்தெடுத்துப் பணத்தையும் கட்டி ஆர்டர் செய்து விட்டாள். நடுவில் ஒரு நாள் ஞாயிறு என்பதால் திங்களன்று புடைவை வரும் எனச் செய்தியும் வந்து விட்டது. அதே போல் திங்களன்று புடைவையும் வந்து விட்டது. 



ஆக தீபாவளி கொண்டாட்டத்துக்குத் தயார். தீபாவளி அன்று காலை மூன்று மணிக்கே எழுந்து வாசலில் முதல் ஆளாகக் கோலமும் போட்டேன். 





சாமி இடமும் துடைத்துக் கோலம் போட்டுப் பலகையிலும் கோலம் போட்டு எண்ணெய் காய்ச்சி, சீயக்காய், மஞ்சள் பொடி கரைத்தும் எடுத்து வைச்சேன், வாங்கிய பக்ஷணங்களோடு என்னோட புடைவைகளையும், ரங்க்ஸோட வேட்டி, ஷர்ட், துண்டையும் வைச்சேன். நான் எப்போவும் ஒரே ஒரு புடைவையாக வைக்க மாட்டேன் என்பதால் காட்டன் புடைவைகளில் ஒன்றை எடுத்து வைச்சு இரண்டு புடைவையாக வைச்சேன். அந்த்க காட்டன் புடைவை தான் மேலே தெரியுது. நான் தீபாவளிக்கு எடுத்தது வலப்பக்கம் தட்டில் இருக்கு.  தலைக்கு நானே எண்ணெய் வைத்துக் கொண்டேன். வெற்றிலை, பாக்கு, ப்ழங்கள் வைச்சுப் பின்னர் குளிச்சுட்டு வந்ததும்ம் ரங்க்ஸ் வரும்வரை காத்திருந்துவிட்டுப் பின்னர் புடைவை வைச்சுக் கொடுத்தார் வாங்கிக் கட்டிக் கொண்டேன். ஆனால் அவர் பார்க்கலை. தூங்கிட்டார். முடியலை. சிறிது நேரத்திலேயே புடைவையை மாற்றிக் கொண்டு விட்டேன். ஆனால் அன்று மட்டும் காலை ஒன்பதரைக்கு ஒருதரம், மத்தியானம் சாப்பிட்டதும் ஒரு தரம், இரவு ஏழரை மணிக்கு எனத் தூங்கிக் கொண்டே இருந்தேன். அவ்வளவு அசதி. மறு நாளும் அப்படித் தான் அடிச்சுப் போட்டாப்போல் தூங்கினேன். இதான் இந்த வருஷ தீபாவளிக் கொண்டாட்டம்,.




















 

25 comments:

  1. விடாது தீபாவளி கொண்டாடிவிட்டீர்களே.. அதற்கேற்றபடி உங்களுக்கு உதவியும் கிடைத்துவிட்டது. மிகவும் மகிழ்ச்சி

    ReplyDelete
    Replies
    1. நன்றி நெல்லை. ஆனாலும் கடைசி வரை கொஞ்சம் பரிதவிப்புத் தான். ஆட்கள் வேறே யாரும் வரலையா? தனியாகச் சமாளிக்கணுமேனு கவலை. கடவுள் அருள் பரிபூரணமாகக் கிட்டியது.

      Delete
  2. பாரம்பர்ய முறையில் மாமாவிடம் புடவை வாங்கிக்கொண்டு தீபாவளி கொண்டாடிவிட்டீர்கள். இதில் 3 1/2 மணிக்கே எழுந்துவிட்டீர்களா?

    என்னவோ எங்களுக்கு தீபாவளி தினம், இன்னொரு தினமாகவே போனது

    ReplyDelete
    Replies
    1. மூணு மணிக்கே முழிச்சுண்டாச்சு. உள்ளே சில/பல வேலைகளைச் செய்துட்டு வாசலில் கோலம் போட்டப்போ மூணரை. மாமா தூங்கிண்டு தான் இருந்தார். நாலரைக்குத் தான் முழிச்சுண்டார்.

      Delete
    2. ஆமாம், குழந்தைகள் இல்லைனா தீபாவளி சோபிக்காது தான். என் அப்பா பல சமயங்களிலும் தாயாதிகள் மறைவினால் பண்டிகை இல்லைனு வந்தால் கூட விட மாட்டார். பக்ஷணங்கள் வழக்கம் போல் பண்ணிப் புதுத்துணியும் எடுத்து முதல் நாளே கட்டிக்கச் சொல்லிடுவார். என்ன அந்த வருஷம் விநியோகம் இருக்காது. சும்மா பெரியப்பா வீட்டுக்கு மட்டும் போய்க் கொடுத்துட்டு வருவோம். ஒரு வருஷம் தட்டினால் அடுத்தடுத்துத் தட்டும் என்பார்கள்.

      Delete
  3. பஜ்ஜியும் மைசூர்பாக்கும் டப்பாவில் இருக்கும்..க்கும்..க்கும்

    ReplyDelete
    Replies
    1. எறும்பாருக்குப் பயந்து டப்பாக்களைத் திறக்கலை, அப்படியு மைசூர்பாகுக்கு எறும்பு வந்துடுத்து. தட்டில் கொட்டியதை எடுத்தது சரியா இல்லை.

      Delete
  4. முடியலை முடியலை என்று சொல்லிக்கொண்டே எல்லா பண்டிகைகளையும் வழக்கம் மாறாமல் கொண்டாடுகிறீர்கள். இந்த தீபாவளி கொண்டாட்டத்தில் பட்டாசு மத்தாப்பு தான் பாக்கி.
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. நேரில் பார்த்தால் தான் புரிஞ்சுப்பீங்க ஜேகே சார். மருத்துவமனை போனாலே என்னையும் ஒரு நோயாளினே நினைச்சுக்கறாங்க. அவ்வளவு மோசமா நடக்கிறேன். மருந்துகளின் உதவியால் ஓடுகின்றன நாட்கள். சேர்ந்தாற்போல் உட்கார்ந்தால் உடனே எழுந்துக்க முடியாது. நேரம் எடுக்கும். அப்போப் பார்த்து வாசலில் அழைப்பு மணி அழைக்கும். உடனே போகலைனால் அடுத்தடுத்து அடிப்பாங்க. :( பட்டாசு, மத்தாப்பை 2002 ஆம் வருஷத்தில் இருந்தே நிறுத்திட்டோம். பையர் அந்த வருஷம் தான் யு.எஸ். போனார். ஆகவே அதன் பின்ன்ர் மத்தாப்புக் கூட வாங்கறதில்லை.

      Delete
  5. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் கீசாக்கா.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா! இதாரு புதுசா? எங்கேயோ கேட்ட குரல், பார்த்த முகம். நன்னி, நன்னி, அதிரடியாய் வந்திருக்கும் அதிராவுக்கு நல்வரவு.


      Delete
  6. வணக்கம் சகோதரி

    தாங்கள், தங்கள் கணவர் இருவரும் நலமா.? நவராத்திரி சமயம் ஒரு பதிவுடன் வந்தீர்கள். பிறகு தங்களை காணவில்லையே எப்படியிருக்கிறீர்களோ என உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டே இருந்தேன்.இப்போது தாங்கள் இருவரும் நலமுடன் இருப்பதை இன்றைய பதிவின் மூலம் அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

    தீபாவளியை தங்களால் முடிந்த வரை சிறப்பாக கொண்டாடியிருப்பதற்கு மிக்க மகிழ்ச்சி. அந்த இறைவனின் அருள் உங்களுக்கு எப்போதும் கிடைக்க வேண்டுமென நான் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    சாஸ்திரப்படி நான்காவது ஜாமத்தில் காலை எழுந்து தீபாவளிக்கு ஏற்பாடு எல்லாம் செய்து குளித்து மாமா கையால் புடவை பெற்று உடுத்திக் கொண்டதற்கு மகிழ்ச்சி.

    படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. நவராத்திரி, தீபாவளி கோலங்கள் அழகாக இருக்கிறது. நானும் மைசூர்பாகு, தேன் குழல் பண்ணினேன். காலையில் பஜ்ஜி செய்தேன். நம்மால் இயன்றதைச் திருப்தியுடன் செய்ய வேண்டியதுதான்...! அதுவே நிறைந்த தீபாவளி. தங்களுக்கும், தங்கள் குடும்பத்திற்கும் தாமதமான தீபாவளி வாழ்த்துகள். குழந்தை (பேத்தி) எப்படி இருக்கிறாள்? தீபாவளியன்று அவர்களுடன் பேசி மகிழ்ந்தீர்களா!?

    /அவ்வளவு அசதி. மறு நாளும் அப்படித் தான் அடிச்சுப் போட்டாப்போல் தூங்கினேன்./

    உடம்பு அசதி இருந்தால் நல்ல தூக்கம் வரும். நன்கு படுத்து ஓய்வு எடுங்கள். உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, நானும் தேன்குழல் பண்ண நினைச்சுப் பின்னர் முடியலை. இதுக்கே முடியலை. இன்னும் அதிகமா இழுத்துவிட்டுக்க வேண்டாம்னு நம்ம ரங்க்ஸும் திட்டினார். சரினு விட்டுட்டேன். உங்கள் இனிய பிரார்த்தனைகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி. முடியறச்சே உங்க பதிவுக்கும் வரணும்.

      Delete
  7. நவராத்திரியையும் விட்டு கொடுக்கவில்லை.  தீபாவளியையும் விட்டு கொடுக்கவில்லை. 

    சபாஷ்.

      சாஸ்திரத்துக்கு பொம்மை வைத்து, சாஸ்திரத்துக்கு எண்ணெய் புகையைவிட்டு என்று அசத்தி இருக்கிறீர்கள்.  இப்போதுதான் திருமதி ஆதி வெங்கட் உங்கள் வீட்டு கொலுவுக்கு வந்தது பற்றி அவர் பதிவில் படித்து விட்டு வந்தேன்.  

    ReplyDelete
    Replies
    1. ஆதி பொதுவாய் சாவகாசமாய் உட்கார்ந்து இருக்கறாப்போல் வருவாங்க. இந்த வருஷம் முடியலை. அதோடு வெங்கட்டும் எப்போவும் வருவார். இந்த வருஷம் அவரும் வரலை. இந்த வருஷம் அவரைப் பார்க்கவில்லை. தொலைபேசியில் பேசியதோடு சரி. பண்டிகைகள் சமயம் குழந்தைகளை எங்கேயோ இருக்காங்களேனு நினைச்சுப்பேன். அவங்களுக்காக நாம் இங்கே கொண்டாடியே ஆகணும்னு மூச்சைப் பிடித்துக் கொண்டு கொண்டாடி வருகிறேன். அப்பா சின்ன வயசில் சொல்லுவார், குழந்தைகள் நல்லா இருக்கணும்னு தானே பண்டிகைகளே கொண்டாடறோம்னு. அப்போ நான் ஒரு புரட்;சிக்காரியா எங்கேயோ நாங்க இருக்கோம், நீ இங்கே பண்டிகை கொண்டாடினதும் நல்லா இருக்கோமா?னு கேலி செய்திருக்கேன் அதன் உள்ளார்ந்த தாத்பரியம் இப்போப் புரிகிறது.

      Delete
  8. மூன்றரை மணிக்கே எழுந்து கோலமும் போட்டது பாராட்டுக்குரியது. 

    அவரவர்கள் இப்போதெல்லாம் தீபாவளி என்றால் காலை ஒன்பது மணிக்கு எழுந்து குளிக்கிறார்கள்.  தீபாவளி என்பதை அன்றைய தினத்தின் மாலைக்கு ட்ரான்ஸ்பர் செய்து விட்டார்கள்!

    ReplyDelete
    Replies
    1. பலரும் இப்போ மாலை வேளையில் தான் தீபாவளிக் கொண்டாட்டத்தை வைச்சுக்கறாங்க. இந்த வருஷம் அதுவும் குறைவு தான். அதிகம் பட்டாசு சப்தம் கேட்கலை என்பதோடு ஒன்பது மணிக்கு அடங்கியும் விட்டது.

      Delete
  9. அந்த கோலம் கனெக்டிங் கோடுகள் இல்லாமல் அழகாக இருக்கிறது.  சாதாரண மனைக்கோலம் புதுவிதமாக தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. எது? மேலே உள்ள நவராத்திரிக் கோலமா? கீழே உள்ள தீபாவளிக் கோலமா? மேலே உள்ளது மாக்கோலம். அரிசியை அரைச்சுப் போட்டது. கீழே உள்ளது பொடிக்கோலம். அரிசி மாவில் போட்டது, குஞ்சுலுவுக்கு இந்தக் கோலம் பிடிக்கும். அன்னிக்குக் காலம்பரயே கூப்பிட்டுப் பேசிவிட்டது. அவங்களுக்கு வேலை நாள் ஆச்சே! ஆகவே சீக்கிரம் எழுத்து பண்டிகை கொண்டாடிட்டு அவங்க அவங்க வேலைக்குப் போனாங்க.

      Delete
  10. உதவிக்கு வந்த ஆட்களை நிறுத்தி விட்டீர்கள்.  ஒரு விதத்தில் நிம்மதி, டென்ஷன் ஃப்ரீதான்.  ஆனால் சமாளிக்க முடிகிறதா?  

    ReplyDelete
    Replies
    1. ஆறு மாசம் கான்ட்ராக்ட் முடிஞ்சுடுத்து ஸ்ரீராம். மேலே நீட்டிக்கவில்லை. இப்போதைக்குச் சமாளிக்கிறேன். பார்க்கணும். இறை அருள் துணை நிற்கும். நிற்கிறது.

      Delete
  11. நவராத்திரி மற்றும் தீபாவளி கொண்டாட்டங்கள் நன்று. தொடரட்டும் நல்ல விஷயங்கள்.

    ReplyDelete
  12. வாங்க வெங்கட், நீங்க வீட்டுக்கு வந்தால் கேட்கவெனச் சில சந்தேகங்கள், சிலகேள்விகள் வைத்திருந்தேன். எல்லாம் மொபைல் பற்றியவை தான். நீங்க வர முடியலை. கொஞ்சம் ஏமாற்றம் தான் இரண்டு பேருக்குமே. மற்றபடி பண்டிகைக் கொண்டாட்டங்கள் போய்க் கொண்டிருக்கின்றன. வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  13. நவராத்திரி தீபாவளி எல்லாம் எப்படியோ இத்தனை இடர்களுக்கிடையிலும் கொண்டாடிவிட்டீர்கள் மகிழ்ச்சி கீதாக்கா.

    உதவி செய்யும் பெண் புதுசு வாங்குவதற்கு உதவியதும் நன்று.

    மாமாவைப் பார்த்துக்க வரும் பெண்களை கான்ட்ராக்ட் முடிந்ததால் நிறுதியது ஒரு வகையில் ஃப்ரீ என்றாலும் உதவிக்கு உல்லாமல் நீங்கள் சமாளிக்கணுமே ஆனால் உங்கள் மனோதரியம் கை கொடுக்கும் ஆனால் உடல் ஒத்துழைக்க வேண்டுமே கீதாக்கா. அதையும் மனதில் கொள்ளுங்கள் உங்கள் உடல் நலனும் முக்கியம்.

    கீதா

    ReplyDelete
  14. ரொம்ப சந்தோஷம் கீதா அக்கா! உங்களால் முடிந்தவரை சிறப்பாக தீபாவளியை கொண்டாடி விட்டீர்கள். மாமா உடல் நலமும், உங்கள் உடல் நலமும் நன்றாக இருக்க பிரார்த்தனைகள்.

    ReplyDelete