எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, February 12, 2025

சமோசா வாங்கிய கதை!

 நம்ம ரங்க்ஸுக்கு சமோசா என்றால் மிகவும் பிடிக்கும். பையர் இருந்தால் வண்டியை எடுத்துக் கொண்டு குஞ்சுலுவும் கூடப் போகும். வாங்கிக் கொண்டு வந்துடுவார். யாருமே இல்லையே. ஆகவே நான் சமோசா இருப்பைப் பார்த்துக் கொண்டு ஸ்விகியில் ஆர்டர் பண்ணுவேன். விலை ஒட்டிக்கு இரட்டிப்புத் தான், ஆனாலும் அவருக்கு மட்டும் வாங்குவதால் அதிகம் கணக்குப் பார்ப்பதில்லை 2 சமோசா வாங்கி ஒண்ணை இன்னைக்குக் கொடுத்துட்டு இன்னொண்ணை மறுநாளைக்காகக் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பேன்.  ஒரு தரம் சமோசா வாங்கினால் 2 சமோசாவுக்கு 42 ரூபாய் தான் ஆகும். ஆனால் ஸ்விகியில் 30+30 60 ரூபாய் ஜாஸ்தி வாங்கறாங்க. எல்லாம் சேர்த்து 42+60=102 ரூபாய் ஜிஎஸ்டி 5 ரூ சேர்த்து 107 ரூ வரும். ரொம்பக் கணக்குப் பார்ப்பது இல்லை. இது கொஞ்ச நாட்கள், அதாவது ஓரிரு மாதம் வரை சரியாகவே போய்க் கொண்டிருந்தது 

பின்னர் திடீரென சமோசாவை மெனுவிலிருந்து எடுத்துவிட்டு அன்றைய தினம் மாலை ஆறுமணிக்குப் பின்னரோ அல்லது மறுநாள் மதியம் பதினோரு மணிக்குன்னோ போட்டு அப்போத் தான் கிடைக்கும் எனச் சொன்னார்கள் மெனுவில். சில சமயங்களில் திடீர்னு சமோசா மெனுவில் வரும். அப்போ சமோசானு போட்டால் ஆர்டர் எடுத்துப் பணம் கொடுக்கும்வரை எல்லாம் சரியாகப் போவது போல் இருக்கும். ஸ்விகிகாரங்க ஆர்டரை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வரப்போறாங்கனு செய்தியும் வரும். திடீர்னு தொலைபேசி அழைப்பு வரும். சமோசா தீர்ந்து விட்டது. வேறே ஏதானும் கொடுக்கலாமானு கேட்பாங்க. உண்மைனு நினைச்சுட்டு என்ன இருக்குனு கேட்டு அதில் அந்த ஆர்டர் செய்த பணத்துக்கு உள்ளதைக் கொடுப்பாங்க. அதுவும் அந்த 42 ரூபாய்க்கு என்ன வருமோ அது தான்.  இது கொஞ்ச நாட்களில் தொடர்கதை ஆக எனக்குச் சந்தேகம் வந்து ஒரு நாள் எனக்கு சமோசா தான் வேணும்,கிடைக்குமா, ஆர்டர் பண்ணட்டுமா? எனத் தொலைபேசியில் அந்தப் பிரபலக் கடையைக் கேட்டு அவங்க வ்ந்து வாங்கிக்கோங்கனு சொல்ல எனக்கு வ்ர முடியாது நடக்க முடியாதுனு சொல்லவும் ஆர்டர் பண்ணுங்க என்றனர்.



PC Google images

சரினு உடனே, கவனிக்கவும் உடனே ஆர்டர் பண்ணிப் பணமும் கொடுத்துட்டேன். சற்று நேரம் எந்தவிதமான செய்தியும் இல்லை. உங்க ஆர்டர் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வாங்கிக் கொண்டு வராங்கனு செய்தி வ்ந்தது. அப்பாடானு நினைச்சேன். அடுத்த நிமிஷமே தொலைபேசி அழைப்பு. சமோசா ஒண்ணு தான் இருக்கு. இன்னொண்ணு ஆனியன் சமோசா, அது தரலாமானு கடைக்காரர் கேட்பதாக உணவை டெலிவரி செய்யும் பையர் கேட்டார். நான் கேட்டுட்டுத் தான் ஆர்டர் கொடுத்திருக்கேன். எனக்கு இரண்டுமே ஆலு சமோசா தான் வேண்டும் எனச் சொல்லவே அது இல்லை. அதுக்குப் பதிலாக நீங்க ஆர்டர் செய்த பணத்துக்கு வேறே ஐடம் கொடுக்கிறோம்னு சொல்லவே கோபம் வாந்தது எனக்கு. ஏற்கெனவே ஒரு முறை வெங்காயப் பக்கோடா கொடுப்பதாகச் சொல்லிட்டு வெறும் அடித்தூளைக் கொடுத்து ஏமாத்தினாங்க. இத்தனைக்கும் பிரபல கடை இப்படிப் பண்ணறாங்க. யார் மேல் தப்புனு தெரியலை. நான் ஆர்டரைக் கான்சல் செய்வதாகச் சொல்லிட்டுக் கான்சலும் செய்தேன்.

உடனே வந்துட்டாங்கப்பா சாட்டுக்கும், சமாதானத்துக்கும். யாரோ ஒருத்த்ற் என்னைச் சற்றுக் காத்திருக்கும்படியும் நிலைமை என்னனு அவர் தெரிஞ்சுண்டு வருவதாகவும் சொன்னார் ஸ்விகியில் இருந்து. நான் ஒத்துக்கலை, எனக்குக் கான்சல் தான் பண்ணணும் என்று சொல்லவே உங்க பணம் தாமதமாய்க் கிடைக்கலாம் என சந்தேகமாய்ச் சொன்னார். எதுக்கும் நான் அசைஞ்சு கொடுக்கலை.. இதுக்குள்ளே கடையிலிருந்து டெலிவரி கொடுக்கும் நபர் கான்சலா? அல்லது கொண்டு வரணுமானு சீக்கிரமாச் சொல்லுங்க நான் எத்தனை நேரம் காத்துண்டு இருப்பது எனக் கோபித்தார். 2,3 முறை கூப்பிட்டு விட்டார். நானும் ஸ்விகியில் சாட் செய்தவரிடம் நிலைமையைச் சொல்லிக் கான்சலை ஏத்துக்கச் சொல்லிக் கேட்டேன். சற்று நேரம் வாதாடிய பிறகே அவர் கான்சலுக்கு ஒத்துக் கொண்டார் உடனே ஸ்விகியிலிருந்து ஒரு பெண்மணி வந்து நடந்தவற்றுக்கு மன்னிப்புக் கேட்டுட்டு, உங்க பணம் 2 நாட்களில் திரும்பக் கொடுத்துடுவோம் என்றனர். அப்பாடானு ஆச்சு எனக்கு. அதன் பின்னர் அந்தப் பிரப்லக் கடைஇயில் எதுவுமே வாங்குவது இல்லைனு வைச்சுட்டோம். அதுக்காக அவங்களுக்கு வியாபாரம் ஆகாமல் போகப் போவதில்லை. ஏதோ நம் மனசு ஆறுதலுக்காக.

13 comments:

  1. இப்படியான சில சிக்கல்கள் உண்டு. கூடவே அதிக பணமும் தர வேண்டியிருக்கும். நேரடியாக வாங்கினால் ஒரு விலை, இணைய வழி வாங்கினால் அதிக விலை என்பதும் உண்டு. இதையெல்லாம் இப்போது நிறைய பேர் கவனிப்பது இல்லை.

    ReplyDelete
    Replies
    1. எப்படி இருந்தாலும் ஸ்விகி மூலம் போனால் பணம் ஒட்டிக்கு இரட்டி தான் வெங்கட். நான் சாப்பாடெல்லாம் எங்க வரைக்கும் ஏதேனும் காடரர் மூலமே வரவழைச்சுடுவேன். தயிர் சாதம், சாம்பார் சாதம் முறையே 50 ரூ, 60 ரூ. புளியோதரை மட்டும் 70 ரூ ஆகும். பிரபலக்கடைகளில் 100 ரூக்கும் மேல் தான். தயிர் சாதமே அடையார் ஆனந்த பவன் போன்ற கடைகளில் 120 ரூக்கும் மேல்.ஏழாம் சுவையில் கொஞ்சம் குறைவாக இருக்கும். கீரை வடை வாங்கினால் 4 வடை 120 ரூக்கும் கீழே தான் ஆகிறது.

      Delete
  2. எங்களுக்கு இப்படி எல்லாம் நேர்வது இல்லை.  ஒன்றுக்கு மாற்றம் இன்னொன்று சென்னையில் கொடுப்பது இல்லை.  ஆனால் விருந்தினர்கள் வந்திருக்கிறார்கள் என்று நான்கைந்து ஐட்டங்கள் ஆரடர் செய்தால் ஏதாவது ஒரு ஐட்டம் விடுபட்டிருக்கும்.  அதுவும் சங்கீதா தேசி மனே ஹோட்டலில் கூட.  அப்புறம் அவர்களிடம் நடத்தும் பேச்சு வார்த்தை இருக்கிறதே...  பார்சல் வந்த கவரை போட்டோ எல்லாம் எடுத்துக் கேட்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. சாப்பாடெல்லாம் வாங்கினால் அஸ்வினில் எல்லாம் கிடைக்காது. சத்திரம் பேருந்து நிலையப் பக்கம் மாமா இருந்த மருத்துவமனை அருகே ஒரு அஸ்வின் கிளை இருக்கு. அங்கே தயிர்வடை, சாம்பார் வடை, வடை, புளியஞ்சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதம்னு கிடைக்கும். நாம தேடிண்டு போனால் அன்னிக்குனு பார்த்து எதுவுமே கிடைக்காது.

      Delete
  3. இது மாதிரி சமயங்களில் பிரபல கடை அது இது என்று பூடகம் வைக்காமல் பட்டென்று உடைத்து இந்தக் கடைதான் என்று சொல்லுங்கள்.  பேஸ்புக்கிலும் போட்டு முடிந்தால் tag செய்யுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. இதை ஃபேஸ்புக்கில் போடலாம்ங்கறீங்க? எல்லாம் சமீபத்தில் விருதெல்லாம் வாங்கிய அஷ்வின்ஸ் ஸ்வீட்ஸ் கடை தான். ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷன் போகும் வழியில் இருக்கு. பையர் அதுக்கு ரெகுலர் கஸ்டமர். இங்கே வந்தால் சில/பல சமயங்களில் இஞ்சி டீ கூட வாங்கி வந்துடுவார். வீட்டில் போடுவது பிடிக்காமல்.

      Delete
  4. சமோசா மிகச் சில கடைகளில்தான் நன்றாயிருக்கிறது. அவர்கள் உள்ளே வைக்கும் ஸ்டஃப் கண்டதை வைத்து பிடிக்காமல் போகிறது. அதற்கு தொட்டுக்கொள்ள ஒரு பச்சை கார திரவமும் பழுப்பு ஸ்வீட் திரவமும் தருவார்கள்!

    ReplyDelete
    Replies
    1. இங்கே தக்காளி சாஸ் மட்டும் தான் தருவாங்க. ஒரிஜினல் வட இந்தியக் கடைகளில் சமோசாவும் நன்றாக இருக்கும் வெரைடியாவும் கிடைக்கும். ஆலு, பட்டாணி, வெங்காயம், வெஜிடபுள் எனப் பல்வேறு வெரைடிகளில் கிடைக்கும். தொட்டுக்கவும் நல்ல புளிச்சட்னியும், பச்சைச்சட்னியும் கொடுப்பாங்க. ஆனால் ஸ்ரீரங்கம் வட இந்திய சாட் கடைகளில் ஸ்விகி மூலம் வாங்க முடியாது. வாங்கினால் தெப்பக்குளம் தாண்டிச் செல்லும் மெயின் ரோடில் இருக்கும் கடைகளில் இருந்து இங்கே வரணும். தூரம் இருப்பதோடு போக்குவரத்தும் இருக்கும். நேரம் ஆகும்.

      Delete
  5. எனக்கு போண்டா, உளுந்து வடை, பஜ்ஜி மேல் காதல் உண்டு

    ReplyDelete
    Replies
    1. என்னோட ஓட்டும் மிளகாய் பஜ்ஜி, வடைக்கு அப்புறம் தான் மத்தது. அது என்னமோ நம்ம ரங்க்ஸுக்கு சமோசா மேல் தீராத காதல். நான் முன்னெல்லாம் சாப்பிடவே மாட்டேன். இப்போப் பாவம் அவர் தனியாச் சாப்பிட வேண்டி இருக்கேனு எனக்கும் சேர்த்து வாங்கிப்பேன். சில சமயங்களில் அந்த இன்னொரு சமோசாவை மறுநா:ளைக்காக வைச்சு மைக்ரோவேவில் சூடு பண்ணிக் கொடுப்பதும் உண்டு.

      Delete
  6. என்னால் நின்னுண்டு பண்ண முடிஞ்சால் நான் அதைத் தான் விரும்புவேன் மனசு சொல்லும், நீயே பண்ணுனு. உடம்பு அடம் பிடிக்கும். அதிலும் இந்தக் கால்கள் இருக்கே, ஒரே பிடிவாதம் தான். வாதம் மட்டும் இல்லை. :(

    ReplyDelete
  7. வணக்கம் சகோதரி

    உங்களால் முடிந்தால் எதையுமே நீங்களே செய்து விடுவீர்கள். என்ன செய்வது..? இப்படி ஆர்டர் தந்து மன உளைச்சல்கள்தான் பெற வேண்டியுள்ளது. இது வெளியில் செல்ல முடியாத வயதானவர்களுக்கும், தனித்திருப்பவர்களுக்கும் மிகவும் உதவியாக இருக்கிறது என சொல்கிறார்கள். நாம் நினைத்தவுடன் விரும்பும் எதையும் பெற்றுக் கொள்வது அந்த காலத்தில் சாத்தியமா? இப்போது மளிகை, காய், பழங்கள் என அனைத்தும் ஆன்லைன் வர்த்தகமாக போய் விட்டது.

    சமோசா கதை போலத்தான் சில சமயங்களில், இங்கு மற்றைய உணவுகளின் கதையும். எதையுமே இரட்டிப்பு விலை தந்து வாங்குவதாக எனக்கு படும். இதைவிட நாமே போய் அந்த உணவகத்தில் வேண்டியதை சாப்பிட்டு விட்டு வரலாம் என்பேன். அதுவும் நடக்காது. என் பேச்சும் எடுபடாமல் போகும். இப்படி ஆர்டர் பண்ணி பணம் தருவதை விட நானே பண்ண களம் இறங்கி விடுவேன். பிறகு நஸ்டம் என் உடம்புக்குத்தான்...! "சொன்னால் கேட்டாதானே" என்ற அர்ச்சனையும் பிறகு வரும். என்னவோ போங்கள். மொத்தத்தில் ஒன்றும் சரியில்லை... அது சரி. பின்னர் நீங்கள் விரும்பிய சமோசா வந்ததா? நன்றாக இருந்ததா? இங்கும் சமோசாவுக்கு பச்சை கலர் சட்னி, ஒரு புளிப்பு சட்னி, இனிப்பு சட்னி என பலவகை உண்டு. சமோசா அங்கு கோதுமை மாவில் செய்ததா? இல்லை மைதாவா? இங்கு எங்கள் குழந்தைகளும் சின்ன குழந்தைகள் உட்பட விரும்பி சாப்பிடுவார்கள். என் பேத்தி (மகளின் மகள்) எதுவுமே அவ்வளவாக விரும்பி சாப்பிட மாட்டாள். அவளுக்கு வாங்கினால், பாதியளவு கூட சாப்பிட மாட்டாள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  8. கீதாக்கா சமோசா எல்லாக் கடைகளிலும் நல்லா இருக்கா அதுவும் ஆலு சமோசா?

    ஸ்விக்கி உங்க அனுபவம் ம்ம்ம் என்ன சொல்ல? சிலர் ஸ்விக்கி பத்தி சொல்லிக் கேட்டதுண்டு ஆனால் இங்கு இன்னும் ஸ்விக்கியில் வாங்கியதில்லை என்பதால் அனுபவமும் இல்லை.

    நீங்களும் முன்ன மாதிரி இருந்தா நீங்களெ செய்துவிடுவீங்க இப்ப முடியலைன்ற போது வேற வழி?

    பணம் கிடைத்திருக்கும்னு நினைக்கிறேன்

    கீதா

    ReplyDelete