/வெளிநாடுகளில், திருமணமான பெண் கணவனின் பெயரை சர்நேம் ஆக வைத்துக்கொள்வதில்லை. இந்தியாவில் திருமணமானவுடன் பெண்ணுக்கு கணவனின் சர்நேம் வந்துவிடுகிறது. இது எதனால்? இந்தியாவில் மனைவி, கணவனின் உடைமையாக கருதப்படுவதாலா?//
நெல்லை சொல்லி இருப்பது, அதிலும் வெளிநாடுகளில் அப்பா பெயர் வைச்சுக்க மாட்டாங்கனு சொல்லுவது எனக்குத் தெரிஞ்சு தப்பு. பலரும் திருமணம் ஆனதும் கணவனின் குடும்பப் பெயரைத் தான் சுமந்துக்கிட்டு இருப்பாங்க/இருக்காங்க. இங்கே வட நாட்டிலும் கணவனின் குடும்பப் பெயராக மாறிடும். வெகு சிலர் மட்டுமே அப்பா வீட்டுப் பெயரில் இருப்பாங்க. ஆனால் தென்னாட்டில் (மத்த மாநிலங்கள் பத்தித் தெரியாது.) தமிழ்நாட்டில் அப்படி எல்லாம் கல்யாணம் ஆனதும் கணவன் பெயரை நம் பெயரோடு இணைச்சுக்க முடியாது. இதுக்கு நானே ஒரு சிறந்த உதாரணம்/. நான் கல்யாணம் ஆவதற்கு முன்னரே தமிழ்நாடு மின் வாரியத்தில் வேலைக்குத் தேர்வாகி விட்டேன். போஸ்டிங் வருவதில் தான் தாமதம். அதுக்குள்ளே என் அப்பா ரொம்ப அவசரப்பட்டதால் எனக்குக் கல்யாணமும் ஆகி நான் சென்னை/அம்பத்தூரில் குடித்தனமும் வந்தாச்சு. அதுக்குப் பின்னரே எனக்குச் சென்னையில் ஜார்ஜ் டவுன் அல்லது தண்டையார்ப்பேட்டை அலுவலகத்தில் போய் வேலையை ஒப்புக்கொள்ளச் சொல்லி உத்தரவு வந்திருந்தது.
வேலைக்கான உத்தரவு வந்தப்போ அலுவலகத்தில் யாருக்கும் எனக்குக் கல்யாணம் ஆன விஷயம் தெரியாது. குமாரி என்.ஆர்.கீதா என்று போட்டே உத்திரவு வந்திருந்தது. தண்டையார்ப்பேட்டை அலுவலகத்தில் வேலையை ஒப்புக் கொண்டேன். அதில் கையெழுத்து இடும்போது நமக்குத் தான் கல்யாணம் ஆயிடுத்தே என்னும் எண்ணத்தில் "கீதா சாம்பசிவம்" என்று கையெழுத்துப் போட்டு உத்தரவை ஏற்றுக் கொள்வதாகச் சொல்லி உடனே வேலையையும் ஆரம்பிச்சுட்டேன். நான் இருந்தது ஓர் நிர்வாக அலுவலகம் மட்டுமே. தலைமை அலுவலகம் இம்மாதிரியான சென்னை/மற்ற ஊர்களில் உள்ளவை எல்லாவற்றுக்கும் சேர்த்து மவுன்ட் ரோடில் எல்.ஐ.சி.க்கு எதிரே ஓர் பிரம்மாண்டமான கட்டிடத்தில் இருந்தது. உத்தரவை ஏற்றுக் கொண்டு முதலில் அங்கேதான் போய் ரிப்போர்ட் செய்யச் சொல்லி இதில் அனுபவம் உள்ளவர்கள் அம்பத்தூரிலேயே சொன்னதால் நான் முதலில் மவுன்ட்ரோட் அலுவலகம் தான் போனேன். அவங்க இந்த இரு அலுவலகம் தான் தட்டச்சுபவர் கேட்டிருப்பதால் இரண்டில் நீ எங்கே போய் வேலை செய்ய ஆசைப்படுகிறாய்னு கேட்டாங்க. சென்னைக்கு அவ்வப்போது வந்து போனதத் தவிர்த்தால் நான் சென்னைக்கே புதுசு. ஆகவே ஒண்ணும் தெரியவில்லை. சும்மா இருந்தேன். அவரே நீ எங்கே குடித்தனம் இருக்காய்னு கேட்டுட்டு அம்பத்தூ ர்னா பேசின் பிரிட்ஜ் வந்து அங்கிருந்து பேருந்து பிடிச்சு அலுவலகம் போகலாம். சாயந்திரமும் அலுவலக வாசலில் இருந்து பஸ் பிடிச்சு பேசின் பிரிட்ஜ் வந்து ரயிலில் வீட்டுக்குப் போகலாம் என்று சொன்னார். எனக்கு இதெல்லாம் அரை குறையாகத் தான் புரிஞ்சது. என்றாலும் சரினு தலை ஆட்டினேன். தண்டையார்ப்பேட்டை அலுவலக மெசெஞ்சர் வந்திருப்பதாகவும் அவருடன் போயிடுனும் சொன்னார்.
ரொம்பப் பெரிசா ஆயிட்டதாலே பதிவாப்போட்டுட்டேன்.
வேலைக்கான உத்தரவில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தேன்னு சொன்னேன் இல்லையா? அதூ அன்னிக்கே சாயங்காலம் அனுப்பிட்டாங்க. ஆனால் மறுநாள் அலுவலகம் வந்தால் ஒரே அதிர்ச்சி. என்னுடைய வேலைக்கான ஆர்டரை நிறுத்தி வைச்சிருந்தாங்க. என்னடா இது புதுக்குழப்பம்னு அக்கவுன்டன்ட் கிட்டே போய்க் கேட்டால். "உன் பெயர் என்னம்மா?" என்றார். கீதா நு சொல்லிட்டு இப்போக் கல்யாணம் ஆனதாலே கீதா சாம்பசிவம்னு சொன்னேன். இனிக்ஷியல்? என்று கேட்டார். ஸ்கூலில் இரண்டு ஆர். கீதா இருந்ததால் எனக்கு என்.ஆர். கீதா தான் இனிக்ஷியல் என்றேன். உடனே அந்த மறுப்புக்கான காரணம் சொல்லி வந்திருந்த கடிதத்தை என் பெயருக்கும் அலுவலகம் பெயருக்கும் மவுன்ட் ரோடு அட்மின் அலுவலர் பெயருக்கும் வந்திருந்ததில் எனக்கான காப்பியைக் கொடுத்தார். பார்த்தால் அதில் நாங்கள் தேர்வு செய்த நபர் என்.ஆர். கீதா என்னும் பெண்மணி தான். ஆனால் கீதா சாம்பசிவம்னு கையெழுத்து இருப்பதால் இதை ஏற்க முடியாது. ஆள் மாறாட்டமாய் இருக்கலாமோ என்னும் சந்தேகத்துடன் திருப்பி அனுப்புகிறோம் என்றிருந்தது. உடனே நம்மவருக்குத் தொலைபேசி மூலம் அழைத்துக் கேட்டேன். அவர் சொன்னார் இந்த மாதிரி இந்தத் தேதியில் கல்யாணம் ஆயிடுச்சுனும். அப்போ உன் பெயர் என்.ஆர். கீதா தான் எனவும் கல்யாணம் ஆனதால் தானாகவே கணவன் பெயரோடு இணையும் எனவும் எழுதிக் கூடவே இன்னொரு எஸ்.எஸ்.எல்.சி. சர்டிஃபிகேட் பிறப்புச் சான்றிதழ், பள்ளியில் கொடுத்த டி.சி. எல்லாத்தையும் ஒவ்வொண்ணு கெஜடட் அலுவலரிடம் கையெழுத்து வாங்கி நிரப்பிக் கொடுத்தேன். இஃகி,இஃகி,இஃகி.
மறு நாள் நடக்கப்போவதை அறியாமல் ஒரு பெருமூச்சுடன் (நிம்மதியாம்) என் இடத்தில் போய் அமர்ந்து வேலையை ஆரம்பித்தேன். மறுநாள் காலை அலுவலகம் வந்தால் மறுபடி உத்தரவை ரத்து செய்து அனுப்பி இருந்தாங்க. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். என்னடா காரணம்னு பார்த்தால் என்.ஆர். கீதாவுக்குக் கல்யாணம் ஆனதெல்லாம் சரி. ஒத்துக்கறோம். ஆனால் அதனால் பெயரெல்லாம் மாறிடாது. என்.ஆர்.கீதா "கீதா சாம்பசிவம்"னு மாறணும்னா கெஜட்டில் விண்ணப்பம் செய்து அதில் விளம்பரம் செய்து அந்த விளம்பரத்தைப் பத்திரிகைகளில் வெளியிட்டு இந்த மாதிரி என் பெயரை நான் சட்ட பூர்வமாகக் கணவர் பெயரோடு இணைத்துக் கொண்டு விட்டேன்னு அறிவிக்கணும். இல்லைனா இவங்க என்.ஆர்.கீதா தான். என்.ஆர். கீதா தான் இங்கே வந்து வேலையை ஏத்துக்கிட்டிருக்காங்கனு நாங்க நம்பணும்னா இவங்க கையெழுத்திலும் என்.ஆர்.கீதா என்றே போடணும். இல்லைனா நாங்க நம்ப மாட்டோம்னு சொல்லிட்டாங்க. வீட்டுக்கு ஆலோசிச்சோம். என்னோட கடைசி நாத்தனார் அப்போ எங்களோட இருந்தாங்க. அவளுக்கு ஒரே கோபம். அது எப்படி அண்ணா பெயரைச் சேர்க்கக் கூடாதுனு சொல்லுவாங்க. நீங்க விடாதீங்க. கல்யாணம் ஆயிடுச்சுன்னா தானாகவே யாரும் சொல்லாமலஏயே பெயர் மாறிடும் என்றெல்லாம் சொன்னார். ஆனால் நாங்க ரெண்டு பேரும் அதை ஏத்துக்காமல் அலுவலக அளவில் என்.ஆர்.கீதாவே போதும்னு வைச்சுட்டோம். கெஜட் வரை எல்லாம் போய்ப் பெயரை மாத்த வேண்டாம்னு இருந்தோம். சரினு அலுவலகத்தில் என்.ஆர்.கீதானே எழுதிக் கொடுத்தாச்சு. அவங்களுக் குமாரியை எடுத்துட்டுத் திருமதி என்.ஆர்.கீதானு போட்டாங்க. ஆனால் இத்துடன் பிரச்னை நிக்கலையே.!
நீங்கள் இதை முதலிலேயே யோசித்து என் ஆர் கீதா என்றுதான் கையெழுத்திட்டிருக்க வேண்டும். முதலில் நீங்கள் செய்தது தவறு.
ReplyDeleteநல்ல கதையா இருக்கே! மீ த சின்னக் குழந்தை அப்போல்லாம். இதெல்லாம் எப்படித் தெரியும்? நினைச்சுக்கூடப் பார்க்கலையே! அதோடு இதைப் பத்தி எல்லாம் இதுக்கு முன்னாலேயே வேலையில் சேர்ந்து எட்டு வருஷம் சர்வீஸ் போட்டிருந்த நம்ம ரங்க்ஸுக்கே தெரியலையே! :)
Deleteவங்கிக்கணக்கு, வேலை, வாரிசு இவையெல்லாம் முக்கிய துறைகள் அல்லவா.. அங்கெல்லாம் பெயர் மாற்றம் எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்று ஜாக்கிரதை உணர்வு தோன்றுமே...
Deleteஅப்போல்லாம் வங்கிக் கணக்கே ஒரு அநாவசியத் தொந்திரவு என்னும் எண்ணம் பலருக்கும் இருந்தது. நம்ம ரங்க்ஸ் வங்கிக் கணக்கே அவர் பணி ஓய்வு பெற்ற பின்னரே பென்ஷனுக்காகத் துவங்கினார். ஆனால் என்னிடம் வங்கிக் கணக்குக் கல்யாணம் ஆன ஓரிரு மாதங்களிலேயே ஆரம்பிச்சாச்சு. ஆனாலும் இதெல்லாம் அப்போது அவ்வளவு சரியாத் தெரியாது. 19 வயசில் வங்கிக் கணக்கு இருந்ததையே பெருமையாக நினைச்ச காலம் அது.
Delete20 வயதில் நான் போஸ்ட் ஆபீஸ் ஸேவிங்ஸ் அக்கவுண்ட்டில் சேர்ந்து காசு சேர்த்து "என் காசில்" வீட்டுக்கு முதல் டிவி வாங்கினேன்!
Deleteநம்மூரில் கணவன் பெயர், அப்பா பெயர் இனிஷியலாக போடுகிறோம். கேரளாவில் ஊர் பெயர், வீட்டுப் பெயர் இனிஷியலாக போடுகிறார்கள். பத்மநாபன் நாயர் என்பவரின் மகன், என் நண்பன் உன்னி கிருஷ்ணன் தன் இனிஷியலாக I V என்று போட்டபோது குழம்பி (காபி அல்ல) அவனை உசாவி உண்மை அறிந்தேன்! மேலும்....
ReplyDeleteஎங்கள் அப்பா குடும்பத்திலும் குடும்பப் பெயர் உண்டு. "ஈஸ்வர" என்பது குடும்பப் பெயர். இப்போ தாத்தா பெயர் நாகசுப்ரமணியன் என்பதால் குடும்பப் பெயர் சேர்த்து "ஈஸ்வர நாகசுப்ரமணியன்" என்று வரும். இப்படி எல்லோருடைய பெயர்களும் ஆரம்பத்தில் "ஈஸ்வர" சேர்த்து வரும். அந்த ஊரில் கோயில் கொண்டிருக்கும் மாயா பண்டீஸ்வரர் குலதெய்வம் என்பதால் அதில் உள்ள "ஈஸ்வர" என்பது குடும்பப் பெயராகி இருக்கும் போல.
Deleteஎங்கள் மாமா குடும்பத்தில் அது போலதானே 'கல்யாணமகாதேவி' ஒட்டிக் கொண்டிருக்கிறது!
Deleteமேலும்... நம்மூரில் உன்னி என்றால் நாய் மேல் இருக்குமே அது. எனவே நண்பர்கள் நாங்கள் சிரித்தோம். பின்னர் தெரிந்தது உன்னி என்றால் 'சின்ன' என்று மத்லப் என்று!
ReplyDeleteஇந்த உன்னி கிருஷ்ணன், சின்னி கிருஷ்ணன் பத்திச் சின்ன வயசிலேயே தெரியும். ஆகவே குழப்பம் எல்லாம் வந்ததில்லை.
Deleteநீங்க பெரியவங்க... தெரிஞ்சிருக்கு.. நான் சின்னவன்... தெரிலை! ஹிஹிஹி..
Deletegrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
Deleteஎங்கள் வீட்டில் என் தங்கை உட்பட இன்னும் சிலர் அப்பா பெயரைத்தான் தன் பெயருடன் வைத்திருக்கிறார்கள். நம் எங்கள் பிளாக் ரீடர்ஸ் க்ரூப்பில் கூட சுஜாதா யக்ஞராமன்.
ReplyDeleteதெரியும். எனக்கும் மூணு வருஷம் முன்னால் வரை பாஸ்போர்ட் ஆதார் எல்லாவற்றிலும் அப்பா பெயர் தான். 2022 இல் தான் ஸ்ரீரங்கம் தபால் அலுவலகம் போய் ஆதாரில் பெயர் மாற்றத்துக்குக் கொடுத்துப் பின்னர் பெயர் மாறி இப்போத் தான் வந்தது.
Deleteஅப்புறம் பிளாக்கில் மட்டும் எப்படி கீதா சாம்பசிவம் என்று போடப் போச்சு? 2022 ல் அபீஷியலாக மாற்றிய பிறகுதானே போட்டிருக்கணும்!!!! :))
Deleteஹிஹிஹி, ஸ்ரீராம், அப்போவே வங்கிக் கணக்கில் கீதா சாம்பசிவம்னு தான் தொடங்கி இருந்தேன். கையெழுத்தெல்லாம் கீதா சாம்பசிவம் தான் போடுவேன். அலுவலகத்தில் சம்பள பில்லில் மட்டும் ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டிக் கையெழுத்து வாங்குவார்கள் இல்லையா? அதில் தான்/அதில் மட்டும் என்.ஆர்.கீதா. இல்லைனா நோ சம்பளம். அப்போவே எனக்கு டைபிஸ்ட் அலவன்ஸ் சேர்த்து 289 ரூபாயோ என்னமோ வந்தது. இப்போதைய நிலைக்கு அது அப்போப் பெரிய தொகை.
Deleteஅஃபீஷியலா மாத்த 2022இல் தபால் அலுவலகம் போய் எழுதிக் கொடுத்தேன். அது இப்போத் தான் போன வருஷம் அப்ரூவ் ஆகி வந்திருக்கு. இன்னும் பாஸ்போர்ட், பான் கார்டில் ஏற்கெனவே மாமா கீதா சாம்பசிவம்னு கொடுத்துட்டார். பாஸ்போர்ட் மாமா அவங்க அலுவலகம் மூலமா சிரமம் இல்லாமல் எடுத்தார். அதுவும் பணி ஓய்வு பெறுவதற்கு ஓரிரு வருஷங்கள் முன்னாடி தான். அதில் என்னோட விண்ணப்பம் பூர்த்தி செய்கையில் எஸ்.எஸ்.எல்.சி. செர்டிஃபிகேட் புத்தகத்தைப் பார்த்துப் போட்டிருக்கார். அதில் என்.ஆர். கீதா தானே. ஆகவே பாஸ்போர்ட்டிலும் அப்படியே வந்துவிட்டது. அதுதான் இப்போ வரைக்கும் ஓடிட்டு இருக்கு. இனிமேல் பையர் மாத்தினால் உண்டு. :))))
Deleteஇங்கும் 'தொடருமா'! வாழ்த்துகள்!
ReplyDelete"எங்கும் எப்போதும் தொடர்கதைதான்.. முடிவே இல்லாதது..."
Deleteஅநேகமா இன்னிக்குத் தொடங்கி முடிச்சுடுவேன்னு நினைக்கிறேன். பார்ப்போம்.
Deleteஇதை மறந்தே போயிட்டேன். :)) இப்போ தற்செயலாக வந்தால் இது இன்னும் முடியலைனு தெரியுது. :(
Delete
ReplyDeleteஎனக்கு என்ன சந்தேகம்னா, அவங்க எப்படி திருமதின்னு போடலாம்? அதுக்கான சர்டிபிகேட் கொடுத்தீங்களா?
Marriage invitation from both sides.
Deleteஇன்னொரு சந்தேகம். சாலரி, நாம எந்த அக்எவுன்ட் கொடுத்தும் போடச் சொல்லலாமா? கணவன் அக்எவுன்டில் போடணும்னு கணவன் வற்புறுத்தினால் அப்படி மனைவி ஒத்துக்கிட்டாலும் செய்வாங்களா அரசு வேலையில்.
ReplyDeleteஅப்போல்லாம் அல்லது அதுக்கப்புறமும் நாங்க ஜாம்நகர் வந்த வரைக்கும் அதாவது 71 ஆம் ஆண்டிலிருந்து 90/91 வரையிலும் சம்பளம் பே பில் தான். சொல்லப் போனால் 2000/2003 ஆம் ஆண்டில் கூட பே பில் மாமாவுக்காகப் போட்டுக் கொடுத்திருக்கேன். அதில் தான் எல்லோருடைய பெயருக்கு நேரேயும் மொத்த சம்பளம், பஞ்சப்படி, வீட்டு வாடகை, படிப்புச் செலவு, மருத்துவச் செலவுனு எல்லாத்துக்கும் தனியாய்ப்போட்டு மொத்தக் கூட்டல் தொகையில் பி.எஃப் பிடித்தம்(சேமிப்பு), பிஎஃபில் வாங்கிய கடன் பிடித்தம், வேறே ஏதேனும் கடன் இருந்தால் அது, உதாரணமாக வீடு கட்ட நாங்க வாங்கிய லோன் மாதா மாதம் சம்பளத்தில் பிடிப்பாங்க. இதைத் தவிர அலுவலகத்திலேயே பொழுதுபோக்குக் கழகச் செலவுகள் பிரிச்சு எல்லோருக்கும் வரும், நாம் வாங்கிக் குடிக்கும் தேநீர், காஃபி, வடை, போண்டா போன்றவை, மத்தவங்களுக்கு வாங்கி இருந்தால் அது என எல்லாமும் டேபிள் ரெகவரி என்னும் பெயரில் வரும். எல்லாத்தையும் கழிச்சுக் கூட்டிப் பின்னர் போனால் போகுதுனு கையில் சுமார் ஆயிரத்துக்கும் குறைவாக ஏதோ கொடுப்பாங்க. அதுக்குள்ளே தான் எல்லா ஆட்டமும் ஆடி இருக்கோம். ஆனால் நான் நிறையவே துணை வேலைகள் செய்திருக்கேன். எலைசி ஏஜென்சி, தபாலாபீஸ் சேமிப்புப் பத்திரம் ஏஜென்சி, பியர்லெஸ் இன்ஷூரன்ஸ் ஏஜென்சி, ஹோமியோபதி வைத்தியம், புடைவை வியாபாரம், குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது, ஹிந்தி வகுப்பு நடத்துவது, மாதாந்திரச் சீட்டுப் பிடிப்பது என எல்லாத்திலும் புகுந்து புறப்பட்டு வந்திருக்கேன்.
Deleteகம்பெனிகள் பத்தித் தெரியாது. ஆனால் அரசு அலுவலகங்களில் பே பில் யார் பெயரில் இருக்கோ அவங்களிடம் தான் சம்பளம் கொடுப்பாங்க. மாமா பணி ஓய்வு பெறும் முன்னர் இந்த வங்கிக் கணக்கில் சம்பளம் போடும் முறை கொண்டு வந்தாங்க. அதுவரையிலும் மாமா பணமாகவே அலுவலகத்திலிருந்து கொண்டு வருவார். நானும் அப்படியே பிடித்தமெல்லாம் அதிகம் இல்லாமல் சுமார் 270 ரூபாய் வரை கொண்டு வருவேன். கணவன் சம்பளத்தை மனைவி உரிமை கோரிக்கொண்டு அலுவலகம் வரலாம். வந்து வாங்கிப் போகலாம். ஏனெனில் சிலர் சம்பளத்தை வீட்டிலேயே கொடுப்பதில்லை என்பார்கள். மனைவி மேலிடம் வரை போய்ப் புகார் கொடுத்துத் தனக்குச் சம்பளம் வரும்படி செய்து கொள்வார். இதை நான் வேலை பார்க்கும்போதே பார்த்திருக்கேன்.
Deleteமனைவியின் சம்பளத்தைக்கணவனுக்குக் கொடுக்க மாட்டாங்க. அப்படிக் கொடுக்க முடியாது. கொடுக்கக் கூடாது. ஆனால் மனைவி கணவன் மேல் மேல் அதிகாரி வரை போய்ப் புகார் கொடுத்துத் தனக்கு வேறே வருமானம் இல்லை. கணவர் சம்பாத்தியம் தான், குழந்தைகள் படிக்கிறார்கள். எனச் சொல்லி எழுதிக் கொடுத்தால் அவர் கணவர் வாங்கும் மொத்தச் சம்பளமும் அந்த மனைவியிடமே போகும்.
Deleteநான் பத்தாவது படிக்கும்கோது என் பெயர் இனிஷியலோடு இன்றொருவனும் சேர்ந்தான். இந்தக் குழப்பத்திற்காக என்னைக் கேட்டபோது அப்பாவின் முழு இனிஷியலும் போட்டுக்கவா எனக் கேட்டதற்கு, அதில் வேறு சிக்கல் என்ன வரும்னு சந்தேகப்பட்டு, செக்ஷனை மாத்திட்டாங்க.
ReplyDeleteஎன்னையும் அப்படி மாத்தி இருக்கலாம். மாத்தலை.
Deleteநான் செய்த இத்தனை வேலைகளிலும் எனக்கு நல்ல லாபம் வந்தது புடைவை வியாபாரத்தில் தான் ஒரு புடைவை விற்றால் சுமார் 50 ரூ வரை அப்போவே கிடைக்கும். இது நான் சொல்வது 85,86,87 ஆம் ஆண்டுகள்.
எனக்கு தைருமணமானவுடந்தான் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பம் செய்தேன். அதில் பெயரை பானுமதி வெங்கடேஸ்வரன் என்று கொடுத்து விட்டதால், வேலைக்கான விண்ணப்பம், வங்கி கணக்கு எல்லாவ்ற்றிர்க்கும் அதே பெயர் வந்து விட்டது. என் சகோதரிகளுக்கு பழைய இனிஷியல்தான்.
ReplyDeleteஅடுத்த தலைமுறையில் யாரும் கணவர் பெயரை இணைத்துக் கொள்ளவில்லை. தந்தை பெயர்தான். ஸ்பௌஸ் என்று கணவர் பெயரை குறிப்பிடுகிறார்கள்.
வாங்க பானுமதி, உங்கள் கருத்தை இப்போத் தான் பார்க்கிறேன். ஆமாம், இப்போதெல்லாம் பெரும்பாலும் பிறந்த வீட்டுப் பெயருடனேயே இருக்கின்றனர். எங்க பெண்ணும், மருமகளும் கூட இந்த மாதிரி அப்பா பெயருடன் தான் இருந்தார்கள். 2010 அல்லது 11இல் பெண் சிடிசன் ஆகும்போது பெயரை மாத்திக்கும் ஆப்ஷன் இருந்ததால் மாத்திக் கொண்டாள். அதே போல் மருமகளும் அவங்க சிடிசன் ஆகும் போது தன் பெயரோடு கணவன் பெயரைச் சேர்த்துக் கொண்டாள்.
Delete