எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, February 24, 2009

பாடங்கள் ஆரம்பம், பரிட்சையும் எழுதணும்!

லீவு முடிஞ்சு வந்தாச்சு. இனிமேல் அடிக்கடி இப்படி லீவ் போட்டுட்டுப் போக மாட்டேன்னு ம.பா. கிட்டே உறுதியாச் சொல்லியாச்சு. இப்படி அடிக்கடி போனால் உடனேயே சிஷ்ய(கே)கோடிங்க ஏற்கெனவே எதுடா சாக்குனு காத்துட்டு இருக்காங்க, பதுங்கறதுக்கு. இப்போ வரவே மாட்டாங்க. :P என்னத்தைச் சொல்றது? வந்தவங்க வரைக்கும் பரிட்சை வைக்கலாம்னு பார்த்தால் கோபி மட்டும் தான் தேர்வாகி இருக்கார். திவா வரதே இல்லை, அதனால் மறுபடி படிச்சுட்டுப் பரிட்சை எழுதணும். எங்கே திவா? திவா, திவா, வாங்க, வந்து மறுபடியும் ஆரம்பத்திலே இருந்து படிங்க, பார்க்கலாம். கவிநயா, மன்னிச்சு விட்டுடலாமா? கண்ணனோட விளையாடினேன்னு சொல்றாங்க, அதுவும் யானை படம் எல்லாம் போட்டுக் கவிதையும் எழுதினாங்க, குட்டி யானை வேறே அதிலே. யானைக்காக அவங்களுக்கு மதிப்பெண்கள் கொடுத்துடலாம். திராச சார், வரதே இல்லை, அப்புறம் என்ன ஜாலி வேண்டிக் கிடக்கு? எப்போவுமே ஜாலிதானே?? எஞ்சாய்!!!!!! அம்பி, மெளலி, கைப்புள்ள, அபி அப்பா இவங்களை எல்லாம் என்ன செய்யறது? தண்டனை தான். படிக்கச் சொல்லிட்டுக் கேள்வி கேட்கணும். தப்பில்லாமல் தமிழ் எழுதச் சொல்லணும். மெளலியும், அபி அப்பாவும் நிச்சயமா அதிலே ஃபெயில் தான். இப்போவே தெரியும். சூடான் புலி அப்போ அப்போ நான் இருக்கேன்னு வந்து ஆஜர் கொடுத்துடறார். அதனாலே விட்டுடறேன்.

கண்ணனுடைய ஆட்சியில் பதினைந்து நாட்கள் இருந்துட்டு வந்தேன். குஜராத்தில் கண்ணன் தான் இன்னும் ஆட்சி செய்கின்றான். யாரைப் பார்த்தாலும் முதலில் முகமன் கூறுவது சிறு குழந்தைகளில் இருந்து பெரியவர் வரையிலும், ஜெய் ஸ்ரீகிருஷ்ணா தான். விடை பெறுவதும் ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா தான். இதிலே அவங்களுக்கு ரொம்பவும் பெருமையும் கூட. யது வம்சத்தவர்களான யாதவர்கள் யதுவின் தகப்பன் ஆன யயாதியின் சாபத்தால் அரியணை ஏறி அரசுக் கட்டிலில் அமர முடியாது. ஆனாலும் அவர்கள் க்ஷத்திரியர்களே என்பதால், தங்கள் தலைவனையே அரசன் என்று பெயரளவில் சொல்லிக் கொள்ளுவார்கள். அப்படி ஒரு அரசன் ஆன உக்ரசேனனின் மகன் ஆன கம்சன் என்ற அரக்கன் மகத நாட்டு மன்னன் ஜராசந்தனின் மருமகன் ஆவான். மருமகனைக் கொன்ற கிருஷ்ணரைப் பழி தீர்க்கவேண்டி மொத்த யாதவர்களையுமே அடியோடு மதுரா நகரோடு சேர்த்து அழிக்க ஜராசந்தன் முனைய, அவர்களிடமிருந்து தப்பக் கிருஷ்ணர் செய்த உபாயமே இட மாற்றம். நாட்டின் ஒரு பகுதியில் இருந்து மறு பகுதிக்கு மாற்றம் ஆங்கிலத்தில் exodus என அழைக்கப் படும். கிட்டத் தட்ட மோசஸ் செய்த அதே மாதிரிதான் இங்கேயும், உலகிலேயே முதன்முறையாக நடைபெற்ற ஒன்று. அதைப் பற்றி நம் கண்ணன் வருவான், கதை சொல்லுவானில் இன்னும் விரிவாய்ப் பார்ப்போம்.

யாருங்க அது ஓடறது? விரிவாய்ப் பார்ப்போம்னு சொன்னதும்?? அம்பியா? மெளலியா? அபி அப்பாவா? திவா?? இருக்கும், இருக்கும். துரத்தித் துரத்திப் பிடிச்சு வைச்சுட்டு விடாமல் சொல்ல மாட்டோம்?? துவாரகைக் கோயில் பற்றிக் கொஞ்ச நாட்களுக்கு இந்தப் பதிவில் வரும். சோமநாத் கோயில் கிருஷ்ணர் அங்கே செல்லும் முன்னரே இருந்த ஒன்று. சந்திரன் பூஜித்ததால் சோமநாதர் என்ற பெயர் பெற்றார் ஈசன். அந்தக் கோயில் பற்றிப் பார்க்க வேண்டிய முகவரி இது.இங்கேபாருங்க. ஹிஹிஹி, நானும் இந்த வலைப்பதிவு பத்தி சிஷ்யகேடிங்க கிட்டே சாட்டிங்கிலேயும், மெயிலிலேயும் சொல்லிச் சொல்லிப் பார்த்துட்டேன். ஒண்ணும் அசைஞ்சு கொடுக்கலை. நேரம், வேறே என்ன சொல்றது? அதுக்கப்புறம் என்னை ஆன்லைனில் பார்த்தாலே எல்லாம் இன்விசிபிள் மோடிலே பதுங்குறாங்க! :P:P:P:P புலி ஒண்ணுதான் அப்போ அப்போ எட்டிப் பார்த்துட்டுப் போகுது. இப்போ என்னமோ திவா வரார். நேரம் நிறையக் கிடைக்குது போல. அதான் இங்கே சொல்லிட்டேன். போணி ஆகணுமில்லை?? சொந்த செலவில் செலவில்லாம விளம்பரமும் ஆச்சு இல்லை? அப்புறம் அஹோபிலம் பத்தி ஏற்கெனவே எழுதிட்டு இருக்கிறதிலே வரும்.அஹோபிலம் மாத்தி, மாத்தி ஒரு நாள் விட்டு ஒரு நாள் வரும். தினமும் எல்லாத்திலேயும் போட முடியாது. போட்டாலும் அடிக்க வருவீங்க இல்லை? :P வந்தாச்சு. விடறதா இல்லை யாரையும். தயாரா இருங்க.

14 comments:

  1. ஆஜர் கொடுத்தாச்சு.

    கொஞ்சம் மூச்சை விட்டு எழுதுங்க...

    இந்த மாதிரி மூச்சு விடாமெ எழுதினா ஒடம்பு என்னத்துக்கு ஆகறது.

    அப்புறம் மாமாவை கவனிக்கறது யாரு?

    என்னமோ.....நடக்குது...

    ReplyDelete
  2. //திவா வரதே இல்லை, அதனால் மறுபடி படிச்சுட்டுப் பரிட்சை எழுதணும். எங்கே திவா? திவா, திவா, வாங்க, வந்து மறுபடியும் ஆரம்பத்திலே இருந்து படிங்க, பார்க்கலாம்.//

    ஆஜர்!
    ப்ளாக் போர்ட் எங்கே டீச்சர்?

    //இப்போ என்னமோ திவா வரார். நேரம் நிறையக் கிடைக்குது போல. //

    நேரம் இல்லாம அவஸ்தை படறவங்களைப்பத்தி எங்கே தெரியப்போகுது?

    ReplyDelete
  3. //சூடான் புலி அப்போ அப்போ நான் இருக்கேன்னு வந்து ஆஜர் கொடுத்துடறார். அதனாலே விட்டுடறேன். //

    எனக்கு அப்பாடானு இருக்கு :)

    ReplyDelete
  4. //சூடான் புலி அப்போ அப்போ நான் இருக்கேன்னு வந்து ஆஜர் கொடுத்துடறார். அதனாலே விட்டுடறேன். //

    அப்பாடானு இருக்கு எனக்கு :)

    ReplyDelete
  5. //ஆஜர் கொடுத்தாச்சு.

    கொஞ்சம் மூச்சை விட்டு எழுதுங்க...

    அப்புறம் மாமாவை கவனிக்கறது யாரு?//

    ரிப்பீட்டே!!!


    //நேரம் இல்லாம அவஸ்தை படறவங்களைப்பத்தி எங்கே தெரியப்போகுது?//

    ரிப்பீட்டே!!!

    :-))

    ReplyDelete
  6. //யானைக்காக அவங்களுக்கு மதிப்பெண்கள் கொடுத்துடலாம்.//

    டாங்கீஸ் டீச்சர்! :) புள்ளையார் காப்பாத்திட்டார்! :)

    ReplyDelete
  7. \\வந்தவங்க வரைக்கும் பரிட்சை வைக்கலாம்னு பார்த்தால் கோபி மட்டும் தான் தேர்வாகி இருக்கா\\

    அன்ன போஸ்டில் வெற்றியா!!! ;)

    தூள் ;)

    ReplyDelete
  8. வாங்க மஞ்சூர், என்ன ரொம்ப நாளைக்கப்புறமா இந்தப் பக்கம்??? அதிசயத்திலும் அதிசயம்??? :P:P:P:P

    ReplyDelete
  9. //ஆஜர்!
    ப்ளாக் போர்ட் எங்கே டீச்சர்?//

    @திவா,
    சரியாப் போச்சு போங்க, இன்னுமா ப்ளாக் போர்டு எல்லாம் வேணும்?? :P:P:P:P:P

    //நேரம் இல்லாம அவஸ்தை படறவங்களைப்பத்தி எங்கே தெரியப்போகுது?//

    அட, நேரம் இருந்தா எல்லாரும் எழுதறாங்க?? அதுவும் தெரிஞ்சிருக்கணுமே? நீங்க பரிட்சையில் பாஸா? சந்தேகம் தான் போங்க!

    ReplyDelete
  10. புலி, இப்போ மாட்டிக்கலைனு சந்தோஷமா?? அதெல்லாம் சும்மா விட்டுடுவோமா?

    ReplyDelete
  11. @மெளலி, மறுபடியும் காப்பி அடிக்கிறீங்க, சரியாவே படிக்கலை நீங்க. சொந்தமா எப்போ எழுதப் போறீங்க? ரிப்பீட்டே கொடுக்காம?? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  12. வாங்க கவிநயா, இந்தமுறை பிள்ளையாரும், ஆனைக்குட்டியும் காப்பாத்திடுச்சு, அடுத்த முறை பார்க்கணும்! :)))))))))))

    ReplyDelete
  13. @கோபி, டிஸ்டிங்ஷன் உங்களுக்கு! :))))))))))))))

    ReplyDelete
  14. அப்புறம் மாமாவை கவனிக்கறது யாரு?

    தீர்ப்பை மாத்தி போடுங்க! மாமியை கவனிக்க கொஞ்சம் டைம் வேண்டாமா மாமாவுக்கு?

    நீங்க எழுதுங்க நாங்க படிப்போம். வந்து சத்தம் போடலைன்னாலும்.

    ReplyDelete