வீட்டிலே கொஞ்சம் வேலை அதிகம், அதோட கொஞ்ச நாட்கள் லீவு விடப் போறேன், எல்லாத்தையும் வச்சுத் தான் கொஞ்ச நாட்களாய் கண்ணன் வருவான் பதிவு போட முடியலை. மேலும் தினம், தினம் போட்டால் சிலர் மெதுவாய்ப் படிக்கிறோம், நேரம் இருக்கிறதில்லைனு சொல்றாங்க. அதனாலும் தாமதம் செய்தேன். வெள்ளிக்கிழமை பெப்ரவரி ஆறாம் தேதியில் இருந்து பெப்ரவரி 23-ம் தேதி வரைக்கும் விடுமுறை அறிவிச்சாச்சு. போறதுக்குள்ளே ஒரு இரண்டு போஸ்ட் ஏற்கெனவே எழுதி வச்சிருக்கிறதைப் போடுவேன். வந்து மிச்சம் பார்த்துக்கலாம். அதுக்குள்ளே எழுதி இருக்கிறதை எல்லாம் படிச்சு வைங்க. வந்து பரிட்சை இருக்கும். திவா மாதிரி உங்களை எழுதச் சொல்லிட்டு மதிப்பெண்களை எனக்குப் போட்டுக்க மாட்டேன். மதிப்பெண்கள் உங்களுக்குத் தான். சும்மா ஒளிஞ்சுக்கிறது, சாக்குப் போக்கு சொல்லறது எல்லாம் எதுவும் நடக்காது. இங்கே லிஸ்டிலே பதினாறு பேர் இருக்காங்க. அவங்க தவிரவும் வேறே வரவங்க லிஸ்ட் என் கிட்டே இருக்கு. ஆகையால் யாரும் தப்ப முடியாது. ஒழுங்காப் படிக்கணும்.
ஏற்கெனவே கே. ரவிசங்கர்(கேஆரெஸ் இல்லை) வந்து கேட்டுட்டு இருக்கார், பாரத் தர்ஷன் பற்றிய பதிவுகள் என்ன ஆச்சுனு. அது வேறே இருக்கு. அதுக்கு அப்புறமும் போயிட்டு வந்தது எல்லாம் வேறே எழுதணும். ஒரு பத்துக் கை இருந்தால் தேவலைனு தோணுது. இருக்கிற ஒரு கையே வலிச்சுட்டு இருக்கு இன்னும். எக்ஸ்ட்ரா இருந்திருக்கலாம். வண்டிக்கெல்லாம் ஸ்டெப்னி வச்சிருக்கிற மாதிரி நமக்குக் கையும் எக்ஸ்ட்ரா கொடுத்தால் இது வலிக்கிறப்போ கழட்டி வச்சுட்டு, அதைப் போட்டுக்கலாம். அது தொந்திரவு கொடுத்தால் கழட்டி வச்சுடலாம். எல்லாத்துக்கும் மேலே கணினி தொந்திரவு, ஆற்காட்டார் தொந்திரவு. ஒரு வாரம் விட்டு மறு வாரம் நேரத்தை மாத்திடறாங்க. ஆனால் மின்வாரிய ஆளுங்க நான் கணினியிலே எப்போ உட்காருவேன்னு மட்டும் தெரிஞ்சு வச்சுக்கிறாங்களேனு அதிசயமா இருக்கு. கரெக்டா அப்போப் போயிடும்.
நல்லவேளையா இன்னிக்குக் காலம்பரவே போயிட்டு, பனிரண்டு மணிக்கெல்லாம் வந்துடுச்சு. வரேன், நாளைக்குக் கண்ணன் வருவான், கதை சொல்ல. இது ஒரு ஆறுதல் பதிவு!
ஹிஹிஹி, பதினாறு பேர் இருக்கீங்கனு சொன்னதாலே, நான் அந்தண்டை ஊருக்குப் போனதும், எல்லாரும் கழண்டுக்காதீங்க! மானம் போயிடும்! :)))))))))))))))))
ஆகா அப்படியெல்லாம் நீங்க ஊருக்கு போன பின்னே கழண்டுக்க மாட்டோம்! சேதி கேள்வி பட்ட உடனே அம்பிஓடியாச்சு, நான் அவர் பின்னாலயே ஓடுறேன்! என் கையை பிடிச்சுகிட்டு ஓடி வருவது கோபி என்பதை தன்னடக்கத்துடன் சொல்லிக்கிறேன் தலைவி!
ReplyDeleteதங்கள் வட இந்திய தேர்தல் பிரச்சாரம் வெற்றியடைய வாழ்த்துக்கள்!
//இது ஒரு ஆறுதல் பதிவு!//
ReplyDeleteயாருக்கு? எங்களுக்கா? உங்களுக்கா?
நல்லபடியா போயிட்டு வாங்க. பிளாக்-போஸ்ட், யாரெல்லாம் விட்டுட்டு போனாங்களோன்னு யோசிக்காம, பிரசாரத்தை (தேர்தல் பிரசாரத்தை) பண்ணிட்டு வாங்க. :-)
ReplyDeleteசும்மா ஒளிஞ்சுக்கிறது, சாக்குப் போக்கு சொல்லறது எல்லாம் எதுவும் நடக்காது. //
ReplyDeleteavvvvvvvvvv
//நான் அந்தண்டை ஊருக்குப் போனதும், எல்லாரும் கழண்டுக்காதீங்க!//
ReplyDeleteசரி ஊருக்குப் போற வரை காத்திருக்காம இப்போவே....
எஞ்சாய் தி ட்ரிப்! :)
Blogger அபி அப்பா said...
ReplyDeleteஆகா அப்படியெல்லாம் நீங்க ஊருக்கு போன பின்னே கழண்டுக்க மாட்டோம்! சேதி கேள்வி பட்ட உடனே அம்பிஓடியாச்சு, நான் அவர் பின்னாலயே ஓடுறேன்! என் கையை பிடிச்சுகிட்டு ஓடி வருவது கோபி என்பதை தன்னடக்கத்துடன் சொல்லிக்கிறேன் தலைவி!//
சும்மா ஒளிஞ்சுக்கிறது, சாக்குப் போக்கு சொல்லறது எல்லாம் எதுவும் நடக்காது. //
avvvvvvvvvv
02 February, 2009
Blogger இலவசக்கொத்தனார் said...
//நான் அந்தண்டை ஊருக்குப் போனதும், எல்லாரும் கழண்டுக்காதீங்க!//
சரி ஊருக்குப் போற வரை காத்திருக்காம இப்போவே....
எஞ்சாய் தி ட்ரிப்! :)
அட எல்லாரும் ஒரே மாதிரி யோசிக்கறாங்கப்பா!
// திவா மாதிரி உங்களை எழுதச் சொல்லிட்டு மதிப்பெண்களை எனக்குப் போட்டுக்க மாட்டேன். மதிப்பெண்கள் உங்களுக்குத் தான்.//
ReplyDeleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
//ஒரு பத்துக் கை இருந்தால் தேவலைனு தோணுது. இருக்கிற ஒரு கையே வலிச்சுட்டு இருக்கு இன்னும்.//
அடப்பாவமே! எங்களுக்கு எல்லாம் ரெண்டு இருக்கே? உங்களுக்கு ஒண்ணுதானா?
ஸ்டெப்னி வேணுமா?
டாக்டர்கள் சில பேர் ஆண்டவன் மனுஷனை வயித்திலே ஜிப் வெச்சு அனுப்பக்கூடாதான்னு கேக்கறாங்க!
:-))
நல்லா என்ஜாய் பண்ணிட்டு வாங்க...எப்படியும் பயணத்தை பத்தி ஒரு 2 , 3 பதிவு வரும் ;))
ReplyDelete\\என் கையை பிடிச்சுகிட்டு ஓடி வருவது கோபி என்பதை தன்னடக்கத்துடன் சொல்லிக்கிறேன் தலைவி!
\\
ஆமாம் நானும் கூட ஒடி போகிறேன்...;))))
@அபி அப்பா, நல்லா இருக்கு உங்க ஆதரவு! :P:P:P:P
ReplyDelete@புலி, எங்கே பதுங்கி இருக்கீங்க?? ஒண்ணுமே பிரியலை!
@மெளலி, என்னத்தைப் பிரசாரம் பண்ணறது?? எப்போடா கிளம்புவேன்னு காத்துட்டு இருந்தீங்க போலிருக்கே??:P:P:P:P
ReplyDeleteஹிஹிஹி, புதுகை, வாங்க, வாங்க, ரொம்ப நாள்/மாசம்/வருஷம்? கழிச்சு வந்ததுக்கு டாங்கீஸ்!!!!!
@கொத்து, உங்களின் நீண்ட நாட்கள் ரசிகைங்கறதை வாபஸ் வாங்கலாமானு யோசிக்கிறேன். :P:P:P:P:P:P:P:P
ReplyDelete@திவா, என்னமோ தினமும் வந்து படிக்கிறாப்போல, நம்பிட்டோமில்ல!! :P:P:P:P:P
@திவா, வயித்துக்கும் தான் ஜிப் தேவைப் படுது! என்னத்தைச் சொல்ல??? போங்க! போன பதிலே குறைஞ்சு போச்சு போல! அதை ஈடு கட்டிடறேன். :P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P ஊரிலிருந்து வர வரைக்கும்!
ReplyDeleteவாங்க கோபி, லீவு விட்டாச்சுன்னதும் ஆளாளுக்கு ஓடி வரீங்க! எல்லாம் என் நேரம்! ஹெட் லெட்டர்! அஜித் லெட்டர்! :P:P:P:P:P:P:P
ReplyDelete@கபீரன்பன், தவறான கணிப்பு. எருக்க இலை வைச்சுக் குளிச்சதாலே நேர்ந்திருக்க வாய்ப்பில்லை. இலையை முதல்நாளே பறிச்சுத் தண்ணீரிலே போட்டு வைக்கணும், மறுநாள் குளிக்கும்போது பயன்படுத்தணும், உங்க சிநேகிதர் கண்களிலே எருக்கம்பால் பட்டிருக்கும் வாய்ப்பு இருக்கு. உடனடியாக நல்ல கண் மருத்துவரை ஆலோசனை கேட்கச் சொல்லவும். வழிமுறைகளை முறையாகப் பின்பற்றவேண்டும், ஏதோ தப்பாய் செய்திருக்கார். ரொம்பவே வருத்தமளிக்கும் விஷயம். :((((((((((
ReplyDeleteநிம்மதியா கவலை எல்லாம் ஒதுக்கி வச்சுட்டு பதிவு படிக்கலாம்னு வந்தா இங்கேயும் பரீட்சையா? சரியாப் போச்சு போங்க. நான் குட்டிக் கண்ணனோட விளாயாடிக்கிட்டு பிசியா இருக்கேன். பரீட்சை எழுத வந்துட்டா அவனை யாரு பாத்துக்கறது? :)
ReplyDelete