ஒரு வழியாய் ஊருக்குப் போயிட்டு வந்தாச்சு. தவிர்க்க முடியாத ஒரு பயணம். சொல்லப் போனால் மீண்டும் கண்ணனின் துவாரகையைப் பார்க்க எண்ணி 2006 டிசம்பரில் செல்ல ஏற்பாடுகள் செய்து இரு வழிப்பயணத்துக்கும் பயணச்சீட்டு வாங்கி இருந்தோம். சென்னையில் இருந்து அஹமதாபாத் வரை செல்லப் பயணச்சீட்டு முன்பதிவு உறுதி ஆகவில்லை. ஆனால் திரும்பி வர உறுதி செய்யப் பட்டு இருந்தது. செல்லும் தினம் வரையில் காத்திருந்து விட்டுப் பின்னர் பயணச்சீட்டை ரத்து செய்தோம். சொல்லப் போனால் நம்ம முதன்மைத் தொண்டர் அதியமான் அங்கே இருந்தார் அப்போ. வரப்போறோம்னு தகவல் கொடுக்கச் சொல்லி ம.பா. சொல்லிட்டே இருந்தார். ஆனால் எனக்கு என்னமோ கடைசிவரையில் கொஞ்சம் தயக்கமாவே இருந்தது. அதுக்கேத்தாப்போல் அப்போப் போக முடியவில்லை. இப்போத் தான் முடிஞ்சது.
ஜனவரியில் இருந்தே அலைச்சல் தான். அஹோபிலம் போயிட்டு வந்ததுமே கொஞ்சம் முடியாமலும் போயிடுத்து. என்றாலும் அதைக் கண்டு கொள்ளாமலேயே குஜராத் பயணம் செல்லும்படி நேர்ந்தது. குஜராத்திலேயே ஐந்து வருடங்களுக்கு மேல் இருந்தப்போ துவாரகை, சோமநாத் இரு கோயில்களுக்கும் சென்று வந்தோம். துவாரகை நாங்க இருந்த ஜாம்நகரில் இருந்து ரொம்பக் கிட்டே இருப்பதால், இரண்டு, மூன்று முறை சென்றிருக்கின்றோம். கிட்டத்தட்ட பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போப் போனப்போ ஊரும் சரி, மக்களும் சரி கொஞ்சமும் மாறவில்லை. அப்படியே தான் இருக்கின்றது. கோயில் இருக்கும் தெருவில் இன்னமும் முன்னேற்றம் என்ற பெயரால் ஐந்து நட்சத்திர விடுதிகளும், சுற்றுலா விடுதிகளும், வியாபாரப் பொருட்கள் விற்கும் கடைகளும் அணி வகுக்கவில்லை. எல்லாம் கோயிலை விட்டுக் கொஞ்சம் தள்ளியே இருக்கின்றன. கோயில் வளாகத்தினுள்ளும் கடைகள் அணி வகுக்கவில்லை. அனுமதிச்சீட்டு கிடையாது. சிறப்புத் தரிசனம் கிடையாது. விஐபி அனுமதி இல்லை.
அது நரேந்திரமோடியே ஆனாலும் எல்லாரையும் போல் தான் வந்து தரிசனம் செய்ய முடியும். என்ன? அவங்களுக்குக் கூடவே பாதுகாவலர்கள் வருவாங்க. நமக்குத் தொந்திரவு இல்லாமல் தரிசனம் செய்துட்டுப் போவாங்க. மக்களை வெளியேறச் சொல்லுவதோ, அவங்களுக்குத் தனியாய்த் தரிசனம் செய்து வைப்பதோ கிடையாது. சிறப்பு அனுமதியும், தனி அனுமதியும் பெண்களுக்கு மட்டுமே. அவங்களுக்கு கண்ணனுக்கு நேரே மிகக் கிட்டத்தில் சென்று தரிசிக்க அனுமதி உண்டு. தனியான வாயிலும் பெண்களுக்கு மட்டுமே. பெண்களும் கண்ணனைப் பார்த்தால் பார்த்துக் கொண்டே இருப்பதோடு ஏதோ தங்கள் பிள்ளை மாதிரிப் பேசுகின்றனர். இங்கேஅம்பி, தன்னோட மதுரை பதிவிலே எழுதி இருக்காப்போல! (அம்பி ஒரு இலவச விளம்பரம் கொடுத்துட்டேன், கொடுத்த மொய்யிலே கழிச்சுக்குங்க, மிச்சம் நீங்க தான் கொடுக்கணும்). அம்பி நீங்க கேட்டாப்பல லிங்க் கொடுத்தாச்சு. கொடுத்த மொய் திரும்ப வரணும்! கண்டிஷனை மறக்காதீங்க! :P
நாங்க காலையிலே முதன் முதல் எடுக்கப் படும் ஆரத்தி என அழைக்கப் படும் தீப ஆராதனையைப் பார்க்கச் சென்றோம். அந்தப் புலர்ந்தும் புலராத காலைப் பொழுதிலே, அந்தக் குளிரிலேயும் எத்தனை மக்கள்? யாருமே இருக்க மாட்டாங்கனு நினைச்சுட்டுப் போனால்?? ஒரே கூட்டம்! ஆச்சரியமா இருந்தது. உள்ளூர் மக்கள், வெளியூர் மக்கள்னு எல்லாருமே காத்துட்டு இருந்தோம். கூட்டம் வேறு நினைவே இல்லாமல் கிருஷ்ணர் மேலே பஜனைப் பாடல்கள் பாடிக் கொண்டிருக்க, பெண்களும், ஆண்களும், த்வாரகாதீஷ் கி ஜெய் எனக் கோஷமிட, சரியாக ஏழு மணிக்குத் திரை விலக்கப் பட்டு ஆரத்தி நடைபெற்றது. கிட்டத் தட்ட அரைமணி நேரம் ஆரத்தி எடுக்கப் படுகின்றது. ஆரத்திக்குச் சற்று நேரம் முன்னால் கோயில் பிரகாரத்தில் இருக்கும் மணி ஒலிக்கத் தொடங்குகின்றது. அது ஆரத்தி எடுக்கப் போவதை அறிவிப்பது போல் உள்ளது. பிறகு அந்த மணி நின்று நிசப்தம். அதன் பின்னர் பெரிய காண்டாமணி ஒலிக்க, கூடி இருக்கும் கூட்டம் பித்துப் பிடித்தது போல் கிருஷ்ணா, கிருஷ்ணா என்று கதறிக் கண்ணீர் மல்க, துவாரகாதீஷ் அன்று காவிக்கலரில் ஆடை அணிந்து ஆடுமேய்க்கும் கோபாலனாகத் திவ்ய தரிசனம் தந்தான்.
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா! இவ்வளவு பக்தியில் திளைக்கிறவங்க ரொம்ப கொடுத்து வச்சவங்கதானம்மா.
ReplyDeleteம்ம்...போட்டோஸ் எல்லாம் இல்லையா!!!??
ReplyDeleteஆஹா...நான் போகவிரும்பும் ஒர் இடம்.....பிரயாணக் களைப்பெல்லாம் நீங்கிடுச்சா?.
ReplyDeleteஆமாம், இது ஆன்மீகப் பயணங்களில் வரும் இடுகையாக இருக்கே, இங்கே எப்படி? :-)
ம்ம், வழக்கமா நீங்க எழுதற விஸ்தீரனம் இந்த பதிவில் இல்லை. ஏதோ பாலை அடுப்புல வெச்சுட்டு எழுதின மாதிரி இருக்கு. இன்னும் நிறைய வர்ணனை எதிர்பார்த்தேன்.
ReplyDeleteமனசுல பட்டதை அப்படியே சொல்லிட்டேன், தவறா இருந்தா மன்னிக்கவும்.
//அம்பி ஒரு இலவச விளம்பரம் கொடுத்துட்டேன்,//
என்னத்த கொடுத்தீங்க? ஒரு லிங்க் குடுத்து இருக்கலாம் இல்ல? :))
வாங்க கவிநயா, உண்மைதான் நீங்க சொல்றது, கண்ணன் அவங்க குழந்தை மட்டுமில்லை, அவனே ஆலோசகன், குரு, வழிகாட்டி, நண்பன், சகோதரன் அனைத்துமே.
ReplyDelete@கோபி, ஃபோட்டோக்கள் எடுக்க அனுமதி இல்லை. உள்ளே நுழையும் முன்னரே காவல் துறையினர் அனைத்தையும் வாங்கி லாக்கரில் வைத்துச் சாவியை நம்ம கிட்டே கொடுத்துடுவாங்க. தோல் சம்பந்தப் பட்ட பொருட்களும் அனுமதி இல்லை. வெளி கோபுரம் தான் எடுக்க முடிஞ்சது. மற்ற படங்களும் இருக்கு. இன்னும் பிரிண்ட் போடலை, ஃப்ளாஷ் காமிரா தானே? டிஜிட்டல் வாங்கணும்னு 3 வருஷமா சொல்லிட்டு இருக்கோம்! :)))))))))))
ReplyDeleteவாங்க மெளலி, சீக்கிரமாப் போயிட்டு வாங்க, இது ஆன்மீகப் பயணத்தில் தான் வரணும்னு கட்டாயம் ஒண்ணும் இல்லையே. தவிர, பல இடங்களுக்கும் போய் வந்ததால் ஒண்ணை எழுதறதுக்குள்ளே மத்ததுக்கு நேரம் ஆயிடுது, அதான் கண்ணன் தொடர் பத்தின பக்கங்களிலேயே கண்ணன் பற்றி எழுதலாம்னு. மத்தது வேறே வேறே பதிவுகளாய் வரும்.நேரமும் இப்போல்லாம் அரிதாய்க் கிடைக்குது. கிடைக்கும் நேரத்தில் ஆற்காட்டார் மனசும் வைக்கணும். :))))))))))))
ReplyDelete@அம்பி, நிஜமாவே பாலை அடுப்பில் வச்சிருந்தேன். எப்படிக் கண்டு பிடிச்சீங்க? விரிவாய் வரும் தம்பி, பொறுமை தேவை! :P :P:P:P:P
ReplyDeleteபோனால் போகுதுனு லிங்கைக் கொடுத்துடறேன். :P:P:P:P
மெளலி, பிரயாணக் களைப்பெல்லாம் போகலை, ஆனால் எனக்கு ஓய்வும், பொழுது போக்கும் படிப்பும், எழுத்தும் மட்டுமே. ஆகவே சமாளிக்கிறேன். :))))))))))
ReplyDeleteவந்தாச்சா சந்தோஷம். துபாய் சிவன் கோவில்ல கூட அந்த காலை ஆரத்தி நீங்க இதிலே சொன்ன அதே பாணிதான்.சிலிர்த்து போகும்!
ReplyDelete//நிஜமாவே பாலை அடுப்பில் வச்சிருந்தேன். எப்படிக் கண்டு பிடிச்சீங்க? //
ReplyDeleteபாலை அடுப்புல வெச்சுட்டு எழுதின மாதிரி இருக்குன்னு சொன்னேனே தவிர நீங்க தான் வெச்சீங்கன்னு நான் சொல்லவேயில்லை. :))
வழக்கம் போல சாம்பு மாமா தான் வெச்சு இருப்பார். உங்களை கேஸ் அணைக்க சொல்லிட்டு அவசரமா எங்கோ போயிருப்பார்.
எப்படி? இதையும் ஒழுங்கா ஒத்துகுங்க. :))
ஆஹா! கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே ! கண்ணிமைத்து காண்பார்தம் கண் என்ன கண்ணே! நேரிலே பாத்தா மாதிரி இருக்கு.
ReplyDeleteவழக்கம் போல சாம்பு மாமா தான் வெச்சு இருப்பார். உங்களை கேஸ் அணைக்க சொல்லிட்டு அவசரமா எங்கோ போயிருப்பார்
@அம்பி கல்யாணத்திற்கு அப்பறம் உங்கிட்டே நல்லா முன்னேற்றம். தன்னைப் போல் பிறரை நினை என்ற பரந்த மனப்பான்மை வந்து விட்டது.
இத்தனை அழகா த்வாரகா நாதன். கீதா நேரேயே அழைத்துச் சென்று விட்டீர்கள்.
ReplyDeleteமிக்க நன்றி.
கோபி கேட்ட மாதிரி போட்டோவும் முடிஞ்ச போது போடுங்க.
தமிழ் மண விருது கிடைத்ததற்கும் வாழ்த்துகள் கீதா.:)
ReplyDeleteதுவாரகாதீசனின் தரிசனத்தை எங்களுக்கும் தருவது போல் படமும் இட்டிருக்கலாம் கீதாம்மா. எப்படியோ தரிசித்து வந்ததை எங்களுக்குச் சொல்லி எங்களுக்கும் புண்ணியத்தைத் தேடித் தருகிறீர்கள்.
ReplyDeleteஜெய் த்வாரகாதீஷ்கீ ஜெய்.
http://www.srivari.com/vadatirupathigal/images/dwaraka.jpg
வாங்க அபி அப்பா, இரண்டு நாளா உடம்பும் சரி இல்லை, மின்சாரமும் மத்தியானத்தில் இருக்க மாட்டேங்குது. அதான் உடனே பதில் போடலை, துபாய் சிவன் கோயில் பத்தி விவரமா எழுதுங்க.
ReplyDelete//எப்படி? இதையும் ஒழுங்கா ஒத்துகுங்க. :))//
ReplyDeleteஅம்பி நீங்க தான் சமைக்கிறேன்னு என் கிட்டே ரகசியமாச் சொன்னதை நான் எப்போவோ ஒத்துக்கிட்டேனே???:P:P:P:P:P
வாங்க திராச சார், சிங்கப்பூரிலே இருந்து என்னோட வலைப்பக்கம் தெரியறதுக்கு முதற்கண் என்னோட நன்னிங்கோ!!
ReplyDelete//@அம்பி கல்யாணத்திற்கு அப்பறம் உங்கிட்டே நல்லா முன்னேற்றம். தன்னைப் போல் பிறரை நினை என்ற பரந்த மனப்பான்மை வந்து விட்டது.//
இப்போவாவது புரிஞ்சதா?? நான் தலை, தலையாய் அடிச்சுண்டேன், புரியலை, இன்னிக்காவது தெரிஞ்சதே! :P:P:P:P
வாங்க வல்லி, சீக்கிரமா போட்டொ பிரிண்ட் போட்டுப் போடறேன். அப்புறம் விருதெல்லாம் ஒண்ணும் கிடைக்கலையே? அப்படி இருந்தா வேறே யாரானும் சொல்லி இருப்பாங்களே?? எத்தனாவதா வந்தேன்னு கூடத் தெரியாது. தமிழ் மணம் பக்கம் போக முடியலை.
ReplyDeleteவாங்க குமரன், தரிசனம் நல்லாவே கிடைக்கும், அனைவருக்குமே. முடிஞ்சா ஒரு முறை போய்ட்டு வாங்க.
ReplyDelete