இந்த வருஷம் பருவமழை பொய்த்து விட்டது எனச் சொல்லுகின்றார்கள். கேரளத்திலும், கர்நாடகத்திலும் பெய்யவேண்டிய அளவுக்கு மழை பொழியவில்லை. சென்ற மாதம் வந்த ஆய்லா புயல் அனைத்து ஈரப் பதத்தையும் தன்னுடன் எடுத்துச் சென்றுவிட்டதால் மழை பொழியவில்லை என்றும் வெப்ப அலை அதிகம் இருக்கும் எனவும் சொல்லுகின்றனர். வெயிலும் தேவைதான். ஆனால் ஆதாரமான நீர் இல்லாமல் என்ன செய்வது? இப்போவே சென்னையில் பல இடங்களிலும் குடிநீர்த் தட்டுப்பாடு. சென்னைக்குக் குடிநீர் ஆதாரமான வீராணம் ஏரியும், புழலேரியும் வறண்டு போயாச்சு. மழையினால் சென்னைத் தெருக்களின் நிலைமை இன்னும் மோசமாகத் தான் போகும். அதைப் பார்த்தால் தண்ணீருக்குத் தட்டுப்பாடு வந்துவிடும். பெய்யும் மழை நீரைச் சேமிக்க அரசு கடுமையாகக் கட்டளை பிறப்பிக்கவேண்டும். இதன் பலன்களையும் ஏற்கெனவே பார்த்தாயிற்று. பொதுமக்களில் பலரும் தினம் தினம் அக்னியில் வெந்து போவதைப் போல சூரியனின் உஷ்ணத் தாக்குதலால் பலரும் தாக்குப் பிடிக்கமுடியாமல் தவிக்கின்றனர். ஒரு சிலர் இறந்தும் போயிருக்கின்றனர். உஷ்ணத்தின் அளவு என்னவோ உஷ்ணமானியின் மூலம் பார்த்தால் குறைச்சலாய்த் தான் தெரிகின்றது. ஆனால் சீதோஷ்ணத்தில் மழை இல்லாத காரணத்தால் குளிர்ந்த தன்மையும், ஈரப் பதமும் தெரியவில்லை. ஆகவே வெப்பம் அதிகம் உணரப் படுகின்றது. இந்நிலையில் கடவுளை வேண்டுவதைத் தவிர வேறு வழி இல்லை. மழை வேண்டிப் பிரார்த்திப்போம். பெய்ய வேண்டிய அளவு மழையைத் தாமதமாகவேனும் கொடுக்க அந்த வருணனை வேண்டுவோம்.
"திக்குகள் எட்டும் சிதறி-தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட
பக்கமலைகள் உடைந்து -வெள்ளம்
பாயுது பாயுது பாயுது - தாம்தரிகிட
தக்கத் ததுங்கிட தித்தோம் - அண்டம்
சாயுது சாயுது சாயுது - பேய் கொண்டு
தக்கை யடிக்குது காற்று - தக்கத்
தாம் தரிகிட தாம் தரிகிட தாம் தரிகிட தாம் தரிகிட
வெட்டியடிக்குது மின்னல் - கடல்
வீரத்திரை கொண்டு விண்ணை யிடிக்குது
கொட்டி யிடிக்குது மேகம் -கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று
சட்டச்சட சட்டச்சட டட்டா - என்று
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்
எட்டுத் திசையும் இடிய - மழை
எங்ஙனம் வந்ததடா, தம்பி வீரா!
அண்டம் குலுங்குது, தம்பி - தலை
ஆயிரந்தூக்கிய சேடனும் பேய் போல்
மிண்டிக் குதித்திடுகின்றான் - திசை
வெற்புக் குதிக்குது: வானத்துத் தேவர்
செண்டு புடைத்திடுகின்றார் -என்ன
தெய்வீகக் காட்சியைக் கண் முன்பு கண்டோம்
கண்டோம், கண்டோம் கண்டோம் - இந்தக்
காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்!"
அனைவரும் காணப் பிரார்த்திக்கின்றோம். பிரார்த்திக்கவும் வேண்டுகின்றோம்.
பிரார்த்தனைகளோடு இணைந்து கொள்கிறேன்!
ReplyDeleteகாவிரி டெல்டாக்களில் ஜுன் 12 திறக்கப்படாமல் இருக்கும் மேட்டூர் அணையின் கதவுகள் நம் பிரார்த்தனையின் வலிமையில்,மழை பொழிவில் திறக்கட்டும் !
நானும் வேண்டிக்கறேன்.
ReplyDeleteபிரார்த்தனையில் நானும் இணைகிறேன்.
ReplyDeleteநானும் வேண்டிக்கறேன்...தலைவி எங்களுக்கு நீங்களும் வேண்டிக்கோங்க.
ReplyDeleteஅகண்ட காவிரி கரையிலே இருக்கும் நெரூரில் இருந்து பையர் வீட்டுக்கு வந்துட்டார்! அங்கே தண்ணி இல்லையாம்! இந்த கோராமையை என்ன சொல்ல?
ReplyDeleteஆற்றையே சுரண்டறாங்களே, நம்மவங்க! எங்கேருந்து தண்ணீர் வரும்??? சுற்றுச் சூழ்நிலையைப் பற்றிய கவலை இல்லாமல் மரங்களை எல்லாம் வெட்டிட்டு, போர் போட்டு நிலத்தடி நீரையும் உறிஞ்சிட்டால் தண்ணீர் எங்கே இருக்கும்?? எங்க தெருவிலேயே சில வீடுகளில் தான் கிணற்றில் தண்ணீர் இருக்கு. பலரும் தண்ணீருக்குத் தவிக்கின்றனர்! :((((
ReplyDelete