கொஞ்சம் அலைச்சல், அதனால் வந்த உடல்நலக்கேடுனு தாமதம் ஆகிவிட்டது. அப்படி ஒண்ணும் யாரும் படிக்கிறதாத் தெரியலைனாலும், இந்த “பில்ட் அப்”பானும் கொடுக்கலைனா எப்படி எழுத்தாளர்னு சொல்லிக்கிறது?? இங்கே அதற்குள் என்ன என்னவோ நடந்துட்டது. அதிலே முக்கியமானது எங்க வீட்டிலே எனக்கு உதவிக்கு வரும் பெண்மணியின் முதுகில் விழுந்த அரைச்செங்கல்லும், தோட்டம் சுத்தம் செய்ய வந்த மனிதருக்கும், என் கணவருக்கும் தலையில் விழவிருந்த கான்க்ரீட் பாறைகளும் முக்கிய இடம் வகிக்கின்றன. நேற்று மதியம் அங்கே செண்ட்ரிங் பிரிக்கையிலே பலகை இங்கே எங்க வீட்டு ஏ.சி. கம்ப்ரெஸர் மேலே விழுந்து கீழே விழுந்தது. நல்ல வேளையா நாங்க கொஞ்சம் சுதாரிச்சுக்கொண்டோம். அந்தப் பக்கம் நடமாட்டம் வைச்சுக்கலை. மேலும் சின்னக் குழந்தைகளும் தற்சமயம் இல்லை. என்றாலும் முன்பெல்லாம் அங்கே தான் துணிகளைக் காயப் போடுவோம். இப்போ அதுக்கு முடியலை.
இத்தனைக்கும் எங்க வீட்டின் சுவருக்கும், எங்க காம்பவுண்டின் சுவருக்கும் இடையே நாலடிக்கும் மேல் இடைவெளி விட்டிருக்கோம். ஆனால் எங்க காம்பவுண்டிலிருந்து அந்தக் குடியிருப்புகள் கொஞ்சம் கூட இடைவெளியின்றி ஒரே ஒருத்தர் நடமாட மட்டும் இடம் விட்டு உடனே ஆரம்பிக்கிறது. அவங்களுக்குக் காற்று?? வெளிச்சம்??? அதெல்லாம் பத்திக் கவலைப்பட்டால் எப்படிங்க காசு பண்ண முடியும்?? கிட்டத்தட்ட மூவாயிரம் சதுர அடியே இருக்கும் ஒரு மனைக்கட்டில் எட்டுக் குடியிருப்புகள் வருகின்றன. கீழே இரண்டு, முதல் மாடியில் மூன்று, இரண்டாம் மாடியில் மூன்று. ஐந்து அல்லது ஆறு பேர் குடியிருந்த இடத்தில் ஒரு வீட்டிற்குக் குறைந்தது நான்கு பேர் என வைத்துக்கொண்டால் கூட 32 பேர் இருப்பாங்க. யோசிச்சுப் பாருங்க. L
இதிலே என்ன பிரச்னை என்றால் தினம் தினம் அங்கிருந்து விழும் கான்க்ரீட் கழிவுகள், அரைச்செங்கல்கள், மணல் குப்பைகள், அதோடு அவங்க உடைக்கும்போதுவிழும் துகள்கள் என ஒரே குப்பை. சுத்தம் செய்யக் கூப்பிட்டால் ஒரு நாள் வந்து செய்யறாங்க. அப்புறம் யாருமே வரதில்லை. தினம் தினம் சொல்ல வேண்டி இருக்கு. அது ரொம்பக் கூச்சமா இருக்கிறது. அவங்க மேஸ்திரி, மானேஜர்னு எல்லார் கிட்டேயும் சொல்லிப் பார்த்தாச்சு. சொன்ன அன்று மட்டும் யாரானும் வந்து ஒரு தள்ளுத் தள்ளுவாங்க. இந்த மட்டும் நம்மளைத் தள்ளலையேனு நினைச்சுட்டு, மறுநாள் நான் சுத்தமாய்ப் பெருக்கி எடுப்பேன். வேலை செய்யற அம்மாவுக்குப் பயம், எங்கேயானும் ஒண்ணுகிடக்க ஒண்ணு ஆகிடுச்சுன்னா? அதோட அவங்க வரதும் மதியம் நாலு மணிக்கு. பக்கத்திலே மும்முரமா வேலை நடக்கும் சமயம். அதனால் நான் காலையிலே ஆளில்லாத சமயமாப் பெருக்குவேன். அந்தக் கட்டிடம் கட்டும் கம்பெனியின் சொந்தக் காரர் எட்டிக் கூடப் பார்ப்பதில்லை. அவரோட தொலைபேசி எண்ணும், அலுவலகமும் கேட்டுக் கேட்டு அலுத்துப் போச்சு. லேட்டஸ்டா விழுந்தது முந்தாநாள் இரும்பு பாண்டோடு சிமெண்ட் கலவையும், இன்னிக்கு மத்தியானம் மறுபடியும் ஏ.சி. கம்ப்ரெசரில் மட்டப்பலகையும் விழுந்தது. இப்படி எல்லாம் பொருட்கள் விழுகையில் மானேஜரோ, குவாலிடி கண்ட்ரோல் இஞ்சினியரோ, இல்லைனா எம்.டி.யோ இருக்கிறதில்லை. இன்னிக்கு நானும் மட்டப் பலகையைக்கொடுக்க மாட்டேன்னு அடம் பண்ணிக்கொண்டு இருந்தேன். அப்புறமா வேறே வழியில்லாமக் கொடுக்க வேண்டியதாப் போச்சு.
ஒரு மாமரமும், வாழைமரமும் சுத்தமாய் உயிரை விடும் நிலையில் இருக்கின்றன. அவங்க கிட்டேச் சொன்னால் மரத்துக்கு ஏம்மா இப்படி அடிச்சுக்கறீங்கனு சொல்றாங்க! ஆனால் நாம் பேசுவதோ சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு என்ன செய்யலாம்? எப்படி மேம்படுத்தலாம்?? மரங்களை அழிக்காமல் இருக்கணும், மரங்களை நட வைக்கணும் என்றெல்லாம் ஒரு பக்கம் சொல்லிக்கொண்டே இன்னொரு பக்கம் நம்முடைய சொந்த மனையை கேவலம் சில லக்ஷங்களுக்காக விற்றுவிட்டுச் சூரியனின் வெம்மையையும், மழைக்குறைவையும், நீர்ப் பற்றாக்குறையையும் நிரந்தரமாகப் பெற்றுக்கொள்கிறோம். பணம் கொடுத்தால் எது வேண்டுமானாலும் கிடைக்கும் என்பது சிலர் கேள்வி. பணம் கொடுத்தால் விவசாயமே நடக்காமல், விவசாய நிலங்களே இல்லாமல் அரிசி எப்படி வரும்?? காய்கனிகளுக்கான தோட்டங்களே இல்லாமல் அவை எப்படி வரும்?
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம் என்பார்கள் சிலர். வெளிநாட்டிலிருந்து ஏற்கெனவே நாம் இறக்குமதி செய்து வைத்திருக்கும் கலாசாரத்தின் மூலமே இப்படியானதொரு அவல வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் வெளிநாட்டிலோ கலாசாரம் நம்மைவிட மோசம் என்றெல்லாம் சொல்கிறோமே தவிர, அங்கே ஒரு மரத்தின் ஒரு சின்னக் கிளை கவனக்குறைவால் உடைந்தால் கூட நம் செலவில் ஒரு மரக்கன்றை வாங்கி நட்டு, அது ஒரு குறிப்பிட்ட அளவு வளரும் வரை அதற்கான செலவை நாம் ஏற்கவேண்டும். அடுக்கு மாடிக்குடியிருப்பை இஷ்டத்திற்குக் கட்ட முடியாது. கட்டுவதற்கென நிலம் குறிப்பிட்ட அளவு இருக்க வேண்டும். குடிநீர் முதல், அடுப்பு வசதி, அவன் வசதி, பாத்திரம் தேய்க்கும் டிஷ் வாஷர், இன்னும் சில வீடுகளில் துணி துவைக்கும் மிஷினும் சேர்ந்தே வரும். இப்படி அனைத்து வசதிகளும் கட்டாயமாய்ச் செய்து தர வேண்டும். அடுக்கு மாடிக் குடியிருப்பில் இருப்போருக்கெனச் சில சட்டதிட்டங்களும் உண்டு. அவற்றை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
வீடுகள் கட்டுகையில் பகலிலே ஒன்பது மணியிலிருந்து இரண்டு மணி வரையிலும், மாலை நான்கு மணியிலிருந்து வெளிச்சம் இருக்கும் வரையிலும் தான் கட்ட முடியும். சில இடங்களில் நான்கு, ஐந்து மணிக்கே இருட்டத் தொடங்கி விடும். அதோடு கூட இரவானால் ஒன்பது மணிக்கப்புறமாய்ச் சத்தம் செய்து கொண்டோ, உடைத்துக்கொண்டோ, ஜேசிபி போட்டுத் தோண்டிக்கொண்டோ இருக்க முடியாது. குடியிருப்போர் சங்கம் போலீசுக்குப் போய்விடும். அதன் பின்னர் கட்டடம் கட்டுவோருடைய குற்றங்களுக்குத் தகுந்தாற்போல் அவங்க வீடு கட்டும் லைசென்ஸே ரத்துச் செய்யப் படும். ஆனால் நம் நாட்டிலோ??? புலம்பல் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கோ?? கொஞ்சம் பொறுங்க. சீக்கிரம் முடிச்சுடுவேன். அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியிருப்போரின் தொல்லைகள் தொடரும்.
///வெளிநாட்டிலிருந்து ஏற்கெனவே நாம் இறக்குமதி செய்து வைத்திருக்கும் கலாசாரத்தின் மூலமே இப்படியானதொரு அவல வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்///
ReplyDeleteரொம்ப சரியாக சொல்லியிருக்கீங்க மாமி.
அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியிருப்போரின் தொல்லைகள் தொடரும்.//
ReplyDeleteஎன்றென்றும் தொடரும் முடிவில்லாத தொடரல்லவா -தொல்லையல்லவா இது!!
என்னங்க பண்ணுறது?இப்புடித்தான் கட்டிடம் கட்டிற காண்டிராக்டர்கள் நடந்துக்குவாங்க.அவங்க பாக்கட் ரொம்பினா போதும்னு நெனைப்பாங்க.மத்தவங்க கஷ்டம் சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டாங்க,இல்ல அப்புடி நடிப்பாங்க.
ReplyDeleteஏ.சி. கம்ப்ரெஸர் மூடும்படியாகவும், அங்கிருந்து கழிவுகள் விழும் இடத்தில் நீளமாக ஒரு கெட்டிப் பலகை அமைத்து சாய்வாக கட்டுமானம் நடக்கும் இடத்துக்கே வழி அமைத்து, தற்காலிகமாக சுவரில் தச்சரைக் கொண்டு பதித்து விடவும்! நம் தலை தப்புவதோடு, கழிவுகளும் அங்கேயே போய் விழட்டும்!!
ReplyDeleteகட்டுமானம் நம்ம வீட்டுல நடக்கலைன்னாலும், அதுக்கு ஈடான கஷ்டங்களை அனுபவிக்கவேண்டியிருப்பது கொடுமைதான்..
ReplyDeleteவெளிநாட்டுக் கலாசாரத்தை அரைகுறையாக தேவைக்கேற்றபடி எடுத்துக் கொண்டதால் வந்த வினையோ?
ReplyDeleteஇவ்வளவு தொல்லைகளா :(
ReplyDeleteஜெயஸ்ரீ நீலகண்டன் மெயிலில்....... அவருக்கு என்னவோ பல நாட்களுக்கும் மேல் பின்னூட்டமே கொடுக்க இயலவில்லை என்கிறார். ஏதோ தொழில் நுட்பப் பிரச்னை. என்னனு புரியலை. :(
ReplyDeleteஜெயஸ்ரீ சொல்வது......"""வெளிநாட்டிலிருந்து ஏற்கெனவே நாம் இறக்குமதி செய்து வைத்திருக்கும் கலாசாரத்தின் மூலமே இப்படியானதொரு அவல வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்"""
ReplyDelete. அப்படி generalise பண்ணணறத்துக்கில்லை . நிறைய issues இருக்கு நம்ம கல்சர்லேந்து வேறையா. நாம எதை இறக்குமதி பண்ணினா நல்லதுங்கறதை பொருத்தது. , வெளிநாட்ல எத்தனையொ கன்ஸிடரெஷன் ரூல்ஸ், சென்ஸிடிவிடி இருக்கு . building code , environment consideration ideas இதெல்லாம் இறக்குமதி . பண்ணினா தப்பொண்ணுமில்லையே . வெளிநாட்டு கலாசாரம் நமக்கு பழக்கபடாததுனால அது தவறான ஒண்ணா என்னால பாக்க முடியல்ல. அவா கல்ச்சர் அவாளுக்கு ஒத்துபோனது ! நம்பளவா அதை out of context ல உபயோகிச்சுக்கறச்சேதான் ப்ராப்ளம் அவ்வளவுதான். வெளிநாடுக்காரா கிட்டேயும் நிறைய VALUES உண்டு. INDIA லயும் சமீபகாலத்துல நிறைய பேர்கிட்ட பாக்கறது - GREED . ஆசைபடலாம் அளவு சமயோசிதம் வேணும். DO NO HARM னு திடம் வேணும். .TO CHANGE FOR BETTER நல்லது .போனவாரம் இந்த DISCUSSION ஒரு இண்டியன் BUSINESSMAN ஓட வந்தது .அவர் " இண்டியால இல்லாத வால்யுவா , எங்களுக்கு தெரியாததா என்றார் அதான் தெரியுமே பாணில . நம்பளுக்கு தெரியாதது இல்லைனா ஏன் நம்பளால செய்யமுடியல்லனு கேட்டதுக்கு அவரால பதில் சொல்ல முடியல்ல . அவாள இப்ப மாத்தறது கஷ்ட்டம் இப்ப தலைஎடுக்கற வம்சாவளியினராவது ரெண்டு கல்ச்சரிலும் இருக்கற நல்லதைபாத்து எடுத்துண்டு நேர்மையா இருக்கணும்னு வேண்டிக்கறேன். நிறைய பசங்க ஆண் பெண் ரெண்டுபேருலையுமே இருக்கவும் செய்யறா
வாங்க ராம்வி, சரியாய்ச் சொல்லி இருக்கேன் என்பது தான் என் கருத்து. ஆனால் ஜெயஸ்ரீ இல்லைங்கிறார். ஆனால் அப்பாதுரை புரிந்து கொண்டிருப்பது தான் நான் சொல்லவந்ததும். :))))))))
ReplyDeleteவாங்க ராஜராஜேஸ்வரி, தொடரும் தொல்லைகள் தான். இங்கே இருந்து கிளம்ப நினைக்கிறோம். ஒரு சில முடிவுகள் எடுக்கணும்; பார்க்கலாம். இறைவன் வழிகாட்டுவான் என நம்பிக்கையுடன் இருக்கோம்.
ReplyDeleteYogs.sFR, முதல் வரவுக்கு நன்றிங்க. நேத்திக்கு இரண்டாம் தளம் கூரை போட்டாங்க. முந்தாநாளிலிருந்தே தெருவில் வாகனங்கள் போக்குவரத்தைத் தடை செய்துட்டாங்க. தெரியாமல் ஒருத்தர் காரை எடுத்துட்டு வந்துட்டு,பட்ட அவதி....... ஆனால் அவரும் ஒரு பில்டர். அதனால் சாமான்களை நகர்த்திவிட்டு வழி ஏற்படுத்தினால் தான் போவேன்னு பிடிவாதமா நின்னுட்டார். ஆட்கள் எல்லாம் எனக்குத் தெரியாது; உனக்குத் தெரியாதுனு நழுவினாங்க. அப்புறமா எப்படியோ ஆளைப் பிடிச்சு வழி ஏற்படுத்தச் சொன்னார். அப்படியும் நேற்றுக் காலையிலே கழிவு நீர் லாரி மாட்டிக்கொண்டு காலை மூன்று மணியிலிருந்து எட்டு மணி வரை மறுபடியும் போக்குவரத்துத் தடை. இந்த அழகில் எங்க வீட்டில் நேற்று சிராத்தம் வேறே. பயந்துட்டே இருந்தோம். எட்டு மணிக்கப்புறமா வழி ஏற்படுத்தினாங்க அரை மனசா! :(
ReplyDeleteஸ்ரீராம், செய்திருக்கலாம் தான். ஆனால் அவங்க அப்புறமா தொடர்ந்து கழிவுகளைச் சொல்லச் சொல்லப் போடுவதோடு அதன் மேல் ஏறி நின்று சாரமே கட்டாமல் வேலையும் பார்ப்பாங்க. அதோடு கிட்டத்தட்ட முப்பது அடிக்கும் மேல் நாங்க போடணும். பத்துப் பதினைந்தாயிரம் செலவு செய்து ஷீட்போட்டுட்டு அதையும் வீண் பண்ணினாங்கனா என்ன செய்யறது? ஏசி கம்ப்ரெஸர் மேலே மட்டும் போட்டு வைச்சிருக்கோம். :(
ReplyDeleteவாங்க அமைதி. போன வருஷம் நவம்பரிலிருந்து இந்தத் தொல்லைகள். தொடர்கின்றன. :( பதினான்கு குடும்பங்களும் வந்த பின்னர் வேறு மாதிரியான தொல்லைகள். தொடரும் தொல்லைகள் தான். :((((( சிறிய அளவிலான மனைக்கட்டுகளில் இரண்டு அல்லது நான்கிற்கு மேல் கட்டக்கூடாது என்று சட்டம் வந்தாலே போதும். மற்றபடி அடுக்கு மாடிக் குடியிருப்புகளுக்கு நான் எதிரி அல்ல. :((((((
ReplyDeleteஅப்பாதுரை, நான் சொல்வது அதுவே. எது வசதியோ அதைத் தான் நம்மவர்கள் எடுத்துக்கிறாங்க. சரியான புரிதல் என்பதே இல்லை.
ReplyDeleteமாதேவி, என்னம்மா செய்யறது?? :(
ReplyDeleteஜெயஸ்ரீ, நீங்க சொல்வது உண்மைதான். ஆனால் நம்மவர்கள் அப்படி எல்லாம் நல்ல பக்கத்தையே பார்ப்பதில்லையே? வெளிநாட்டின் பிறந்தநாள் கலாசாரம், காதலர் தினக் கலாசாரம், இத்தனைக்கும் அங்கே காதலர் தினக் கான்செப்டே வேறே; சனி, ஞாயிறு பார்ட்டி கலாசாரம்னு வசதிக்கு ஏற்றவாறு தான் எடுத்துக்கறாங்க.
ReplyDeleteகுறைந்த பக்ஷம் தெருவில் குப்பை கொட்டுவதையோ, அடுத்த வீட்டு வாசலில் வண்டிகளை நிறுத்துவதையோ நிறுத்துகிறார்களா???? இல்லை;தெருவிலோ, பக்கத்துவீடுகளிலோ தான் குப்பை கொட்டுவாங்க. அவங்க பூணூலை மாற்றிவிட்டுப் பழைய பூணூல்களை எல்லாம் எங்க தோட்டத்தில் போடறாங்க. ஐஸ்க்ரீம் ஸ்பூன்கள், கிண்ணங்கள், டிஸ்போஸபில் கிண்ணங்கள் என எல்லாமும் எங்க வீட்டுத் தோட்டத்தில் தான். சொன்னால் கோபம் வரும்! :(((((((
ReplyDeleteவண்டியை வீட்டு வாசலுக்கு எதிரே நிறுத்தாதீங்க. எங்களுக்கு வெளியே போகணும்னு சொன்னால், உங்க வீட்டு வாசலுக்கு எதிரே இது ரோடு; அங்கே தான் நிறுத்தறோம்னு சொல்றாங்க. எங்க வண்டியை எப்படி எடுக்கிறது?? அதைச் சொன்னாலும் புரிஞ்சுக்கறது இல்லை. சண்டை தான் வருது. இப்போல்லாம் சொல்லாமல் அவங்க வண்டியை என் கணவரே நகர்த்தி வைச்சுட்டு அப்புறமா வண்டியை எடுக்கிறார். :((((
ReplyDeleteமாமி
ReplyDeleteஉங்களோட நிலமைய புரிஞ்சுக்க முடியறது. இதே மாதிரி தான் பார்கிங் விஷயத்துல நான் இங்க கஷ்டப்பட்டேன். பொதுவாவே நான் இருக்கற ஊர்ல இந்தியன் ஜனத்தொகை ஜாஸ்தி. கூடவே அவாளோட attitude problems ம் சேர்த்து. நான் இருக்கறது townhome ன்னு சொல்லபடறது. பக்கத்துல இருக்கறதும் ஒரு தமிழ் குடும்பம் தான். டிரைவ்வே பக்கத்துக்கு பக்கத்துல இருக்கும். அந்த வீட்டுப் பெண் வீட்டுல பாட்டு சொல்லி தரான்னு ஒரே கூட்டம். Zoning Regulations பிரகாரம் அவ பண்ணவே கூடாது. வரவா எல்லாம் என் வீடு வாசல்ல வண்டிய விட்டு என்னால வெளில/உள்ள போக/வர முடியாம போச்சு. முதல்ல படிக்க வரா - சண்டை வேணாம்னு ன்னு தான் நினைச்சேன். ஒரு stagela எல்லை மீறி போக ஆரம்பிச்சுது. வண்டி விடாதேன உடனே அசிங்கமா திட்ட ஆரம்பித்தார்கள். ஒரு நாள் policea கூப்பிட்டு விட்டேன். அவர்கள் வந்த உடனே பக்கத்துக்கு வீட்டில் நான் சும்மா சொல்கிறேன், ஒண்ணுமே நடக்கலே என்று முழு பூசணிக்காயை மறைத்தார்கள். வந்த policekku என்னமோ நடக்கறதுனு புரிந்து என்னை தனியாகக் கூப்பிட்டு அடுத்த முறை புகைப்படம் எடுக்கச் சொன்னார்கள். அடுத்த முறை அதையே செய்தேன். உடனே பக்கத்து வீட்டினர், வந்தவர்கள் நான் அவர்களது privacy இல் தலை இடுகிறேன் என்று சீன் போட்டார்கள். நான் விடாமல் போலிசை கூப்பிட அவர்களும் வந்தனர். நான் போட்டோவை காட்டியவுடன், அவர்கள் என் மீதே பழி போட பார்த்தார்கள். போலீஸ் அவர்களை நன்கு warn செய்து என்னை பார்கிங் டிக்கெட் கொடுக்கும் அனுமதி கொடுத்தார்கள். அப்படியும் அவர்களுக்கு புத்தி வராமல் மீண்டும் செய்தார்கள். இந்த முறை என்னிடம் செண்டிமெண்டலாக பேசி ஏமாற்றப் பார்த்தார்கள். அன்று நான் கொஞ்சம் stubborn ஆக இருக்கவே பிரச்னை முடிந்தது. Townhome association லேர்ந்தும் அவர்கள் மீது அபராதம் போட வைக்க அப்ப்ரச்சனை நின்றது.
பின்னர் trash removal அன்று வேண்டும் என்றே குப்பையை என் வீடு வாசலில் போடுவார்கள். கேட்டால் இல்லையென்று சாதிப்பார்கள்.
எனக்கும் Association இல் சொல்லி அலுத்து விட்டது. Association அவர்களை கையும் களவுமாக பிடிக்க வேண்டும் எனச் சொல்றது. நான் வேலை வெட்டிய விட்டுட்டு சதா அங்கேயே உட்காரவா முடியும். ஒரு பாட்டுல சொல்ற மாத்ரி திருடனா பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. அது மாதிரி இவனுக்கா புத்தி வராத வரைக்கும் ஒன்னும் செய்ய முடியாது. நம்மோட மன அமைதி தான் கெடும்.
இந்தியர்கள் ஏன் எங்க போனாலும் அடி வாங்கறான்னா இதுவும் ஒரு காரணம். ரயிலில் இந்தியா மாதிரியே கதவு பக்கம் (மூடி இருந்தாலும்) நிக்க வேண்டியது. சாயங்காலம் rushhour கூட்டத்தில் முதலில் ஏறி இப்படி கதவு பக்கம் நின்று கொள்வதால் ஒரு bottleneck ஏற்படறது, எதாவது சொன்னால் சண்டைக்கு வருவது, கத்தி செல்போனில் பேசுவது, சத்தம் அதிகமாக பாட்டு கேட்பது, அடுத்தவன் சீட்டில் கால் நீடிக்கறது இப்படி பண்ணாதே ன்னு சொல்றவாளோட சண்டை போடறது ன்னு இருக்கிறார்கள். இங்க உள்ள வெள்ளைக்காரா நியூயார்க் trenton எக்ஸ்பிரஸ் பேரையே பாம்பே எக்ஸ்பிரஸ் ன்னு மாத்திட்டா. (அந்த மாத்ரி ஒரு commotion ). அவர்கள் இப்படி சொல்றபோது மத்தவாளுக்கு தான் அசிங்கமாக இருக்கும்.
ReplyDeleteஇன்னொன்னு வேலை விஷயத்துல interviewla நிறைய பொய் சொல்றது. சமீபத்தில் ஒரு interviewil நம்மோட பக்கத்து மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பையன் வந்தான். IIT மெட்ராஸ் என்று resume இல் போட்டுருந்தான். கேட்ட கேள்விகளுக்கு சரியான பதில் வராமல் போகவே நீ IITM இல் நிஜமாகவே படித்தாயா என்றால் ஆமாம் என்று சாதிக்கின்றான். அவன் குறிப்பிட்ட அதே ஆண்டில், அதே கோர்ஸ் படித்த வேலை செய்யும் ஒருவரை கூப்பிட்டு இவரை தெரியுமா என்றால் தெரியாது என்றான். அவர் அங்கு தான் படித்தார் - நீ பொய் தானே சொல்றாய் என்ற உடன் அவன் சொன்ன பதில் என்ன தெரியுமா - நீங்கள் எல்லோரும் பொய் சொல்கிறீர்கள். :) மெட்ராஸ் consulateil fraud டாகுமென்ட்ஸ் கொடுப்பதில் ஆரம்பிக்கும் பழக்கும் இங்கும் விடுவதில்லை. இதனால் genuine cases பாதிக்கப்படுகிறார்கள். இதுக்கெல்லாம் காரணம் ஒரு moral values இந்தியாவில் தொலைந்தது தான். நேர்மையாக இருப்பவர்கள் தான் அசடு/பைத்தியம் எல்லாம்.
வாங்க ஸ்ரீநி, நீங்க சொல்றதை எல்லாம் பார்த்தால் வெட்கமா இருக்கு. ஏன் தான் நாம் இன்னமும் மாறாமல் இருக்கோம்னும் புரியலை. :(((((
ReplyDeleteஇதுக்கெல்லாம் காரணம் ஒரு moral values இந்தியாவில் தொலைந்தது தான். நேர்மையாக இருப்பவர்கள் தான் அசடு/பைத்தியம் எல்லாம்.//
ReplyDeleteசரியே, எல்லாருக்குமே இப்போப் பணம், இன்னும் பணம், அதிகப் பணம்னு சம்பாதிக்கும் ஆசை பெருகிவிட்டது. பணமும், அதில் கிடைக்கும் சுகமும் போதும்னு இருக்காங்க. :((((