1) நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்?
புத்தகம் படித்தல்
பசியோடு வருபவருக்கு வயிறாரச் சாப்பாடு போடுதல்
புத்தகம் படித்தல் தான் மறுபடி ஆனால் இப்போக் குறைச்சிருக்கேன். :(
2) நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?
என்னமோ நான் ஆசைப்பட்டுட்டு உடம்பு குண்டாயிருக்கிறாப்போல் எல்லாரும் கேட்பது.
ஹிஹிஹி, இணைய உலகுக்காரங்களைச் சொல்லலை. அவங்க பார்க்கிறது ஆனைக்குட்டியைத் தான். அதுக்கு முன்னால் கொடி போன்ற என்னைப்பார்த்தவங்க இப்போப் பார்க்கிறச்சே கேட்பது இதுதான், ஏன் குண்டாயிட்டேனு! என்னத்தைச் சொல்றது?
அதே தான் நிறம்! என்னடி இது கறுப்பாயிட்டேம்பாங்க. கறுப்பா இருந்தால் என்ன?? தப்பா?
விதவிதமான மாத்திரைகள் சாப்பிடுதல். விட முடியாதே!
3) பயப்படும் மூன்று விஷயங்கள்?
அதெல்லாம் ஒண்ணும் இல்லை.
ரகசியமா வச்சுக்குங்க, கரப்பைப் பார்த்தால் அலறுவேன் ஒருகாலத்தில். அப்புறமா அதோடு குடித்தனம் நடத்தி, இப்போப் பழகிப் போச்சு! பாம்பைக் கண்டால் பயமில்லை. :)))))
4) உங்களுக்குப் புரியாத மூன்று விஷயங்கள்?
ஏன் பக்கத்து வீடுகளிலேயே குப்பை போடறாங்க நம்ம மனிதர்கள்?
வீட்டுக்குள்ளே கழிப்பறை இருந்தும் பக்கத்துவீட்டுக் குழந்தைங்க எல்லாம் வாசலையே கழிப்பறையாகப் பயன்படுத்துவது ஏன்?? கேட்டால் குழந்தை தானே னு சொல்றாங்க.
இதை எல்லாம் கேட்டால் விரோதியாகப்பார்ப்பது ஏன்?
5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?
ஹிஹிஹி,புத்தகங்கள் தான், வழியுது. எடுத்து வச்சாலும் திரும்பவும் எப்படி வந்துடுது? இது புரியலை எனக்கு. நாலாம் கேள்விக்கு பதிலா இதை எழுதி இருக்கணுமோ?? :)))))))))))))
6) உங்களைச் சிரிக்க வைக்கும் மூன்று விஷயங்கள் அல்லது மனிதர்கள்?
காரணமே வேண்டாம் சிரிச்சுட்டுத் தான் இருந்தேன். அப்புறமா வாழ்க்கைப் பயணத்திலே எல்லாம் குறைஞ்சு போச்ச்ச்ச்ச்ச்ச்ச். இப்போ அதிகம் சிரிக்கிறதில்லை என்றாலும் இணையத்தில் உள்ள ஜோக்குகள், சிலரின் பஸ் போஸ்ட், சில பதிவுகள்னு நினைச்சுச் சிரிக்க வைக்கும்.
7) தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?
கணினி முன்னால் உட்கார்ந்து கொண்டு(முதல் காரியம்)
என்ன எழுதணுமென யோசித்துக் கொண்டு( இரண்டாவது காரியம்)
அதைத் தட்டச்சுகிறேன். (மூன்றாவது காரியம்)
8) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?
அது வரைக்கும் இருக்க அனுமதிக்கும் ஆண்டவனுக்கு நன்றி கூறுவது தான்.ஆண்டவனை நினைக்கும் ஒவ்வொரு நாளும் ஒரு பொன்னாளே.
9) உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்?
குறிப்பா எதுனு புரியலை. ஏனென்றால் சில வேலைகளுக்குப் பிறர் உதவி தேவை. என்னைப் பொறுத்த வரைக்கும் வீட்டு வேலைகள் அனைத்தையும் நானே சமாளிச்சுப்பேன். குறைந்த பக்ஷமாக முப்பது நபர் வரையிலும் சமைத்து விடுவேன். இது தவிர வேறு என்றால் என்னனு தெரியவில்லை. என்னால் இயன்றவரை பிறருக்கு உதவிகள் செய்வதை வலுவில் கேட்டுச் செய்வதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறேன்.
10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?
இது எப்படி முடியும்? அப்படினு யாராவது கேட்டால் கொஞ்சம் கஷ்டமா இருக்கும். அதுவும் சிலர் அன்றாட வேலைகளுக்கே முடியலைனு சொல்வாங்க. நேரத்தைக் கொஞ்சம் மாற்றியமைக்கலாமேனு தோணும். அப்படிப் பட்ட நொண்டிச்சாக்குச் சொல்வதைக் கேட்கையிலே கஷ்டமாய் இருக்கும்.
பொய். அதுவும் என்னை ஏமாற்றப் பொய் சொன்னாங்கனு சில சமயம் தெரிகையில் மனசு வேதனைப் படும்.
அதே போல் நாம உண்மையைச் சொன்னாலும் நம்பாத போது மனம் அதை விரும்பாது. :(
11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?
ஒண்ணுமே தெரியாதே! இங்கே இணையம் வந்ததுக்கப்புறமாத் தான் ஒவ்வொருவரும் எப்படிச் சிறப்பாக இருக்கிறாங்க என்பது புரிகிறது. நாம இப்படி இருக்கோமே என்றும் தோன்றும். அதனால் கற்றுக்கொண்டே தான் இருக்கேன். எந்த மொழியிலும் வல்லுநர் இல்லை. ஓரளவு தெரிந்த தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் எதுவும் முழுசாத் தெரியாது. ஆகவே இன்னும் மாணவி தான்.
12) பிடித்த மூன்று உணவு வகைகள் ?
ரசம் சாதம்
சுட்ட அப்பளம்/நெய் தடவினது
இப்போது எங்க வீட்டு நார்த்தை ரசம் பிழிந்த மோர்
13) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?
அது அன்றன்றைக்கு மாறும். சில நாள் சில பாட்டுக்கள் திரும்பத் திரும்ப வரும்.சங்கீதம் கேட்கப் பிடிக்கும் என்பதால் எல்லாப் பாட்டுக்களுமே பிடித்தவை தான்.
14) பிடித்த மூன்று படங்கள்?
காமெடிப் படங்கள் தான் பிடிக்கும். ஒளவை சண்முகி வரதுக்கு முன்பே அதன் ஒரிஜினல் பார்த்தேன். ரொம்பப் பிடிச்சது. குழந்தைங்க அப்பாவைக் கண்டு கொள்ளும் அந்தக் குறிப்பிட்ட சீன் ரொம்பவே ரசிச்சிருக்கேன். He is She, She is He அப்படினு ஒருத்தருக்கொருத்தர் பகிர்ந்துக்கும் சீன்!!!
தமிழில் நாகேஷ் காமெடி எல்லாமும் பிடிச்சது தான். சோப்பு, சீப்பு, கண்ணாடி எத்தனை தரம் பார்த்தாலும் அலுக்காத காமெடி
சந்திரபாபுவின் சபாஷ் மீனா.
15) இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூணு விஷயம்?
அப்படி எதுவும் இல்லை. அதிகமான எதிர்பார்ப்புக்கள் கிடையாது. அக்கம்பக்கத்தைப் பார்த்து இது இல்லை; அது இல்லைனு நினைச்சுக்கிறதும் கிடையாது. எல்லாத்துக்கும் மேலே ஆடித் தள்ளுபடிக்கு எல்லாம் போன நாளே கிடையாது. துணிக்கடைக்குப் புடைவை வாங்கப் போனாலும் முன் கூட்டியே திட்டம் போட்டு இந்தப் புடைவை, இந்தக் கலர்னு முடிவு பண்ணிட்டுப் போவேன். கிடைச்சால் சரி; இல்லைனா இல்லாத கலரா வாங்கிட்டு வந்துடுவேன். No regrets.
16) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்?
ஹாஹாஹா, யாருப்பா மாட்டிக்கிறீங்க?? ஒழுங்கா வந்து பேரைக் கொடுங்க, இல்லைன்னா .........
ரேவதி நரசிம்மன்
துளசி கோபால்/ நியூசி போனதும் எழுதினாப் போதும். சலுகை உண்டு.
லக்ஷ்மி
என்னை அழைத்துவிட்டு முழி பிதுங்கும் எல்கேவுக்கு நன்றி.
நல்ல பதில்கள் மாமி.
ReplyDeleteசிரிக்க வச்சுட்டீங்க.
ReplyDeleteநெய் தடவின சுட்டப்ளாம் - என்னாஆஆ ரசனை!! மழை நாள்ல புஸ்தகம் படிக்கறப்ப சைட் டிஷ். மறந்தே போச்சு!
பிறர் நம்மிடம் பொய் சொல்வதை விட நாம் சொல்லும் உண்மையை ஏற்க மறுப்பது இன்னும் சங்கடம். சரியே.
அன்பு கீதா அழைப்பிற்கு ரொம்ப நன்றி. எனக்குத் தெரிந்த எல்லா விஷயங்களையும் நீங்களே எழுதிவிட்டதால் நான் என்ன எழுதறதுன்னு யோசிக்கிறேன்,.
ReplyDeleteமுடிந்தால் இரண்டு நாளில் எழுதிடறேன்பா. ஊருக்க்க் கிளம்பணுமே;)
நீங்க எழுதி இருக்கிறது அத்தனையும் வாஸ்தவம்.
"மூணு மூணாய்த் தான் சொல்லிய முத்தான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
ReplyDeleteஅனைத்தையும் ரசித்தேன்! குறிப்பாக 9,10,11.....
ReplyDelete//பசியோடு வருபவருக்கு வயிறாரச் சாப்பாடு போடுதல் //
ReplyDeleteஅட... டீ-கடைல புல் மீல்ஸ் கூட கிடைக்குதா மாமி...:)
//பாம்பை கண்டால் பயமில்ல//
ஆமா ஆமா... அதுக்கு தான் உங்கள கண்டா பயமாம்...:)
//கரப்பைப் பார்த்தால் அலறுவேன் ஒருகாலத்தில். அப்புறமா அதோடு குடித்தனம் நடத்தி, இப்போப் பழகிப் போச்சு! //
ReplyDeleteயாரைக் கரப்புன்னு சொல்றீங்க கீதாம்மா? :-)
கரப்பான் பூச்சியோடு குடித்தனம்...:)
ReplyDeleteபுரியாத மூன்று விஷயங்களில் உங்கள் சப்ஜெக்ட்!
எட்டு...சூப்பர்.
பத்து...நம்மை நம்புபவர்களுக்கு நம்மைப் புரிய வைக்க வேண்டியதில்லை. நம்பாதவர்களுக்கு சொல்லிப் பயனில்லை!
பிடித்த மூன்றில் மாகாளி இல்லையா?
நான் லேட்டா ?? பதிவு பக்கமே வரத்து இல்லை. அதான் காரணம். கேட்ட உடனே எழுதினதுக்கு நன்றி .
ReplyDeleteகரப்பு , பெண் குலத்தின் எதிரி
எங்கே கொடுத்த பேட்டி இது?
ReplyDeleteபி.பி.சி யா? :)
சிவனேன்னு உங்களோட இருக்கிறவரை கரப்பு என்று கிண்டல் அடிப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். :)))))))
@ராம்வி, நன்றிம்மா.
ReplyDeleteவாங்க அப்பாதுரை, நிறைய ஜீரகம் போட்ட அப்பளத்தைச் சுட்டுட்டு நெய் தடவிச் சாப்பிட்டுப் பாருங்க. சொர்க்கம் பக்கத்தில்! :)))))
ReplyDeleteபுத்தகம் படிக்கிறச்சே சைட் டிஷ் இருந்தால் டிஸ்டர்ப் ஆகுது. அதனால் அது வேண்டாம். :)))))
பிறர் நம்மிடம் பொய் சொல்வதை விட நாம் சொல்லும் உண்மையை ஏற்க மறுப்பது இன்னும் சங்கடம். சரியே.//
ஆமாம், நிறையப் பட்டாச்சு! அப்புறம் தெரிஞ்சால் கூட நீ சொன்னது உண்மைதான் அப்படினு ஒத்துக்கறதில்லை. ஈகோ?? இருக்கலாம்.:))))
வாங்க வல்லி, ஒண்ணும் அவசரம் இல்லை, நிதானமாய் யோசிச்சு எழுதுங்க.
ReplyDeleteநன்றி ராஜராஜேஸ்வரி.
ReplyDeleteநன்றி பாலாஜி.
ReplyDeleteபாலாஜி முதல்வரவு?? வரவுக்கு நன்றி.
ReplyDeleteஏடிஎம், வாங்க, சுடு தண்ணி மட்டும் வச்சுக் கொடுக்கிறேன் உங்களுக்கு.
ReplyDeleteஹிஹிஹி, பாம்பெல்லாம் பிரண்ட்ஸாக்கும். :))))) ஹலோ சொல்லும்,
யாரைக் கரப்புன்னு சொல்றீங்க கீதாம்மா? :-)//
ReplyDeleteகுமரன், அநியாயமா இல்லை? இத்தனை நாள் கழிச்சு வந்துட்டு இப்படி ஒரு உ.கு??? :P:P:P:P
ஸ்ரீராம் நன்றிங்க. பிடித்த விஷயங்களில் மாகாளி ஊறுகாயும் உண்டு தான். ஆனால் அதெல்லாம் மதுரையோடு போச்சு; அப்புறமாச் சில வருடங்கள் மதுரை போனால் கொண்டு வருவேன். அப்புறமா இல்லை; சுத்தமா மறந்தாச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச். :))) இப்போல்லாம் ஊறுகாயே சாப்பிடறதில்லை. :D
ReplyDeleteஎல்கே, ஆமாம், நீங்க லேட் தான். ஹிஹி, கரப்பை எதிரியாய் நினைக்கும் லக்ஷோப லக்ஷம் பெண்களுக்கும் நான் தலைவி. :)))))
ReplyDeleteஅஷ்வின் ஜி, நியூயார்க் டைம்ஸிலே கூட முதல் பக்கம் தலைப்புச் செய்தியிலே வந்திருக்கே?? வாஷிங்டன் போஸ்டிலே கூட வந்திருக்குனு சொன்னாங்க. பார்க்கலையா?? :P
ReplyDeleteசிவனேன்னு உங்களோட இருக்கிறவரை கரப்பு என்று கிண்டல் அடிப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். :)))))))//
அநியாயமா இல்லை?? :P
வாங்க கோபி, வெறும் சிரிப்புத் தானா??
ReplyDeleteமுத்தான பதில்கள் கீதாம்மா..
ReplyDeleteமுத்தான பதில்கள் கீதாம்மா..
ReplyDeleteநன்றி அமைதி.
ReplyDelete//சிரிச்சுட்டுத் தான் இருந்தேன். அப்புறமா வாழ்க்கைப் பயணத்திலே எல்லாம் குறைஞ்சு போச்ச்ச்ச்ச்ச்ச்ச். இப்போ அதிகம் சிரிக்கிறதில்லை என்றாலும் இணையத்தில் உள்ள ஜோக்குகள், சிலரின் பஸ் போஸ்ட், சில பதிவுகள்னு நினைச்சுச் சிரிக்க வைக்கும்.//
ReplyDeletethats very true, Maami. blog_la romba arpudhama ungalai pola silar nagai suvai unnarvodu ezhudhuvadhai padithu siripadhu dhan sirupu. :) Happy belated friendship day ,Maami.
//
ReplyDelete16) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்?
ஹாஹாஹா, யாருப்பா மாட்டிக்கிறீங்க?? ஒழுங்கா வந்து பேரைக் கொடுங்க, இல்லைன்னா //
இது புது டெக்னிக்கா இருக்கே ... அவ்வ்வ்வ்
வாங்க ரசிகன், ஹிஹிஹி, நல்ல டெக்னிக் தான் என்றாலும் யாருமே மாட்டலை பாருங்க.
ReplyDeleteதமிழ்ப் ;புத்தாண்டு சித்திரையில். உங்கள் மகிழ்ச்சியை ஒரு பதிவு போட்டு அறிவியுங்கள்.
ReplyDeleteதிரு குணசேகரன், உங்கள் முதல் வரவுக்கு நன்றி. பின்னூட்டத்திற்காக வலைப்பக்கம் திறந்திருப்பீங்க போல! போகட்டும்! நான் ஏன் பதிவு போட்டு என் மகிழ்வைத் தெரிவிக்கணும்??
ReplyDeleteஎனக்கும் என் குடும்பத்தினருக்கும், உறவினர், நண்பர் வட்டத்திற்கும் என்றுமே, எப்போதுமே சித்திரை தான் தமிழ்ப் புத்தாண்டு. இதில் எப்போவும் மாற்றம் செய்ததில்லை; இனி செய்யப் போவதுமில்லை. ஆகையால் தேவையில்லாத பின்னூட்டத்தைத் தவிர்த்திருக்கலாம். :P