நாங்க அம்பத்தூருக்கு வந்த புதுசுலே வீடுகள் அனைத்துமே தனித்தனியாகவே இருந்தன. அந்த தனிவீடுகளிலேயே பகுதியாகப் பிரிக்கப் பட்டு வாடகைக்கு விடப் பட்டது. அல்லது ஒரே காம்பவுண்டுக்குள்ளேயே சின்னச் சின்ன வீடுகள் கட்டப் பட்டு மூன்று வீடுகளுக்கு ஒரு குளியலறை, கழிவறை என்று ஏற்படுத்தப் பட்டு வசித்தனர். கூட்டம் அதிகம் இல்லை. நகரில் இருந்து தூரம் என்பதோடு நகருக்குச் செல்லவும் பேருந்து வசதிகளும் அதிகம் இல்லை. ஆனாலும் ரயிலில் அரை மணி நேரத்திலே சென்னை சென்ட்ரல் போக முடிந்திருக்கிறது. தண்ணீர் சுவையாக இருக்கும். மதுரை போன்ற நகரத்தில் இருந்துட்டு வந்த எனக்கு முதலில் சிரமமாய் இருந்தாலும், அப்புறம் பழகி விட்டது. பக்கத்துப் போர்ஷன் காரங்களோட பேசணும்னாலும் வீட்டைப் பூட்டிக்கொண்டே போகணும். ஒவ்வொருவருக்கும் தனி வாசல், எதிரே ஏக்கர் கணக்கில் பெரிய திறந்த வெளி, மரங்கள், மரங்கள், மரங்கள்.
அப்போல்லாம் டேபிள் ஃபேன் தான். சீலிங் ஃபேன் வைச்சுக்கலை. அடிக்கடி மாற்றலாகும் என்பதால் சீலிங் பேன் போடுவதும் கழட்டுவதும் ஒவ்வொரு முறையும் ஆள் தேடணும்னு டேபிள் பேன் தான். அதுவே டிசம்பரில் இருந்து தேவையும் படாது! நாங்க இருந்த வீட்டில் இருந்து வைஷ்ணவி கோயிலுக்கும், திருமுல்லைவாயில் கோயிலுக்கும் நடந்தே போவோம். எந்தப் பயமும் இருக்காது. அப்புறமும் நாங்க பெண்களாய்ச் சேர்ந்து நடந்தோ அல்லது பேருந்திலோ போயிருக்கோம்.
இப்போ அந்த அம்பத்தூரானு இருக்கு. நகரமயமாக்குதல் என்ற பெயரிலே எல்லா இடங்களிலும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் வருகின்றன. கார்த்திக் ஒரு பதிவில் சென்னையில் காமன்வெல்த் போட்டிகளை நடத்தி இருக்கலாமே என்றார். என்ன அடிப்படை வசதி இருக்கு சென்னையிலே?? அவர் சொல்றார் அம்பத்தூரிலே வேணா இல்லை, மற்ற இடங்களிலே இருக்குனு சொல்றார். எனக்குத் தெரிஞ்சு அரை மணி நேரம் மழை பெய்தால் கோயம்பேடு நூறடிச் சாலை நிரம்பி வழிகிறது. தண்ணீர் போக வழியில்லை. சென்னையின் பிரதான சாலைகள் எல்லாத்துக்கும் இந்தக் கதிதான். அம்பத்தூருக்குக் கேட்கணுமா??
மற்ற மாநிலங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுவதற்கு முன்னால் அடிப்படை வசதிகளை அவங்க நிறைவேற்றி இருக்கணும். அப்புறம் தான் கட்டிடம் அஸ்திவாரமே போடமுடியும். ஆனால் இங்கே?? கழிப்பறைக் கழிவு நீர் செப்டிக் டாங்குகளில் நிரம்பிக் கொள்ளும்படியான ஏற்பாடுதான் இன்னும் உள்ளது. பாதாளச் சாக்கடை என்பதே இல்லை. திட்டம் ஆரம்பிக்கப் போகிறோம்னு சொல்லி குடியிருப்போரிடம் ஒன்பதாயிரம் வசூல் செய்ய ஆரம்பித்தது அம்பத்தூர் நகராட்சி. ஆனால் அதை எதிர்த்ததால் கொஞ்சம் கீழே இறங்கி ஏழாயிரத்து ஐந்நூறு ரூபாய் கட்டி வருஷம் பத்துக்கும் மேல் ஆகிறது. இன்று வரை பாதாளச் சாக்கடைக்கு எந்தவிதமான ஏற்பாடுகளும் செய்யப் படவில்லை. இந்த அழகில் அடுக்கு மாடிக் குடியிருப்புகளுக்கு அவங்க பாட்டுக்கு அனுமதி கொடுத்துட்டே போறாங்க. ஏனென்றால் அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் எத்தனை குடியிருப்புகள் வருகின்றன என்பதைக் கணக்கிட்டு அவங்களுக்கு என பெட்டர்மெண்ட் டாக்ஸ் வசூலிக்கிறாங்க இல்லையா? குடியிருப்பு அதிகம் ஆக, ஆக நகராட்சிக்கு வருமானம் அதிகம். செலவும் செய்யவேண்டாமே! போய்க் கேட்டால் இதோ போடுவோம்னு சொல்லிட்டாப் போச்சு.
அடுத்துக் குடிநீர். சென்னை முழுதுக்குமே இங்கிருந்து புழல் தண்ணீர் தான் குடிக்கப் போகிறது. ஆனால் அம்பத்தூர் மக்களுக்கு ஒரு சில இடங்களில் உள்ளவர்களுக்கு மட்டுமே சுத்திகரிக்கப் பட்ட குடிநீர் நகராட்சியால் வழங்கப் படுகிறது. அதுவும் எல்லா இடங்களிலும் இல்லை. இத்தனைக்கும் அம்பத்தூரைச் சுற்றிலும் ஒரு காலத்தில் ஏரிகள் நிறைய இருந்தன. இப்போது தான் கொஞ்சம் விழித்துக்கொண்டு தாங்கல் ஏரியையும் முகப்பேர் ஏரியையும் தூர் வாரிச் சுத்தம் செய்திருக்கின்றனர். இங்கே எங்க வீட்டுக்கு அருகே உள்ள கொரட்டூர் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றவே இல்லை. ஏரி கடும் ஆக்கிரமிப்புக்குள்ளாகி இருப்பதோடு, சில இடங்களில் பார்த்தீனியமும் வளர்ந்து நீரை உறிஞ்சுகிறது. இதை எல்லாம் ஒழுங்கு செய்தாலே குடிநீருக்குக் கை ஏந்த வேண்டாம். முக்கியமாய் அடுக்கு மாடி கட்டும் முன்னர் காலி மனை குறைந்த பக்ஷமாக மூன்று கிரவுண்டு இருக்கவேண்டும் எனச் சட்டம் கொண்டு வரவேண்டும். கர்நாடகாவில் பங்களூருவில் ஐந்து கிரவுண்ட் காலி மனை என்றால் தான் அடுக்கு மாடிக் குடியிருப்புக் கட்ட அநுமதி கிடைக்கும். மூன்று கிரவுண்ட் என்றால் தனியாக ஓரிரு வீடுகள் கட்டிக்கொள்ளலாம். அதோடு அங்கே அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டவென சில விதிமுறைகளைக் கட்டாயமாகப் பின்பற்றுகிறார்கள்.
குடியிருப்பைச் சுற்றிலும் குறைந்த பக்ஷமாக நான்கடி இடமாவது இருக்கவேண்டும். மரங்கள் குடியிருப்பின் முன்னாலும், பின்னாலும் கட்டாயமாய் இருக்கவேண்டும். குடியிருப்புக் கட்ட அஸ்திவாரம் போடும்போதே கழிவு நீர் செல்லும் சாக்கடை வசதிகள், மற்றும் கழிப்பறை நீர் செல்லும் செப்டிக் டாங்கின் முறையான இணைப்புகள், விதிமுறைகளுக்கு உட்பட்டுக் கட்டப்படவேண்டும். குடி நீர் வசதிக் குழாய்களையும் முதலிலேயே பதிக்க வேண்டும். இவை இத்தனையையும் அந்த அந்த நகராட்சி, மாநகராட்சி அநுமதியை முறைப்படி பெற்றுச் செய்து முடிக்க வேண்டும். இதைக் கட்டாயமாகக் கர்நாடகாவில் பின்பற்றுகின்றனர். குஜராத்திலும் பின்பற்றுகின்றனர். குஜராத் பற்றித் தனியாகச் சொல்கிறேன். ஆனால் இங்கே தமிழ்நாட்டில் ஒரு கிரவுண்டில் ஒருத்தர் வீடு கட்டிக் குடி இருந்தால் கூட அவர் அடுக்குமாடிக் குடியிருப்புக்குத் தன்னோட மனையைக் கொடுத்துவிட்டு ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பும், கையில் லட்சங்களில் ரொக்கமும் பெற முடிகிறது. இந்த மாதிரி ஒரு கிரவுண்டில் எல்லாம் மற்ற மாநிலங்களில் அடுக்கு மாடிக் குடியிருப்புக் கட்ட அநுமதிப்பதில்லை.
தொல்லைகள் தொடரும், ஏற்கெனவே படிச்சவங்க தயவு செய்து பொறுத்துக்கணும். இங்கே இதன் எதிர் விளைவுகள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன. :D
for followup only :)
ReplyDeleteஇந்த மாதிரி ஒரு கிரவுண்டில் எல்லாம் மற்ற மாநிலங்களில் அடுக்கு மாடிக் குடியிருப்புக் கட்ட அநுமதிப்பதில்லை.
ReplyDeleteநரக மயமாக்கல் திட்டம்???
இவர்கள் நகரமயமாகலா செய்கிறார்கள்..? நரகமயமாக்கல்லவா செய்கிறார்கள்.
ReplyDeleteஅவர்களுக்குத் தெரியாத விதிமுறைகளா?
விதிகளே மீறத்தான் என்பதே விதி!!
விதிமுறைகள் மீறப் படுவதற்கு அரசாங்கம் காரணம் என்று சொன்னாலும் பொது மக்கள் அதைத்தானே விரும்புகிறார்கள்...? மழை நீர் சேகரிப்பு திட்டத்துக்கு எத்தனை பேர் பொய் சான்று கொடுத்து அனுமதி வாங்கினார்கள்? சென்னையின் கஷ்டங்களுக்கு பொது மக்களிடையே தானாக ஒரு விழிப்புணர்ச்சி வந்தால்தான் உண்டு. சாலைகளில் குப்பை போடக் கூடாது, சாலை விதிகளை மதிக்க வேண்டும்...
ReplyDeleteதொண்ணூற்று நான்கு தொன்நூற்றைந்தில் வந்த திரைப் படங்களில் காட்டப் படும் அன்னா சாலையையே பாருங்கள்...அதற்குள் எவ்வளவு மாறுதல்...தூர தூரமாய் வீடுகள்...மரங்கள் என்று அந்தக் காட்சியை இனி கற்பனையிலும் பழைய புகைப் படங்களிலும் மட்டும்தான் காண முடியும்...!
நகரமயமாதலின் உள்ள பிரச்சனைகள் குறித்து
ReplyDeleteமிக ஆழமாக யோசித்து அழகாக பதிவிட்டிருக்கிறீர்கள்
எல்லா அரசு எந்திரங்களும் பணம் வசூல் செய்வதில் உள்ள ஆர்வத்தையும்
வேகத்தையும் பணியை நிறைவேற்றுவதில் காட்டுவதில்லை
அதை மிக அழகாக கோடிட்டுக்காட்டிப்போகிறீர்கள்
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்
(நான் மதுரைதான் மதுரை கொஞ்சம் தேவலை)
Mostly it s a madrasi prob. Not a madrasi myself; yet hav some comments.
ReplyDeleteLast month, i came to madr. Travelling fro meenambaakkam to avadi, thence to nungambaakkam, i saw many high-rise bldgs either side, which r commercial bldgs like IT offices and star hotels. The front side of such bldgs boast of vast open spaces with manicured grass and the city corpn has put up a board there stating that such open spaces r done at the behest of their order. Pl note the manicured grass s not on plain so that a visitor sees them not fully. The grass s on an artificial mounds, creating an aesthetic illusion that it is a landscape.
Such open spaces r mandated by mode of an order. The result is a welcome look. The visitor leaves the city with the feeling that the city fathers do mind for an aethetic look and, indeed, execute their orders. It s also a green campaign, which s now everywhere advocated.
From ur post, the city admn does not care for such things, i mean, framing suitbable policies to make both aesthetic and convenience and happy living of citizens in residential areas.
It s possible to redress all the grievances u hav mentioned; but the city admn s not willing. The unwillingness s conscious i.e they know they neednot care for u.
Here, the comments of some made here r valid, namely the people themselves dont clamor for anything that s good for their happy living, so they dont feel the need to help u.
In the case of commercial bldgs, such awareness or clamor has been created by foreign dignitories visiting the city; or our own bureaucrats or politicians or other VIPs.
U hav done well raising an important awareness. but it s like throwing a stone in an ocean. A single individual cant do anything. But that s discouraging u, isnt ?
Y dont u talk to desikan if u get a chance to meet him and tell him all that. He s active in civic awareness campaign.
வாங்க எல்கே, நீங்க ஏற்கெனவே படிச்சது தான்! :)))))
ReplyDeleteவாங்க ராஜராஜேஸ்வர்,
ReplyDeleteநகர மயமோ, நரக மயமோ இதில் முக்கியமாய்த் தெரியலை. பணம் பண்ணுவதே முக்கியமாய்த் தெரிகிறது. எல்லாருக்கும் அதிகமாய்ப் பணம் இருப்பது அவசியமாய்த் தெரிகிறது. அதுக்காகத் தங்கள் நிலங்களை இப்படிக் கொடுத்துட்டு அதிலே ஒரு துண்டு இடத்தில் அவங்க கட்டிக்கொடுக்கும் குடியிருப்பில் இருப்பதை சொர்க்கமாய் எண்ணி ஆநந்திக்கிறார்கள். எங்க பக்கத்து வீட்டில் இருந்தவர் அடுக்கு மாடிக் குடியிருப்புக்குக் கொடுத்ததை தான் செய்த மிகப் பெரிய புத்திசாலித் தனமான காரியம் என நினைக்கிறார். தொலைநோக்குப் பார்வையோடு அதன் பலாபலன்களைச் சிந்திக்கவே இல்லை.
நானானி, சென்னை முழுதும் இது தான் நடக்கிறது. ஆனாலும் அம்பத்தூர் வரை வராமல் இருந்தது. இப்போ இதன் கைகள் விரிந்து விசாலமாகிக் கும்பகோணம் வரை போய் விட்டது. :(((((
ReplyDeleteஸ்ரீராம், வரவுக்கு நன்றி. மழைநீர் சேமிப்பைப் பற்றிப் பேசுவதற்கு முன்பே நாங்கள் எங்க வீட்டில் மழை நீரைச் சேமித்துக் கிணற்று நீரை ஓரளவுக்கு மாற்றினோம். ஆனாலும் ஒரு சிலரைத் தவிர மற்றவர் மழை நீர் சேமிப்பில் அக்கறை காட்டவும் செய்தார்கள்.
ReplyDeleteவாங்க ரமணி அவர்களே, முதல் வரவுக்கு நன்றி. மதுரை குறித்த பதிவுகளையும் நேரம் இருக்கையில் பாருங்கள். என்னோட ப்ரொஃபைலிலேயே சுட்டி கிடைக்கும்.
ReplyDeleteமதுரை பரவாயில்லைனு சொல்றீங்க. ஆனால் நகரத்துக்குள்ளேயுமா?? நகரத்தினுள்ளே ஏன் இவ்வளவு நெரிசல்?? எப்போதும் கும்பல்! கடைசியாய் மதுரை வந்தப்போ போதும் போதும்னு ஆகி விட்டது. இப்போ மதுரைனாலே அலறும் அளவுக்கு ஆகிவிட்டேன். :(((((
வாங்க சிம்மக்கல். இருப்பதும் அங்கேயேதானா?? மதராஸில் மட்டுமே பிரச்னைனு சொல்ல முடியலை. இப்போக் கும்பகோணம் வரையிலும் பரவி இருக்கு. கும்பகோணம் சோலையப்பன் தெருவில் இருந்த வாழைத்தோப்பு இன்று ஃப்ளாட்கள் கட்டவும், வீடுகள் கட்டவும் விற்பனை ஆகிக் கொண்டிருக்கிறது. கும்பகோணத்திலிருந்து மருதாநல்லூர் செல்லும் சாலை, ஸ்வாமி மலை செல்லும் சாலையெல்லாம் விளை நிலங்கள் வீடுகளாக மாறிப் பயிராகிக் கொண்டிருக்கின்றன. இதை எங்கே போய்ச் சொன்னாலும் நடவாத ஒன்று. தேசிகனால் என்ன? சுப்ரீம் கோர்ட்டுக்கே போனாலும் நடக்காது என நினைக்கிறேன். மக்கள் தாங்களாகவே இதை எதிர்த்தாலொழிய எதுவும் நடக்காது.
ReplyDeleteஅதான் ஊதற சங்கை ஊதலாமேனு.
அடுக்கு மாடி..தொடரும் தொல்லைகள்தான்....
ReplyDelete