ராமாயணம், மஹாபாரதம் ஆகிய இரு காவியங்களும் நம் மனதைக் கவர்ந்தாற்போல் மற்றக் காவியங்கள் கவர்ந்தனவா என்றால் இல்லை எனலாம். அதிலும் சீதையின் அக்னிப்ரவேசமும், அவளை நாடு கடத்தியதும் இன்றளவும் பெண்ணுரிமைவாதிகளால் ஆழமாகவும், அழுத்தமாகவும் விவாதிக்கப் பட்டு வருகிறது. இதற்குக் காரணம் தன்னலமே மிகுந்த இந்நாட்களில் தலைவன் எப்படித் தன்னலவாதியாக இருக்கிறானோ அவ்வாறே தொண்டர்களும் தன்னலம் மிகுந்தே காணப்படுகின்றனர். ஆகையால் இன்றைய காலகட்டத்தில் வேண்டுமானால் அதைத் தவறு எனக் கூற முடியும். ஆனால் ராமாயண காலத்தில் நல்லாட்சியும், மக்கள் அரசனிடம் குறை காணாத தன்மையுமே முக்கிய்மாக இருந்து வந்தது. அரசன் நல்லாட்சி புரியவில்லை எனில் நாட்டுக்குக் கேடு. இன்றோ நாட்டை விடச் சொந்த நலன்களே முக்கியம். ஆகையால் ராமனும், சீதையும், பாண்டவர்களும், திரெளபதியும் கேள்விக்கு உரியவர் ஆகின்றனர். மாதங்கி மெளலி தன்னுடைய ஒரு பதிவிலும், எல்கேயின் பதிவிலும், சீதையின் அக்னிப்ரவேசம் குறித்தும், திரெளபதி குறித்தும் அவருடைய சந்தேகங்களை எழுப்பி இருக்கிறார்.
மாதங்கியின் பதிவு இந்த்ரப்ரஸ்தம்
எல்கேயின் பதிவு பெண்ணுரிமைவாதிகளே ஒரு நிமிஷம்
மறுபடியும் சீதையின் அக்னிப்ரவேசம் குறித்த சந்தேகம்! :)))))
ராமரை சீதையின் கணவராகவே பார்ப்பதால் எழும் பிரச்னை இது. இந்தக் கால கட்டத்திற்கு சுயநலம், தன்னலம் மட்டுமே இருந்தால் தான் சரியா இருக்கு. அதை வைத்துப் பார்க்கிறோம். ஆனால் அரசர்களுக்கு எனத் தனியாகக் கடமைகள், தர்மம் உண்டு. அந்த தர்மத்தின்படி, தன் குடிமக்களுக்கு அரசன் ஒரு முன்னுதாரணமாகவே திகழ வேண்டும். சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவனாய் இருக்க வேண்டும்.
நம் அரசனே இப்படி இன்னொருத்தர் வீட்டில் தங்கிய பெண்ணை அவள் மீதுள்ள ஆசையால் தன்னோடு சேர்த்துக் கொண்டு விட்டான் என்றால், நம் மனைவிமார்களும் தவறு செய்தால் நாமும் ஏற்கவேண்டி இருக்குமே எனக் குடிமக்கள் பேசிக்கொள்வதை ஒற்றர்கள் வந்து சொல்லவே, குடிமக்களின் சந்தேகங்களைத் தீர்க்கவும், அவர்களுக்காக எதையும் , அவர்களின் நலனுக்காக எதையும் செய்யத் தயாராய் இருக்கிறான் நம் அரசன் என்பதைத் தெரிவிக்க வேண்டியும் எடுத்த முடிவு.
சட்டென்று ஒரு நிமிஷச் சிந்தனையிலோ, ஆவேசத்திலோ எடுக்கவில்லை. பின்னர் அவன் நிரூபிக்கச் சொன்னதின் காரணமும், பொதுவான மக்கள் சபையின் முன்னர் அனைவரும் தெரியும் வண்ணம் சீதையின் பரிசுத்தம் நிரூபிக்கப்படவேண்டும் என்ற ஆசையே ஆகும். மற்றபடி ராமன் சீதைச் சந்தேகப் பட்டான் என்று கொள்ள முடியாது.
சீதைக்கு ராமனின் மேல் வருத்தமும், கோபமும் ஒரு மனைவிக்கு உள்ள நியாயமான கோபம் இருக்கத் தான் செய்தது. அதே சமயம் அவனின் அரச கடமையையும் புரிந்து கொண்டதாலேயே காட்டில் வசித்தாள். பின்னரும் இவ்வளவெல்லாம் நிரூபித்துக் கொண்டு கணவனுடன் சேர்ந்து வாழ்ந்தே ஆகவேண்டுமா என்ற சுய அபிமானம்/சுய கெளரவம் காரணமாய் பூமித் தாயை வேண்டிக்கொண்டு மறைந்து போனாள்/
அடுத்து திரெளபதி குறித்த அலசல்.
மாதங்கி, திரெளபதி குறித்த உங்கள் ஆழ்ந்த வாசிப்பு அநுபவம் வியப்பாக இருக்கிறது. மகிழ்வாகவும் இருக்கிறது. நிச்சயமாக திரெளபதி ஐந்து பேரை மணந்ததால் அனைவரின் கவனத்துக்கும், இகழ்ச்சிக்கும், கேலிக்கும் ஆளானவள் தான். கர்ணன் ஒன்றும் அவளைக் குறித்துப் பெருமையாக நினைத்ததாக மஹா பாரதத்தில் எங்கேயுமே சொல்லப்படவில்லை. அதேபோல் கர்ணனை திரெளபதி மணந்து கொள்ள நினைத்ததாகவும், ஐந்து பேர் போதாமல் ஆறாவது ஒருவரின் மேல் ஈர்ப்பு ஏற்பட்டதாகவும் பாரதத்தில் எங்கேயும் கூறவில்லை. மேலே கூறப்பட்டவை மூலத்திலிருந்து மாறுபட்டவை.
நீங்கள் வாசித்த புத்தகம் அந்தக் குறிப்பிட்ட எழுத்தாளரின் கோணத்திலிருந்து பார்க்கப்பட்டு எழுதப் பட்டது தான். பலரும் பல விதங்களில் திரெளபதியின் கதாபாத்திரத்தை அலசி இருக்கிறார்கள். அது போல் இது திரெளபதியின் கோணத்தில் அலசப்பட்டது.
அதோடு ஒரு வருடத்திற்குப்பின்னர் மற்றொரு கணவனிடம் வாழ்க்கை நடத்துகையில் முந்தைய கணவனோடு இருந்த நினைவுகளைத் தவிர்க்க முடியவில்லை; அதற்கு வியாசர் வரம் கொடுத்திருக்கக் கூடாதா? என்று திரெளபதி நினைப்பதாகவும் நீங்கள் படித்த கதையில் வருகிறது. அதற்கு விடை வியாசர் கொடுத்த வரத்திலேயே உள்ளது. அதிலேயே முழுமையாக எல்லாம் அடங்கி விடுகிறது.
திரெளபதியின் இந்த ஐந்து கணவர்களைத் திருமணம் செய்து கொள்வது என்பதற்கு நம் புராணங்களிலேயே காரணம் கூறப்பட்டுள்ளது. கணவனை தாசி வீட்டுக்குக் கூடையில் சுமந்து சென்றதாகக் கூறப்படும் சதி நளாயினி தன் கணவனான ரிஷியின் பல்வேறுவிதமான பரிசோதனைகளுக்குப் பின்னர் அவரோடு இல்வாழ்க்கை வாழ ஆரம்பித்தாள். சிறிது கால இல்வாழ்க்கைக்குப் பின்னர் ரிஷியானவர் மீண்டும் தவ வாழ்க்கைக்குப் போக விரும்ப நளாயினிக்கோ இல்வாழ்க்கையில் நிறைவடையவில்லை என்ற எண்ணம். கணவரை வேண்ட, அவரோ இப்பிறவியில் இவ்வளவு தான் இல்வாழ்க்கை அநுபவம் எனவும், அடுத்த பிறவியில் தாமே ஐந்து தனிநபர்களாகப் பிறந்து வந்து அவளைத் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறுகிறார்.
நளாயினி கொஞ்சம் கவலைப்பட்டுப் போய் தவம் இருக்க, கண்ணெதிரே தோன்றிய ஈசன்,"என்ன வேண்டும்?" என்று கேட்க, அவசரப்பட்ட நளாயினி, ஐந்து முறை நல்ல கணவன் வேண்டும் என்று வேண்ட, அவ்விதமே ஐந்து கணவர்கள் வாய்ப்பார்கள் என வரம் கிடைக்கிறது. மீண்டும் கவலை அடைந்த நளாயினியிடம் அடுத்த பிறவியில் அவள் சக்தியின் அம்சமாய்ப் பிறப்பாள் எனவும், பஞ்ச பூதங்களையும் கணவனாக அடைவாள் எனவும், ஆறுதல் கூறுகிறார் ஈசன். இது தான் திரெளபதிக்கு ஐந்து கணவர்கள் கிடைத்த காரணம்.
இன்னொரு கோணத்தில் நம் உடலின் பஞ்சேந்திரியங்களையும் பாண்டவர்களாகவும், திரெளபதியை ஜீவாத்மாவாகவும் கூறுவதுண்டு. ஜீவாத்மாவுக்குள் பஞ்சபூதங்களும் அடக்கமாகிக் கடைசியில் பரமாத்மாவோடு ஐக்கியமாவதையே திரெளபதி ஐந்து கணவர்களை மணந்ததற்கு உதாரணமாகக் கூறுவார்கள். இது குறித்து கர்நாடகாவின் ஜி.வி. ஐயர் என்பவர் ஒரு திரைப்படமாக சம்ஸ்கிருதத்தில் எடுத்து ஆங்கில சப் டைட்டில்களோடு வெளியிட்டிருக்கிறார். அந்தப் படம் கிடைத்தால் ஒரு முறை பார்க்கவும். உங்கள் சிந்தனைத் தெளிவுக்கு மிகவும் உதவும்.
ஒரு கணவனை விட்டு, அடுத்த வருடம், அடுத்த கணவனுக்கு மனைவியாகப் போகும் தருணங்களில்- பரிபூரணமாக அவனுக்குச் சொந்தமானவள் ஆவாள்-//
பரிபூரணமாகச் சொந்தம் ஆவாள் என்னும்போது முந்தைய கணவனைக்குறித்த நினைவுகள் எவ்வாறு வரும்?? அப்புறம் வியாசர் கூறியதற்கு அர்த்தமே மாறிப் போகிறது அல்லவா??
ராஜராஜேஸ்வரி கூறுவது போல் திரெளபதி அம்மனும், மஹாபாரதத்தின் திரெளபதியும் ஒருவர் அல்ல என்று கேள்விப் படுகிறேன். மிகச் சமீபத்தில் தான் இது பற்றித் தெரிய வந்தது. இது குறித்துத் தகவல்கள் சேகரித்துக்கொண்டிருக்கிறேன். விரைவில் பகிர்வேன். நன்றி, வணக்கம்.
ஏற்கெனவே திரெளபதி குறித்து நான் எழுதிய சில பதிவுகளின் சுட்டி கீழே. அதிலே ஒரு பதிவில் திரெளபதி அம்மனும் மஹாபாரதத் திரெளபதியும் ஒருவரே என்ற பொருளில் குறிப்பிட்டிருக்கிறேன். ஆனால் சமீபத்துத் தேடல்கள், ஆய்வுகளில் இருவரும் வேறு எனச் சொல்கின்றனர். இது குறித்து உறுதியான தகவல்கள் கிடைத்ததும் பகிர்ந்து கொள்கிறேன்.
திரெளபதி பதிவிரதையா
திரெளபதி பதிவிரதையா
மிகவும் அருமையான பதிவு கீதா மாமி, சீதை மற்றும் திரெளபதி பற்றிய உங்கள் விளக்கங்கள் பிரமாதமாக உள்ளது.
ReplyDeleteஅருமையான பதிவு. திரௌபதி குறித்த தங்கள் ஆராய்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteகீதா mam ... உங்க favourite topic இது-ன்னு நினைக்கறேன்... :)
ReplyDeleteஆனா- நான் இத ஒரு 'book review' வா மட்டுமே எழுதியிருக்கேன்.
நீங்க சொல்லற எல்லா விஷயங்களும் நானும் முன்னாடி படிச்சிருக்கேன். கர்ணன்-த்ரௌபதி சமாசாரம்-- ஒண்ணு ரெண்டு தடவ கேள்வி பட்டதுண்டு. ஆனா- பாரதத்துல அப்படி வருதா, தெரியாது. எதோ ஒரு ஸ்வர்ண பழம்-- மரத்திலேர்ந்து கீழ விழுந்துடுமாம். அப்போ-- துர்வாசரோ/அமித்ரரோ ... யாரோ.. ஒரு ரிஷியோட சாபம் படாம இருக்க-- பஞ்ச பாண்டவா-த்ரௌபதி எல்லாரும் ஒவ்வொரு உண்மை சொல்லுவாளாம். சொல்ல சொல்ல-- பழம்- கொஞ்ச கொஞ்சமா மேல- ஏறுமாம். த்ரௌபதி - 5 பேரையும் பிடிக்கும்-கும் போது, பழம் கீழ விழுந்துடும். அவோ-- ச்வயம்வரத்துல- கர்ணன பிடிச்சுது-ன்னு சொல்லவும், மறுபடியும் மரத்துல பொய் ஒட்டிண்டுருமாம். இப்படியும் ஒரு கத கேள்வி பட்டிருக்கேன். இது இந்த புக்-ல இல்லாதது.
"..."Virginity" ங்கற concept ல வரம் கொடுத்தத விட- முந்தைய husband கூட கழித்த நினைவுகள மறக்கக்கூடிய வரம்..."-னு எழுதியிருக்கற writer ஓட perspective அழகா இருந்தது... ஒரு பெண் - அப்டீங்கற point of view ல த்ரௌபதி ய நிறுத்தி வெச்சாப்ல இருந்துது. இது எனக்கு பிடிச்ச ஒரு இடம்- இந்த புக் ல.
புக்-அ படிச்சுட்டு கொழந்தைகளுக்கு கத சொல்லராப்ல ஒரு புக்- கிடையாது இது. உங்கள போல "Purists" கிட்டயும் எடுபடுமா- தெரியல. ஆனா-- இந்த புக்-ல கடவுள்/மாயை/magic ... போன்ற விஷயங்களுக்கு-- கம்மி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு-- ஒரு கதாபாத்திரத்தினுடைய மனப் போக்கிற்கு/ அந்த கதா பாத்திரத்தினுடைய moulding கு முக்கியத்தும் அளிக்கப்பட்டிருக்கு.
இது எனக்கு ரொம்ப பிடிச்சுது.
- மாதங்கி மாலி
M.. Interesting!! Mathangy mouly's post reminded me of Prathiba ray's book yagnyaseni . 4 க பத்தி கர்ணன், க்ருஷ்ணை/ ணா , க்ருஷ்னன் அண்ட் க்ரிதி . அவாளோடimagination ல கர்ணன் த்ரௌபதி பத்தி எழுதிருக்காங்க . குந்தி சொன்ன வார்தைல அவங்க கற்பனைல த்ரௌபதி கர்ணனை குந்தி புத்திரராக நினைச்சு 6 பேர்கிட்ட அன்பு நு பொருள்பட எழுதீருப்பாங்க . அவங்களோட கருத்து புதுமாதிரியான கற்பனைனு நினச்சேன். அவங்க ஆராய்ச்சில அப்படி!!
ReplyDeleteமாமி
ReplyDeleteஇப்போ தான் மாதங்கியோட பதிவுல பதில் போட்டுவிட்டு இங்கே வருகிறேன். இங்கேயும் நீங்கள் இதை விளக்கி உள்ளேர்கள். நான் அதில் சொன்ன மாதிரி ஹிந்து மதம் liberty கொடுக்கிறது என்பதற்காக அதை abuse செய்து fiction ஐ fact ஆக மாற்ற வேண்டாமே. இந்த மாதிரி புத்தகங்களை ஒரு fiction ஆகத் தான் கருத வேண்டும்.
Ms Jayashree சொன்ன புத்தகத்தில் - குந்தி கர்ணனை தன் மகன் என்று சொன்னதால் (அவன் இறப்பிற்குப் பின்), திரௌபதி குந்தி புத்திரர்களிடம் அன்பு கொண்டாள் என்பதை extend செய்து கர்ணனையும் சேர்த்து விட்டார்களோ என்னவோ?
மாதங்கி, நீங்க படிச்சது புனைவு வகையில் தான் சேரனும்.
ReplyDelete-
ReplyDeleteவிளக்கங்கள் தெரிந்துகொண்டேன். அருமை.
ReplyDeleteவாங்க ராம்வி, வரவுக்கு நன்றி. பொதுவாக நாத்திகர்கள் எனத் தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள் கூட சீதையின் அக்னிப்ரவேசம், காட்டுக்குச் சென்றது இரண்டையும் குறித்தும், திரெளபதியின் நிலைமை குறித்தும் அலசி ஆராய்ந்து துவைத்துக் காயப்போடுகிறார்கள்.
ReplyDeleteஆனால் அதன் உள்ளார்ந்த பொருளை யாருமே புரிந்து கொள்வதில்லை. ஒரு நல்லாட்சி நடைபெற குடிமக்களின் நலனுக்காகவே ஒரு அரசனும், அரசியும் சொந்த வாழ்க்கையையும் பணயம் வைக்க வேண்டி இருந்தது என்பது இன்றைய தினங்களில் ஒப்புக் கொள்ள முடியாத ஒன்றாகி விட்டது. :(((((
வாங்க் அஷ்வின் ஜி, அத்தி பூத்திருந்தப்போவே நினைச்சேன். ஏதோ அதிசயம் நிகழ்ந்திருக்குனு. :P
ReplyDeleteமாதங்கி, இது புத்தக விமரிசனம் என்ற அளவிலே தான் நானும் படித்தேன். அதோட நான் purist னு எல்லாம் சொல்லிக்கலை. நீங்க குறிப்பிடும் இந்தப் புத்தகமோ, ஜெயஸ்ரீ சொல்லி இருப்பதோ படித்ததில்லை என்றாலும் திரெளபதி குறித்த இந்த விமரிசனங்களை மற்றச் சில எழுத்தாளர்கள் எழுதியதை ஆங்கிலத்திலும், தமிழிலும் படித்திருக்கிறேன்.
ReplyDeleteமுந்தைய husband கூட கழித்த நினைவுகள மறக்கக்கூடிய வரம்..."-//
ReplyDeletevirginity குறித்து நானும் சொல்லலை. கழித்த நாட்கள் குறித்தது பற்றித் தான். :))))))) சாதாரணமாகவே கணவனுக்கு ஒவ்வொன்றையும் கவனித்துச் செய்யும் பெண்களுக்கு ஊரில் கணவன் இல்லை என்றாலே நினைவுகள் மோதும்.
அப்படி இருக்கையில் திரெளபதி ஒரு வருஷம் முழுசும் ஒருவனுடன் வாழ்ந்து விட்டுப் பின்னர் அடுத்த வருஷம் இன்னொருவனோடு வாழத் தயாராகின்றாள்.
உடல் மட்டுமில்லாமல் மனதையும் அதற்கேற்பத் தயார் செய்து கொண்டதாகவே பாரதம் சொல்லும். யாருடன் வாழ்ந்தாலும் உண்மையாக அவர்களுக்கு மனைவியாகவே வாழ்ந்திருக்கிறாள். எந்தச் சந்தர்ப்பத்திலும் தன் நிலைமையைக் குறித்து அவள் இகழ்ச்சியாகவோ, தன்னிரக்கம் கொண்டதாகவோ பாரதத்தில் காண முடியாது.
இன்று தன்னிரக்கவாதியாக திரெளபதியைச் சித்தரிக்கிறவர்கள் அவளுடைய பாத்திரப் படைப்பின் ஆழத்தையும், கம்பீரத்தையும் முழுமையாக உணர முடியாதவர்கள்.
அந்தப் பழம் மரத்தினில் போய் ஒட்டுவதும் கேள்வி ஞானம் தானே தவிர மூலத்தில் இல்லை.
ReplyDeleteகர்ணனின் பாத்திரப் படைப்பு எப்படி இன்று ஒரு தியாகியாகவும் கொடைவள்ளலாகவும், செய்நன்றி மறக்காதவனாகவும் சித்திரிக்கப் படுகிறதோ, அது போல் திரெளபதியும் ஆணாதிக்கவாதிகளால் கொடுமைப் படுத்தப் படும் ஒரு பெண்ணாகச் சித்திரிக்கப் படுகிறாள்.
ReplyDeleteஅதே சமயம் கடைசி வரையிலும் அரியணையே ஏறாத துரியோதனன் தன் மக்களுக்கு நல்லாட்சியைத் தகப்பன் சார்பாக வழங்கினான் என்றும் நீதி நெறி வழுவாமல் ஆட்சி செய்யத் துணையாக இருந்தான் எனவும் பாரதம் கூறும்.
ஏகலவ்யனும் இப்படியாகச் சித்திரிக்கப் பட்டவனே.
வாங்க ஜெயஸ்ரீ, உண்மைதான் , இதெல்லாம் எத்தனை யுகங்கள் ஆனாலும் அலுக்காமல் விவாதிப்போமோ என்னமோ. நீங்க சொன்ன புத்தகம் படிக்கலை. பார்க்கிறேன். குறிப்புக்கு நன்றி.
ReplyDeleteஸ்ரீநி, அங்கேயும் படிச்சேன், நான் விரிவாய் எழுதாதற்குக் காரணம் கண்ணன் கதை எழுதி வருகிறேன் அல்லவா? அதிலே அடுத்துத் திரெளபதியின் பிறப்பு, சுயம்வரம் குறித்தே வரும். அப்போது எழுத வேண்டி இருக்குமே. இப்போச் சில குறிப்புகள் கொடுத்தால் போதும்னு விட்டுட்டேன். என்றாலும் விரிவாய்க் குறிப்பிட்ட உங்களுக்கு நன்றி.:)))))))
ReplyDeleteஎல்கே, சந்தேகமே இல்லாமல் புனைவு தான். :D
ReplyDeleteவாங்க மாதேவி, நன்றிம்மா.
ReplyDeleteபுனைவோ புராணமோ... படிக்க நல்லா இருக்கு உங்க எல்லோரின் விவாதங்களும்... மாதங்கியின் தமிழ் அழகுனா, கீதா மாமியின் விளக்கங்கள் அழகு... எங்களுக்கு ட்ரீட் தான்...:)
ReplyDeleteவாங்க ஏடிஎம், நல்வரவு. ரசனைக்கு நன்றி.
ReplyDeleteஅருமையாக எழுதியிருக்கிறீர்கள். ஆழமான சிந்தனைகள். சிலவற்றை ஏற்கமுடியவில்லை. ராமன் சீதையை சந்தேகப்பட்டது தவறு என்றே நினைக்கிறேன். ராமன் அரசனாக, ஒரு முன்னுதாரணமாக நடந்து கொண்டிருக்கலாமென்று தான் தோன்றுகிறது. அரசனைத் தொடரும் பாமரனுக்கும் பரந்த மனப்பானமை வந்திருக்குமே? ராமன் செய்கையினால் சீதை தவறு செய்தாள் என்ற களங்கம் நிரந்தரமாகிவிட்டதே? தீயில் குளித்தால் மட்டும் சரியாகி விடுமா? உதாரணத்தில் சொல்லப்படும் சாதாரண ஆண்களின் மனைவிகளும் தீக்குளித்து தங்கள் "கற்பை" வெளிப்படுத்த வேண்டுமா?
ReplyDeleteவாதத்துக்கு சொல்லிக் கொண்டே போகலாம். ராமன் செய்தது தவறு என்று என்று ஏற்க மறுக்கிறோம் - அது தான் உண்மை என்று தோன்றுகிறது. அதற்கான விளக்கம் ராமாயணத்திலேயெ சூட்சுமமாக இருப்பதாக நினைக்கிறேன். மானிட அவதாரம் எடுத்த கடவுள் மானிடரின் அல்பங்களுக்கும் பலியாகிறான் - குறிப்பாக ஆண்கள். ராமனும் சாதாரண மானிட ஆண் போல் சந்தேகமும் வரட்டு கௌரவமும் கொண்டான். கணத்தில் அதை உணர்த்தி சீதை குளித்த தீ அதை அழித்தது. இந்தப் பார்வை பொருந்துவதாக நான் நினைக்கிறேன்.
ராமன் சீதையை சந்தேகப்பட்டது தவறு என்றே நினைக்கிறேன். ராமன் அரசனாக, ஒரு முன்னுதாரணமாக நடந்து கொண்டிருக்கலாமென்று தான் தோன்றுகிறது. அரசனைத் தொடரும் பாமரனுக்கும் பரந்த மனப்பானமை வந்திருக்குமே? ராமன் செய்கையினால் சீதை தவறு செய்தாள் என்ற களங்கம் நிரந்தரமாகிவிட்டதே? //
ReplyDeleteஅப்பாதுரை, லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கீங்க. வாங்க, மாதங்கியின் பதிவிலேயும் உங்கள் கருத்துக்களைப் படிச்சேன். :))))
ராமன் குழப்பவாதியே அல்ல. எப்படி சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாய் இருக்கணும்னு சொல்றாங்களோ அதே நடைமுறை தானே இங்கேயும். வால்மீகி எங்கேயுமே ராமனைக் கடவுள்னு சொல்லலை. ராமனைக் கடவுளாகக் காட்டி எழுதியது துளசிதாசர், கம்பர் போன்றவர்கள். இவங்கல்லாம் பத்தாம் நூற்றாண்டிற்குப் பின்னர் வந்தவங்க. இவங்க பார்வை தான் நமக்கு மனசிலே பதிஞ்சிருக்கு. அதனால் ராமனைக் குழப்பமாய்ப் பார்க்க நேரிடுகிறது.
ஹிஹிஹி, என்னோட ப்ளாகே என்னை அநானி நீனு சொல்லி அநுமதிக்க மாட்டேன்னு சொல்லுது. ஒரு வழியா அநுமதி வாங்கிண்டு உள்ளே வந்தேன். :)))))))
ReplyDeleteராமன் சீதையை சந்தேகப் படவே இல்லை. பெண்ணாசையில் பிறன் வீட்டில் இருந்த மனைவியை ராமன் ஏற்றுக்கொண்டு விட்டான் என மக்கள் பேசிக்கொள்வார்கள் என்று தான் யோசிக்கிறான். ஒரு அரசனாக வேறு எவ்வகையில் முன்னுதாரணம் காட்டி இருக்க வேண்டும்?? அரசன் ஒழுக்கம் தவறாமல் இருக்க வேண்டும் என்று குடிமக்கள் நினைப்பார்கள் அல்லவா? அரசன் மட்டும் ஒழுக்கத்துடன் இருந்தால் போதுமா? அரசி? அதிலே தான் சந்தேகம் வந்துவிடக் கூடாதே என ராமன் கவலைப் படுகிறான்.
ReplyDeleteயு.எஸ்ஸிலும் அதிபராக வரப் போகிறவர்கள் ஆணானாலும், பெண்ணானாலும் அவர்கள் ஒழுக்கம் முக்கியமாய்ப் பார்க்கப் படுகிறது அல்லவா?? இந்தக்கால கட்டத்திலும், ஒழுக்கத்தில் சிறந்தவர்களாய், மனைவி ,மக்களோடு வாழ்பவர்களாய் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர் அல்லவா? அப்போ ராமாயணக் கால கட்டத்தில் இருந்திருக்கக் கூடாதா?
ReplyDeleteராமன் செய்தது தவறு இல்லை என எங்கும் சொல்லவில்லை. வால்மீகியும் சொல்லவில்லை. ஒரு அரசனாகச் சில சட்டதிட்டங்களை அவன் மதித்தே ஆகவேண்டும். நாட்டிற்காக மனைவியைத் தியாகம் செய்கிறான்.
ReplyDeleteAANDHI படம் பார்த்திருக்கீங்க இல்லை?? அதிலே மனைவி அரசியல் வாழ்க்கைக்காகக் கணவனைத் துறப்பாள். அவளுக்குக் கணவனிடம் அன்பில்லையா? ஆனால் அவள் எடுத்துக்கொண்ட பாதை அவளுக்கு மிக முக்கியம். ஆகவே குடும்ப வாழ்க்கையைத் தியாகம் செய்கிறாள் இல்லையா?
நான் ராமனை எங்கும் ஆணின் பார்வையில் இருந்து பார்க்கவே இல்லை. இப்போது கேட்கும் இந்தக் கேள்விகளைச் சின்ன வயசில் கேட்டுக் கொண்டிருந்தவள் தான் நானும். ஆனால் இந்த தர்மத்தைப் பற்றிப் படிக்க ஆரம்பித்ததும், யாருக்கு எப்போது எது தர்மம் என்பது அவரவர் எடுக்கும் சரியான முடிவில் தான் இருக்கிறது என்பது புரிந்த பிறகு ராமன் மேல் கோபம் வரவில்லை. அரச தர்மத்தை அவன் கடைப்பிடித்தான். மனைவியை மட்டுமல்லாமல் தன் அருமைத் தம்பியான லக்ஷ்மணனையும் துறக்க நேரிடுகிறதே.
ReplyDeleteஉண்மையில் பாவப்பட்ட ஜன்மம் என்றால் அது ராமன் தான். இத்தனை நூற்றாண்டுகள் ஆகியும் விமரிசனம் செய்து கொண்டிருக்கிறோம் எனில் எவ்வளவு ஆழமான பதிவுகள் இருக்க வேண்டும்?
ReplyDeleteஇத்தனை நூற்றாண்டுகள் ஆகியும் விமரிசனம் செய்து கொண்டிருக்கிறோம் எனில் எவ்வளவு ஆழமான பதிவுகள் இருக்க வேண்டும்?//
ReplyDeleteமன்னிக்கவும், இத்தனை நூற்றாண்டுகள் ஆகியும் விமரிசனம் செய்கிறோமென்றால் ராமனைப் பற்றிய நம் கருத்துக்கள் எவ்வளவு ஆழமாகப் பதிந்திருக்க வேண்டும், என வந்திருக்கணும். தப்பாய்த் தட்டச்சிட்டேன். :(
விசுவாமித்திரன் வசிசஷ்டர் தொடங்கி விபீஷணன் முடிய பலர் வாயால் ராமன் கடவுளின் அம்சம் என்கிறார்கள் வால்மீகி ராமாயணத்திலும்.
ReplyDeleteஒரு தலைவன் பரந்த மனப்பான்மைக்கும் புரிதலுக்கும் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். தீக்குளித்தாலும் மாற்றான் இல்லத்தில் இருந்தது மாறப் போவதில்லையே? சீதை தீக்குளித்ததால் ராமனுடைய சந்தேகம் தீர்ந்ததா? இல்லையே? திரும்பவும் வந்ததே? சீதை தீக்குளித்தது ராமனுடைய சந்தேகத்தைப் போக்க அல்ல - ஒரு ஆணுடைய கேவலமான எண்ணத்தைச் சுட்டிக் காட்ட என்றே நினைக்கிறேன்.
இந்தக் காலக் கட்டத்தில் என்னென்னவோ கேட்கத் தோன்றுகிறது என்றாலும், அந்தக்காலக் கட்டத்திலும் இது முறையென்று தோன்றவில்லை.
ராமனிடம் எத்தனையோ பாராட்டத்தக்க குணங்களைக் காண முடிந்தாலும், சில குறைகளையும் காண முடிகிறது. அதனால் தான், நீங்கள் சொல்வது போல், இன்றைக்கும் பேசிக் கொண்டிருக்கிறோம். வால்மீகி, வியாசர்களின் வெற்றியென்றால் இது தான்.
'மக்கள் பேசிக்கொள்வார்கள்' என்ற காரணத்தினால் ராமன் கேட்டான் என்பது சால்ஜாப்பு :) ராமன் காட்டுக்குப் போகவில்லையென்றாலும் மக்கள் பொருட்படுத்தியிருக்க மாட்டார்கள். அப்படியே மக்கள் பேசுவார்கள் என்று நினைத்தாலும் அதையல்லவா சீதையிடம் எடுத்துச் சொல்லியிருக்க வேண்டும்? அதைவிட்டு ராமன் பேசிய பேச்சு!!
ReplyDeleteஎழுதியவர் என்ன நினைத்து இந்தச் சம்பவத்தை சேர்த்தாரோ தெரியாது - ஆனால் பெண் ஒழுக்கம் பற்றிப் பேசும் நாமெல்லாம் சூர்ப்பனகையிடம் திருமணமான ராம-லட்சுமணரின் flirting பற்றி மறந்து விடுகிறோமே ஏன்?