எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, August 21, 2011

சிரிப்பாய்ச் சிரிக்கிறோம்!

கண்ணா, மணிவண்ணா, மாதவா, மதுசூதனா, ஸ்ரீதரா, வாசுதேவா! என்னதான் உன் திருவிளையாடலோ தெரியலை. பத்துவருஷமாத் தூங்கிட்டு இருந்த அம்பத்தூர் நரகாட்சியை இப்போப் பார்த்து எழுப்பி விட்டிருக்கியே அப்பா! இது நியாயமா! இது தர்மமா! ஏற்கெனவே இரண்டு பக்கமும் இடி போல் கட்டும் வீடுகளுக்கு வரும் சாமான்களால் மறைக்கப்பட்டிருந்த வீடு இப்போக் கொஞ்சம் தெரியுதேனு சந்தோஷப் பட்டோம்! அது பொறுக்கலையா உனக்கு?? பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்குப் பத்து வருஷம் முன்னாடியே வைப்புத் தொகையாக 7,500/- கட்டி அதை மறந்தும் போனோமே! அதைக் குறித்து யாரையானும் ஏதானும் கேட்டிருப்போமா!

அப்படி இருக்கிறச்சே இப்போப் பார்த்து ஏனப்பா எழுப்பினாய் தெரியலை! ஏற்கெனவே வந்துட்டு இருக்கும் லாரிகளால் பள்ளமாய்ப் போயிருக்கும் தெருவை இவங்க வேறே ஆறடிக்கும் மேல் தோண்டிப்போட்டுப் பள்ளங்களை உருவாக்கி, அதிலே லாரிகள், சைகிள்கள், இரண்டு சக்கர வண்டிகள், மனிதர்கள்னு மாட்டிக்கிறோமே போறாதா? மழையை வேறே நீ பிறக்கப் போறேனு அனுப்பி வைச்சிருக்கியே! மழை வேண்டாம்னு எல்லாம் சொல்லலைப்பா கண்ணா! மழை வேணும்தான். பார்க்கப் போனா நீ இப்போக் கொடுக்கும் மாரிமழையெல்லாம் எந்த மூலைக்கு! ஆனால் இந்தச் சாலைகளில் மழைநீர் செல்ல வழி ஏதப்பா? பள்ளம் எது,மேடு எதுனு ஏற்கெனவே தெரியாது. இப்போ உழுது போட்டிருக்கும் சாலையில் நாற்று நட ஆட்கள் நிற்பது கூடக் கஷ்டமே! எப்படியப்பா நடமாடுவோம்!

அது சரி, அது என்ன! இன்னிக்குத் தான் நீ இனிமேலே பிறக்கப் போறே, அதுக்குள்ளே நேத்து ராத்திரி ஏன் மழையை ஏவி விட்டாயாம்! கிட்டத்தட்ட ஆறு மணி நேரத்துக்கு மேலே அடிச்சுப் பெய்த மழையிலே வீட்டுக்குள்ளே எல்லாம் தண்ணீர், தண்ணீர், தண்ணீர். இந்த முப்பது வருடங்களில் கண்ணா, என்னப்பா, இத்தனை தண்ணீர் இது வரைக்கும் இந்த வீட்டுக்குள்ளே வந்ததில்லைப்பா. நேற்றுப் பக்கத்து அடுக்கு மாடிக் குடியிருப்புக்குத் தோண்டின பள்ளத்திலே நீர் தேங்கும்னு நினைச்சா, ஜலகண்டேஸ்வரர் வீட்டுக்குள்ளேயே குடியும், குடித்தனமுமா வந்தாச்சு. காலம்பர மூன்று மணி வரை ஒண்ணும் இல்லைனு கொஞ்ச நேரம் கழித்து எழுந்துக்கலாம்னு போய்ப் படுத்தால் சர, சர,சர, சரனு என்ன வேகம், என்ன வேகம்.

நாலு மணியிலே இருந்து தண்ணீரை ஏழு மணி வரை வாரிக்கொட்டினதில் வந்த அலுப்பிலும், களைப்பிலும் உனக்கு இன்னிக்கு ஒண்ணுமே கிடையாதுனு தான் நினைச்சேன். நல்லவேளையா/ (உனக்குத் தான்)ஏதோ பெயர் பண்ணிட்டேன். மழை பெய்தால் தண்ணீர் ஓடும்படியாகப் பண்ணிடு. எத்தனையோ அற்புதங்களைச் செய்யும் கண்ணா, உன்னால் இது கூடவா முடியாது.

புலம்பல்னு நினைக்காதீங்க. நிர்வாகச் சீர்கேட்டின் மேல் வந்த அலுப்பும், களைப்பும்! எல்லாரும் தண்ணீர் போகும் வாய்க்காலிலும், கால்வாய்களிலும் வீடுகள் கட்டிப் பட்டா வாங்கிட்டாங்க. ஏரிகளிலும் கட்டியாச்சு. அதை எல்லாம் யாரும் எதுவும் கேட்கலை. குறைந்த பக்ஷமாக இருக்கும் ஒரு சில ஏரிகளைத் தூர்வாரியாவது, அல்லது கரைகளைப் பலப்படுத்தி, உயர்த்தியாவது வைத்தால், தெருக்களை மேடு, பள்ளம் இல்லாமல் ஒழுங்காகப் பராமரித்தால் இந்தப் பிரச்னையாவது இல்லாமல் இருக்குமே! வேறென்ன கேட்கிறோம்! சுதந்திரம் வந்து 64 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் அடிப்படை வசதிகளே இல்லாமல் கேவலமான நிலையில் வாழ்கிறோமே என நினைத்தால் வெட்கமாய் இருக்கிறது. :((((



கண்ணன் பிறந்த நாள் கொண்டாட்டம்

16 comments:

  1. அட ராமா !! இல்லை கிருஷ்ணா!!அத்தனை மழையா இப்ப !!!உங்க வீடு கொஞ்சம் ரோடைவிட்டு மேல எழும்பிதானே இருக்கும்னு ஞ்யாபகம் அப்பவும் தண்ணி வந்துடுத்துனா ரொம்ப மழைதான் ! மழை நல்ல படி நின்னு தானே ரோடெல்லாம் சரியாக்கிட க்ருஷ்ணனை வேண்டிக்கறேன் .

    ReplyDelete
  2. வாங்க ஜெயஸ்ரீ, ப்ளாகர் அநுமதி கொடுத்துடுச்சு போல! :))

    மழை நாட்கள் தானே இப்போ, மழை ஒண்ணும் புதுசும் இல்லை; ஆனால் சாலைப் பராமரிப்பு என்பதே சுத்தமாக் கிடையாது. இஷ்டத்துக்குத் தோண்டிப் போட்டுட்டுப் போயிடறாங்க. அவதிப் படுவது குடியிருப்போர் தான். நேத்திக்கு பக்கத்துக் குடியிருப்புக்குப் பாதாளச் சாக்கடை இணைப்புக்குத் தோண்டிய பள்ளத்தில் எங்க வீட்டை விடத் தெருப்பக்கம் உயரமாகி விட்டது. பள்ளத்தை நிரப்புகையில் மேடாகப் போட்டிருக்காங்க. பல வீடுகளிலும் தண்ணீர், அதாவது முப்பது வருடம் முன்னர் கட்டிய வீடுகளில் எல்லாம். :((((

    மற்றபடி மழை ஒண்ணும் பிரமாதம் இல்லை. லாரிகள் மணல், ஜல்லி, செங்கல், டைல்ஸ்னு எடுத்துட்டு அடிக்கடி வரதிலே அவை மாட்டிக்கொண்டு அதை இழுக்க ஜேசிபினு கிட்டத்தட்ட ஒரு வருஷமா பயங்கர அவஸ்தை! :))))))நம் நாட்டில் இதை எல்லாம் சகித்துக்கொண்டு வாழ்பவரே நல்ல குடிமகனாய்க் கருதப் படுவார். கேட்டுட்டால் தப்பு! :(

    ReplyDelete
  3. உங்க அவதியைக்கூட ரசிக்கும்படி
    சொல்லி இருப்பது நல்லா இருக்கு.
    அந்த நிலமையில் இருந்து பாத்தாதான்
    அவங்க கஷ்ட்டம் புரியும்.

    ReplyDelete
  4. வித்தியாசமான தண்ணீர்க் கஷ்டம்...!

    ReplyDelete
  5. பொறுமையா,பொறுப்பா எழுதியிருக்கீங்க கீதா!
    சாலை சீராகிட வேண்டிப்போம்!

    அன்புடன்,
    தங்கமணி.

    ReplyDelete
  6. என்ன ஒரு மழை. இங்க எங்க அபார்ட்மென்ட் காம்ப்ளக்சில் தண்ணி வந்தது. அதுவா இறங்கி போய்டுச்சு

    ReplyDelete
  7. //கண்ணா, மணிவண்ணா, மாதவா, மதுசூதனா, ஸ்ரீதரா, வாசுதேவா! என்னதான் உன் திருவிளையாடலோ தெரியலை. பத்துவருஷமாத் தூங்கிட்டு இருந்த அம்பத்தூர் நரகாட்சியை இப்போப் பார்த்து எழுப்பி விட்டிருக்கியே அப்பா! இது நியாயமா! இது தர்மமா! ஏற்கெனவே இரண்டு பக்கமும் இடி போல் கட்டும் வீடுகளுக்கு வரும் சாமான்களால் மறைக்கப்பட்டிருந்த வீடு இப்போக் கொஞ்சம் தெரியுதேனு சந்தோஷப் பட்டோம்! அது பொறுக்கலையா உனக்கு?? //

    கீதா அக்கா கண்ணா, மணிவண்ணா, மாதவா, மதுசூதனா,வாசுதேவா! இதெல்லாம் சரி.. என்னையும் ஏன் சேர்த்து திட்டறிங்க??? )))

    //சுதந்திரம் வந்து 64 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் அடிப்படை வசதிகளே இல்லாமல் கேவலமான நிலையில் வாழ்கிறோமே என நினைத்தால் வெட்கமாய் இருக்கிறது. :(((( //
    சேம் ஃபீலிங்கு:(

    ReplyDelete
  8. பாலம் கட்டினால், ரோடு போட்டால் மாற்று வழி ஏற்பாடு செய்துவிட்டு பின்பு வேலையை ஆரம்பிக்க வேண்டும். ஆனால் காலையில் ஆபீஸ் போகும் போது தான் தெரியும் takediversion . மறுபடியும் சொல்கிறேன் மக்கள் மாற வேண்டும். எல்லாரும் அன்ன ஹசாரே ஊழலுக்கு எதிராக போராடுகிறார் என்று சொல்லி அவர் பின்னால் சென்று போராடுகிறார்கள்.ஆனால் நிறைய பேருக்கு ஏன் போராடுகிறோம் என்றே தெரியாமல் சொல்கிறார்கள். எனக்கு தோணினது என்னவென்றால் அரசியல்வாதி மட்டும் தான் தப்பு செய்கிறாரா?எந்த அரசியல்வாதியும் அதிகாரிகளின் ஒத்துழைப்பு இன்றி தவறு செய்ய முடியாது. இப்படி பட்ட அரசாங்க அதிகாரிகள் 85 %. ஒழுங்காக லஞ்சம் வாங்காமல் வேலை வேலை செய்பவர்கள் 10 %. அரசியால்வாதிகள் 5 % .இதில் கொடுமை என்னவென்றால் அந்த கேடுகெட்ட அரசியல் வாதியும் இந்த போரட்டங்களில் பங்கேற்பதுதான். அதாவது புகை பிடித்துக்கொண்டே புகை பிடிக்காதீர்கள் என்று சொல்வது போல. ஒரு கலெக்டர்,தாசில்தாரை பார்க்க வேண்டும் என்றால் பியுனுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும்.அரசாங்க ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை என்றால் லஞ்சம் கொடுத்தால் தான் படுக்கையே கிடைக்கும். போலீஸ் ஸ்டேஷன் போனால் லஞ்சம். எல்ல இடங்களிலும் லஞ்சம். பின்பு அரசியல் வாதியை மட்டும் ஏன் குறிவைக்க வேண்டும்? எந்த தவறு நடந்தாலும் அதற்கான மூலக் காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும்.அதை விட்டுவிட்டு கும்பலோடு கோவிந்தா போடும் வேலை நடைமுறைக்கு ஒத்துவராது. நகராட்சி அதிகாரிகளுக்கு என்னமோ அவர் தன்னுடைய சொந்த வேலையெல்லாம் விட்டு விட்டு நமக்காக போனால் போகிறதென்று செய்கிறார் என்று நினைப்பு. திட்டமே ஆரம்பிக்காமல் பணம் வாங்கி அதற்கு சரியான பதிலும் சொல்லாமல் அலைகளிப்பார்கள. நிரந்தரமான வேலை,கிம்பளம்,பென்சன்,சங்கம் என்று இப்படியே வாழ்நாளை ஒட்டிவிடுவார்கள் . வேலை செய்பவர்களையும் செய்யவிடாமல் அரசியல் பேசி கெடுப்பது என்று ஒரு மானம் கெட்ட பொழப்பு. நான் போலீஸ் ஸ்டேஷன்க்கு பாஸ்போர்ட் செக் பண்ண type writter 300 கேட்டார். டைப் எல்லாம் பண்ணனும்.உங்களுக்காக தான் என்று. நான் குடுக்கவில்லை. 3 மாதம் கழித்து அலைய விட்டு 50 rs குடுங்க-ன்னு பிச்சை கேட்டார். IT இல் இருக்கும் எங்களுக்கெல்லாம் சம்பளம் அதிகம் என்று சொல்பவர்களுக்கு தெரியுமோ தெரியாதோ அதில் உள்ள கஷ்டங்கள்.அதிக பட்சம் 45 அல்லது 50 வயது வரைக்கும் தான் இப்படி உழைக்க முடியும்.பென்ஷன் எல்லாம் இல்லை. வேலை நிரந்தமும் இல்லை.இந்த அரசாங்க அதிகாரிகள் மாதிரி சங்கங்களும் கிடையாது. பாதாள சாக்கடை போடுகிறார்கள் என்றால் அதன் வரை படத்தை அதன் செயல் திட்டங்களை பற்றி கூட சொல்லமாட்டர்கள். என்னவோ கீதாம்மா... 10000000 பெரியார் வந்தாலும் திருந்தமாட்டாங்க.

    ReplyDelete
  9. என்ன கீதா மாமி இப்படி சோதனை மேல் சோதனை வருதே?? மழை பெய்யலைன்னாக்கவும் கஷ்டம், பெய்தாலும் கஷ்டமா இருக்கே.நீங்க குறிப்பிட்டு இருக்கற் மாதிரி அடிப்படைவசதிகள் இல்லாததே இதற்கு காரணம்.

    ReplyDelete
  10. வாங்க லக்ஷ்மி, இப்படி எழுதினால் யாரானும் பார்த்துட்டு ஏதானும் செய்ய மாட்டாங்களா? கொஞ்சமாவது முன்னேற்றம் இருக்குமானு ஒரு ஆசைதான். ! எங்கே! ஒண்ணையும் காணோம். அடிப்படை வசதிகளுக்குக் கூடப்போராட்டம் நடத்த வேண்டி இருக்கு.

    ReplyDelete
  11. வாங்க ஸ்ரீராம், வித்தியாசமாய்த் தான் எனக்கு வாய்க்கும் எல்லாமே! அதிலே இதுவும் ஒண்ணு! ஹிஹிஹி

    ReplyDelete
  12. வாங்க அம்மா. உங்க வரவுக்கும் கருத்துக்கும் நன்றிம்மா.

    ReplyDelete
  13. எல்கே, முதல்நாள் பாதாளச் சாக்கடைக்குத் தோண்டலைனா எங்களுக்கும் தண்ணீர் உள்ளே வந்திருக்காது. தோண்டிய பள்ளத்தைச் சரியாய் மூடாமல் போனதில் பிரச்னை ஜாஸ்தி. பள்ளத்தில் லாரிகள் மாட்டிக்கொண்டு, கடைசியில் ஜேசிபி வந்து மீட்டது. :(( எப்போ நேரம் பார்த்திருக்காங்க இந்த வேலைக்கு. பத்து வருஷம் முன்னாடியே முடிஞ்சிருக்கணும்.

    ReplyDelete
  14. வாங்க ரசிகன், எங்கே ஆளையே காணோம். ஸ்ரீதர்னு நீங்க ஒருத்தர் தானா என்ன?? :P என்னோட மைத்துனர் பெயரும் ஸ்ரீதர் தான். அறுபது என்ன நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆனாலும் இப்படித் தான் இருப்போமோ என்னமோ.

    ReplyDelete
  15. வாங்க பப்லு, நாடு போகும் போக்கை நினைத்தால் கொதிப்பாய்த் தான் இருக்கிறது. எல்லாத்துக்கும் காசு, எதற்கெடுத்தாலும் காசு தான் இப்போப் பிரதானம். மனித உறவுகளே இல்லை. :((((

    ReplyDelete
  16. வாங்க ராம்வி, சோதனை எல்லாம் ஒண்ணும் இல்லை, எப்போவும் தெருவில் மட்டும் தண்ணீர் நிற்கும், சமாளிச்சுட்டுப் போயிட்டு இருப்போம். இந்த வருஷம் தண்ணீர் உள்ளே வராத வீடே இல்லைனு பண்ணிட்டாங்க. :(((((

    ReplyDelete