நாமொன்று நினைக்க தெய்வம் வேறொன்று நினைக்கிறது என்பது எவ்வளவு உண்மை எனப் புரிந்தது. ஏற்கெனவே அம்பத்தூரின் பொதுப் பிரச்னைகளால் அல்லல் தாங்காமல் இங்கிருந்து கிளம்பி வேறே எங்காவது போகலாம்னு நினைச்சோம். அதைச் சரியானபடி செயல்படுத்த முடியாமல் ஏதேனும் தடங்கல்கள் வந்து கொண்டே இருந்தன. ஆனால் இந்த புதன்கிழமை பெய்த மழை அதற்கு ஒரு முடிவு கட்டி விட்டது. அம்பத்தூரிலேயே இருக்கணும்; தற்போதைக்கு வீட்டை மட்டும் மாத்துங்க என்பது இறைவன் கட்டளை! முந்தாநாள் 24-ஆம் தேதி புதன் மாலை ஆறரை மணிக்கு ஆரம்பித்த மழை விடாமல் வியாழன் காலை ஐந்து மணி வரை அடித்து ஊற்றியது. என்ன தான் பாரதியை ரசித்தாலும்
"திக்குகள் எட்டும் சிதறி
தக்கத்தீம் தரிகிட, தக்கத்தீம் தரிகிட, தக்கத்தீம் தரிகிட" என்று பாடி ஆடும் அளவுக்கு விவேகம் எங்களிடம் சுத்தமாய் இல்லை. நானாவது கொஞ்சம் ஒன்பதரைக்கெல்லாம் போய்ப் படுத்துவிட்டேன். ரங்க்ஸ் காவல் காத்துக்கொண்டிருந்தார். ஒரு மணி வரையிலும் பெய்த மழையில் ஒண்ணும் பிரச்னை இல்லை; நான் எழுந்து கொண்டதும் அவர் அப்போத் தான் படுத்தார். கண் மூடித் திறக்கிறதுக்குள்ளாக என்பார்கள் அப்படி வந்தது தண்ணீர் வீட்டுக்குள்ளே. கொல்லையில் போய் அடைக்கலாம் என்பதற்குள் வாசல் வழி; வாசலில் அடைப்பதற்குள் கொல்லை வழி! எதுவும் செய்ய முடியவில்லை. :( இரவு ஒரு மணியிலிருந்து நல்லவேளையாக ஏற்கெனவே உயரமான இடங்களில் பாதுகாப்பாக வைக்கப் பட்டிருந்ததைத் தவிர மற்ற சாமான்களைப் பத்திரப் படுத்தினோம். பிரிட்ஜ், ஏசி, கணினி, இண்டக்ஷன் ஸ்டவ் ஆகியவற்றின் இணைப்பைத் துண்டித்தோம். கிட்டத்தட்டக் காலை ஏழரை வரைக்கும் நாற்காலியிலேயே அமர்ந்திருக்க நேர்ந்தது. கழிவறை போனால் கூட அந்தக் கழிவு நீர் திரும்பி வருமோ என்ற பயம். :(
ஆறு மணிக்குப் பின்னர் மழை கொஞ்சம் விட்டது. ஏழரை மணிக்குப் பின்னர் தாற்காலிகமாய்த் தங்க வேறே வீடு பார்க்கப் போனால் திடீரென அம்பத்தூரில் வீடுகளே காலி இல்லை. :P உறவினர் ஒருவர் பூட்டி வைத்திருந்த முதல் தளத்தைத் திறந்து தருவதாய்ச் சொல்லி இருக்கிறார். அதன் பேரில் ஞாயிறன்று அங்கே போக எண்ணம்.உடனே தண்ணீரையும் இறைக்க முடியவில்லை. சாலையில் பத்துமணிக்குப் பின்னரே நீர் குறைய ஆரம்பித்தது. ஒன்பதரை மணியில் இருந்து இறைக்க ஆரம்பித்து எல்லாம் முடிந்து நேற்றுக் குளித்துச் சாப்பிடும்போது மூன்று மணி ஆகிவிட்டது. நேற்று மறுபடியும் மழை பயமுறுத்தவே, எங்க வீட்டில் வழக்கமாய்ச் செய்யும் பழக்கத்தின் பேரில், நான் தினமும் பயன்ப்டுத்தும் அம்மிக்குழவியைக்கன்னாபின்னாவென ஒரே ஒரு துணியைச் சுற்றிக் கொட்டும் மழையில் கோபத்தோடு போட்டுவிட்டு வந்தேன். நம்புகிறவர்கள் நம்பலாம். எனக்குத் தெரிந்து பதினைந்து வருஷம் முன்பு வரையிலும் கூடக் குழந்தை பிறக்கத் தாமதம் ஆகும் பெண்களை, யாருக்கானும் குழந்தை பிறந்ததும் நடைபெறும் புண்யாஹவசனத்தின் போது, அம்மிக்குழவிக்கு முதலில் குளிப்பாட்டி விட்டுத் துடைத்து, அலங்கரித்துப் பாலூட்டச்சொல்லுவார்கள். பின்னர் பிறந்திருக்கும் புதுக்குழந்தையைக் குளிப்பாட்டி அலங்கரித்து முறம் அல்லது சுளகில் போட்டுத் தொப்புளில் வெல்லக்கட்டியை வைத்துக் குழந்தை பிறக்காத பெண்களிடம் தருவார்கள். அந்தப் பெண் பிறந்த குழந்தையைச் சற்று நேரம் மடியில் வைத்திருந்து விட்டு வெல்லக்கட்டியை எடுத்துக்கொண்டு குழந்தையைத் தாயிடம் திரும்பத் தருவாள். அதன் பின்னர் அவளுக்குக் குழந்தை உண்டாகும் என்று கூறுவார்கள். கல் கூடக் கரையுமாம். அது போல் இப்போவும் அம்மிக்குழவியைக் கொட்டும் மழையில் நன்கு நனையுமாறும், வெயில் அடித்தால் காயும்படியும் போட்டால் வருணதேவன் குழந்தை நனைகிறதே என மனம் வருந்தித் தன் வலிமையைக் குறைத்துக்கொண்டு மழையின் வேகத்தையும், அளவையும் குறைத்துக்கொள்வானாம். ஆனால் இது அடிக்கடி மழை பெய்தால் மட்டுமே செய்யும் ஒன்று.
எங்க தெருவில் பாதிப்பு இல்லாத வீடே இல்லை. ஆனால் பலரும் மாடி கட்டி இருப்பதால் மழைக்காலம் ஆரம்பம் ஆனதுமே மாடிக்கு மாறிவிட்டனர். நாங்க மாடி கட்டவில்லை. இப்போ வீட்டையே இடிக்கணும்னு ஆகிவிட்டது! :( வேறே வழியே இல்லை.
ஆமாம் மாமி, ஜவஹர் நகரில்(loco works)உள்ள எங்க வீட்டிலேயும் இதே பிரச்சனைதான்.நாங்க எல்லாம் வெளி ஊர்களில் இருப்பதால் வீட்டை வாடகைக்குதான் விட்டிருக்கோம். இருந்தாலும் வீட்டை இடித்து கட்ட வேண்டும் என்று எங்க குடும்பத்தில் முடிவு செய்து இருக்கிறோம்.40 வருடங்களுக்கு முன் என் மாமனாரால் கட்டப்பட்ட வீடு அதனால் இவ்வளவு நாட்களாக இடிப்பதற்கு தயக்கமாக இருந்தது.ஆனால் ஒரு சிறிய மழைக்கும் தண்ணீர் உள்ளே வந்துவிடும் அளவிரற்கு வீடு தழைய போய்விட்டதால் இந்த முடிவு..
ReplyDeleteGeethamma
ReplyDeleteTake care!
பாக்க கஷ்ட்டமா இருக்கு . பாத்து நடக்கறச்சே எல்லாம்creepy crawlies , வழுக்கல் எல்லாம் சேத்துதான் . பத்திரம். Take care Insurance எல்லாம் நம்ப ஊர்ல ஏதாவது உபகாரமா இருப்பாளா இல்லை நாமே தான் செஞ்சுக்கணுமா?நல்லபடி சரியாக ஆண்டவனை வேண்டிக்கறேன்
ReplyDeleteஎங்க சித்தி சொல்லுவார் அம்மிக்குழவியை எடுத்து வெங்கட ரமண ஸ்வாமியை நினைத்துக்கொண்டு மழையில் உருட்டிவிட்டா மழை வேகம் குறைந்து , கஷ்ட்டம் தராதுன்னு
ReplyDeleteகொடுமையான அனுபவம்.
ReplyDeleteஇம்புட்டு தண்ணியா!!!!!! அவ்வ்வ் ;(
ReplyDeleteவாங்க ராம்வி, வீடு தாழ்வான பகுதியில் இருந்தாலும் தண்ணீர் ஓடிவிட்டது என்றால் பிரச்னை இல்லை. ஆனால் இங்கே தான் தண்ணீர் ஓடவே ஓடாதே. எங்களுக்கு இந்தப் பிரச்னையே வரக் கூடாது. தண்ணீர் எல்லாமும் கிழக்கே இருக்கும் கொரட்டூர் ஏரியில்போய்ச் சேரணும். அதன் வழியை அடைத்து, நீர் செல்ல வேண்டிய வழியில் என எங்கு பார்த்தாலும் வீடு கட்டி விட்டார்கள்.. :(((( அதோடு மழையும் பெரிய அளவிலேயே பெய்தது. கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் விடாத மழை, பதினைந்து சென்டிமீட்டர் என சொல்கின்றனர்.
ReplyDeleteஅட??? இ.கொ.???? நிஜம்மாவா?? கனவா? நினைவா?? நன்றிங்க வரவுக்கும், கரிசனைக்கும். :))))))
ReplyDeleteவாங்க ஜெயஸ்ரீ, இத்தனை வருஷமா வாசல் வராந்தாவோட போயிடும், இந்த வருஷம் உள்ளே என்னதான் வைச்சிருக்கேனு பார்க்க ஆசை போல! இன்ஷூரன்ஸ் பத்தித் தெரியலை, கேட்கணும்.
ReplyDeleteபதிவு படிக்கும்போதே உங்க அவஸ்தை
ReplyDeleteபுரிஞ்சுக்க முடியுது.பழயகால நம்பிக்கைகள் வீண்போவதே இல்லே.
ஆமாம், ஆனால் நான் வழக்கம்போல் பிள்ளையாரை நினைச்சேன்; :)))) இதை எழுதும்போது கொஞ்சம் தயக்கமா இருந்தது; யாருக்கும் தெரியாத ஒரு விஷயமேனு, நல்லவேளையா உங்களுக்குத் தெரிஞ்சிருக்கு. :)))))
ReplyDeleteவாங்க ஸ்ரீராம், மக்கள் இதைவிட மோசமாக எல்லாம் பாதிக்கப்படறாங்க. நான் வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கேன். :(
ReplyDeleteவாங்க கோபி, தண்ணீர் உள்ளே வரச்சே எடுத்த படம் இது; அதனால் குறைச்சலாய் இருக்காக்கும். ஸ்வாமி அலமாரியின் கீழ்த்தட்டிற்குள்ளே தண்ணீர் புகுந்துவிட்டது. அரை அடி உயரம் இருந்திருக்கும். :)))))
ReplyDeleteவாங்க லக்ஷ்மி, அவஸ்தை தான்! ஒண்ணும் செய்ய முடியலை, முனிசிபாலிட்டிக்குத் தொலைபேசி உதவிப் பொறியாளரைத் தண்ணீர் ஓடும்படி வெட்டி விடச் சொல்லி நேற்றிலிருந்து கூப்பிட்டுக் கொண்டு இருக்கிறோம்; இன்னும் வரப் போறாங்க.:(
ReplyDeleteகீதா மாமி
ReplyDeleteபார்த்து கவனமாக இருங்கோ.
என்னவோ இந்த வாரம் என்னவென்றே தெரியவில்லை. போன வாரம் கிருஷ்ண ஜெயந்தி அன்று இரவும் இங்கே நியூயார்க் நியூ ஜெர்சி யில் நல்ல மழை. செவ்வாய்க்கிழமை பூமாதேவியின் ஆட்டம். வரும் week -end 'Waiting for Irene'.
Hurricane Irene forecast இல் பதினைந்து இன்ச் மழை + காற்று எதிர்பார்க்கபடுகிறது. சேதம் அதிகம் இல்லாமல் இருந்தால் சரி. :(((
கீதாம்மா, படிக்கறதுக்கும், படத்தைப் பார்க்கவுமே ரொம்ப சங்கடமாக இருந்தது. உங்களது இந்த சங்கடம் தெரியாம வீடு மாறுவது குறித்து குழுவில் ஏதோ நக்கல் பண்ணியிருக்கேன்...மன்னிக்கவும்.
ReplyDeleteபடத்தைப் பார்த்ததும் ரொம்ப வருத்தமாகப் போய்விட்டது.
ReplyDeleteஅய்யோ பாவம் எப்படி சமாளித்தீர்கள்.
அவன் ஆப்பம் சாப்பிட்டதுக்கு நான் ஏப்பம் விடணுமாம் ன்னு ஒரு பழமொழி(சும்மா நாமலே சொல்லிக்கிறதுதான் கீதாம்மா).அதாவது பொறுப்பற்ற அரசாங்க அதிகாரிகளின், உதவாக்கரை ஊழியர்களின் அலட்சியத்தின் விளைவு. மழை காலத்தில் தான் ரோடு தோண்டுவார்கள். அதை மூடக் கூட மாட்டார்கள். எனக்கு என்ன தோணுதுன்னா? அரசாங்க ஊழியர்கள் என்றால் இப்படி தான் இருக்க வேண்டுமா?வேலை செய்யக்கூட லஞ்சம் வாங்கி பிச்சை எடுக்கும் (அவ்ளோ ஆத்திரம்) நிலையா? அவர்கள் வாங்குவது லஞ்சம் மட்டும் அல்ல. நிறைய பேரின் சாபமும் வைத்தெரிச்சலும். தான். இங்கு தாக்கக்கூடும் என்று போன வாரம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கபட்டது. வருவதற்கு முன்பாக என்னவெல்லாம் முடியுமோ அப்படியெல்லாம் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கபட்டது. பணம் இருக்கு, சிறிய மக்கள் தொகை என்று சொன்னாலும் அடிப்படை நோக்கம் பொது மக்கள் பாதிக்ககூடாது என்பதுதான். நம்ம ஊர்ல அதிகமா மழை பெய்தாலும்,வெயில் அடித்தாலும் உயிர் பலி. விளை நிலங்கள் காங்கிரீட் நிலங்களாகிவிட்டன . தண்ணீர் செல்லும் வழியெல்லாம் அடைக்கப்பட்டன. மழைநீர் வடிய வழி இல்லை. எல்லாருக்கும் இது தெரியும்.ஆனால் பண்ணமாட்டார்கள். தெரியலாம் செய்தால் தவறு. தெரிந்தே செய்வது தப்பு. தப்பு செய்தவன் திருந்த வேண்டும். தவறு செய்தவன் வருந்த வேண்டும். நானும் நிறைய முறை இப்படியே பொலம்பிக்கிட்டு தான் இருக்கேன். ஒண்ணும் நடக்குற மாதிரி தெரியல... சீக்கிரம் நிலைமை சீராகி வர ஆண்டவனை வேண்டி கொள்கிறேன். வீட்டை கண்டிப்பாக இடிக்க வேண்டுமா? பார்த்து பார்த்து கட்டிய வீட்டை இடிப்பது ரொம்ப கொடுமை கஷ்டம்..!
ReplyDeleteஓ மை காட் ! வீட்டுக்கு உள்ளேயே தண்ணி வந்துடுத்தா?
ReplyDeleteவீட்டுக்குள்ளே இத்தனை தண்ணீரா! சென்னையின் வளர்ச்சி கவலை தருகிறது.
ReplyDeleteஅம்மி சுத்திப் போட்டப்புறம் மழை நின்னுதோ?
அன்பு கீதா, இப்பதான் படித்தேன் பா. அனியாயமா இருக்கே.
ReplyDeleteபுது வீட்டிற்கு இன்று வந்திருப்பீர்கள்
என்று நினைக்கிறேன். ரொம்ப வருத்தமா இருக்கு.
இப்படி நடந்தால் ஒழிய நீங்கள் நகர மாட்டீர்கள் என்று நடந்ததோ என்னவோ.
உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
வாங்க ஸ்ரீநி, ஒரு வாரமா சரியான வேலை! இன்னிக்குத் தான் ஒழிந்த நேரமும் கிடைத்தது; இணையமும் இன்னிக்குத் தான் வந்தது. அங்கே இப்போ எப்படி இருக்கு? எல்லாம் சரியாகிவிட்டதா? பத்திரிகைகளிலும், தொலைக்காட்சியிலும் பார்க்கையிலே நம்ம ஊரோடும் ஒத்துப்பார்க்காமல் இருக்க முடியலை. ஒரு மழைக்கே பட்ட கஷ்டம்! :(((((
ReplyDeleteநன்றி மதுரையம்பதி, வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
ReplyDeleteமாதேவி, சமாளிச்சாச்சு!
ReplyDeleteபப்லு, ஏரிகளுக்கு நீர் செல்லும் வாய்க்கால்கள் ஆக்கிரமிப்புக்களும், சரியான முன்னேற்பாட்டுடன் பாதாளச் சாக்கடைத் திட்டம் போடாததும் தான் இம்மாதிரியான நிலைக்குக் காரணம்.தாழ்வான பகுதிகளில் தேங்கும் நீர் செல்லும் வழிகளின் ஆக்கிரமிப்புக்களை நீக்கினாலே போதும். எல்லாராலும் வீடுகளை இடித்துக்கட்ட முடியுமா என்ன?? எங்க தெருவின் பின்னாலும் சரி, தெருவின் முன்பும் சரி, இந்த மழை நீரெல்லாம் ஒருகாலத்தில் நேரே கொரட்டூர் ஏரிக்குச் சென்றுவிடும். நாங்க வீடுகட்டின புதிசிலே பார்க்காத மழையா?? தெருவிலே முழங்காலுக்கும் மேல் தண்ணீர் வரும், வந்த வேகத்திலே வடிந்தும் விடும். :((((
ReplyDeleteஆமாம் அஷ்வின் ஜி, வீட்டுக்குள்ளே தண்ணீர் வந்ததால் தான் பிரச்னையே! வருஷா வருஷம் வாசல் வராந்தாவோடு வந்துட்டுப் போயிடும். ஒரே ஒரு முறை முன்னெச்சரிக்கை கொடுக்காமல் அம்பத்தூர் ஏரியை முனிசிபாலிட்டியே உடைச்சு விட்டப்போ தண்ணீர் வந்தாலும் உடனேயே வடிந்துவிட்டது. இப்போக் கிட்டத்தட்டப் பத்து மணி நேரம் எதுவும் செய்ய முடியலை; ஒரு இரவு முழுசும் தூங்காமல் சேரிலேயே உட்கார்ந்திருந்தோம். :((((
ReplyDeleteஅம்மி சுத்திப் போட்டப்புறம் மழை நின்னுதோ?//அப்பாதுரை, அம்மியைச் சுத்திப் போட்டப்புறம் மழை நின்றதோடு இல்லாமல் இன்றுவரை வெறும் தூற்றல் தான். நேத்துத்தான் எடுத்து வைச்சுட்டு வந்தேன்; பார்க்கலாம்! :))))))
ReplyDeleteஇப்படி நடந்தால் ஒழிய நீங்கள் நகர மாட்டீர்கள் என்று நடந்ததோ என்னவோ.
ReplyDeleteஉடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்.//
வாங்க வல்லி, உண்மையில் இதன் மூலம் கடவுள் எங்களுக்கு எச்சரிக்கை கொடுத்து நல்ல சமயத்தில் எங்களை அங்கே இருந்து நகர்த்தி இருக்கிறார். ஆகையால் வருத்தமெல்லாம் எதுவும் இல்லை. எல்லாம் நன்மைக்கே! :D
நாங்கள் இருப்பது கடற்கரையில் இருந்து சுமார் முப்பது மைல் உள்ளடங்கி. புயல் வருவதால் முன்னெச்சரிக்கையாக போக்குவரத்தை நிறுத்தி விட்டார்கள். சனி ஞாயிறு என்பதால் நஷ்டம் அதிகம் இல்லை. நிலைமை இரண்டு நாட்களில் சீர் ஆகி விட்டது. ஆற்றில் மட்டும் இன்னும் வெள்ளம் இருக்கிறது.
ReplyDeleteநேற்றைய முன் தினம் ஒபாமா வந்து சேதங்களை பார்வையிட்டுச் சென்றார்.
'..நாமொன்று நினைக்க தெய்வம் வேறொன்று நினைக்க...'
ReplyDeleteஅதெல்லாம் ஒண்ணும் இல்லை. தெய்வம் நினைத்ததை புரிந்து கொள்ள தாமதமாகி இருக்கிறது. விக்னேஸ்வரர் நினைத்தது, 'நான் ஒரு விளையாட்டுப்பிள்ளை...'