எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, September 06, 2011

என்ன சொல்றீங்க???

 
Posted by Picasa
புதுசாய்க் குடி போன வீட்டில் முதல் சமையல் பிள்ளையார் சதுர்த்தியில் இருந்து ஆரம்பிச்சோம். பிள்ளையார் சதுர்த்தியைச் சொந்த வீட்டிலேயே முடிச்சுட்டுக் கிளம்பறாப்போல் தான் முதலில் நினைச்சோம். அப்படியே சொல்லவும் சொன்னோம். ஆனால் பிள்ளையார் என்னமோ திடீர்னு குடித்தனம் போற வீட்டிலே தான் என்னோட சதுர்த்தியைக் கொண்டாடணும்னு சொல்லிட்டார். நீங்க பூஜையிலே பார்க்கும் பிள்ளையார் பரம்பரையாக மாமனார் குடும்பத்தில் வழிபட்டு வந்த விக்ரஹம். சென்ற 2010ஆம் வருடம் டிசம்பரில் தான் எங்களிடம் வந்து சேர்ந்தார். அதுவரைக்கும் தஞ்சாவூரில் என் பெரிய மாமியாரிடம் இருந்தது. அவங்க டிசம்பரில் தான் மேலே பார்க்கும் மற்ற விக்ரஹங்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேதப் பெருமாள், ரிஷபவாஹனர், வெண்ணைத்தாழி கிருஷ்ணன்,(இவருக்குத் தான் கோகுலாஷ்டமி நிவேதனம் நடந்தது. முதல்லே தண்ணீரை வீட்டுக்குள்ளே புக வைத்தவரும் இந்தக் கிருஷ்ணரே! :P) பிள்ளையார் ஆகிய விக்ரஹங்களை எங்க கிட்டே ஒப்படைச்சாங்க. அதிலிருந்து இந்த வருஷம் பிள்ளையார் சதுர்த்தியைச் சொந்த வீட்டிலே இவரை வைச்சு வழிபட்டுச் செய்யலாம்னு நினைச்சால், நாமொன்று நினைக்கப் பிள்ளையார் வேறொன்று நினைத்துவிட்டார். 
Posted by Picasa
படங்களை எடிட் செய்யாமலேயே போடறேன். தொழில்நுட்ப நிபுணர்கள் கண்டுக்காதீங்க. :P

ஞாயிற்றுக்கிழமை பால் காய்ச்சிச் சாப்பிட்டதும்,, சாமானை எடுக்கும் அளவுக்கு சுறுசுறுப்பு வரவில்லை. ஆனால் மழை பயமுறுத்திக்கொண்டே இருக்கவே, திங்களன்று பாக்கிங் செய்யலாம்னு ஆரம்பிச்சால், இடியும், மின்னலுமாக மழை கொட்டுவேனெனச் சொல்ல, மறுபடி சாலை மோசமானாலோ தண்ணீர் புகுந்தாலோ ஒருவாரமாவது அப்படி இப்படி நகர முடியாது. ஆகவே ட்ரக்காரரை தொலைபேசி அழைத்து அவர் வந்து பார்த்துவிட்டு வண்டியை மதியம் அனுப்பறேன்னு சொல்லிச் சாயங்காலம் வரை வரவே இல்லை. ஒரே டென்ஷன். எந்த நிமிஷமும் மழை வரலாம்னு வேறே தொலைக்காட்சியில் அறிவிப்புக்கள். கண்ணீர் மழையா, இந்த மழையா எது முந்தப் போகுதோ தெரியலைனு நினைச்சு, நேரேயே போனார்; ஒரு ட்ரக்கையும் கூட்டி வந்தார். அந்த டிரைவர் சாலையைப் பார்த்ததுமே இந்தச் சாலையா? இதிலே சாமானையும் ஏத்திட்டுப் போகணுமான்னு கேட்டுட்டு ஓட்டம் பிடித்துவிட்டார். மறுபடி தொலைபேசியில் ட்ரக்காரரைக் கூப்பிட்டால் காலை வரேன்னு சொன்னார். எங்க வீட்டில் உதவிக்கு வரும் நபரும் தானும் அழைத்துவருவதாயும் இரண்டு ட்ரக்கிலுமாக மொத்தமாய்ச் சாமான்களை ஏற்றிவிடலாமென்றும் கூறவே அப்போதைக்கு சமாதானம் ஆனோம்.

மறுநாள் காலை ட்ரக் வருவதெனில் காலை ஐந்து மணிக்கே வந்துவிடும். வீடு காலி செய்கையில் அப்படித் தான் வருவது வழக்கம். ஆனால் எட்டு மணி ஆகியும் யாருமே வரலை; மறுபடி தொலைபேசி அழைப்பு. டரக் காரர் ஆட்களைத் தயார் செய்து கூட்டிட்டு வந்து ட்ரக்கை எடுத்துப்போங்க என்று கை விரிக்க, எங்க வீட்டில் உதவிக்கு வரும் நபர் ட்ரக்காரர் லோட் ஏத்திக்கொண்டு சென்றிருப்பதாய்க் கூற குழப்பமோ குழப்பம். இதற்குள்ளாக என் தம்பி தொலைபேசி தான் மாம்பலத்திலிருந்து கிளம்பி வந்து கொண்டிருப்பதாயும் வந்ததும் சாமான்களை ஏற்றலாம் எனவும் கூறினார். அவர் வரப்போவது மாலை. மாலை நேரம் சாமான்களை ஏற்றுவதும் கடினம். மழை வந்தாலோ கேட்கவே வேண்டாம். ஆகவே மறுபடியும் வேறொருத்தர் வருகிறேன் என்று சொல்லித் தொலைபேசி எண்களைக் கொடுத்திருந்தார். அவரை அழைத்துப் பேசினோம். ஆட்களைத் தயார் செய்துவிட்டுக் கூப்பிடுவதாய்ச் சொன்ன அவர் அவ்வாறே கூப்பிட்டு வந்து கொண்டிருப்பதாய்த் தெரிவித்தார்.

ஒரு மாதிரியாக எங்க சாலைக்கும் வந்தாச்சு. இன்னும் கொஞ்ச தூரம் தான்; எங்க வீடு வந்துடும். அதற்குள்ளாக மேற்கே எங்க வீட்டிலிருந்து மூன்றாவது வீட்டு வாசலில் இரண்டு நாட்கள் முன்னர் தான் ஜேசிபியே இறங்கி மாட்டிக்கொண்டு ஏற்படுத்திய பள்ளத்தில் வந்த வண்டி மாட்டிக்கொள்ள, எதிரே வீடு கட்டுறவங்க கிட்டேயும், பக்கத்திலே கட்டறவங்க கிட்டேயும் மண்வெட்டி, ஆட்களை அவங்களே உதவிக்கு அழைத்துக்கொண்டு வண்டியை மெல்ல மெல்ல மேலே எடுத்தாங்க. பின்னர் வண்டி பின்னாலேயே மெதுவாகப் போய் அடுத்த தெரு வழியாக அதே மாதிரி பின்னாலேயே எங்க வீட்டு வாசலுக்கு வந்தது. இதற்குக் கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் பிடித்துவிட்டது. அதன் பின்னர் முடிந்தவரையிலும் எல்லா சாமான்களையும் மேலே இருந்தும் எடுத்துவிட்டோம். எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு இப்போப் புதுசாப்போட்டிருக்கும் நூறடிச்சாலையின் சேவைக்கான சாலை வழியாகச் சுற்றிக்கொண்டுபோய் இந்த வீட்டில் கொண்டு சேர்த்தாங்க. அவங்களே எல்லாவற்றையும் மேலே ஏற்றியும் கீழே வைக்க வேண்டியதைக் கீழேயும் வைத்து ஒழுங்கும் செய்து கொடுத்துவிட்டாங்க.

முன்பே திட்டமிட்டிருந்தது பாக்கர்ஸ் அண்ட் மூவர்ஸைக்கூப்பிடுவதாக. ஆனால் திடீரென மாறிய திட்டத்தில் அவங்க யாருமே வரும்படியான சூழ்நிலையில் இல்லை; மிச்சம் சமையல் சாமான், பாத்திரங்கள், காஸ் அடுப்பு இன்னும் சில சூட்கேஸ்கள், பெட்டிகள், கொலு பொம்மைகள் பாக்கி. எல்லாவற்றையும் ஏற்றிச் செல்ல ஒரு சின்ன ட்ரக் இருந்தால் போதும். ஆனால் உள்ளூர் டிரக் யாருமே வரச்சம்மதிக்கவில்லை. ஆகவே ஒரு மாட்டுவண்டியைப் பேசி வரச் சொல்லிவிட்டுத் தொலைபேசி எண்ணையும், விலாசத்தையும் கொடுத்தாச்சு. அன்று எங்கள் ஆவணி அவிட்டம் வேறே. காலையிலேயே அதுக்குப் போனார். அதுக்குள்ளே தம்பியும் வந்தாச்சு. கூடவே தம்பி மனைவி, தம்பி பிள்ளை போன்றோரும் வந்தாங்க. எல்லாருமாச் சேர்ந்து பாத்திரங்களைச் சாக்கு, உரப்பைகள் போன்றவற்றில் போட்டுக் கட்டிவிட்டு, மளிகைச்சாமான்களை பெரிய ப்ளாஸ்டிக் டப், வாளி போன்றவற்றில் கொட்டாமல் வைத்துத் தயார் செய்தோம். பெரிய தண்ணீர் ட்ரம்மிலும் இவ்வாறே சாமான்கள் வைக்கப்பட்டுத் தயார் செய்தோம். மதியம் பனிரண்டு மணியிலிருந்து மாட்டுவண்டிக்காரருக்கு அழைப்புக்கு மேல் அழைப்பு விடுத்தும், இதோ வரேன், அதோ வரேன்னு சொல்லிட்டு இரண்டரை மணி வரை வரவே இல்லை. தொலைபேசியையும் ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வைச்சுட்டார்.

அப்போத் தான் முதல் நாள் கணினியை டிஸ்கனெக்ட் பண்ணி ஆட்டோவில் எடுத்துப் போனது நினைவில் வர, அந்த ஆட்டோக்காரரைக் கூப்பிட்டோம். அவர் வருவதாகவும், ஆனால் சாலை மோசமான நிலையில் இருப்பதால் ஒரே டிரிப் தான் அடிப்பேன் என்றும், அதில் எவ்வளவு முடியுமோ சாமான்களை வைக்கலாம் எனவும் கூறினார். அவரை வரச் சொல்லிவிட்டு குடும்ப ஆட்டோக்காரரான இன்னொருவரைக் கூப்பிட்டோம். அவர் உடனே வர அவர் வண்டியில் முடிந்த சாமான்களை முக்கியமானதாக, சமையலுக்குத் தேவையானவற்றை ஏற்றிவிட்டு நானும் ஏறிக்கொண்டேன். அவர் எல்லாவற்றையும் தானே கொண்டு சேர்ப்பதாகவும் ஒப்புக்கொண்டார். சாமான்கள் ஒருவழியாக வந்து சேர்ந்தன. அது வரைக்கும் கொல்லைக்கிணற்றடியில் போட்டிருந்த அம்மியை எடுக்க வேண்டாம் என எல்லாரிடமும் சொல்லிவிட்டு வந்தேன். யாரும் நேற்று வரை எடுக்கவில்லை. நேற்றுத்தான் கொலு பொம்மைகளைக்கொண்டு வர சென்றிருந்தபோது அம்மிக்குழவியை உள்ளே எடுத்து வந்தேன். பெரிய பொம்மைகள் எல்லாம் தண்ணீர் போய் வீணாகிவிட்டன. அதோடு வடாம் வைத்திருந்த டப்பாவிலும் தண்ணீர் எப்படினே புரியலை; :( போய்விட்டது. வடாமும் வீணாகிவிட்டது. பாத்திரப்பெட்டியில் தண்ணீர். பாத்திரங்களை வெளியே எடுத்துத் தண்ணீரைத் துடைத்துக் காய வைத்துப் பாத்திரங்களைத் திரும்ப வைத்தோம்.

மறுநாள் பிள்ளையார் சதுர்த்தி; எப்படிச் செய்யப் போகிறோம் என மலைப்பாகவே இருந்தது. முதல் நாள் இந்த வீட்டுக்கு வந்துதான் நிவேதனத்திற்காக இட்லிக்கு அரைத்தேன். அதன் பின்னர் மறுநாள் கொழுக்கட்டை, அதிரசம், வடை, பாயசம், அன்னம், பருப்பு போன்றவை செய்து நிவேதனம் செய்தோம். பூஜைக்குக் கல்பத்ரயம் எடுத்து வரேன்னு வீட்டுக்குப் போனவர் கல்பத்ரயத்திற்குப் பதிலாக சுந்தர காண்டத்தை எடுத்து வந்துவிட்டார். பிள்ளையார் கிட்டே, "நீ தானே இங்கே வரணும்னு அடம் பிடிச்சு வந்திருக்கே; இந்த வருஷம் இதான் உனக்கு!" னு சொல்லியாச்சு. அதனால் என்னனு ஜம்ம்னு குளிச்சுப் புதுவேஷ்டி கட்டிண்டு எல்லா நிவேதனங்களையும் வாங்கிக்கொண்டார். நல்லவேளையாகக் கற்பூரம் போன்றவை இங்கே எடுத்து வந்திருந்தோம். பிள்ளையார் நல்லா இருக்கார் இல்லை??

நாங்க இருக்கும் பகுதி மாடியில் இருக்கிறது. படிகளோ எல்லோராக் குகைகளுக்குப் போகிறமாதிரி உயரம்! ஆகவே சாமான்களை நாங்களே எடுத்து வருகையில் கீழே கயிற்றைக்கட்டி மேலே அவர் அனுப்ப, மேலே நான் போய் நின்றுகொண்டு இழுத்து எடுத்துக்கொள்கிறேன். தூக்கிக்கொண்டு ஏறுவது கொஞ்சம் இல்லை; நிறையவே சிரமம். :( ஆனால் சுற்றி இருக்கும் மரங்கள் உற்சாகம் கொடுக்கின்றன. மாடி வராந்தாவில் உட்கார்ந்தால் அருகே மரக்கிளைகளில் விளையாடும் அணில்கள், தவிட்டுக்குருவிகள், மைனாக்கள், தேன்சிட்டுக்கள், விதவிதமான பட்டாம்பூச்சிகள் என நேரம் போவது தெரியவில்லை. அங்கே இருந்து யாருடனாவது தொலைபேசினால் அவங்க இந்தச் சப்தத்தைக்கேட்டுவிட்டு என்ன இதுனு அதிசயிக்கின்றனர். எங்க பொண்ணுக்கும் இந்தச் சப்தங்கள் கேட்டு ஜாலியா இருக்கேனு சொன்னா. என்ன? தொலைபேசி இணைப்புக்கொடுக்கப் பத்து நாட்கள் ஆகிவிட்டன. ஆயிரம் அன்னா ஹசாரே வந்தாலும் இதிலே எதுவும் மாறப்போவதில்லை. நேற்று வரையிலும் இணைப்புக்கொடுக்கவில்லை. இன்றுதான் சற்றுமுன்னர் தொலைபேசி இணைப்பும், இணைய இணைப்பும் வந்தது.

காலை தினசரியிலிருந்து எல்லாமும் கீழே இருந்து கயிறுகட்டி இழுத்து மேலே கொண்டு வருவதும் ஒரு தனி அநுபவம் தான். கொஞ்ச நாட்கள் அதையும் அநுபவித்துவிட்டுப் போகலாம். என்ன சொல்றீங்க??? :)))))))

50 comments:

 1. நல்ல படியாக புது வீட்டுக்கு குடிபோனதுக்கு சந்தோஷம் கீதா மாமி.
  பாக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் ரொம்ப சவுகர்யமா இருக்கு . நாங்க போன மாதம் வீடு மாற்றின போது நாங்க ஒரு வேலையும் செய்யவில்லை.அவர்களே எல்லாத்தையும் எடுத்து பாக் செய்து புது இடத்துக்கு வந்து அந்தந்த இடத்திலும் வைத்து விட்டார்கள்.

  பிள்ளையார் சதுர்த்தி நல்ல படியாக கொண்டாடிவிட்டீங்களே இனிமேல் கவலை இல்லை எல்லாம் நல்ல படியாகத்தான் நடக்கும்.

  ReplyDelete
 2. இந்த வீடு நல்லா இருக்கே. ஸ்வாமி தேர்லே வரும் போது இப்படித்தான் கயிறு போட்டு பூஜை பொருள்களை வாங்குவார்கள்.அது சரி டீக்கடை புது வீட்டிலேந்து எவ்வளவுதூரம்ன்னு புவனா கேக்க சொன்னாங்க

  ReplyDelete
 3. சே ஜஸ்ட்டு மிஸ்சுடு முதல் பதில்

  ReplyDelete
 4. யப்பா..நல்ல படியாக வந்தாச்சா...சந்தோஷம் ;-)

  ReplyDelete
 5. ஒ இதுதான் பிள்ளையார் பிடிக்க குரங்கா போச்சு என்பார்களே அதுவோ. பாவம் சாம்புசாருக்குத்தான் ரெட்டை வேலை.

  ReplyDelete
 6. //தொழில்நுட்ப நிபுணர்கள் கண்டுக்காதீங்க. :P//
  கண்டுக்கலை கண்டுக்கலை!

  ReplyDelete
 7. //இரண்டு நாட்கள் முன்னர் தான் ஜேசிபியே இறங்கி மாட்டிக்கொண்டு ஏற்படுத்திய பள்ளத்தில் வந்த வண்டி மாட்டிக்கொள்ள, //
  ஆன்டிசிபேட் பண்னி இருக்கணுமே!

  ReplyDelete
 8. //பெரிய பொம்மைகள் எல்லாம் தண்ணீர் போய் வீணாகிவிட்டன. அதோடு வடாம் வைத்திருந்த டப்பாவிலும் தண்ணீர் எப்படினே புரியலை; //
  சரியா பாக்கணும். அது உங்க கண்ணீரா இருக்கும். :-(

  //:( போய்விட்டது. வடாமும் வீணாகிவிட்டது. //
  போனாப்போறது....

  ReplyDelete
 9. வாங்க ராம்வி, எல்லாம் நல்லபடியாகவே தான் போகின்றது. என்ன கொஞ்சம் அலைச்சல்; அதனால் வரும் அயர்ச்சி; மற்றபடி இங்கே குருவிகளோடும், அணில்களோடும், கிளிகளோடும் பொழுது நன்றாகவே போகிறது.

  ReplyDelete
 10. வாங்க திராச சார், என்னோட பதிவுக்கு நீங்க வரதுக்காக, மழையெல்லாம் பெய்து, வெள்ளம் வந்து! யப்ப்ப்பா! தேரிலே சாமான்களைக் கயிறு கட்டி இழுக்கிறதைச் சிதம்பரத்திலே நேரிலேயே பார்த்தேனே! :P

  ReplyDelete
 11. //பூஜைக்குக் கல்பத்ரயம் எடுத்து வரேன்னு வீட்டுக்குப் போனவர் கல்பத்ரயத்திற்குப் பதிலாக சுந்தர காண்டத்தை எடுத்து வந்துவிட்டார். //

  புருஷ சூக்தம் மாதிரி அத வாசிச்சே பூஜையா? ஹஹஹஹா!

  ReplyDelete
 12. டீக்கடை?? நான் திறந்தா உண்டு! :P

  ReplyDelete
 13. வாங்க கோபி, நன்றிப்பா.

  ReplyDelete
 14. //பிள்ளையார் நல்லா இருக்கார் இல்லை?? //
  எங்க? சரியாவே தெரியலை! :-(

  ReplyDelete
 15. ஆமாம் திராச சார், நானும் அப்படியே நினைச்சேனாக்கும். இதான் பிள்ளையார் பிடிக்கக் குரங்காச்சோனு தான் எனக்கும் தோன்றியது.

  ReplyDelete
 16. ஆகவே சாமான்களை நாங்களே எடுத்து வருகையில் கீழே கயிற்றைக்கட்டி மேலே அவர் அனுப்ப, மேலே நான் போய் நின்றுகொண்டு இழுத்து எடுத்துக்கொள்கிறேன். //
  பேசாம ஒரு சகடை பிக்ஸ் பண்ணிடுங்க!

  ReplyDelete
 17. வாங்க திவா, வராதவங்க எல்லாம் நம்ம பதிவுக்கு வராங்கப்பா! அதுக்காக மழை வந்து வெள்ளம் வந்து வீடு மாறினு என்னல்லாம் பண்ண வேண்டி இருக்கு! :P

  ReplyDelete
 18. //அருகே மரக்கிளைகளில் விளையாடும் அணில்கள், தவிட்டுக்குருவிகள், மைனாக்கள், தேன்சிட்டுக்கள், விதவிதமான பட்டாம்பூச்சிகள் என நேரம் போவது தெரியவில்லை.//
  ஹையோ ஹையோ!

  ReplyDelete
 19. @திவா, கண்டுக்காததுக்கு நன்னி ஹை!. ஜேசிபி வந்து மாட்டிண்டதைப் பார்த்ததும் தான் சீக்கிரமாய்ச் சாமான்களை எடுக்கணும்னே முடிவு செய்தோம். ஏனெனில் தினம் பத்துத் தரமாவது ஜேசிபி வந்துட்டும், போயிட்டும். குறுக்கும் நெடுக்கும் போய்ப் போய் ஒரு வழி பண்ணிட்டாங்க சாலையையும், மக்களையும்! :(((((((

  ReplyDelete
 20. //என்ன? தொலைபேசி இணைப்புக்கொடுக்கப் பத்து நாட்கள் ஆகிவிட்டன.//
  ம்ம்ம்ம் பத்து நாளா கர்ர்ர்ர்ர்ர் சத்தமே இல்லாம இணையம் இணையமாவே இல்லை!
  :-P ;P

  ReplyDelete
 21. சரியா பாக்கணும். அது உங்க கண்ணீரா இருக்கும். :-(//அழுதேன் தான்! வடாம் வீணானதுக்கு இல்லை. வீட்டை விட்டுக்கிளம்புகையில்; சாமான்களை ஏற்றுகையில்! கண்ணீரைத் தடுக்க முடியலை! வீடு கட்டியதும் ஏழு வருடங்கள் இருந்தோம். அப்புறம் எட்டு அல்லது பத்துவருடங்கள் வெளிமாநிலங்கள் வாசம் முடிந்து கிட்டத்தட்டப் பதினைந்து வருடம் தொடர்ந்து இருக்கிறோம் இல்லையா? செண்டிமெண்டல் அட்டாச்மெண்ட்! :(((((

  //:( போய்விட்டது. வடாமும் வீணாகிவிட்டது. //
  போனாப்போறது....அது போனால் போகட்டும்னு தூக்கிப் போட்டாச்சு! என்னைப் பொறுத்தவரை அடுத்து என்னனு தான் யோசிப்பேன்! நல்லவேளையா இந்த விஷயத்தில் அவரை விட நான் கொஞ்சம் ஸ்ட்ராங்காயும், வந்ததை அப்படியேயும் எடுத்துக்கொண்டுவிட்டேன். இல்லைனா கஷ்டம் தான்! :)))))))

  ReplyDelete
 22. புருஷ சூக்தம் மாதிரி அத வாசிச்சே பூஜையா? ஹஹஹஹா!//எங்கே! அதை வாசிச்சு எல்லாம் பண்ணலை, தெரிந்த ஸ்லோகங்களை மட்டும் சொல்லிட்டு, தூபம், தீபம், ஆரத்தி காட்டி நிவேதனம் செய்தது. அவ்வளவு தான்! :(

  ReplyDelete
 23. எங்க? சரியாவே தெரியலை! :-(//ம்ம்ம்ம்???? தெரியலையா?? பார்க்கிறேன், மறுபடி. :(

  ReplyDelete
 24. பேசாம ஒரு சகடை பிக்ஸ் பண்ணிடுங்க!//ஹிஹிஹி, செய்யலாம், ஜகடை எடுத்துட்டு வரலை, கிணற்றிலே போட்டு ஃபிக்ஸ் செய்திருக்கோம். இன்னொரு ஜகடையைக் காணோம்! :(

  ReplyDelete
 25. ஹையோ ஹையோ!//விதவிதமாய்க் கூப்பாடு போடுதுங்க! சமையலறை ஜன்னலில் காக்காய்க்கு சாதம் வைக்கிறேனா! காக்காயைத் தவிர எல்லாமும் வந்து சாப்பிடுதுங்க! படம் எடுக்க என்னதான் சத்தம் செய்யாமல் வந்தாலும் எப்படியோ தெரிஞ்சுக்குது! பார்க்கலாம், இன்னும் கொஞ்ச நாட்கள் இருக்கப் போறோமே~!

  ReplyDelete
 26. ம்ம்ம்ம் பத்து நாளா கர்ர்ர்ர்ர்ர் சத்தமே இல்லாம இணையம் இணையமாவே இல்லை!
  :-P ;P//ஹிஹிஹிஹி, நன்னி ஹை!

  ReplyDelete
 27. அது சரி, என்ன பின்னூட்டம் மழையாக் கொட்டுது! ஆச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சரியமா இருக்கே!

  ReplyDelete
 28. மாமி
  புது வீடு குடி பெயர்ந்ததற்கு உங்களுக்கும் மாமாவிற்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 29. இதுவும் ஒரு புது அனுபவம்தான்..இல்லையா கீதாம்மா

  ReplyDelete
 30. ஓஹோ.. நீங்களும் சாம வேத சம்பிரதாயமோ?..

  இந்தப் பதிவு படிச்சு மனசுக்கு கொஞ்சம் திருப்தியாச்சு. இதையே சில மாதங்கள் கழித்து நீங்க படிக்கறச்சே, புன்முறுவலோட படிக்கலாம். வாழ்க்கைன்னா இதான்.

  பழக்கம் தான் காரணம்.போகப் போக இந்த இடமும் பழக்கமாயிடுத்துன்னா,
  எல்லா இடமும் ஓ.கே.தான்.

  வாவ்! அணில்கள், மைனாக்கள், தவிட்டு குருவிகள், தேன்சிட்டுகள்..
  பாருங்கள்! கவிதை எழுதப் போகிறீர்கள், பாருங்கள்!

  ReplyDelete
 31. படிக்க சுவார்சியமாதான் இருக்கு. அனுபவிச்சவங்களுக்குத்தானே சிரமம்
  டென்ஷன் புரியும் இல்லியா?

  ReplyDelete
 32. மிக்க மகிழ்ச்சி. இங்கு நீங்கள் இருவரும் நிம்மதியாய் இருக்க இறையவன் வகை செய்வான்.

  ReplyDelete
 33. நல்லபடியா கிரஹப் பிரவேசம் முடிந்தது கீதா.
  இனிமே எல்லாம் நல்ல படியா நடக்கட்டும். சாமான்கள் வீணாப் போனதுதான் வருத்தமா இருக்கு.
  பிள்ளையார் படு ஜோர். சந்தோஷமாவே இருக்கார்,.

  ReplyDelete
 34. மாமி
  புது வீடு எல்லா வளத்தையும் கொடுக்கட்டும். இவ்வளவு கஷ்டத்திலும் விசேஷங்களைக் கொண்டாட முடிந்ததே. அந்த அளவில் சந்தோஷம்.

  ReplyDelete
 35. அடடே....புதுவீட்டுக்குப் போயாச்சா? எல்லா நலன்களோடும் மகிழ்ச்சியும் நிம்மதியுமா இருக்க வாழ்த்துகின்றேன்.

  பூனாவில் இருந்தப்ப கறிகாய் எல்லாம் கயிற்றுலே கட்டிவிட்ட பையில் தான் மேலே வரும். வண்டிக்காரர் குரல் கொடுத்தவுடனே பையில் லிஸ்ட் வச்சு அனுப்புவேன்:-)


  அணிலும் குருவியுமா பொழுது ஜோராப்போகுதா!!!!!

  ஆமாம்...சுப்புக் குட்டிக்கு மாடி ஏற முடியுமோ???????

  ReplyDelete
 36. புது வீடும் அதே 'ஹார்ட் ஆஃப் தி சிட்டி' அம்பத்தூர்ல தான் இருக்கா..? :))

  ReplyDelete
 37. ம்..பிள்ளையார் நல்லபடி வந்தாரா? அது சரி பின்னால என்ன மைக்ரோவேவா? குட்டி பிள்ளையாரோட contemporary energy store house ஆமா:))))

  ReplyDelete
 38. கண்ணீரைத் தடுக்க முடியலை! வீடு கட்டியதும் ஏழு வருடங்கள் இருந்தோம். அப்புறம் எட்டு அல்லது பத்துவருடங்கள் வெளிமாநிலங்கள் வாசம் முடிந்து கிட்டத்தட்டப் பதினைந்து வருடம் தொடர்ந்து இருக்கிறோம் இல்லையா? செண்டிமெண்டல் அட்டாச்மெண்ட்! :(((((
  it is high time to develop total detachment towards any attachments


  ennatta ithu vanthaalum thittarenka varalinnalum thitareenka giirrrrrrrrru

  ReplyDelete
 39. ராம்ஜி யாஹூ, வாழ்த்துக்கு நன்றிங்க.

  ReplyDelete
 40. அமைதி, ஆமாம், என்ன வேடிக்கைன்னா இதுவரையில் தனி வீடுகளிலேயே வாசம் செய்தோம். வாடகைக்குடி இருந்தப்போக் கூட தனி வீடுதான். இப்போத் தான் என்னோட கல்யாண வாழ்க்கையிலே முதல்முறையா மாடியிலே குடித்தனம். :))))))

  ReplyDelete
 41. வாங்க ஜீவி சார், ஒரு நாள் மழையிலே வந்த தண்ணீர் எத்தனை பேரை என் பதிவுக்கு இழுத்து வந்திருக்கிறது! நன்றி சார்.


  வாவ்! அணில்கள், மைனாக்கள், தவிட்டு குருவிகள், தேன்சிட்டுகள்..
  பாருங்கள்! கவிதை எழுதப் போகிறீர்கள், பாருங்கள்!//

  கவிதை எழுதறேனோ இல்லையோ, தெரியாது, தினமும் அதுங்க கூடப் பேசிண்டே தான் சமையல். சமையலறை மேடைக்கு மேலே இருக்கும் ஜன்னலில் வந்து உட்கார்ந்து கொண்டு பேசிக்கொண்டே இருக்குங்க. :))))))

  ReplyDelete
 42. வாங்க லக்ஷ்மி, இந்த மட்டும் இதோடு விட்டதேனு நினைக்கணும். அப்போ டென்ஷன் இருக்காது; இல்லையா??

  ReplyDelete
 43. வாங்க அஷ்வின் ஜி, இதுவே இறைவன் செய்த நன்மைதானே!

  ReplyDelete
 44. வாங்க வல்லி, பெருமளவில் விலை உயர்ந்த பொருட்கள் எதுவும் வீணாகவில்லை என்றே சொல்லணும். என்ன? நல்ல நல்ல பொம்மைகள் வீணாகிவிட்டன. ஒரு அரை கிலோ வடாம் போச்சு! இதோடு விட்டது அல்லவா! அதற்கே நன்றி சொல்லணும்.

  ReplyDelete
 45. ஸ்ரீநி, அது, அது, அதேதான், எங்களுக்கும் சந்தோஷம் கொடுத்தது. பிள்ளையார் சதுர்த்திக்குள்ளாக வீட்டை மாற்றவேண்டும் என்று குறியாக இருந்து இரண்டே நாட்களில் வந்துவிட்டோம். இந்த வாரம் வரை பொறுத்திருந்தோமென்றால் சாமான்களை ஏற்றிச் செல்ல எந்த டிரக்கும் வந்திருக்காது. இன்னிக்குச் சொந்த வீட்டிற்குப் போய்ப் பார்த்தால் சாலை அவ்வளவு மோசமாக இருக்கிறது. ஜல்லி ஏற்றி வந்த லாரி ஒன்று மாட்டிக்கொண்டு தெருவெல்லாம் ஜல்லி கொட்டி, ஒரு பக்கம் மணல், ஒரு பக்கம் தோண்டிய பள்ளம் அடைக்காமல் கிடக்க, இன்னொரு பக்கம் ஜல்லி கொட்டிக்கிடக்க, தெருவில் முக்கில் இறங்கி நடந்து போவதே கஷ்டமாய் இருந்தது! காமிரா எடுத்துச் செல்லவில்லை. மிச்சம் சாமான்களைக் கொண்டு வரணும்னு காமிரா சரிப்பட்டு வராதுனு வீட்டிலேயே வைச்சுட்டுப் போனேன். கடைசியில் தூக்க முடியாதுனு சாமானும் எடுத்து வர முடியலை! ஆட்டோவும் வர முடியலை! :((((((

  ReplyDelete
 46. வாங்க துளசி, மழை வெள்ளம் உங்களையும் அழைத்து வந்துவிட்டது. மதுரையிலே கல்யாணத்துக்கு முன்னாடி இருக்கையிலே மாடி போர்ஷனில் இருந்த நாங்க இப்படித் தான் கம்பில் கயிறு கட்டிக் கீழே இருந்து சாமான்களை, புத்தகங்களை வாங்குவோம். :))))))

  ReplyDelete
 47. துளசி, சுப்புக்குட்டி கீழே தோட்டத்திலே இருக்கார். மேலே வரது கஷ்டம்னு நினைக்கிறேன். பச்சைக்கலர்க்காரர் வந்தால் உண்டு. ஆனால் விதம் விதமாய் மரவட்டைகள், பூரான்கள்னு அதுக்குக் குறைச்சல் இல்லை. எறும்பார் படை, படையாகக் குடித்தனம். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னோட லட்டுவில் இருந்த மு.ப.வைக் கடத்திட்டார் எறும்பார். :(((( மு.ப. இல்லாத லட்டுவும் ஒரு லட்டா???

  ReplyDelete
 48. வாங்க அம்பி, வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 49. வாங்க ஜெய்ஸ்ரீ, மைக்ரோவேவ் தான். இந்த வீட்டுச் சமையலறை எங்க வீட்டுச் சமையலறையை விடப் பத்தில் ஒரு பங்கு தான் இருக்கும். நான் மட்டும் சமைக்கலாம். :))))) இதை, இண்டக்ஷன் ஸ்டவ் போன்றவை வைக்க இடம் இல்லை! அதோடு அங்கே சொந்த வீடு அதனால் இஷ்டத்துக்கு எலக்ட்ரானிக் பயன்பாடு இருந்தது. இங்கே கொஞ்சம் யோசிக்கணும் இல்லையா??? குறிப்பிட்ட யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் செலவு செய்தால் வீட்டுக்காரருக்கு டெபாசிட் பணம் அதிகம் கட்டும்படி ஆகும். எல்லாத்தையும் யோசிக்க வேண்டி இருக்கு. அவங்க நல்ல எண்ணத்தோடு கேட்டதுமே உதவியதற்கு நாம் சில செளகரியங்கள் இல்லாமல் பழகிக்கொள்ளலாம் இல்லையா? ஏ.சி.யும் போட்டுக்கலை. யோசிக்கணும்! :))))))

  ReplyDelete
 50. திராச சார், பற்றை விட்டதால் தான் அங்கிருந்து கிளம்பவே முடிந்தது; :P என்ன! அந்த வீடு கட்டப் பட்ட கஷ்டங்கள் எல்லாம் கண் முன்னே திரைப்படமாக வந்தது. "ராஜத்தின் மனோரதம்" மாதிரிப் பத்துப் புத்தகம் எழுதலாமாக்கும்! :))))))

  ReplyDelete