அரணை புத்தியா, வழக்கம் போல் மறந்துட்டேன். அப்புறமா அடுப்பை அணைச்சு வைச்சுட்டுக் காமிராவை எடுக்க மனமில்லாமல், (கையெல்லாம் ஈரம், எண்ணெய்) கைபேசியை எடுத்து வந்தேன். அதிலே தான் எடுத்தேன். இன்னிக்கு சூரியனார் அரை நாள் லீவு போட்டிருந்ததால் குழம்பு வைக்கிறச்சே சமையலறையில் வெளிச்சம் இல்லை. விளக்கைப்போட்டால் சரியா இல்லை. இப்போவும் சூரியனார் எட்டிப் பார்த்துக் கொண்டு வெளியே தான் நிற்கிறார்.
கடுகு, வெந்தயம், ப.மி.கருகப்பிலை, மி.வ. பெருங்காயம் தாளித்துக் கொண்டு கத்திரி வெண்டை, குடைமிளகாய் போட்டு வதக்கி இருக்கேன். :)
புளி ஜலம் விட்டு உப்பு, சாம்பார்ப் பொடி (ஹிஹி, நான் பண்ணறது ரசப்பொடிதான்) போட்டுக் கொதிக்கையில் எடுத்த படம். தான்கள் முழுசாகத் தெரியுது பாருங்க ஶ்ரீராம். குழம்பிலும் காய்கள் குழைந்து மாவாக எல்லாம் ஆகாது.
மொக்கைப் பதிவுன்னா எல்லோரும் ஓடோடி வராங்கப்பா! :)))) நேத்திக்கு ஹிட் லிஸ்ட் எகிறி இருக்கு!
சூரியனார் அரைநாள் லீவா? இங்கே ஓவர்டைமில் சுட்ட்ட்ட்ட்ட்ட்டு எரிக்கிறார்.
ReplyDeleteவெண்டையோட கத்தரியா? என்ன காம்பினேஷன் இது!
கொதிக்கும்போது தான் லாம் முழுசாத்தான் இருக்கு! இறக்கி வச்சு 5 நிமிஷத்துல கொழ கொழன்னு ஆயிடுது!
சாப்பிடும்போதும் என்னை நினைத்துக் கொண்டே சாப்பிடவும். மணி ஒன்று. நான் சாப்பிடும் நேரம்! நான் இங்கே பாகற்காய் பிட்லேயும், முருங்கைக் கீரை தேங்காய்த் துவட்டலும் சாப்பிடப் போறேன். எங்க பாஸ் பிட்லே எக்ஸ்பர்ட்டாக்கும்! :)))
உங்களைப் பத்திப்பேசிக் கொண்டே தான் சாப்பிட்டோம். :))
ReplyDeleteபிட்லை எல்லாம் சூடாகச் சாப்பிடுவதின் ருசியே தனி! :))))
தான் இன்னமும் முழுசாத் தான் இருக்கு. மிச்சக் குழம்பைச் சின்னக் கிண்ணத்தில் விட்டு வைச்சிருக்கேன். அப்புறமாப் படம் எடுக்கிறேன். முள்ளங்கி எல்லாம் வேக வைத்துச் செர்த்தாலும் தனித்தனியாகவே இருக்கும். நீங்க கூட வேக வைக்கிறீங்களோ என்னமோ! :)
வெண்டை, கத்திரி, குடைமிளகாய் சூப்பர் காம்பினேஷன். ஒரு முறை பண்ணிப் பாருங்க. :)))
ReplyDeleteமூணையும் போட்டுச் சப்பாத்திக்குத் தொட்டுக்கக் கூடக் கறி பண்ணலாம். வெங்காயம் சாப்பிடாத நாட்களில் சப்பாத்தி பண்ணினால் வெண்டைக்காய், குடைமிளகாய், தக்காளி போட்டோ அல்லது வெண்டை, கத்திரி, குடைமிளகாய், தக்காளி போட்டோ பண்ணுவேன். :))))
சூரியனார் இப்போ வந்துட்டார். மதியம் சாப்பிட்டுட்டு இருந்திருக்கார் போல! முடிச்சுட்டு வந்துட்டார். :)
ReplyDeleteசரியான சப்பாட்டு ராமி! ;p;p;p;p
ReplyDeleteவா.தி. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ReplyDeleteஎன்னடா சூரியனார் லீவிலே இருக்காரேனு நினைச்சேன். நீங்க என்னோட பதிவுக்கு வந்து படிச்சுப் பின்னூட்டம்போட்டது தான் காரணம்னு இப்போப் புரியுது! :P :P :P :P
ReplyDeleteபடங்களைப் பார்த்தால் என்ன என்னவோ தெரிகிறமாதிரி இருக்கு. சமையலுக்கென தனி வலைத்தளம் வைத்திருக்கிறேன் நான் எழுதி நாளாகிவிட்டது. வத்தல் குழம்பு...?
ஆகாது என்று சொல்வது ஆகும் என்று நினைக்கிறேன்... (ஹிஹி)
ReplyDeleteஎன்னதிது.. அவ்வளவு தான் பதிவா? மிச்ச ரெசிபி என்கே?
ReplyDeleteவாங்க ஜிஎம்பி சார், இது வத்தக் குழம்பு இல்லை. வற்றல்கள் போட்டால் தான் நாங்க வத்தக்குழம்புனு சொல்வோம். சிலர் குழம்பை ரொம்பநேரம் வற்றிப் போகும்படி கொதிக்கவிட்டால் தான் வத்தக்குழம்புனு சொல்றாங்க. அப்படி இல்லை! :)
ReplyDeleteஇது பருப்புச் சேர்த்த குழம்பு. வத்த சாம்பார்னு சொல்லிக்கலாம். :)
டிடி, அதெல்லாம் ஆகாது. நான் காரன்டி! :)
ReplyDeleteடிடி, அதெல்லாம் ஆகாது. நான் காரன்டி! :)
ReplyDeleteவாங்க அப்பாதுரை, பதிவே இம்புட்டுத் தான். விளக்கம் தனியா சாப்பிடலாம் வாங்க பதிவிலே கொடுக்கிறேன். :)
ReplyDeleteஸ்ரீராமுக்கா! எனக்கு?
ReplyDeleteசின்னப் பதிவூ!!.. ஆனாலும் நல்லாருக்கு!.. செஞ்சு பாக்கறேன்!
ReplyDeleteகேஜிஜி, உங்களுக்குக் கிடையாது! :))))))
ReplyDeleteவாங்க பார்வதி, நன்றி.
ReplyDeleteஶ்ரீராம், நேத்து அரைநாள் லீவு எடுத்த சூரியனார் இன்னிக்கு ஓவர்டைம்! :(
ReplyDeleteசென்னை வெப்பம் வெறுப்பேற்றுகிறது. ஒரு வேலை செய்ய முடியவில்லை!
ReplyDeleteஓடியே போயிட்டார் சூரியனார்! :) காத்துத் தான் வீடெல்லாம் புழுதி, மண், பெருக்கி மாளலை! :)
ReplyDeleteவத்தப் பருப்புக் குழம்பு... :))))
ReplyDeleteசூரியனார் இங்கே வழக்கத்தை விட மாறாக அதிகம் வேலை செய்கிறார்!
வத்தப்பருப்பு குழம்பு நன்றாக இருக்கு.
ReplyDelete