எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, June 08, 2014

உங்கள் ஓட் வெண்கலப்பானைக்கே!

இப்படியாகத் தானே தினம் தினம் குக்கரோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கையில் ஒரு நாள் மாலை அலுவலகத்திலிருந்து சீக்கிரமே வந்தேன்.  அப்போது தான் மண்ணெண்ணெய்க்கு ரேஷன் அறிமுகம் செய்தார்கள்.  இனி மண்ணெண்ணெய் ரேஷனில் தான் கொடுக்கப்படும் எனவும், ஒரு குடும்பத்திற்குப் பத்து லிட்டரிலிருந்து 20 லிட்டருக்குள் தான் கிடைக்கும் எனவும் பத்திரிகைச் செய்திகள் கூறின.  அதற்கு 2 நாட்கள் முன்னர் தான் நான் 20 லிட்டர் மண்ணெண்ணெய் வாசலில் விற்றவரிடம் வாங்கி வைத்திருந்தேன்.  ஆகையால் ரேஷன் கார்ட் வாங்கிப் பதியும் வரை கவலை இல்லை என அலுவலகத்தில் எல்லோரிடமும் பெருமை அடிச்சுண்டு இருந்தேன்.

இங்கே வீட்டுக்கு வந்தால் சமையலறை மேடையிலிருந்த ஸ்டவ் அடுப்புகள் கீழே இறக்கப்பட்டிருந்தன. ஒரு ஓரமாகப் பாவமாக இருந்த குமுட்டிக்கும் பெப்பே!  அங்கே பச்சைக்கலரில் ஒரு நீளமான இரும்பு அடுப்பு இருந்தது. மேடைக்குக் கீழே சிவப்புக்கலரில் ஒரு சிலிண்டரும் இருந்தது.   முதல் முதல் காஸ் அடுப்பும், சிலின்டரும் வந்தபோது எங்களுக்கு தலை தீபாவளி முடிந்து கொஞ்ச நாட்களே ஆகி இருந்தது.  தீபாவளிக்கு மதுரைக்குப் போனப்போவே எங்க அப்பாவிடம் ரங்க்ஸ் தான் காஸ் அடுப்பும், காஸ் கனெக்‌ஷனும் வாங்கப்போவதாய்க் கூறி இருந்தாரா!  அன்னிலே இருந்து எங்க அப்பா ஒவ்வொரு முறை கடிதம் எழுதும் போதும், காஸ் அடுப்பு வாங்காதே! சிலிண்டர் வெடிச்சுடும்.  அதைப் பத்த வைக்கிறது கஷ்டம்.  காஸ் தீர்ந்து போச்சுன்னா திரும்ப சிலிண்டர் வர நாளாகுமாம்.  இங்கே எல்லாம் விசாரிச்சுட்டேன்.  அது வேண்டவே வேண்டாம்னு சொல்றாங்கனு எல்லாம் எழுதிட்டுத் தனியாக  நம்ம ரங்க்ஸுக்கு, "குழந்தையை காஸ் அடுப்பு கிட்டே விடாதீங்க!  அவளுக்கு அதெல்லாம் பழக்கம் இல்லை.  புடைவையில் எங்காவது பிடிச்சுக்கும்." என்றெல்லாம் எழுதுவார்.  ஹிஹிஹி, குழந்தை மீன்ஸ் மீ ஒன்லி!  :)))


எல்லோருக்கும் பெப்பே சொல்லிட்டு நம்ம ரங்க்ஸ் நினைச்சதைச் சாதிச்சார்.  நவம்பர் மாதம் 12, 14 தேதிக்குள்ளாக காஸ் கனெக்‌ஷன் வந்தது,  அப்போல்லாம் முன் பதிவு அவசியம்.  ஆனாலும் ஒரே மாசத்துக்குள்ளாக எங்களுக்குக் கிடைச்சது.  அடுப்போட பெயர் ப்ளூ ஃப்ளேம்.  காஸ்ட் அயர்ன் (cast iron) அடுப்பு.  நாங்க வாங்கறதுக்குக் கொஞ்சம் முன்னாலே தான் சித்தி வீட்டில் தி.நகரில் காஸ் வந்திருந்தது.  அப்போ அங்கே கொஞ்சம் பயன்படுத்திப் பார்த்ததில் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது ஓரளவுக்குத் தெரியும்.    அடுப்பு 110  ரூ, கன்ஸ்யூமர் சிலிண்டர் டெபாசிட்  50ரூ  காஸ் என்னோட நினைவில் 16 ரூபாயோ, 19 ரூபாயோ தான்.  ஆனால் ரங்க்ஸ் 22 ரூபாய்னு சொல்றார். மொத்தமே 200 ரூக்குள் தான் ஆச்சு!  எங்க அப்பாவுக்குத் தெரிஞ்சதும் அந்தப் பணத்தில் ஒரு பவுன் வாங்கி இருக்கலாமே என வருத்தப்பட்டார். :))))காஸ் வந்ததும் உண்மையிலேயே சமையல் சீக்கிரமா ஆனதோட இல்லாமல் பாத்திரங்களும் தேய்க்க வசதியா இருந்தது.  பின்னாடி மதுரை போனப்போக் குமுட்டி சமையல் தேவாமிர்தமா இருந்தது என்னமோ உண்மை. இந்த காஸ் அடுப்பும், குக்கரும் கல்யாணம் ஆகிப் பதினைந்து வருஷங்களுக்கும் மேல் வந்தது.  பார்க்கப் போனால் ப்ளூ ஃப்ளேம் அடுப்பு இன்னமும் இருக்கு. பெயின்ட் எல்லாம் அடிச்சு அம்பத்தூர் வீட்டில் பத்திரமா வைச்சிருக்கோம். வீடு கட்டிக் கிரஹப் ப்ரவேசம் பண்ணின 83 ஆம் வருஷம் நம்ம ரங்க்ஸும் பையரும் சபரிமலைக்குக் கிளம்ப மாலை போட்டுக் கொண்டாங்க. பையருக்குப் பிரார்த்தனை இருந்தது.  துணைக்கு ரங்க்ஸ்.  ஆகவே காலம்பர சீக்கிரமாவே சாப்பிட்டுடுவாங்க.  ஒரு லீவு நாள் அன்னிக்கு ஞாயிற்றுக் கிழமைனு நினைக்கிறேன்.  சாயந்திரம் அவங்க சாப்பிட சுண்டலுக்கு ஊற வைச்சிருந்தேன்.  காலை சமையல் ஆகி மாமனார், ரங்க்ஸ், பையர், பொண்ணு எல்லாரும் உட்கார்ந்து சாப்பிட்டுட்டு இருந்தாங்க.  அப்போ டேபிள், சேரெல்லாம் கிடையாது.  கீழே தரையில் உட்கார்ந்து தான் சாப்பிடறதெல்லாம்.

நான் பரிமாறிட்டு இருந்தேன். பையரும், ரங்க்ஸும் சாப்பிட்டு எழுந்துட்டாங்க. மாமனார் மோர் சாதம் சாப்பிட்டுட்டு இருந்தார்.  பெண்ணரசிக்கு அரிசிச் சாதம்னாலே அலர்ஜி!  மெதுவாக் கொறிச்சுட்டு இருந்தா.  சாம்பார் முடிச்சு, ரசம் வேண்டாம். மோர் தான்னு பிடிவாதம் பிடிச்சுட்டு இருந்தா.   நானும், என் மாமியாரும் சாப்பிடறதுக்காக இன்னொரு சாதம் குக்கரில் வைச்சுட்டு இருந்தேன்.  குக்கரை மூடிட்டு பொண்ணுக்கு சாதம் போடுவதற்காகப் பக்கத்தில் இருந்த பாத்திரத்தில் இருந்து சாதத்தை எடுத்தேன்.  அவளுக்குப் போட நான் திரும்புவதற்குள் எங்கோ பக்கத்தில் பெரிய வெடி சப்தம் கேட்டது. என்னையறியாமல் அடுப்பைத் திரும்பிப் பார்த்தால் அடுப்பில் வைச்ச குக்கர் எங்கே?  காணோமே, காக்கா உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்!

22 comments:

 1. ஆஹா இங்கேயும் குக்கர் ஜாலமா. நல்ல வேளை யாரும் பக்கத்தில இல்லை. தம்பி வீட்டில் குக்கர் மேடையிலிருந்து கீழே குதிதுவிட்டது. கீழே காய்கறி நறுக்கிக் கொண்டிருந்த தம்பி மனைவி தப்பினாள். என்ன் இங்கே சாதம் செய்யறேன் பேர்வழின்னு ,காஸ்கெட் தீயும் வாசனை வரும் அளவுக்குக் காஸ் நெருப்பை ஹை யில் வைத்துவிட்டேன். அலார்ம் அடிக்காமல் போச்சு. என்ன ஆச்சு என்பதைச் சீக்க்கிரம் எழுதவும்.

  ReplyDelete
 2. எங்கள் வீட்டிலும் கேஸ் வாங்க நினைத்தபோது இப்படி பயமுறுத்தியே காலம் தாழ்த்தி விட்டார்கள். என் நண்பர்களுடன் சேர்ந்து நானும் பதிவு செய்திருந்தது கனெக்ஷன் வந்தாச்சு, 60 ரூபாய் (என்று ஞாபகம்) கட்டுங்கள் என்று தல்லாக்குளத்தில் இருந்த இன்டேன் ஏஜென்சியில் சொன்னார்கள். அப்பா பணம் தர மாட்டேன் விபரீத வேலை செய்திருக்கிறாய் என்று திட்டி விட்டார். அப்புறம் ரொம்பநாள் கழிச்சு அருமை தெரிந்து வாங்கப் பட்டபாடு......


  ஹிஹிஹி..... குக்கர் சேஃப்டி வால்வ் வெடித்த அனுபவம் எங்களுக்கும் உண்டு!

  ReplyDelete
 3. குக்கர் வெடிச்சு பறந்துருச்சோ! ஹாஹாஹா!

  ReplyDelete
 4. ஹிஹி பறந்துருச்சா

  ReplyDelete
 5. ஒரு முறை என் நாத்தனார் வீட்டில் குக்கர் மூடி பறந்தது சீலிங்கில் அடித்து ஒரே அமர்க்களம்.

  இன்னொருதரம் ப்ரஷர் பானே பறந்ததாம்.

  எங்க வீட்டில் ஒரு முறை பாசிப்பருப்பு வைத்து குக்கர் வெயிட் பறந்து சீலிங் பூரா பருப்பு. காஸை அணைச்சுட்டு ஒரே ஓட்டமா ஓடிட்டேன். :)

  ReplyDelete

 6. எந்த விஷயத்துக்கும் முதலில் ஏகப்பட்ட எதிர்ப்புகள் இருக்கும். கணினி வந்தபோது அதற்கு இல்லாத எதிர்ப்பா.?சேஃப்டி வால்வ் பழுதானால் வெயிட்தான் முதல் பல்யாகும் . இண்டெரெஸ்டிங் நரேஷன். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. இப்பெல்லாம் அவ்வளவாக வெடிப்பதில்லை.

  ReplyDelete
 8. வெங்கலமா, வெண்கலமா என்கிற சொல்லாராய்ச்சியைத் தாண்டி,
  இப்போ பைப்-லைன் காஸெல்லாம் சகஜமாயிடுச்சே!

  எத்தனை சிலிண்டர்-- பத்தா, எட்டா
  என்கிற கவலையெல்லாம் மறந்து போய் எதிர்காலத்தில் மீட்டர் பார்த்து
  காசோ, செக்கோ, இல்லை, ஆன்-லைன் பேமெண்ட்டோ செய்து...

  ReplyDelete
 9. வாங்க வல்லி, குக்கர் ஜாலமெல்லாம் ப்ரெஸ்டிஜ் பிராண்டிலே தான். ஹாக்கின்ஸ், பீஜியன், ப்ரிமியர் போன்றவற்றில் பார்க்க முடியலை! :)

  ReplyDelete
 10. வாங்க ஶ்ரீராம், இப்படி நிறையப் பேர் தப்பு செய்திருக்காங்க. சேஃப்டி வால்வ் எங்கே வெடிச்சது! ஹிஹிஹி குக்கரே வெடிச்சது! :P :P

  ReplyDelete
 11. ஹாஹாஹா, சுரேஷ், ஆமாம்.

  ReplyDelete
 12. எல்கே, அபூர்வ வரவுக்கு நன்னி ஹை!

  யெஸ்ஸ்ஸூ

  ReplyDelete
 13. டிடி, இதெல்லாம் ஜுஜுபி! :)

  ReplyDelete
 14. வாங்க தேனம்மை, எனக்குத் தெரிஞ்சு முதல் வரவு. வருகைக்கு நன்றி.

  அப்புறமா எனக்கும் பழகிப் போச்சு! :)

  ReplyDelete
 15. வாங்க ஜிஎம்பி சார், சேஃப்டி வால்வ் அப்போத் தான் மாத்தி இருந்தோம். :)))

  ReplyDelete
 16. வடுவூரார் வரவுக்கு நன்னி. இப்போல்லாம் பல பிரான்ட்கள் வந்துவிட்டன என்பதால் ப்ரெஸ்டிஜ் குக்கர் அதிகம் மார்க்கெட்டில் விலை போயிருக்காது. எனக்குத் தெரிஞ்சு வெடிச்ச குக்கரெல்லாம் ப்ரெஸ்டிஜ் தான். :(

  ReplyDelete
 17. ஜீவி சார், பைப் லைன் காஸெல்லாம் சென்னையிலே கூட வந்ததாக எனக்குத் தெரியலை. இங்கே ஶ்ரீரங்கத்திலே ஒரே ஒரு அபார்ட்மென்ட் காம்ப்ளெக்ஸில் கொடுக்கிறாங்க. சூரத்தில் எஸ்ஸார் குடியிருப்பு வளாகத்தில் பைப்லைன் காஸ் தான். மும்பையிலும் பைப்லைன்.

  ReplyDelete
 18. நம்ம ஊருக்கெல்லாம் வந்தால் அது எவ்வளவு தூரம் பாதுகாப்பானதாய் இருக்கும் என்பதே கேள்விக்குறி தான். எத்தனையோ குழந்தைகள் இறந்து போயும் இன்னமும் போர்வெல்லுக்குத் தோண்டும் பள்ளத்தைக் கூட மூடாதவங்க நாம. இந்த அழகிலே பைப்லைன் காஸ் வந்தால் அவ்வளவு தான்! :(

  ReplyDelete
 19. ஆன்லைன் பேமென்ட்டெல்லாம் நாங்க இது வரை வைச்சுக்கலை. பிடுங்கல்! :)))

  போன வருஷம் எங்க வீட்டிலே சிலின்டர் தீர்ந்து போய் வேறு மாற்றும்போது காஸ் கசிவு இருக்குனு கண்டுபிடிச்சுட்டு காஸ் கம்பெனி ஏஜென்டுக்குத் தொலைபேசினால் இன்னிக்கு லீவு யாரும் வரமாட்டாங்கனு சொல்றார். :(

  இன்டேனின் தொலைபேசி எண்ணைக் கண்டு பிடிச்சுக் கூப்பிட்டால் மறுநாள் தான் அனுப்புவோம்னு சொல்றாங்க. அதுக்கப்புறமா எங்களுக்கு சிலின்டர் கொண்டு போடும் பையரோட தொலைபேசி எண் எங்க கிட்டே இருந்ததாலே அவரைக் கூப்பிட்டோம். அவர் வந்து பார்த்துட்டு சிலிண்டர் தான் சரியில்லைனு சொல்லிட்டு மாத்தித் தரதாகச் சொல்லிட்டு மறுநாள் மாத்திக் கொடுத்தார். அது வரை வேறொரு ரூமில் இன்டக்‌ஷன் ஸ்டவ்வை வைச்சுச் சமைச்சேன். :(

  ReplyDelete
 20. "கோபத்திலே நீ சாதத்தைத் தட்டில் போடறதுக்கு பதிலா தலையிலே போட்டியோனு நினைச்சுட்டேன்!" என்றாளே பார்க்கலாம்
  Ha ha ha!!!

  ReplyDelete
 21. தில்லியில் இப்போதெல்லாம் பல இடங்களில் பைப் லைன் காஸ் தான்.....

  குக்கர் வெடித்ததா... பிறகு என்னவாயிற்று....

  என் பக்கத்தில் ஒரு முறை இந்த மாதிரி குகக்ர் வெடித்தது பற்றி எழுதி இருக்கிறேன்....

  http://venkatnagaraj.blogspot.com/2010/06/blog-post_21.html

  ReplyDelete