பாஸ் பண்ணிடுவேன்னு நினைச்சேன். ஆனால் இப்படி ஒரு ரிசல்டை எதிர்பார்க்கவே இல்லை. அதிர்ச்சி, அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி. என்னோட நம்பர் முதல் வகுப்பில் இருந்தது. எடுத்த உடனேயே இரண்டாம் வகுப்பில் நம்பரைப்பார்த்துத் தேடிக் கிடைக்காமல் மூன்றாம் வகுப்பில் பார்க்கலாமா என யோசிக்கையில் கூட வந்த தம்பி முதல் வகுப்பில் என் நம்பரைப் பார்த்துட்டு, "அக்கா, இதோ இங்கே இருக்கு பார்!" என்று சொல்ல ஆச்சரியத்தில் நான் மயங்கி விழாத குறைதான். அதற்குள் சபாவில் இருக்கும் பெண்மணி விஷயத்தைப் புரிந்து கொண்டு மார்க் லிஸ்டையும் எடுத்துக் கொடுத்தார்.
முதல் ஐந்து பேர்களுக்குள்ளாக என் பெயரும் நம்பரும் வந்திருந்தது. மதிப்பெண்களும் 75 க்கும் மேலே. உடனே போய் வீட்டில் சொல்லிட்டு ஹிந்தி வகுப்புக்கும் போனேன். அங்கே போனால் லக்ஷ்மிஜி என்னைப் பார்த்துட்டுக் கண்டுக்கவே இல்லை. சிறிது நேரத்துக்கெல்லாம் வந்த கமலாஜி என்னைப் பார்த்துக் கிண்டலாகச் சிரித்துக் கொண்டே போக ஒண்ணுமே புரியலை. அதுக்குள்ளே என்னோட சிநேகிதி வந்து, என் பக்கம் உட்கார்ந்து சபாவிலே போய் ரிசல்டைப் பார்த்தியானு கேட்க, முதல் வகுப்பில் பாஸாகி இருக்கும் விஷயத்தை நானும் சொன்னேன். உடனேயே என்னை லக்ஷ்மிஜியிடம் விஷயத்தைச் சொல்லும்படி சொன்னாள். ஏன், அவங்களும் பார்த்திருப்பாங்களேனு நான் மறுக்க, அவளோ கட்டாயப்படுத்தினாள்.
தொந்திரவு பொறுக்க முடியாமல் நான் எழுந்து முதல் வகுப்பில் நான் பாஸாகி இருக்கும் விஷயத்தையும், மதிப்பெண்களையும் சொல்லிட்டு லக்ஷ்மிஜிக்கு ஏற்கெனவே தெரிஞ்சிருக்கும் என்றும் கூறினேன். லக்ஷ்மிஜிக்குத் தூக்கிவாரிப்போட்டது. நிஜமாவானு கேட்டவங்க, "நீ ஃபெயில் ஆகிட்டேனு சொன்னாங்களே! அதான் உன்னைப் பார்த்ததும் என்ன சொல்றது, என்ன பேசறதுனு தெரியாம முழிச்சுட்டு இருந்தேன்னு சொல்ல, கமலாஜியோ, "நான் இதை நம்ப மாட்டேன். இவ பொய் சொல்றா!"னு சொல்லிட்டாங்க. நேத்து ரிசல்ட் பார்த்து வந்த பெண்ணைக் கூப்பிட்டுக் கேட்டதுக்கு அவ முதல் வகுப்பிலே யார் நம்பரையும் தேடலை என்றும் இரண்டாம், மூன்றாம் வகுப்பிலே மட்டும் பார்த்துட்டு வந்துட்டதாயும் சொன்னாள். பின்னர் கமலாஜியும், அந்தப் பெண்ணும் மறுபடி சபாவுக்குப் போனாங்க. தானப்ப முதலி அக்ரஹாரத்திலே இருந்து சபா கிட்டத்தான்.
அவங்க ரெண்டு பேரும் போய்ப் பார்த்ததிலே யாரை எல்லாம் ஃபெயில்னு அந்தப் பொண்ணு பார்த்திருந்தாளோ அத்தனை பேரும் பாஸாகி இருந்ததோடு ப்ராத்மிக் பெண்கள் மூவர் முதல் வகுப்பிலும் பாஸாகி இருந்தனர். பின்னர் மார்க் லிஸ்டையும் பார்த்துச் சரிபார்த்து உறுதி செய்து கொண்டனர். ஆனாலும் கமலாஜிக்கு என் மேல் இருந்த கோபம் முழுசும் போனதாகத் தெரியலை. ஏன்னா ராஷ்ட்ரபாஷா முடிக்கிறதுக்குள்ளே எனக்குக் கல்யாணம் நிச்சயமாகி ராஷ்ட்ரபாஷா பரிக்ஷை எழுதின மூன்றே மாதங்களில் கல்யாணமும் ஆனதாலே ஹிந்தியை மேலே தொடரவில்லை. அதிலே அவங்களுக்குக் கோபம். :) இதெல்லாம் படிச்சு உருப்படாதுனு ஆசீர்வாதம் பண்ணினதாக் கேள்விப்பட்டேன்.
அதுக்கப்புறமாக் குடும்ப சூழ்நிலையாலே ஹிந்தியைத் தொடரவே முடியாமல் போன நான் பொண்ணுக்குச் சொல்லிக் கொடுக்கும்போதும், பிள்ளைக்குச் சொல்லிக் கொடுக்கையிலும் என்னோட ஹிந்தி அறிவை வளர்த்துக்கொண்டேன். வட இந்திய உச்சரிப்புக்களும், பழமொழிகளுக்கான சரியான பொருளும் உறவின்முறைப் பெயர்களும், மளிகை சாமான்கள், காய்கறிகள் போன்றவற்றின் பெயரும், அன்றாட வேலை செய்யும்போது குறிப்பிடும் வார்த்தைகள் எனத் தெரிந்து வைத்துக் கொண்டேன்.
அதன் பின்னர் நான் மறுபடியும் ஹிந்தி ப்ரசார சபாவின் ப்ரவேஷிகா எழுதும்போது என்னோட பொண்ணு ஒன்பதாம் வகுப்புக்கு வந்துட்டா. அவளிடம் தெரியாத சந்தேகங்களையும் கேட்டுத் தெரிந்து கொள்வேன். இதோடு சேர்த்து சென்ட்ரல் ஹிந்தி டைரக்டரேட்டின் ஹிந்திப் பாடங்களும் படித்துப் பரிக்ஷையும் எழுதினேன். இதிலே நிறைய தொழில் நுட்ப வார்த்தைகள், அரசாங்கக் கோப்புகளுக்குப் பயன்படும் வார்த்தைகள், வாக்கியங்கள் எனத் தெரிந்து கொள்ள முடிந்தது. அதுக்காக சாஹித்யம் எழுதும் அளவுக்கெல்லாம் ஹிந்தி தெரியாது, பொதுவாகப் புரிஞ்சுக்கத் தெரியும், அம்புடுதேன்!

கற்றுக் கொடுக்கும் பொது நிறைய கற்றுக் கொள்ளலாம் அம்மா... ஆதங்கம் வரிகளில் தெரிந்தாலும் மனதில் திருப்தி புரிகிறது அம்மா... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...
ReplyDeletehamne tho chowvan mein hi madhyama, bbadh ko rashtra bhasha, sslc katham karne ke pahle hi, mravesika poora kiya. baadh ko visharadh va praveen bhi 1956 to 1957 mein poora kiya.
ReplyDeletelekin mujse bhi bahathar padi jo bhaadh ko meri ....hi ...hi...bhani, vo saahitha praveen ke badh pandhithaayin bani, vedharanyam ke gurukulam mein adhyaapika bhi bani.
aaj pachaas saal ke baadh, vusne,
sorry, unhonne saari hindi bhool chuki hai.
main apna sir samhalke hindi mein urudu mein bathein kartha hum tho vo mere dhosthon ki vajah se hi sambhav thaa. aur hai.
subbu thatha.
வாங்க டிடி, அன்பான வார்த்தைகளுக்கு நன்றிப்பா. அப்போத் தான் மதுரைப் பல்கலைக்கழகத்தில் தபால்வழிப் படிப்பும் முதல்முறையாக அறிமுகம் செய்து பியுசிக்கும் விண்ணப்பித்திருந்தேன். அதுவும் தொடரமுடியலை. :(((( பின்னர் பல வருடங்கள் கழிச்சுத் தான் எப்படியோ படிச்சேன்.
ReplyDeleteவாங்க சுப்பு சார். இங்கே ப்ரவீனுக்குக் கூடக் கேள்வி, பதில் தொகுத்த புத்தகங்களை வைத்துக் கொண்டு தான் பாடம் நடத்தறாங்க. பாடங்களை மூலப் புத்தகம் வாங்கிப் படிக்கிறதே இல்லை. நான் ப்ரவீன் படிக்கிறச்சே சொல்லிக் கொடுத்த ஆசிரியரோடு எனக்கு சண்டையே வந்தது! :( இப்போவும் அப்படித் தான் சொல்லித் தராங்க. அடிப்படையே சரி இல்லை.:(
ReplyDeleteநான் தான் முன்பே சொல்லிவிட்டேனே !
ReplyDeleteவாழ்த்துக்கள்.
நான் ராஷ்டிர பாஷா பரிட்க்ஷைக்குத் தயார் செய்யும் மாணவர் யாவருமே ஒரு மேடையிலே ஐந்து நிமிடம் பேசும் திறமையும் அவர்களிடம் இருக்குமளவுக்கு சொல்லிக்கொடுத்தேன். அது மட்டுமல்ல, இலக்கணக்கனத்தில் முக்கிய கவனம் அன்றைய கால கட்டத்தில் தரப்பட்டது. பிரவேசிகா தேர்வில், நேரடியாக தேர்வு நடத்தும் எக்சாமினரிடம் ஒரு ஐந்து நிமிடங்கள் பேசவேண்டும். இது இப்போது இருக்கிறதா எனத் தெரியவில்லை.
ReplyDeleteஎனது பிரவீன் ஆறு பாகங்கள் இருந்தன. ஒன்று ப்ராசீன் லிடரசர், அடுத்தது ஆதுனிக் , மூன்றாவது பாஷா விக்ஞான், linguistic sciences or philology, நான்காவது சமாஜ் விக்யான். social sciences. ஐந்தாவது உருது. ஆறாவது பிராந்திய பாஷா. அதில் கம்ப இராமாயணம் இருந்தது. அதை 1956 ல், நேஷனல் கல்லூரி பேராசிரியர் திரு ராதாக்ருஷ்ணன் அவர்கள் எடுத்தார்கள். இந்த பிரவீன் இந்திய அரசாங்கத்தினால் , எம். ஏ .பட்டப்படிப்புக்குச் சமம் என சொல்லப்பட்டு அதற்கான சம அந்தஸ்தும் தரப்பட்டது.
இவை எல்லாம் முழுமையாக தேர்ச்சி பெற்றவரே பிரசாரக் படிப்பு 2 வருடம் இன்றைய B.Ed. க்குச் சமம்.
அண்மையில், கபீரைப் பற்றிய ஒரு ஆய்வு குறித்து, தி. நகரில் இருக்கும் ஹிந்தி பிரசார சபைக்குச் சென்றேன். அங்கு இருக்கும்
நான் கண்ட ஆசிரியர்கள் கபீர் லிட்டர் என்ன விலை எனக்கேட்கும் அளவில் தான் இருக்கிறார்கள்.
ஆங்கிலக் கலப்பில்லாமல், இன்றைய கடி போலி பேசும் திறன் அவர்களிடம் இல்லை என்பது வருந்துதற்குரியதாக இருந்தது.
சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.com
எதிர்பார்த்த மாதிரியேதான் ரிசல்ட். என்னுடைய ஹிந்திக் கதை ரொஇம்பச் சின்ன கதை. பாடத்தைவிட, கிளாசில் நடந்ததுதான் சுவாரஸ்யம். ஆனால் இந்த அளவு எல்லாம் டெடிகேட்டட் ஆகச் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள் இல்லை.
ReplyDeleteஒரு சுவாரசியமான சொல்ல மறந்து விட்டேன்.
ReplyDeleteஎனக்கு முதன் முதலாக ஆசிரியர் பணி தந்தவர் திரு ராஜகோபால சர்மா அவர்கள் சம்ஸ்க்ருதத்திலும் ஹிந்தியிலும் மிகத் தெளிவாகச் சுத்தமாக பேசும் திறன் .பெற்றவர். பிஷப் ஹீபர் பள்ளியிலும் அவர் இந்தி ஆசிரியராக இருந்தார். அவர் திருச்சியிலே மலைக்கோட்டை தெற்கு வீதியில் இருக்கும் ஹிந்தி வித்யா பீட் என்னும் அவரது பள்ளியில் 1958 முதல் 1961 வரை எனக்கு தொடர்ச்சியாக ஆசிரியர் பணி மாலை நேரங்களில் தந்தார்.
முதல் நடத்திய பிரதாமிக் வகுப்பு 1957 ல், 37 மாணவ மாணவிகளில் எல்லோருமே தேர்வில் பாஸ். அதில் 33 முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று .இருந்தனர். அதே [க்ரூப்புக்கு தொடர்ந்து மத்யமா , பிறகு ராஷ்டிரா பாஷா வகுப்புகள் 59.ல் எனது செயின்ட் ஜோசப் கல்லூரியில் எனது மூன்றாவது வருட பி.எஸ்.சி.
படிப்பு . நான் அதில் மும்முரமாக இருந்ததால், அவர் கேட்டுக்கொண்ட போதிலும் என்னால் தொடர்ந்து அந்த க்ரூப்புக்கு பிரவேசிகா எடுக்க இயலவில்லை.
அந்த சுவாரசியமான விசயமா ?
அந்த பிரதாமிக் வகுப்புலே என் கிட்டே படிச்ச புள்ள ஒன்னு தான் என்னை பின்னாடி 68லே .கட்டிகிச்சு.
பட் பிலீவ் மி. அர்ரேஞ்ச்டு மாரியேஜ் தான்.
சுப்பு தாத்தா.
பலமொழிகள் கற்றுக் கொள்வதால் பலன்கள்தான் அதிகம் இருந்தாலும் ஹிந்தியை முறையாய்ப் படிக்கும் ஆர்வம் எழவில்லை. என் உறவினர்கள் சிலர் அவர்களுக்குள் ஹிந்தியில் உரையாடும்போது சில நேரங்களில் கோபம் வரும் இருவருக்கும் ஒரே தாய் மொழி இருக்கும்போது ஹிந்தி எதற்கு.?
வாங்க கோமதி அரசு, உங்களோட யூகம் சரியே! :)
ReplyDeleteசூரி சார், நான் படிச்சப்போ கபீர் தோஹாவை வாய்விட்டுப் படிக்கணும், ராம் சரித்ர மானஸை ராகம் போட்டுப் படிக்கணும். ஆனால் இப்போ நோட்ஸ் ஒண்ணு கொடுத்துடறாங்க. மாத்தி மாத்தி இரண்டே சிலபஸ் தான் வருது. அதனால் கேள்வி-பதில், கட்டுரை எழுதுதல், எல்லாமும் அதிலே மனப்பாடம் பண்ணிக் கக்க வேண்டியது தான். மூலப்பாடம்னா என்னன்னே தெரியாது.
ReplyDeleteப்ரவேஷிகா படிக்கையிலே இருந்தே பேச்சுத் தேர்வு உண்டு. அதிலே எல்லாம் கலக்கிட்டோமுல்ல! பின்னே ப்ரவேஷிகா எழுதும் முன்னரே ராஜஸ்தான், சிகந்திராபாத்னு இருந்து ஹிந்தியை நல்லாப் பேசும்படி கொண்டு வந்தாச்சு. :))))
ReplyDeleteஶ்ரீராம், உங்க ஹிந்திக்கதையும் எழுதுங்க. படிக்கலாம்.
ReplyDelete//அந்த பிரதாமிக் வகுப்புலே என் கிட்டே படிச்ச புள்ள ஒன்னு தான் என்னை பின்னாடி 68லே .கட்டிகிச்சு.
ReplyDeleteபட் பிலீவ் மி. அர்ரேஞ்ச்டு மாரியேஜ் தான். //
நம்பிட்டோம் சூரி சார், நம்பிட்டோம். :))))))
ஹிந்தி படித்த கதை - எல்லா பகுதிகளும் படித்தேன்.....
ReplyDeleteஉங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
உங்கள் ஹிந்தி புலைமை உபயத்தினால் முன்ஷிஜியின் மகாபாரதம் எங்களுக்குத் தமிழில் கிடக்கிறது.உங்கள் ஹிந்தி ஆசிரியர்களுக்கு நன்றி.
ReplyDeleteவாங்க வெங்கட், நன்றி
ReplyDeleteநன்றி ராஜலக்ஷ்மி.
ReplyDelete