அதோடு விட்டுடுவோமா? எட்டாம் கிளாஸுக்கு அப்புறமா ஹிந்தி இல்லை தான். ஆனால் மறந்தெல்லாம் போகலை. பத்தாம் வகுப்பில் செக்ரடேரியல் கோர்ஸ் எடுத்ததால் படிக்க வேண்டிய பாடங்கள் நிறைய. தமிழ், ஆங்கிலம், அறிவியல், டைப் ரைட்டிங், புக் கீப்பிங் + அக்கவுன்டன்சி, காமர்ஸ், கமர்ஷியல் ஜியாக்ரஃபி, எகனாமிக்ஸ், எல்லாமும் உண்டு. மொத்தம் எட்டுப் பாடங்கள். ஆகவே தனியாக ஹிந்தி வகுப்பில் எல்லாம் சேர முடியலை. இத்தனைக்கும் அப்பா ஒரு வார்த்தை சபாவில் சொன்னால் ஃபீஸே வாங்க மாட்டாங்க. இலவசமாய்ப் படிக்கலாம். அப்படி எல்லாம் அப்பாவும் போய்க் கேட்க மாட்டார். எனக்கும் நேரம் சரியாக இருந்தது.
பள்ளி இறுதிக்கப்புறமா காலேஜோ, பாலிடெக்னிக்கோ இல்லைனு ஆனப்புறமா, தனியா டிப்ளமா இன் காமர்ஸ் பண்ணலாம்னு வீட்டுக்கு எதிரே இருந்த இன்ஸ்டிட்யூட்டில் சேர்ந்தேன். முதல் காரணம் ஃபீஸ் என்னிடம் வாங்கவில்லை. புத்தகங்கள் அப்பாவின் நண்பர் ஜாக்கி ராயர் என்பவர் இலவசமாகக் கொடுத்திருந்தார். அதோடு மாமாக்கள் படித்த புத்தகங்கள் எல்லாமும் கிடைத்தன. அக்கவுன்டசிக்கும், நோட்ஸ் எழுதவும் நோட்டுக்கள், பேனா, பென்சில் தான் தேவை. அவற்றையும் எப்படியோ வாங்கிக் கொண்டாச்சு. அக்கவுன்டசி ஹையர் நேரிடயாகப் போகலாம்னாலும் நான் லோயர் பாஸ் பண்ணிட்டே போறேன்னு வாத்தியாரிடம் சொல்லிட்டேன். இதில் என் அப்பாவுக்குக் கோபம் தான். ஆனாலும் எனக்கு அஸ்திவாரம் கொஞ்சம் பலமா இருக்கணும்னு ஆசை.
அதோடு டைப்பிங் ஹையர் நேரிடையாகப் போகவும், ஷார்ட்ஹான்ட் எழுதவும் பயிற்சி எடுத்தேன். இது எல்லாம் ஒன்பது மணிக்கு முடிஞ்சுடும். அதுக்கப்புறமா மத்தியான நேரத்தில் சும்மா இருக்கக் கூடாதுனு தையல், எம்ப்ராய்டரிங் சேர்ந்தேன். எங்க தெருவுக்கு அடுத்த தெரு தானப்ப முதலி அக்ரஹாரத்தில் இருந்த ஹிந்தி பிரசார சபாவின் மாலை நேர வகுப்பில் ஹிந்தியும் சேர்ந்து கொண்டேன். அங்கே அப்போது இருந்த லக்ஷ்மிஜி என் அப்பாவுக்குத் தெரிந்தவர். நான் ஹிந்தி தடங்கலில்லாமல் படிப்பதைப் பார்த்துட்டு, நேரிடையாக ராஷ்ட்ரபாஷா எழுதிட்டு, அப்புறமா ப்ரவேஷிகா போகலாம்னு சொன்னார். ஆனால் அவரின் உதவிக்கு இருந்த கமலாஜிக்கோ என்னை ப்ராத்மிக் கிளாசில் இருந்து ஆரம்பிக்கச் சொல்ல வேண்டும் என்றே ஆசை.
இருவருக்கும் ஒரு தீவிர வாக்குவாதம் நடந்து முடிந்து கடைசியில் மத்யமாவுக்கு நேரிடையாகச் சேர்க்கலாம்னு லக்ஷ்மிஜி முடிவு செய்ய, கமலாஜி அரை மனசாகத் தலை ஆட்டினார். நான் சேர்ந்தது நவம்பரில். பெப்ரவரியில் பரிக்ஷை ஆரம்பம். டிசம்பரில் பணம் கட்டணும். ஹிந்தி டீச்சருக்கு ஃபீஸ் இல்லை தான். அங்குள்ள ஆன்மிக சங்கம் சார்பில் இலவசமாய்க் கற்றுக் கொடுத்தாங்க. ஆனால் டீச்சர் கிட்டே தனியாக் கொடுத்தால் வாங்கிப்பாங்க. இல்லைனா இல்லை தான். ஆனால் பரிக்ஷை எழுத சபாவுக்குப் பணம் கட்டியே ஆகணும். அப்போ மத்யமாவுக்கு 3 ரூபாயோ, 5 ரூபாயோனு நினைக்கிறேன். ஆனால் அதுவே பெரிய தொகை தான். ஆகவே பெப்ரவரியில் பரிக்ஷை எழுத வேண்டாம்; ஏற்கெனவே பாடங்கள் முடிஞ்சுடுத்துனு அப்பா கிட்டே சொல்லி அடுத்த செப்டெம்பரில் எழுதறேன்னு சொல்லிப் பார்த்தேன். அப்பா ஒரே எகிறு எகிறினாரே பார்ப்போம்.
"உனக்கென்ன ஹிந்தி தெரியாதா? இப்போ உடனே மத்யமாவுக்கோ, ராஷ்ட்ரபாஷாவுக்கோ பணம் கட்டிப் படிக்கிறதானால் படி; இல்லைனா படிப்பே வேண்டாம்."
வழக்கமான பிரம்மாஸ்திரம். என்ன செய்யறதுனு புரியலை. லக்ஷ்மிஜியோ தைரியமாப் பணம் கட்டு, நீ பாஸ் ஆயிடுவேனு சொல்ல கமலாஜியோ 10 மார்க்குக் கூட வராது. இதுவரை நாம அனுப்பின எல்லோருமே பாஸ் ஆகிட்டு இருக்காங்க. இதுக்கு ஃபெயில் மார்க் தான்கிடைக்கும்னு ஆசீர்வதிக்க, நேரு பிள்ளையார் மேலே பாரத்தைப் போட்டுட்டுப் பரிக்ஷைக்குப் பணம் கட்ட முடிவெடுத்தேன். ஆனால் ராஷ்ட்ரபாஷா இல்லை. மத்யமா தான். மூன்று, நான்கு புத்தகங்கள் படிக்கணும். அதைத் தவிர இலக்கணம் தனி. எல்லோருக்கும் குழம்பும் ஹிந்தி இலக்கணம் எனக்குக் குழப்பவில்லைனாலும் பரிக்ஷைக்கு எழுதற அளவுக்குப் படிச்சகணுமே!
மொழிபெயர்ப்பு வேறே தனியா இருக்கும். என்ன செய்யப் போறேன், பகவானே! புத்தகங்கள் போன முறை மத்யமா படிச்ச பொண்ணு கிட்டே வாங்கிட்டேன். நான் படிச்சுட்டு அடுத்துப் படிக்கிறவங்களுக்கு இதே போல் இலவசமாக் கொடுக்கணும். இதான் நிபந்தனை. புஸ்தகமெல்லாம் வாங்கியாச்சு. டிசம்பரில் அக்கவுன்டசி பரிக்ஷை, டைப்பிங் பரிக்ஷை. நல்ல வேளையா ஷார்ட் ஹான்ட் ப்ராக்டிஸ் என்னும் நிலையிலேயே இருந்தது. பரிக்ஷைக்குத் தயார் ஆக இன்னும் கொஞ்சம் மாதங்கள் ஆகலாம். இத்தனைக்கும் நடுவிலே ஹிந்தியும் படிச்சாகணும். அந்த நேரம் பார்த்து ஹோசூரில் இருந்த அண்ணாவுக்குச் சமைச்சுப் போடணும்னு அம்மாவும் ஹோசூர் போயாச்சு. சமையலறையும் என் பொறுப்பில்!
ஹிந்தி போஸ்ட் விடமாட்டோமுல்ல!
ஹிந்தி போஸ்ட் விடமாட்டோமுல்ல!
நான் ஹிந்தி கற்றுக் கொண்ட கதை கூட எழுதலாம். ஆனால் தற்கொலைப் பதிவை மோசமாக இருக்கும். எனவே எழுத மாட்டேன். :)))))
ReplyDeleteபகவானே... காப்பாத்து பகவானே... ஹிஹி...
ReplyDeleteபாடல்கள் ரசிக்க : http://dindiguldhanabalan.blogspot.com/2014/06/Answers-Lyrics.html
ReplyDeletewho is this "நேரு பிள்ளையார்"?
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், எழுதுங்க. படிச்சுப் பார்க்கலாம். :)
ReplyDeleteவாங்க டிடி, பகவான் காப்பாத்திட்டாரே! :)
ReplyDeleteநாளைக்குள்ளே வந்து பாடல்களை ரசிக்கிறேன். :)
வாங்க வா.தி. வரவுக்கு நன்னி! எத்தனையோ தரம் நேரு பிள்ளையார் பத்திச் சொல்லிட்டேனே! ஞாபகம் வச்சுக்காதவங்களுக்கெல்லாம் திரும்பச் சொல்றதில்லை! :))))
ReplyDeleteநேரு ஆலால சுந்தர விநாயகர் நம்ம ஃபேவரிட் ஸ்வாமி!.. விடாம கும்புட்டேன் டிஸ்டிங்ஷன் தந்தார்!..
ReplyDeleteஎப்படியோ, அந்தக் காலத்திலேயே இந்தியைக் கற்றுக்கொண்டுவிட்டீர்கள். தைரியமாக இந்திப்படம் பார்க்கலாம். (நான் இந்தி தெரியாமலேயே, மொகலே ஆஜம் பார்த்தவனாக்கும்!)
ReplyDeleteபராபர்! ஆமாம். நேரு பிள்ளையார் பற்றி எழுதறது.
ReplyDeleteவாங்க பார்வதி, அவர் எல்லோருக்கும் நண்பர். :)
ReplyDeleteவாங்க செல்லப்பா சார், வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
ReplyDeleteஹாஹா, "இ" சார் சொல்ல மாட்டேனே! :)))))
ReplyDelete:)))))
ReplyDeleteஹிந்தி கற்றுக்கொண்ட கதை சுவாரஸ்யம். தொடர்கிறேன்.
சமையலறையும் என் பொறுப்பில்!//
ReplyDeleteஉங்கள் சமையல் அப்பாவுக்கு பிடித்து இருக்குமே!