எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, July 24, 2014

ஒரு பாராட்டு, ஒரு குறை, ஒரு சிரிப்பு!

இம்முறை சென்னை சென்றபோது பாண்டி பஜார் வழியா வந்தப்போ மயக்கமே வந்தது.  என்ன இது?  ஏதோ மாற்றம்னு ஒண்ணுமே புரியாமல் பார்த்தப்போ, நாங்க போயிட்டிருந்த ஆட்டோவின் ஓட்டுநர், நடைபாதைக்கடைகள் எதுவுமே இப்போ இல்லைங்க, அவங்களுக்குத் தனியாகக் கட்டிக் கொடுத்து  இங்கே இருந்து எடுத்துட்டாங்கனு சொன்னார்.  உண்மையில் நல்ல விஷயம் தான். சென்னை மாநகராட்சியைப் பாராட்ட வேண்டும்.  நடைமேடையில் நடக்க முடியாமல் தெருவில் நடக்கலாம்னா, அந்த வழியாச் செல்லும் பேருந்துகள், கார்கள் போன்றவற்றிலிருந்து தப்பி ஒதுங்க இடம் இருக்காது.

 இரு பக்கமும் வண்டிகளை நிறுத்தி இருப்பாங்க.  அதற்கெனத் தனி கான்ட்ராக்ட் இருக்கு.   அவங்க வந்து பணம் வசூல் பண்ணுவாங்க.  ஆனால் அன்னிக்கு வண்டிகளும் குறைவாவே இருந்தது.  இத்தனைக்கும் வார முதல்நாள் திங்கள் கிழமை.  இப்போ வண்டிகள் நிறுத்தவும் ஏற்பாடுகள் செய்து வருவதாகவும் அந்த ஆட்டோ ஒட்டுநர் கூறினார்.  சென்னையில் வழக்கமான குப்பைகள் குறையவில்லை.  போக்குவரத்து நெரிசல் குறையவில்லை.  முகத்தை முகமூடி போட்டு மூடிக் கொண்டாலும் வண்டிகளின் புகை இருமலை வரவழைக்கிறது.  லஸ் சர்ச் ரோடில் பயணிக்கையில் ரேவதியின் வீட்டைப் பார்த்து  ரேவதி இருந்தால் போயிருக்கலாம்னு பேசிக் கொண்டோம்.  மரங்கள், செடிகள் எல்லாம் பசுமையாகவே இருந்தன.


சென்னை ஆட்டோக்களில் இம்முறை பயணம் செய்தப்போ மீட்டர் போட்டாலும் அதற்கு மேலே பத்தோ அல்லது இருபதோ கேட்டு வாங்குகிறார்கள் என்பதும் தெரிகிறது.  அதே குறைந்த தூரம் எனில் 30 ரூபாய் ஆகும் தூரத்துக்குக் குறைந்தது ஐம்பது கேட்கின்றனர். மீட்டர் போட்டால் 25 ரூபாய் கூட ஆகாது!   மாம்பலத்தில் இருந்து மயிலாப்பூர் கிழக்கு மாட வீதிக்கு மீட்டரில் 80 ரூபாய் ஆச்சு.  ஆட்டோ ஓட்டுநருக்கு 100 ரூபாய் கொடுத்தோம்.  திரும்பும் போதும் அதே! இப்போது இங்கே ஶ்ரீரங்கத்திலும் ஆட்டோக்காரங்க அதிகம் கேட்க ஆரம்பிச்சாச்சு.  எங்க வீட்டில் இருந்து மலைக்கோட்டை போக 150 ரூபாயில் ஆரம்பிச்சுப் பேரம் பேசிக் கடைசியில்  120க்கு வராங்க.  மீட்டர் போட்டால் 80 ரூபாய் தான் ஆகும்.  இங்கேயும் மீட்டர் ஆட்டோ அறிமுகம் எல்லாம் நடந்து செல்பேசி எண் எல்லாம் கொடுத்திருக்காங்க.  அந்த அலுவலகத்துக்குத் தொலைபேசினால் மதியம் 3-30 -க்கு நாம் கிளம்பணும் என்றால் 3-00 மணிக்குப் பேசுங்கனு சொல்றாங்க.  அப்படிப் பேசினால் அந்தக் கடைசி நிமிடத்தில் ஆட்டோ வராதுனு சொல்லிடறாங்க.  ஒவ்வொரு முறையும் கூப்பிட்டுப் பார்த்துட்டுப் பின்னர் இங்கே ஆட்டோ ஸ்டான்ட் ஆட்டோவிலேயே போகிறோம்.  இவங்க 100 ரூபாய்க்கு வருவாங்க. ஆனால் காத்திருந்து திரும்பக் கூட்டி வரதில்லை.


நேத்துத் திருச்சி சென்று திரும்புகையில் ஒரு உணவு விடுதியில் உணவு வகைகளின் பட்டியல் போட்டிருந்தது.  அதிலே எலிமிச்சை சாதம், கருவப்பிள்ளை சாதம் இரண்டையும் பார்த்துட்டுத் திகைப்பாப் போச்சு.  அப்புறமாத் தான் புரிஞ்சது எலுமிச்சை சாதம், கறிவேப்பிலை என்னும் கருகப்பிலை சாதம் என.   புளியஞ்சாதம் பண்ணலை போல.  இல்லைனா புலியஞ்சாதம்னு எழுதி இருப்பாங்களே!  தமிழ் என்னமாய் விளையாடுதுனு நினைச்சேன்.   அப்புறமாத் தெப்பக்குளத்துக்கு எதிரே ஹிக்கின்பாதம்ஸ் புத்தகக் கடையின் தமிழ்ப் பெயர்ப்பலகையில்" இக்கின்பாதம்ஸு"  எனத் தூய தமிழில் போட்டிருந்ததைப் பார்த்துச் சிரிப்பு வந்தது.  எ.கொ.இ.ச. என நினைத்துக் கொண்டேன்.  சும்மா ரொம்ப நாளாச்சே என எண்ணங்களின் மொக்கைப் பதிவு ஒன்று. :)

17 comments:

  1. ஆட்டோக்காரர்கள் கொள்ளையைத் தடுக்க வழி இல்லை. நமக்கு என்று ஒரு ஆஸ்தான ஆட்டோக்காரர் வைத்துக் கொள்ளலாம் என்று பார்த்தால் சமயங்களில் அவரும் மற்ற தெரியாத ஆட்டோக்காரர்கள் கேட்பதைவிட அதிகம் கேட்டு விடுகிறார்.

    சென்னையில் எங்கெங்கு சென்றீர்கள்?

    ReplyDelete
  2. பாண்டி பஜார் மாயாஜாலம் பாரட்டத்தக்கது தான். நான் காசிக்கு போன போது ரங்கநாதன் தெரு. கோடம்பாக்கத்தில் தான் ரயில்லில் இருந்து இறங்குவேன். ஆட்டோவை அடக்கமுடியாதது அரசின் இயலாமையை காட்டுகிறது.
    முகமூடி அணிந்த படம் போடவும்.

    ReplyDelete
  3. தமிழ் இப்படி விளையாடி பல காலம் ஆகி விட்டது... ம்... என்னத்த சொல்ல...?!

    ReplyDelete
  4. சென்னைக்கு வந்திருக்கீங்க, ஒரு போன் கூட பண்ணலை,,,

    ReplyDelete
  5. ஶ்ரீராம், மாம்பலம்-மயிலை ( ஒருமணி நேர வேலை)-மாம்பலம்--மாலை--அசோக் நகர் பத்தாம் அவென்யூவில் மருத்துவர்---ஓய்வு. காலை--ஓய்வு---மாலை---கல்யாண ரிசப்ஷன் நங்க நல்லூரில்--ஓய்வு--மறுநாள் காலை--முஹூர்த்தம்---மதியம் அங்கிருந்து எழும்பூர்---இரவு ஶ்ரீரங்கம். :)))))))

    ReplyDelete
  6. வாங்க "இ"சார், தெற்கிலிருந்து வரும் ரயில்கள் கோடம்பாக்கத்தில் நிற்காதுனு நினைக்கிறேன். முகமூடியைக் கழற்றி விட்டேன். :)))) படமும் எடுக்கலை!

    ReplyDelete
  7. திராச சார், நிஜம்ம்ம்ம்ம்ம்ம்மா நீங்களா? எங்கே இந்தப்பக்கம் அதிசயமா அத்தி பூத்தாப்போல? என்னை எல்லாம் நினைவு வைச்சிருக்கீங்க????

    ReplyDelete
  8. வாங்க டிடி, இது மட்டுமா? இன்னும் மோசமா எல்லாம் எழுதறாங்க. :)

    ReplyDelete
  9. ஸ்.பையர், உங்க தொலைபேசி எண் தெரியாது. அதோட நீங்க சென்னையிலே இருக்கீங்கனும் தெரியாது. சென்னை வந்தா பார்க்கிற லிஸ்ட்டிலே குறைந்தது 50 பேர் இருப்பாங்க. யாரைப் பார்ப்பேன்னு எனக்கே தெரியலை. எல்லோருமாக் கூடி என்னைப் பார்க்கவேண்டி ஒரு விழா எடுக்கலாம்! என்ன சொல்றீங்க? :)))))

    ReplyDelete
  10. தமிழ்ப்பெயர்கள் :)

    ReplyDelete

  11. பஸ் வசதிகள் இருந்தால் கூடியமட்டில் அதில் பயணிப்பது உசிதம் பெங்களூருவில் ஆட்டோ தொந்தரவு குறைவு என்றே எண்ணுகிறேன். ஒரு கி.மி. தூரத்துக்கு ரூ.13/- குறைந்த கட்டணம் ரூ.25/-சிடியை விட்டு வெளியே போகும் போதுதான் மீட்டருக்கும் மேல் அதிகம் கேட்பார்கள். தமிழ் பதிவுகளிலும் விளையாடுகிறதே. சுட்டினால் தட்டச்சின் மேல் குறை கூறுகிறார்கள். !

    ReplyDelete
  12. வாங்க புதுகை, தமிழ்ப் பெயர்கள் நல்லா இருக்கு, இல்லையா? :)

    ReplyDelete
  13. ஜிஎம்பி சார், இங்கே திருச்சியில் பேருந்துகள் அனைத்தும் தனியார் என்பதால் போட்டாபோட்டி! மேலும் ஏறும் படிக்கட்டுகள் மிக உயரத்தில் இருக்கின்றன. முதல் படியில் காலை வைக்கும்போதே விசில் கொடுத்துடுவாங்க. இரண்டு, மூன்று முறை அதிலே பயணம் செய்ய ஏறிட்டுக் கீழே மல்லாக்க விழத் தெரிந்தேன். அதுக்கப்புறமா ரிஸ்க் எடுக்கிறதே இல்லை.

    அரசு பஸ் மணிக்கு ஒண்ணு தான் வரும். வந்தால் நம்ம அதிர்ஷ்டம்!
    ஆரம்பிக்கும் இடத்தில் ஏறி முடியும் இடத்தில் இறங்குவதென்றால் பிரச்னை இல்லை. எப்போது வேண்டுமானாலும் எனக்குக் காலில் க்ராம்ப்ஸ் வரும். ஆகவே ஆட்டோ அல்லது கால் டாக்சி தான். :(

    ReplyDelete
  14. //. தமிழ் பதிவுகளிலும் விளையாடுகிறதே. சுட்டினால் தட்டச்சின் மேல் குறை கூறுகிறார்கள்.//

    தட்டச்சுப் பிரச்னையும் இருக்கும் தான். ஆனால் இங்கே சாக்பீஸில் எழுதி இருந்தது. ஹிகின்பாதம்ஸில் பெயின்டால் எழுதி இருந்தார்கள். தமிழ்ப்பற்று! :))))) "ஹ" வை எடுத்துட்டு "இ" போட்டால் தமிழ் அழியாது என்னும் நினைப்பு!

    ReplyDelete
  15. பாண்டிபஜார் பக்கம் போய் நாளாயிருச்சு! தமிழ்க்கொலை எங்கும் செய்கிறார்கள் போல! ஆட்டோக்காரர்கள் அவர்களாக திருந்தினால்தான் உண்டு! நன்றி!

    ReplyDelete
  16. தமிழ்விளையாட்டு :)))

    ReplyDelete