சென்ற ஞாயிறன்று வேலை ஒண்ணும் செய்ய முடியாமல் மத்தியானம் குரங்கு வருதானு வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தப்போ ஒரு ஹிந்திப் படம் பார்த்தேன். ஜானே பி தோ யாரோ என்னும் படம். Jaane be do Yaaro/ NFDC யால் எடுக்கப்பட்டது. குந்தன் ஷா இயக்கம். நஸ்ருதீன் ஷா, சதீஷ் ஷா, ஓம் புரி, பங்கஜ் கபூர், ரவி பாஸ்வானி, நீனா குப்தா போன்ற நாடகக் கலைஞர்களால் (theatre artists) நடிக்கப்பட்டது. இயல்பான நடிப்பு. நஸ்ருதீன் ஷாவும், ரவி பாஸ்வானியும் ஃபோட்டோகிராஃபர்கள். தற்செயலாக ஒரு போட்டிக்குப் படம் எடுக்கையில் கொலை ஒன்றையும் படம் எடுத்து விடுகின்றனர். அதை யார் என்று பார்த்த அவர்களுக்கு அதிர்ச்சி.
அதற்கு மேல் அதிர்ச்சியாக சம்பவங்கள் நிகழ்கின்றன. ஆனால் எல்லாமே நகைச்சுவையோடு பின்னிப் பிணைந்து இயல்பாக வருகிறது. இறந்து போன சதீஷ் ஷாவின் பிணத்தை வைத்துக்கொண்டு இவங்க அடிக்கிற கூத்து, முக்கியமா ஓம்புரி பண்ணும் வேடிக்கை! பின்னர் க்ளைமாக்ஸில் திரௌபதி வஸ்திர அபஹரணம் சீனில் சதீஷ் ஷாவை திரௌபதி வேஷம் போட்டு நிற்க வைத்து அடிக்கும் கூத்து! அமர்க்களம். முடிவு எதிர்பாராதது. ஆனால் அன்றும், இன்றும், என்றும் நடைபெறும் யதார்த்தம்.
பிணத்தை வைத்து இவங்க அடிக்கும் இந்தக் கூத்து படத்தில் வந்தது 83 ஆம் வருஷமோ, 84 ஆம் வருஷமோ. ஆனால் இதை தான் நம்ம உலக நாயகர் மகளிர் மட்டும் படத்தில் நாகேஷை வைத்துக் காமெடி ஆக்கி இருக்கார். கிட்டத்தட்டப் பனிரண்டு வருடங்கள் கழித்து. மனுஷன் கிட்டே ஒண்ணு கூட ஒரிஜினலா இருக்காது போல! :(
ஹம் ஹோங்கே காம்யாப்
ஹம் ஹோங்கே காம்யாப்
ஏக் தின்
பூரா ஹை விஷ்வாஸ்
மன் மேஹை விஷ்வாஸ்
ஹம் ஹோங்கே காம்யாப்
ஏக் தின்.
இப்போதைய நிலைக்கும் இது பொருத்தமாய்த் தான் இருக்கு.

இதை 7 ஆம் தேதிக்கே ஷெட்யூல் பண்ணி வைச்சிருந்தேன். துரோகி ப்ளாகர் இப்போ பப்ளிஷ் பண்ணி இருக்கு. :)))))
ReplyDeleteஅவரு ஒரிஜினலா என்று அவருக்கே தெரியாதே...! ஹிஹி...
ReplyDeleteகீதா. கை எப்படிம்மா இருக்கு. கொஞ்சமாவது ஆறி இருக்கா. இந்தப் படத்தை எப்பவோ பார்த்த நினைவு. நீங்கள் எழுதும்போது இன்னும் நினைவுக்கு வருகிறது. ஏதாவது இது போலப் பதிவிடுங்கள் மனசிற்கு அப்பதான் நிம்மதி.
ReplyDelete
ReplyDeleteஹிந்தி படம் பார்க்கும்போது பல நேரங்களில் படம்பார்த்துக் கதை சொல்வது போல் இருக்கும்
இந்தப் படம் நான் பார்த்ததில்லை. பிற்கால ஹிந்திப் படங்கள் மிகச் சில தவிர மற்றவை பார்த்ததில்லை.
ReplyDeleteஇந்தி படங்கள் தூர்தர்ஷன் கோலொச்சிய காலத்தில் பார்த்தது! இப்போது வீட்டில் சூரிய டீவி மட்டுமே! நன்றி!
ReplyDeleteஹிந்திப் படங்கள் அதிகம் பார்ப்பதில்லை, எப்போதாவது மட்டும். அப்போது கூட மனைவியிடம் அர்த்தம் கேட்பதுண்டு. அப்படி அவர் அர்த்தம் சொல்லி முடிப்பதற்குள் அடுத்த வசனங்கள் போய்விடும்...
ReplyDeleteதூர்தர்ஷன் காலத்திற்கு அழைத்து சென்று விட்டது உங்கள் பதிவு.
ReplyDeleteஹாஹாஹா, டிடி, சரியாச் சொன்னீங்க! :)) அவர் படக்கதைதான் காப்பின்னா நகைச்சுவையைக் கூட சத்தம் போடாமல் காப்பி அடிச்சிருக்கார்! :(
ReplyDeleteவாங்க வல்லி, எண்பதுகளில் மிகப்பிரபலமான படம் இது. தூர்தர்ஷனில் நிறையப் போட்டிருக்காங்க.
ReplyDeleteகை இன்னும் முழுசா ஆறலை. அந்த விரலை விட்டுட்டுத் தட்டச்சப் பழகி இருக்கேன். ஆனாலும் ஒரு சிலர் அதைப் பயன்படுத்தலைனா அப்புறமா விறைப்பாயிடும்னு சொல்றாங்க. :)
வாங்க ஜிஎம்பி சார், படத்தைப் பார்த்தாலே போதும், கதை புரியும், வசனங்கள் புரிவது தான் ஹிந்தி தெரியலைனா கஷ்டம். :)
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், இது நஸ்ருதீன் ஷாவோட ஆரம்பகாலப் படங்களில் ஒன்று. இப்போதெல்லாம் அவரும் காம்ப்ரமைஸ் பண்ணிக்க ஆரம்பிச்சுட்டார்னு கேள்விப் பட்டேன். :(
ReplyDeleteவாங்க சுரேஷ், சூர்யத் தொலைக்காட்சியைத் தான் நிறையப் பேர் பார்க்கிறாங்க போல! நியூஸ் சானலாவது வேறே பாருங்க. இதிலே சரியான செய்தித் தொகுப்புக் கொடுப்பதில்லை.
ReplyDeleteவாங்க ஸ்கூல் பையர், தொடர்ந்து பார்த்தாப் புரிய ஆரம்பிச்சுடும்.:)
ReplyDeleteவாங்க ராஜலக்ஷ்மி, இப்போவும் நான் அதிகம் பொதிகை தான் பார்ப்பேன். அடுத்து சங்கரா, எஸ் சிவி, செய்திகளுக்குப் புதிய தலைமுறை, லோட்டஸ், பாலிமர் போன்றவை. :)
ReplyDeleteஹிந்திப் படங்கள் மொழிபெயர்பு இருந்தால்தான் எனக்கு புரியம்.
ReplyDelete