இன்னிக்குத் தனியா இருக்கிறச்சே குரங்கார் படுக்கை அறைக்குள் நுழைஞ்சதிலே இருந்து ஏற்பட்ட பாதிப்பில் சமைக்கிறச்சே கவனம் இல்லாமல் ஒரு சின்ன விபத்து ஏற்பட்டு விட்டது. குரங்காரைக் கண்டு நான் பயப்படுவதால் சமையலறை பால்கனி ஜன்னலுக்கு ரங்க்ஸ் கம்பி வாங்கிக் கட்டி விட்டார். ஆனால் படுக்கை அறை பால்கனி ஜன்னல் எல்லாம் இன்னமும் பெரிசு. அங்கே தான் உட்கார்ந்திருக்கு! அந்த பால்கனிக் கதவைத் திறக்கிறதே இல்லை!
சமைச்சு முடிச்சுட்டுச் சாப்பிடும்போது வடாம் பொரிக்கலாம்னு எண்ணெய் காய வைத்தேன். எப்போவுமே இரண்டு பேருக்குனு சின்னச் சட்டியிலே தான் காய வைப்பேன். நேத்திக்கும் அப்பளம் பொரிச்சேன். இன்னிக்கு வடாம் பொரிக்கையிலே எண்ணெய் கொட்டிக் கைவிரல்களில் பட்டு வெந்து போய் விட்டன. முக்கியமா ஆள்காட்டி விரலும், கட்டை விரலும் ரொம்ப பாதிப்பு. சரியாக இன்னும் சில நாட்கள் ஆகும். அதுவரை எஞ்சாய் மாடி!!! :)))
கண்ணன் பதிவுகள் எழுதி வைச்சிருப்பதால் முடிஞ்சவரை அதைப்போடுவேன். விடமாட்டோமுல்ல! அதோடு திங்களிலிருந்து புதன் வரை ஒரு சின்ன விடுமுறையும் கூட. எல்லாரும் ஸ்வீட் எடுங்க, கொண்டாடுங்க. செப்டிக் ஆகாமல் இருக்க ஊசி போட்டுண்டு வந்தாச்சு.
சமைச்சு முடிச்சுட்டுச் சாப்பிடும்போது வடாம் பொரிக்கலாம்னு எண்ணெய் காய வைத்தேன். எப்போவுமே இரண்டு பேருக்குனு சின்னச் சட்டியிலே தான் காய வைப்பேன். நேத்திக்கும் அப்பளம் பொரிச்சேன். இன்னிக்கு வடாம் பொரிக்கையிலே எண்ணெய் கொட்டிக் கைவிரல்களில் பட்டு வெந்து போய் விட்டன. முக்கியமா ஆள்காட்டி விரலும், கட்டை விரலும் ரொம்ப பாதிப்பு. சரியாக இன்னும் சில நாட்கள் ஆகும். அதுவரை எஞ்சாய் மாடி!!! :)))
கண்ணன் பதிவுகள் எழுதி வைச்சிருப்பதால் முடிஞ்சவரை அதைப்போடுவேன். விடமாட்டோமுல்ல! அதோடு திங்களிலிருந்து புதன் வரை ஒரு சின்ன விடுமுறையும் கூட. எல்லாரும் ஸ்வீட் எடுங்க, கொண்டாடுங்க. செப்டிக் ஆகாமல் இருக்க ஊசி போட்டுண்டு வந்தாச்சு.
கேட்கவே மனதுக்கு வருத்தமாக உள்ளது. ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ளவும்.
ReplyDeleteதனியாக ஒரு மெயில் அனுப்பியுள்ளேன். அது தங்களுக்கு ஒருவேளை பயன் படக்கூடும்.
அன்புடன் கோபு
உடல்நலத்தில் கவனம் கொள்ளவும்! பதிவு அப்புறம் பார்த்துக்கலாம்! நன்றி!
ReplyDeleteவிரைவில் குணமடைய வாழ்த்துகள்.
ReplyDeleteஅன்பு கீதா, எண்ணெயில் இப்படி சுட்டுக் கொள்வார்களா என்று கேட்கவில்லை. குரங்கார் இப்படிப் பதட்டப்படவைத்துவிட்டாரே என்றே வருத்தமாக இருக்கிறது.எப்படிக் கை எரிகிறதோன்னு பயமாகவும் இருக்கு. சாப்பிட முடிகிறதா. வைத்தியரிடம் போனீர்களா. குரங்கு அட்டகாசத்துக்கு வழி கண்டுபிக்க முடிந்ததா. எல்லாவற்றுக்கும் கை ஆறினபிறகு பதில்.
ReplyDeleteகுரங்கு வந்தால் என்ன? ஜன்னல்தான் மூடியாச்சு இல்லே? செக்யூரிட்டி கிட்ட சொல்லியாச்சு இல்லே? எண்ணெய் அடுப்பில் வைக்கும்போது கவனமாக இருக்க வேண்டாமா? பத்திரம். முதலில் குரங்கை அந்த ஏரியா விட்டு அப்புறப்படுத்த நடவடிக்கை எடுங்கள். யாரையாவது ஆள் ஏற்பாடு செய்யுங்கள்.
ReplyDeleteகுரங்காரை வைய்யவா இல்லை அவருக்கு நன்றி சொல்லவா.?
அடடா.....
ReplyDeleteகுரங்கார் மூலம் இப்படியும் ஒரு தொல்லையா....
கவனித்துக் கொள்ளவும்! - கைகளைத் தான் - குரங்குகளை அல்ல!
சோற்று கற்றாழை இருந்தால் அதன் உள்ளிருக்கும் சதை பகுதியை தடவினால் சீக்கிரம் ஆறிவிடும். நான் அடிக்கடி சுட்டுக் கொள்வேன் முன்பு அதற்காக தொட்டியில் வளர்க்கிறேன்.
ReplyDeleteகவனமாய் இருங்கள் வெயில் நேரத்தில் சுட்டுக் கொண்டால் எரிச்சல் அதிகமாய் இருக்குமே!
ஸ்ரீராம் சொல்வது போல் பதட்டபடாமல் எல்லோரும் சேர்ந்து அதை வெளியேற்றப்பாருங்கள்.
அம்மா! உடல் நலம் பேணவும்!
ReplyDeleteஉடல்நலனைக் கவனித்துக்கொள்ளுங்கள் கீதா மேடம். விரல்களுக்குப் போதுமான ஓய்வு கொடுங்கள். விரைவில் பூரணமாய் குணம் பெற வேண்டுகிறேன்.
ReplyDeleteTake care.
ReplyDeleteகவனித்துக் கொள்ளுங்கள் மாமி.குரங்கால் இப்படியும் தொல்லையா!!
ReplyDeleteநானும் சென்ற வாரத்தில் தான் சூடான குக்கரின் மேல் முழங்கைப்பட்டு காயப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னும் ஆறவில்லை. வெயிலில் நன்றாக எரிகிறது.
அச்சச்சோ. பார்த்துக்கோங்க அம்மா.
ReplyDeleteஅட கடவுளே:( கவனமாக இருங்கள்.
ReplyDeleteவைகோ சார், ரொம்ப நன்றி, உங்க மடலும் வந்தது.
ReplyDeleteசுரேஷ், நன்றிப்பா
ReplyDeleteகௌதமன் சார், நன்றி
ReplyDeleteஉண்மைதான் வல்லி, இரண்டடி தூரத்தில் குரங்கைப் பார்த்ததும் ஏற்பட்ட அதிர்ச்சி அப்பளம் பொரிக்கையில் கூட அகலவில்லை. குரங்கு கடித்தாலும் ராபிஸ் ஊசி போட்டுக்கணுமே! :(
ReplyDeleteசாப்பிட முடியாமல் தான் இருந்தது. இன்னிக்குப் பரவாயில்லை. குரங்கு அட்டகாசத்துக்கு வழி ஏதும் தெரியலை. எங்க பக்கம் வரும் வழியைக் கம்பி கட்டி அடைச்சிருக்கோம் இன்னிக்குத் தான் வாசல் பக்கமும் அடைச்சார். இதனால் அவருக்குத் தான் வேலை ஜாஸ்தி! :(
ஶ்ரீராம், சமையலறைப்பக்கம் இருக்கும் ஜன்னல் தான் கம்பியாலே அடைச்சிருக்கு. வீட்டிலே ஒரு அறைக்கு இரண்டு ஜன்னல்கள்னு பெரிசு பெரிசா இருக்கே! நல்லவேளையா உள் தாழ்ப்பாள் போட்டாச்சு எல்லாத்துக்கும். :( குரங்காரை விரட்டச் சொல்லிச் சொல்லிப் பார்த்தாச்சு! ஒண்ணும் நடக்கலை. எல்லா வீட்டிலும் அமர்க்களம் தான்! :(
ReplyDeleteஇரண்டும் செய்யலாம் ஜிஎம்பி சார்.
ReplyDeleteவாங்க வெங்கட், குரங்குகளையும் கவனிச்சுக்கணும் தானே! :)
ReplyDeleteகற்றாழை கலந்த ஆயின்ட்மென்ட் தான் கொடுத்திருக்காங்க கோமதி அரசு. கொஞ்சம் ஆழமாகப் பட்டிருப்பதால் நாளாகிறது. நேற்றுத் தான் கொப்புளம் உடைஞ்சது. இனிமேல் காயம் ஆறணும்.
ReplyDeleteநன்றி தமிழ் இளங்கோ சார்.
ReplyDeleteநன்றி கீத மஞ்சரி.
ReplyDeleteநன்றி ரா.ல.
ReplyDeleteநன்றி கவிநயா.
ReplyDeleteநன்றி ஆதி, உங்கள் உடம்பையும் கவனித்துக் கொள்ளுங்கள்.
ReplyDeleteநன்றி மாதேவி.
ReplyDelete