இப்போதெல்லாம், தமிழ், தமிழர் என்னும் பிரிவினை (?) உணர்வு கொஞ்சம் தூக்கலாகவே உள்ளது. ஏற்கெனவே நாம் தேசிய நீரோட்டத்தில் கலந்தவர்கள் அல்ல. தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்வோம். இப்போது சில நாட்களாக அல்லது வருடங்களாக இது அதிகரித்து வருகிறது. இது நன்மைக்கா, தீமைக்கா எனத் தெரியவில்லை. என்றாலும் இதன் மூலம் நாம் தனிமைப் படுத்தப் படுவோம். இது தேவையா? ஏற்கெனவே அண்டை மாநிலங்களோடு தமிழ்நாட்டுக்கு சுமுகமான நட்புறவு இல்லை. யாரும், யாரையும் சாராமல் வாழ்வது முடியாது. நாம் தண்ணீருக்காக அவர்களிடம் கையேந்தினால் அவர்கள் நம்மிடம் வேளாண் விளைபொருட்களுக்காகக் கையேந்தும் நிலை. என்றாலும் ஆதாரமான நீர் கொடுக்கும் அதிகாரம் அவர்களிடமே உள்ள போது நாம் கொஞ்சம் விட்டுக் கொடுத்துத் தான் போக வேண்டும்.
அதிலும் இப்போது எங்கே பார்த்தாலும் இந்தச் சண்டை அதிகமாகவே காணப்படுகிறது. எல்லோருக்குமே நேரம் சரியில்லை போலும். எப்போதும் அமைதியாகவும் சாந்தமாகவும் காணப்படும் நண்பர்கள் கூட இது காரணமாகக் கடுமையாகப் பேசும் நிர்பந்தங்கள் ஏற்படுவதைக் கண்டால் ஒரு பக்கம் ஆச்சரியமாக இருக்கிறது.
*********************************************
வாரா வாரம் திங்கட்கிழமை வந்தால் உடனே வைகோ சாரிடமிருந்து நினைவூட்டு மடல் வந்துவிடும். இப்போ இரு வாரங்களாக இல்லை. ஏதோ வெறிச்சுனு ஆயிட்டாப்போல் ஓர் எண்ணம். மனதிலும் ஓர் வெறுமை. அந்த அளவுக்கு இந்த விமரிசனப் போட்டி அனைவரையும் ஈர்த்து விட்டது. ஆரம்பத்தில் நான் ஒரு பார்வையாளராக மட்டுமே இருக்க எண்ணினேன். ஆனால் வைகோ சாரின் விடாத தூண்டுதலினால் அவ்வப்போது ஏதோ எழுதி ஒப்பேற்றினேன். ஆகையால் என்னைப் பொறுத்தவரை இந்த அளவுக்குப்பரிசு கிடைத்ததே ஆச்சரியம் தான்.
எழுதுபவரின் மனோநிலையோடு ஒன்றிப் போகவேண்டும் என்று நடுவர் குறிப்பிட்டிருக்கிறார். என்னைப் பொறுத்தவரை அப்படி ஒன்றிப் போவது என்பது விமரிசனம் எழுதச் சரியாய் வராது என நினைக்கிறேன். எழுத்தாளர் கதையை எந்தத் திக்கில் கொண்டு போகப் போகிறார் என்பதை ஓரளவு நாம் யூகித்தாலும், நாம் யூகம் செய்தது தவறாகவும் போகலாம். அவர் பார்க்கும் பார்வையிலேயே நாமும் பார்ப்பது என்பது சரியானதொரு விமரிசனத்தைக் கொடுக்க முடியாது என்பது என் தனிப்பட்ட கருத்து.
வைகோவைப் பொறுத்த வரை ஒரு சின்ன சிட்டம் நூலைக் கொண்டு ஒரு ஒன்பது கஜம் புடையையே பின்னி விடுகிறார். அதற்கு நடுவில் அதிக சம்பாஷணைகளை அமைக்காமல் தேவையானவற்றை மட்டும் அமைத்து வர்ணனைகள், சூழ்நிலைகள், மனோநிலைகள் எனக் காட்டுகிறார். என்னதான் கதைப் போக்கோடு அவை எலல்லாம் ஒட்டி அமைந்தாலும் கதையில் சொல்லப்படும் கருத்தை ஒட்டியே நம் விமரிச்னம் அமைய வேண்டும் அல்லவா? பல சமயங்களிலும் என்னால் அப்படி விமரிசனம் செய்ய முடியாமல் போயிருக்கிறது. தாயுமானவள் கதையில் அப்படித் தான் நேர்ந்தது. பிறகு தோன்றும். ஆனால் கதையை எழுதுபவரின் மனோநிலையோடு நாம் ஒன்றிப் போனோம் எனில் விமரிசனம் செய்ய வாய்ப்பே இல்லாமல் போய்விடுமே!
சாதாரணமாக நாம் ஒரு பதிவுக்கு யதார்த்தமாகக் கொடுக்கப்படும் கருத்துகளே வேறு கோணத்தில் பார்க்கப்பட்டு அதற்குக் கண், மூக்கெல்லாம் வைத்துச் சொல்லப்படுகிறது. இதில் ஒருத்தரின் கதைக்கு மட்டும் நாம் எப்படி கதாசிரியரின் கருத்தோடு ஒன்ற முடியும்? அப்புறம் விமரிசனம் எதற்கு? :)))))
கதாசிரியரின் மனோநிலையில் இருந்து விலகிப் பார்த்தோமானால் தான் கதைக் கருவின் மூலம், அதன் விரிவாக்கம், விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கும் முறை, சம்பாஷணைகளின் சிறப்பு, கதாநாயக, நாயகியரின் குணநலன்கள் ஆகிய அனைத்தும் புலப்படும். முக்கியமாக கதை எதற்காக, எதைச் சொல்ல எழுதப் படுகிறது என்பதையும் கவனிக்க வேண்டும். பல சமயங்களிலும் நம்மால்(அதாவது என்னால்) இதை உணர முடிந்தது இல்லை.
********************************************
இப்போ பலருக்கும் நேரம் சரியில்லை போல! பலரின் வாழ்விலும் பிரச்னைகள். இணைய நண்பர்கள் பலருக்கும் பல்வேறு விதமான குடும்பப் பிரச்னைகள், உடல் நலக்கேடு என்று இருக்கிறது. எங்களுக்கும் இப்போது இந்த வீடு மாறுதல் கொஞ்சம் பிரச்னையாகவே இருக்கிறது. இந்த மாதத்துக்குள்ளாக வீட்டை மாற்ற முடியுமா என்னும் கவலையில் இருக்கிறோம். முன்னெல்லாம் திட்டமிட்டால் ஓரளவு சின்னச் சின்ன மாற்றங்கள் இருந்தாலும் குறித்த நேரத்துக்குள் முடியும். இப்போதெல்லாம் எதையும் திட்டமிடவே முடியாமல் போகிறது. இதனால் அநாவசியமான கோப, தாபங்கள், பேச்சு, வார்த்தைகள் என்பவையே மிச்சம்.
எங்களோட நிலையைப் பொறியில் மாட்டிய எலியின் நிலை என்று சொல்லலாமா அல்லது சர்க்கஸில் சிங்கத்தின் வாய்க்குள் தலையைக் கொடுக்கும் கோமாளியின் நிலை என்று சொல்லலாமா என்று புரியவில்லை. இது எல்லாம் போச்சுன்னா இப்போ முகநூலில் ஜெயமோகனுக்காகச் சண்டை வேறு நடக்கிறது. அவர் மஹாபாரதத்தை "வெண் முரசு" என்னும் பெயரில் எழுத ஆரம்பித்தாலும் ஆரம்பித்தார். அவரோட ரசிகர்களின் அன்புத் தொல்லை தாங்க முடியலை. வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சித்தப்பாவை ஹரன் பிரசன்னா நார் நாராகக் கிழித்து விட்டார். :)))) இப்போதைக்கு முகநூலில் இதான் தலையாய பிரச்னை. நல்லவேளையாக முகநூலுக்கு எப்போதாவது தான் போகிறேன். அதை ஒரு வழக்கமாக வைத்துக் கொள்ளவில்லை. :)))))
இப்போதைக்கு இவையே என் எண்ணங்கள். அனைவரும் நலம் பெற்று வாழவேண்டும். எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும். அனைவர் மனதிலும் சாந்தி நிலவ வேண்டும்.

நீங்கள் சொல்வது போல் எனக்கும் உடல்நலம் சரியில்லை, ஆர்த்தோ, பிஸியோதெரபி என்று அலைந்து கொண்டு இருக்கிறேன்.
ReplyDeleteவை.கோபாலகிருஷ்ணன் சாரின் நினைவூட்டல் கடிதம் இல்லாமல் வெறிச்சோடிதான் போய் விட்டது.
//அனைவரும் நலம் பெற்று வாழவேண்டும். எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும். அனைவர் மனதிலும் சாந்தி நிலவ வேண்டும். //
நல்லபிரார்த்தனை. நானும் உங்களுடன் கலந்து கொள்கிறேன்.
சீக்கிரம் நல்ல வீடு கிடைக்க வாழ்த்துக்கள்.
வாங்க கோமதி அரசு, நீண்ட நாட்கள் கழித்து வந்திருக்கையில் உடல்நலம் சரியில்லை என்பது மிகவும் வருத்தத்தைத் தருகிறது. சீக்கிரம் உடல்நலம் அடையப் பிரார்த்தனைகள். ஜூன் மாதத்தில் இருந்து செப்டெம்பர் வரை எனக்கும் கால் சரியாக நடக்க முடியாமல் இருந்து வந்தது. இப்போது பரவாயில்லை. :))))
ReplyDelete//சீக்கிரம் நல்ல வீடு கிடைக்க வாழ்த்துக்கள்.//
ReplyDeleteநல்ல வீடாகவே கிடைத்து கிரஹப்ரவேசமும் பண்ணியாச்சு. சமையலறையில் மரவேலைகள் பதினைந்து நாட்களாக நடந்தும் இன்னமும் முடிந்தபாடில்லை. எல்லாம் தப்புத் தப்பாக நாம் ஒன்று சொல்ல அவர்கள் ஒன்று புரிந்து கொண்டு, பின்னர் அதை மாற்றி என ஒரே பிரச்னை. மனவேதனை! ஏண்டா தலையைக் கொடுத்தோம்னு ஆகிவிட்டது! :)))))
இதை முடிச்சுட்டு வெளியே வந்தால் போதும்னு இருக்கு! :))))
எல்லாம் தூசு. (சொல்றது சுளு)
ReplyDeleteயார் ஜெயமோகன்?
நல்ல வீடாகவே கிடைத்து கிரஹப்ரவேசமும் பண்ணியாச்சு.//
ReplyDeleteஓ! வாழ்த்துக்கள்.
சீக்கிரம் உடல்நலம் அடையப் பிரார்த்தனைகள். //
ReplyDeleteநன்றி உங்கள் பிரார்த்தனைகளுக்கு.
அடிக்கடி ஊர்களுக்கு போவதால் பதிவுகளை படிக்க தாமதம் ஆகிறது.
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே வேறொன்றறியேன் பராபரமே! என்ற தாயுமானவர் பாடல்தான் நினைவுக்கு வருகிறது! அனைவரும் இன்பமுடன் இருக்க இறைவனை வேண்டுவோம்!
ReplyDelete
ReplyDeleteஎல்லாக் கஷ்டங்களும் தீர வேண்டுகிறேன். விமரிசனம் எழுதுவார்கள் என்போர்க்கே கோபு சார் எழுதி இருப்பார் என்று எண்ணுகிறேன்ஜெயமோகன் முக நூலில் உங்கள் ஃப்ரெண்டா.?
வாங்க அப்பாதுரை, தூசு தான். அந்தத் தூசு கண்ணில் புகுந்து ஆபரேஷன் ஆன கண்ணில் ரங்க்ஸுக்கு எரிச்சல், கண் உறுத்தல், நீர் வடிதல்னு பிரச்னை. நேத்திக்குத் தான் கண் மருத்துவரைப் போய்ப் பார்த்தோம். :)
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றி கோமதி அரசு. வண்ணான் வீட்டுக்குப் போற வழி இன்னும் கொஞ்ச தூரம்னு இருக்கு இப்போ! :)
ReplyDeleteஅப்பாதுரை ஜெயமோகனை யார்னு தெரியாதா? சரியாப் போச்சு போங்க. வெண் முரசுங்கற பேரிலே மஹாபாரதத்தை எழுதிட்டு இருக்கார். ஒண்ணொண்ணும் ஆயிரம் பக்கங்களுக்கும் மேல் வரும் போல! :)))) நான் அதெல்லாம் படிக்கிறதில்லை. என்னோட சித்தப்பாவை அந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழாவுக்குக் கூப்பிட்டுவிட்டு அவர் அங்கே பேசியதை வைச்சு ஜெயமோகனின் ரசிகர்கள் அவரைக் கிழி கிழினு கிழிச்சுட்டாங்க. :)))))
ReplyDeleteஊரில் இருக்கையில் வாருங்கள் கோமதி அரசு.
ReplyDeleteஇந்த நார்ட்டன் செக்யூரிடி திடீர்னு ப்ளாக் பண்ணிடுச்சு. ஒரு நிமிஷம் பயந்துட்டேன் என்னவோ, ஏதோனு. அப்புறமா மெசேஜ் வந்தது. ஏதோ ஆவி வேலையாட்டமா திடீர்னு பக்கம் காணாமல் போச்சு! :)
ReplyDeleteவாங்க சுரேஷ், உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி.
ReplyDeleteவாங்க ஜிஎம்பி சார், ஜெயமோகன் எனக்கு நண்பரெல்லாம் இல்லை. முகநூலில் ஹரன் பிரசன்னா என்பவர் என் சித்தப்பா அசோகமித்திரனைத் தாக்கி எழுதி இருந்ததை ஜி+இல் நண்பர் ஒருத்தர் பகிர்ந்திருந்தார். அப்புறம் முகநூலில் எல்லோரிடமும் இதே பேச்சு. ஜெயமோகனைக் கடவுளாகச் சொல்லாத குறைதான்! :))) எனக்கு அந்த அளவுக்கு எல்லாம் ஜெயமோகன் எழுத்துகளில் ஈடுபாடு கிடையாது.
ReplyDeleteகணினிக்கு ஏதோ ஆயிருக்கு. செக்யூரிடி அல்ர்ட் மெசேஜ் வருது. நாளைக்கு எப்படினு தெரியலை. :(
ReplyDeleteம்ஹூம், இன்னமும் சரியாகலை. ஆனால் பதிவுக்குக் கொஞ்சம் கஷ்டப்பட்டு வர முடியுது. :(
ReplyDeleteபுது வீட்டுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஆஸ்பத்திரிக்குள் நுழைந்தாற்போல் இருக்கிறது! (ஜோக்கு...ஜோக்கு)
ReplyDeleteஅப்பாதுரைக்கு ஜெமோவை யார்னு தெரியலைங்கறதை நம்பிட்டீங்களா மேடம்/
எல்லோரும் சீக்கிரம் குணம் பெறவேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
ஜெமோ எழுதுவது ஒரிஜினல் மகாபாரதம்தானா? சகட்டுமேனிக்கு கமல் உட்பட எல்லோரும் பாராட்டுகிறார்கள். அவருடைய சில படைப்புகள் என்னை மிகவும் கவர்ந்திருக்கின்றன.
ReplyDeleteவாங்க புதுகை, நன்றிங்க
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தாற்போல் இருக்கு??
ReplyDeleteபுரியலையே???????
ஶ்ரீராம், ஜெமோ, அவர் இஷ்டத்துக்கு, அவர் கற்பனைக்கு மஹாபாரதம் என்னும் பெயரில் என்னத்தையோ எழுதுகிறார். இதைத் தடுப்பவர்களும் யாரும் இல்லை. அதான் கொடுமை. பின்னால் வரும் சந்ததியினர் இதை மூல நூல் என நினைக்காமல் இருந்தால் சரி. குறைந்த பட்சமாக ஒவ்வொரு புத்தகத்திலும் இது மூலம் இல்லை என அதைக் குறிப்பிடுவார்னு நினைக்கிறேன்.
ReplyDeleteசிறந்த திறனாய்வுப் பார்வை
ReplyDeleteதொடருங்கள்