ஒரு வழியா வீட்டை மாத்தியாச்சு. மரவேலை என்னமோ முடியலை. :( இன்னும் ஒரு வாரம், பத்து நாட்கள் இழுப்பாங்க போலிருக்கு. ஆனால் முக்கியமான வேலைகளை முடிச்சுட்டாங்க. ஆகவே திங்கட்கிழமையிலிருந்து சாமான்களை எடுக்க ஆரம்பித்து (எம்புட்டு சாமான்கள் னு இரண்டு பேருமே அதிசயித்தோம்!!!!!!!!!!!!!!!!!) வியாழக்கிழமை வரை எடுத்திருக்கோம். :P :P அன்னிக்கே சமைக்கவும் ஆரம்பிச்சாச்சு.
சென்னையிலிருந்து வந்தப்போக் கூட இவ்வளவு சிரமமாக இல்லை. குடியிருப்பு வளாகத்தின் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கம் மாறுவதற்கு இவ்வளவு சிரமமாக ஆகி விட்டது. 27- ஆம் தேதியிலிருந்து இணைய இணைப்பைத் துண்டிக்கச் சொல்லி எழுதிக் கொடுத்திருந்தோம். அதை 24 ஆம் தேதியே பி எஸ் என் எல் அலுவலகத்தில் கொடுக்க, அவங்க விட்டது தொல்லைனு 25 ஆம் தேதியே சொல்லாமல் கொள்ளாமல் முன் கூட்டிய அறிவிப்பெல்லாம் இல்லாமல் துண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்டிச்சுட்டாங்க. :( நமக்கும் வேலை சரியாக இருந்ததா, போகட்டும் விடுனு மனதைத் தேத்திண்டாச்சு.
இப்போவும் இன்னும் பிஎஸ் என் எல் இணைய இணைப்புக் கிடைக்கலை. இங்கே தொலைபேசி இணைப்பே நேத்துத் தான் வந்தது. அதிலும் தொலைபேசி அழைப்பு வந்தால் நாங்க பேசறது எதிர்த்தரப்புக் காரங்களுக்குக் கேட்குது. எங்களுக்கு அவங்க பேசறது கேட்காது. அவ்வளவு அழகா இருக்கு. இணைய இணைப்புக் கொடுப்பதற்கான ஜங்க்ஷனை பிஎஸ் என் எல்காரரால் கண்டு பிடிக்க முடியலை. வீடு கட்டும்போது இதுக்காக யார் வேலை செய்தாங்களோ அவங்க தான் வந்து கண்டு பிடிக்கணும். ஶ்ரீரங்கம் வந்தப்போவும் அவர் தான் வந்து கண்டு பிடிச்சுக் கொடுத்தார். இப்போ அவர் வெளியூரில் இருக்கார். வரப் பத்து நாளாகும். அதோட பிஎஸ் என்எல் இணைப்பு வரவும் புதன்கிழமை ஆகுமாம். ஆனால் பிஎஸ் என்எல் அலுவலகத்தில் ஷிஃப்டிங்கெல்லாம் நாட்கள் ஆகாது. உடனே இணைப்பு வந்துடும்னு சொல்றாங்க. :) க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ஆகவே தனியாரிடம் இணைப்பு வாங்கியுள்ளேன். இதிலே ஒரு வசதி என்னன்னா, பாட்டரி பேக் அப் கொடுத்திருப்பதால் மின்சாரம் இல்லைனா கூட உங்களை எல்லாம் துன்புறுத்தலாம் என்று உறுதிமொழி கொடுத்திருக்காங்க. பார்ப்போம். முதல்லே தனியார் வேண்டாம்னு நினைச்சேன். ஆனால் இப்போ ரொம்ப நாட்கள் இணையம் இல்லாமல் இருக்க முடியாது. ஒரு சில வேலைகளை, ஒரு சில கடிதங்களை இணையம் மூலமாகவே அனுப்ப வேண்டி ஆகிவிட்டது. அதோடு எனக்குமே முக்கியமான சில வேலைகளைச் செய்து முடிக்கணும். நல்லவேளையாகப் பணப் பரிவர்த்தனையெல்லாம் இணையம் வழியாகச் செய்வது இல்லை. :))))
காணோமேனு தேடி மடல் போட்டவங்களுக்கு நன்றி. புதுப் பெயின்ட், வார்னிஷ் வாசனை ஒத்துக்காமல் உடம்பு சரியில்லை. ஆனாலும் நேத்திக்கு இருந்ததுக்கு இன்னிக்குப் பரவாயில்லை. ஆகவே நம்ம அலம்பல் தொடரும்.
புதுவீட்டில் மகிழ்ச்சியாக எண்ணங்களை பகிர்ந்து கொண்டது சந்தோசம். பாட்டரி பாக்கப்போட இணையதள சேவை. அப்போ தினமும் எழுதுங்கள்...
ReplyDeleteWelcome...
ReplyDeleteTake care of your health.
வருகை பதிந்தாயிற்று இல்லையா....கலக்குங்கள்!
ReplyDeleteஸ்ரீராமை வழிமொழிகிறேன்.
ReplyDeleteWelcome. இணையத்திற்கான உங்கள் வருகை நல்வரவாகுக.
பிஎஸ்என்எல் வாழ்க! தனியார் சர்வீஸ் ^&*^%$
ReplyDeleteஇந்த வீட்டு சன்னலில் இருந்தும் காவேரி தெரியுமா?
ReplyDeleteஇணைய இணைப்பில் தனியார் சேவையும் நன்றாகவே உள்ளது.
வாங்க விச்சு, தினம் எல்லாம் என்னத்தை எழுதறது!! :)))) எனினும் தங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி.
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், ஶ்ரீரங்கம் வந்ததில் இருந்து அவ்வளவு மோசமா உடம்பு படுத்தலை ஒரே ஒரு முறை தவிர. அப்போவும், உ.பி.கோயிலுக்கு மலை ஏறியதில் தான் படுத்தேன். இப்போ இந்தப்பக்கம் ஏழு படிகள், அந்தப்பக்கம் ஏழு படிகள்னு நாலு நாட்கள் ஏறி ஏறி இறங்கினதில், பெயின்ட் வாசனை, வார்னிஷ் வாசனை எல்லாமும் ஒத்துக்காமல் உடம்பு படுத்தல். இன்னிக்குப் பரவாயில்லை. :))))
ReplyDeleteவாங்க துளசிதரன், ரொம்ப நன்றி.
ReplyDeleteவாங்க ஜீவி சார், உங்கள் அன்பிற்கு நன்றி.
ReplyDeleteவாங்க, வா.தி. தனியார் சர்வீஸ் பத்திச் சொல்லி இருப்பது புரியலை. ஆனால் இங்கேயே இந்த வளாகத்திலேயே கிட்டத்தட்ட 15, 20 வீடுகளில் இந்த இணைப்புத் தான் வைச்சிருக்காங்க. எங்க சொந்தக்காரங்க கிட்டத்தட்டப் பத்து வருடமாக இவங்க கிட்டேத் தான் இணைய இணைப்பு வாங்கி இருக்காங்க. பார்ப்போம். :)
ReplyDeleteவாங்க ராமலக்ஷ்மி, அதே வளாகம் தான். பி ப்ளாக்கில் இருந்து ஏ ப்ளாக்கிற்கு மாறி இருக்கோம். இங்கேயும் அதே நாலாவது மாடி தான். லிஃப்டுக்கு நிற்கையில் காவிரியைப் பார்த்துக் கொண்டு தான் நிற்கணும். வீடு இருக்கும் பகுதியைச் சுற்றிக் கொண்டு தான் காவிரி செல்கிறாள். இப்போ இரண்டு நாட்களாகத் தண்ணீர் விட்டிருக்காங்க போல. கொஞ்சம் நீர் ஓடுகிறது. :)
ReplyDeleteஅன்பு கீதா, ஒரு வழியாக, புது வீட்டுக்கு வந்தது பற்றி மிகச் சந்தோஷம் . இனியாவது தொந்தரவு இல்லாமல் இருக்கணும்.
ReplyDeleteவழக்கம் போல உங்களின் பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்! நாங்கல்லாம் எப்பவோ பி.எஸ். என்.எல் லுக்கு மூடுவிழா நடத்தி ஆச்சு!
ReplyDeleteஉங்கள் வரவு நல்வரவாகுக, இப்போது என்ன வீடு மாற்றம். சொந்த வீடா..?ஏதாவது செய்து கொண்டிருந்தால் உடம்பு படுத்தல் குறையலாம்( keep engaged)
ReplyDeleteவாழ்த்துகள்.....
ReplyDeleteவாழ்த்துக்கள்! தொடர்ந்து எழுதவும்.
ReplyDeleteவாங்க வல்லி, வேலை முடியலையேனு தான் கவலை. வேறென்ன! :(
ReplyDeleteவாங்க தளிர் சுரேஷ், நானும் முதல்லே டாடா இன்டிகாம் தான் வைச்சிருந்தேன். அவங்க படுத்திய பாட்டில் அவங்களை நான் விடறதா, அவங்க என்னை விடுவாங்களானு போட்டா போட்டி. ஒருவழியா அவங்களே சேவையை நிறுத்திட்டுக் கட்டின பணத்தைத் திரும்பக் கொடுத்தாங்க. அப்புறமா ஐந்து வருஷமா பிஎஸ் என் எல் தான். :)
ReplyDeleteவாங்க ஜிஎம்பி சார், ரொம்பவே முடியலைனாத் தான் நான் படுப்பேன். எல்லா வேலைகளையும் செய்து கொண்டு தான் இருக்கேன். :)
ReplyDeleteவாங்க வெங்கட், நன்றிப்பா.
ReplyDeleteவாங்க தமிழ் இளங்கோ ஐயா, மிக்க நன்றி.
ReplyDeleteஹப்பாடா!.. வந்தாச்சா?!.. நானே நினைச்சிட்டிருந்தேன்.. வீடு மாத்தற வேலை எல்லாம் முடிஞ்சுதா இல்லையான்னு!.. மர வேலை முடியலைன்னா எல்லாத்தையுமே உடனடியா அடுக்க வேண்டாம்.. திரும்ப திரும்ப தூசி அடையும்!..மரவேலைல இந்த தூசி தான் பெரிய பிரச்னை!.. புதுமனை, எல்லா விதத்திலும் தங்களுக்கு சந்தோஷத்தை அளிக்க பிரார்த்திக்கிறேன்!!!.
ReplyDeleteபுது வீட்டுக்கு போயிருக்கீங்களா? மகிழ்ச்சி. இறைவன் எல்லா நலன்களையும் கொடுக்கட்டும். வாழ்த்துக்கள்!
ReplyDeleteமீண்டும் இணைந்த கீதாம்மாவிற்கு வரவேற்புகள்
ReplyDeleteபுதுவீட்டுக்கு வந்துவிட்டீர்களா மகிழ்ச்சி.
ReplyDeleteஇங்கு எல்லா நலங்களுடன் வாழ வாழ்த்துக்கள்.(இணையம் சேவைகள் தொடர)
உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள் மெது, மெதுவாய் எல்லாம் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
வாங்க பார்வதி, எல்லாத்தையும் உடனடியா எங்கே எடுத்து வைக்கிறது! :))) சமையலறையை ஒழுங்காக்கியாச்சு. இன்னும் துணி அலமாரி, சாமி அலமாரினு மிச்சம் இருக்கு. அதுக்குள்ளே நாள் நல்லா இருக்குனு உள்ளே வந்தாச்சு. ஒரு பக்கம் ஆசாரிகள் வேலை, நடுவில் குடியிருப்புக்காரர்களின் எதிர்ப்புனு வேலை நடந்துட்டு இருக்கு. இன்னிக்கோ நாளைக்கோ முடியும்னு நம்பறேன். :)))
ReplyDeleteவாங்க ரஞ்சனி, வாழ்த்துக்கு ரொம்ப நன்றி. அரியலூர் தோசையை முடிச்சுடாதீங்க. :))))
ReplyDeleteஅட???முரளி????? இங்கே எப்படி??? வருகைக்கு நன்றிப்பா.
ReplyDeleteவாங்க கோமதி அரசு, ப்ராட்பேன்ட் இணைப்பு பிஎஸ் என் எல்லிடம் இருந்து இன்னமும் கிடைக்கவில்லை. தாமதம் ஆகும் போலிருக்கு. :))) பார்ப்போம்.
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDelete