ஐப்பசி மாதக் காவிரி ஸ்நானம் மனிதர்களுக்கான நமக்கு மட்டுமல்ல, அரங்கத்து நம்பெருமாளுக்கும் விசேஷமானது; பிடித்தமானது. தினசரிக் குளியலுக்குக் கொள்ளிடத்து நீரைப் பயன்படுத்தும் நம்பெருமாள் இந்த ஐப்பசி மாதம் மட்டும் காவிரி நீரைப் பயன்படுத்துவார். அதுவும் ரங்கராஜனின் பட்டத்து யானையான ஆண்டாளம்மா மேல் பட்டாசாரியார் உட்கார்ந்து கொண்டு தங்கக் குடத்தில் அந்த நீரைக் கொண்டு போவார். இது இந்த மாசம் முழுதும் தினசரி நடக்கும் காட்சி. ஐந்து மணிக்கே ஆண்டாள் காவிரிக்குப் போய் விடுவாள். அதன் பின்னர் ஐந்தே முக்கால் போல் பட்டாசாரியார்கள் செல்வார்கள். நடந்து வருவதாலும், ஆண்டாளின் வேகத்தோடு ஈடு கொடுக்க முடியாததாலும் அவர்கள் வருகை மெதுவாகவே நடைபெறும். திரும்பறச்சே பார்க்கணுமே. ஆண்டாளின் வேகத்துக்கு ஈடு கொடுத்து ஓடுவார்கள். :)
முந்தாநாள் தற்செயலாக வீட்டுக்கு வந்த உறவினர்கள் திரும்ப ஊருக்குச் செல்லும்போது கீழே வந்தப்போ ஆண்டாளைப் பார்க்க நேர்ந்தது. அப்போக் கையில் அலைபேசியும் இல்லை. காமிராவும் இல்லை. ஆகவே படம் எடுக்கலை. நேத்திக்குப் போக நினைச்சு முடியலை. இன்னிக்கு முன் கூட்டியே காத்திருந்து போய்ப் பார்த்து எடுத்து வந்த படங்கள் இவை.
வெள்ளிக்குடத்தில் தாயாருக்கு நீர் போகிறதுனு நினைக்கிறேன்.
அதோ ஆண்டாளம்மா. அவங்க மேலே தங்கக்குடம் காவிரி நீருடன்
இன்னும் கொஞ்சம் அருகே ஆண்டாளம்மா வந்துட்டாங்க.
அந்த அவசரத்திலும் ஆண்டாளம்மா கடைக்கண்களால் நம்ம பக்கம் பார்த்து ஒரு புன்னகை ஒண்ணு கொடுக்கிறாங்க.
கோயிலை நோக்கி வேக நடை போடும் ஆண்டாளம்மா. முன்னர் பழகிய பாகன் ஶ்ரீதரன் இல்லாமல் அடிக்கடி அவங்களுக்கு ஏக்கத்தில் உடம்பு படுத்தினாலும் ரங்கனின் சேவையை நிறுத்துவதில்லை. அதோடு புதுப் பாகனிடமும் மிகவும் கீழ்ப்படிதலுடன் நடந்துக்கிறாங்க என்பது கூடுதல் விசேஷம்,
நேரில் பார்க்காத குறை தீர்ந்தது!...ஆண்டாள் என்று பெயர் வைத்தாலே அரங்கனிடம் அன்பு பொங்கி வழியாதோ!:)))!... ரொம்ப நன்றி அம்மா!.
ReplyDeleteபடங்களுடன் நல்ல பகிர்வு. ஏன் ஸ்ரீதரன் இன்னும் இணையவில்லையாம்?
ReplyDeleteஆஹா அழகு. துலா மாத மந்தாரம். அதில் ஆண்டாளம்மாவின் கண்ணோர வீச்சு. மஹராஜியா இருடிம்மா.
ReplyDeleteஅருமையான படங்களும் பகிர்வும். ஆண்டாள் மிகவும் அழகாக ராஜமன்னாரை நோக்கிப் பயணம் போலும்!
ReplyDeleteattahasam!
ReplyDelete"அந்த அவசரத்திலும் ஆண்டாளம்மா கடைக்கண்களால் நம்ம பக்கம் பார்த்து ஒரு புன்னகை ஒண்ணு கொடுக்கிறாங்க."
ReplyDelete-very good observation..
மாலி
ReplyDeleteநல்ல படங்களுடனான பகிர்வு. உங்கள் ஆர்வம் பாராட்டத்தக்கது. வாழ்த்துக்கள்.
வாங்க பார்வதி, இரண்டு நாட்களாய்ப் படம் எடுக்க முடியாமல் போகிறதே என்ற கவலை! இன்றே தீர்ந்தது. :))) எங்கே உங்களை ரொம்ப நாட்களாய்க் காணோம்??
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், அறநிலையத் துறையும் கோயில் தர்மகர்த்தாக்களும் கருணை வைக்க வேண்டும். :)
ReplyDeleteவாங்க வல்லி, ஆண்டாளின் கண்ணோர வீச்சு எல்லாப் பக்கமும் பாயும். ரொம்ப நல்ல ஆனை.
ReplyDeleteவாங்க துளசிதரன். ஆண்டாள் ராஜமன்னாரை நோக்கிப் பயணிக்கவில்லை. ரங்கராஜனை நோக்கிய பயணம். ராஜமன்னார் ஶ்ரீவில்லிபுத்தூரில் அல்லவோ? :)
ReplyDeleteவாங்க ஜெயஶ்ரீ, அடிக்கடி பார்க்க முடியலை. வரவுக்கு நன்றி. இன்னிக்குத் தான் துளசியிடம் உங்களைப் பற்றி நாங்க விசாரித்தோம்.
ReplyDeleteநன்றி மாலி சார்.
ReplyDeleteவாங்க ஜிஎம்பி சார். ஆண்டாளைத் தினமும் பார்த்தாலும் படம் எடுக்க இன்று தான் வாய்ப்புக் கிடைத்தது. :)
ReplyDeleteபழமையான சம்பிரதாயங்கள் இன்றும் தொடர்வது மகிழ்ச்சி! படப்பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteபார்க்கக் கொடுத்ததற்கு நன்றி !
ReplyDeleteவாங்க சுரேஷ், ஓரளவுக்கு இங்கே கடைப்பிடிக்கப்படுகிறது என்று சொல்லலாம். :)
ReplyDeleteஅட?? ரிஷபன்?? அத்தி பூத்துடுச்சு போல! :))))
ReplyDeleteசிறந்த பக்திப் பதிவு
ReplyDeleteதொடருங்கள்
வாங்க காசிராஜலிங்கம், பக்திப் பதிவுனு சொன்னதுக்கு ரொம்ப நன்றி. பலரும் ஆன்மிக எழுத்தாளர்னு சொல்லும்போது கூசும். ஆன்மிகம்னாலே என்னனு தெரியாது எனக்கு. பக்தினு வேணா சொல்லலாம். அதுவும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அளவுக்கெல்லாம் இல்லை என்பது எனக்கு மட்டுமே தெரிந்த உண்மை.
ReplyDeleteபக்திப் பதிவுனு சொன்னதுக்கு மீண்டும் நன்றி. :))))
படங்களுடன் பதிவு அருமை.
ReplyDeleteஆண்டாளின் வேக நடையை படமாக்கி தந்தமைக்கு நன்றி.
How come Thulasi was there yesterday! they were supposed to be there on the fourth and fifth I thought.Have they left for chennai? Hope they too got to see andaalammaa theerthavaari. she came specially for that:))
ReplyDeleteமூன்று நான்கு மாதங்களுக்குப் பிறகு ஆண்டாள் தரிசனம்....
ReplyDeleteதுலா மாதம் மட்டும் தான் ரங்கனுக்கு காவிரி ஸ்னானம்..... அதனால் அவனுக்கும் மகிழ்ச்சி. ஆண்டாளுக்கும் மகிழ்ச்சி!
நன்றி கோமதி அரசு.
ReplyDeleteவாங்க ஜெயஶ்ரீ, துளசியின் நிகழ்ச்சி நிரல் நான் அறியாதது. சனிக்கிழமை இரவு தொலைபேசித் திருச்சியில் இருப்பதாய்ச் சொன்னாங்க. ஞாயிறன்று மதியம் வரலாமானு கேட்டாங்க. வந்துட்டுப் போனாங்க. நேற்றும் திருச்சி தான்னு நினைக்கிறேன். கேரளப் பயணம் முடிச்சுட்டு வந்ததாய்ச் சொன்னாங்க.
ReplyDeleteவல்லி சிம்ஹனும் இங்கே வந்திருக்காங்க. நாளைக்கு அநேகமாய்ப் போய்ப் பார்ப்பேன். :) இன்னிக்கு அவங்களுக்கும் நிறைய நிகழ்ச்சிகள். எனக்கும் இங்கே கொஞ்சம் வேலை. :)
ReplyDeleteவாங்க வெங்கட், ஆமாம் மற்ற மாதங்களில் கொள்ளிடத்து நீர் அரங்கனுக்குச் செல்லும். துலா மாசம் மட்டும் காவிரி நீர். வரவுக்கும், கருத்துக்கும் நன்றிப்பா.
ReplyDelete