எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, June 22, 2015

ரங்கு தரிசனம் கிடைச்சது!

ஒரு வழியா இன்னிக்குப் போய் ரங்குவைப் பார்த்துட்டேன். நேத்துத் தான் தினசரியில் அடுத்த வாரம் பவித்ரோத்சவம் எனப் போட்டிருந்தது. அதன் பின் ரங்குவுக்குத் தைலக்காப்புச் சாத்துவாங்க. அப்புறமா திருவடி தரிசனம் கிடைக்காது.  ஆகவே இன்னிக்குப் போய்ப் பார்த்துடலாம்னு காலம்பரத் தான் முடிவு செய்தோம். சாப்பிட்டு விட்டுக் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு (நான் வழக்கம் போல் கணினியில்) பின் 3 மணி போலக் கிளம்பினோம். ரங்கா கோபுரம் வழியாகச் செல்கையிலேயே "அம்மாவுக்கு வீல் சேர் வேணுமா?"னு ஊழியர்கள் கேட்க,( போன முறையும் கேட்டாங்க)அவ்வளவு மோசமாவா நடக்கிறோம்னு நினைச்சுட்டே வேண்டாம்னு மறுத்தேன்.

பின்னர் உள்ளே போகும்போதே கூட்டம் குறைவுனு புரிஞ்சது. இலவச தரிசனத்துக்கு மட்டும் கூட்டம் நின்றது. 50 ரூ, 250 ரூக்கு ஆட்களே இல்லை. 50 ரூ டிக்கெட் எடுத்துக் கொண்டு சென்றோம். பத்தே நிமிடங்களில் தரிசனம் ஆகிவிட்டது. உள்ளே நுழையும்போதே கோயில் ஊழியர் ஒருவர் பிடித்து நகர்த்த, "நான் இப்போத் தான் வரேன், தள்ளாதீங்க"னு நான் சொல்ல, உள்ளே நின்றிருந்த பட்டாசாரியார், "விழுந்துடப் போறாங்கப்பா!" எனக் கடிய என்னை தரிசனம் செய்ய அனுமதித்தார். நம்பெருமாளை ஒரு அவசரப் பார்வை பார்த்துக் கொண்டேன். அங்கே இன்னொரு பக்கம் பெரிய ரங்குவின் காலடியில் நின்ற யாகபேரரைப் பார்த்தாயா என நம்ம ரங்க்ஸ் கேட்க அவரையும் பார்த்துக் கொண்டேன். இன்னிக்குத் தான் இரண்டு பேர் முகத்திலும் உள்ள வித்தியாசம் நன்கு புரிந்தது.

நம்பெருமாளுக்குக் குறும்புச் சிரிப்பு. யாகபேரருக்குக் கொஞ்சம் கவலை கலந்த சிரிப்பு. அப்போதைய நிலைமை அப்படி. இவரைப் பிரதிஷ்டை செய்யும்போதே இவருக்குத் தெரிஞ்சிருக்கணும். நாம் தாற்காலிகம் தான் என்பது! அதோடு இல்லாமல் அப்போது மக்கள் மாற்றி மாற்றி வந்த ஆட்சியில் இவரும் படாத பாடு பட்டிருக்கார்.  இடமும் புதுசு, அநேகமா நம்பெருமாள் வந்தப்புறமா இவருக்கு "அப்பாடா!" என்று  இருந்திருக்கும்போல! அந்த நிம்மதி உணர்வும் முகத்தில் தெரியுது.  சுத்திட்டே இருந்ததாலே நம்பெருமாள் இப்போவும் அயராமல் வீதி உலாக் கிளம்பிடறார். இவராலே அது முடியாது. அதோடு என்ன வேணும் உனக்கு னு நம்பெருமாளும் நம்மைக் கேட்பார்; நாமும் உரிமையாக அவரிடம் என்னப்பா இது! னு சொல்ல முடியும். அதே யாகபேரரிடம் ஒரு விவரிக்க முடியாத மரியாதை தோணுது. கொஞ்சம் தீவிர சிந்தனையில் யாகபேரர் காட்சி அளிக்க நம்பெருமாள் எல்லாத்தையும் விளையாட்டாப் பார்க்கிறார்.

இங்கே தரிசனம் முடிஞ்சி தீர்த்தமும் வாங்கிக் கொண்டு தாயாரையும் பார்த்தோம். தாயாரை அதிக நேரம் பார்க்க விடலை! பின்னர் அங்கிருந்து கிளம்பி வழியில் வீட்டுக்குச் சில, பல சாமான்களை வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தோம். தங்க விமான தரிசனத்தின் போது கைபேசியில் படம் எடுக்க முயன்றேன். கீழே இருந்து கோயில் ஊழியப் பெண்மணி படம் எடுக்காதே எனச் சத்தம் போட அதிர்ச்சியில் கை கீழே இறங்க சுமாராகப் படம் வந்திருக்கு! பார்க்கலாம்! இன்னொரு முறை போனால் எடுக்க முடியுமானு! மற்றபடி இன்னிக்கு வேறே எந்த சந்நிதிக்கும் போகலை. இந்தக் கோயிலின் சந்நிதிகள் எல்லாத்தையும் பார்க்கணும்னா 2,3 நாட்கள் வேணும்.

20 comments:

  1. ஆஹா ரங்கா. காமிரா.மொபைல் எல்லாம் பறித்து வைத்துக் கொள்ளாமல் விட்டார்களே.
    நன்றி கீதாமா. யாகபேரர்,நம்பெருமாள் ,அனந்த சயனன் என்று வேறு வேறு அபினயங்களைச் சொல்லி இருக்கும் விதம் அற்புதம் பா.

    ReplyDelete
    Replies
    1. வடமாநிலக் கோயில்களில் தான் காமிரா, மொபைல், கைப்பைனு எதுவும் எடுத்துப் போகக் கூடாது. பல கோயில்களிலும் தோலால் ஆன இடுப்பு பெல்ட் கூட அணியக் கூடாது. இங்கே அதெல்லாம் இல்லை. யாகபேரர் பற்றி ஏற்கெனவே இரு முறை எழுதி இருக்கேன். ஆன்மிகப் பயணம் வலைப்பக்கத்திலும் குறிப்பிட்டு இருக்கேன். :)

      Delete
  2. கரிசனம் கிடையாதா என்று நீங்கள் பாடியது அரங்கன் விழுந்து தரிசனம் தந்து விட்டார் போல!

    :))))))

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், சில சமயம் ரங்கு தரிசனமே கொடுக்க மாட்டார். சில சமயம் அம்போனு காத்தாடிட்டு இருப்பார்.

      Delete
  3. தங்களால் எங்களுக்கும் இன்று ஸ்ரீரங்கநாதரின் தங்க விமானம் தரிஸனம் கிடைத்துள்ளதில் மிக்க மகிழ்ச்சி.

    //இந்தக் கோயிலின் சந்நிதிகள் எல்லாத்தையும் பார்க்கணும்னா 2,3 நாட்கள் வேணும்.//

    கரெக்டா சொல்லி விட்டீர்கள். :)

    //பின்னர் அங்கிருந்து கிளம்பி வழியில் வீட்டுக்குச் சில, பல சாமான்களை வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.//

    அந்த சில, பல சாமான்கள் வாங்கியது பற்றிய செய்திகள் .... அடுத்த பதிவிலா? :)

    ReplyDelete
    Replies
    1. வீட்டுக்குச் சாமான்கள் வாங்கியது பற்றியெல்லாம் பதிவு எழுத முடியுமா? :))) அதெல்லாம் கிடையாது!

      Delete
  4. யாக பேரர் இதுவரை நான் கேள்விப்படாதபெயர். இன்று முதல் நான் ஒரு வாரத்துக்கு வலைச்சர ஆசிரியர்.

    ReplyDelete
    Replies
    1. வலைச்சர ஆசிரியர் ஆனதுக்கு வாழ்த்துகள். இந்த யாகபேரரைத் தான் முதலில் நம்பெருமாளுக்குப் பதிலாகப் பிரதிஷ்டை செய்திருந்தார்கள். நம்பெருமாள் இருக்குமிடம் தெரிந்து அவரைக் கொண்டு வந்து ஶ்ரீரங்கம் சேர்ப்பித்ததும், இவரை என்ன செய்வது என யோசித்துக் கடைசியில் கருவறையிலேயே பெரிய ரங்குவின் பாதத்துக்கு அருகே பிரதிஷ்டை செய்துவிட்டார்கள். நீங்க ரங்குவின் தலைப்பக்கமாக நின்று திருவடியைப் பார்க்கும்போது தான் இவரின் தரிசனம் கிடைக்கும். இவர் கோயில் சம்பந்தப்பட்ட யாகங்களில் முதன்மை ஸ்தானத்தில் இருத்தப்படுவதால் யாகபேரர் என்னும் பெயர் சூட்டப்பட்டிருக்கார்.

      Delete
  5. கெமெராவுக்கு டிக்கெட் வாங்கினாலும் சில குறிப்பிட்ட பகுதிகளில் பயன்படுத்தத் தடை இருக்கு.

    இன்னும் பெருமாளை நான் சரியாவே பார்க்கலை:( கால் பார்த்தால் முகம் விட்டுப் போகுது. முகம் பார்த்தால் கால் விட்டுப்போகுது. இதுலே யாகபேரர்............ ஊஹூம்... நோ ச்சான்ஸ். ஒரு முழு நிமிசம் பார்க்க விட்டால் தேவலை!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், காமிராவை எடுத்துட்டுப்போயும் அனுமதி வாங்கியும் படம் எடுக்க முடியாத சூழ்நிலை இருந்திருக்கு. நேத்திக்கு என்னமோ தெரியலை! பெரிய ரங்கனுக்கு எங்க கிட்டே அனுதாபம் மேலிட்டிருக்கு போல! முழுசா ஒரு நிமிஷம் பேட்டி கொடுத்துட்டான்.

      Delete
  6. யாகபேரர் நான் அறியாத செய்தி! அறிந்து கொண்டேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. யாகபேரர் குறித்து ஏற்கெனவே எழுதி இருக்கேன் சுரேஷ். ஆன்மிகப் பயணம் பக்கத்திலும் பார்க்கலாம்.

      Delete
  7. வணக்கம் !

    பணம் கொடுத்துக் கடவுள் தரிசனம் கிடைப்பது இந்துக்களுக்கு மட்டும்தான் நல்ல முன்னேற்றம் !
    அருமையான பதிவு இறை ஆசி நல்கட்டும் எல்லோர்க்கும் வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. அரசாங்கம் செய்திருக்கிறது இப்படி. பிரஜைகளான நாம் அனைவரும் ஒற்றுமையுடன் எதிர்க்க வேண்டும். ஆனால் அங்கொன்றும், இங்கொன்றுமாகவே எதிர்ப்பு! என்ன செய்ய முடியும்! :(

      Delete
  8. அதுவும் அவனது இன்னருளே! அவன் மனது வைத்தால்தான் சேவிக்க முடியும்.
    ரங்க விமானத்தை மேலே போய் தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர்கள் நாங்கள். ஒருகாலத்தில் மேலே போய் தரிசிக்க -இலவசமாக - முடிந்தது. இப்போதெல்லாம் தூரத்திலிருந்து தான் சேவிக்க வேண்டும்.
    ஜெயா தொலைக்காட்சியில் மார்கழி மாதத்தில் தினமும் விமானத்தில் எழுந்தருளியிருக்கும் பரவாசுதேவனை அங்கம் அங்கமாகக் காண்பிக்கிறார்கள், பார்த்திருக்கிறீர்களா? ஆச்சர்யமான அனுபவம்!

    ReplyDelete
    Replies
    1. பிரணவ விமானம் மேலே ஏறும் பாக்கியம் பெற்ற உங்களை வணங்குகிறேன். இப்போல்லாம் விடறதில்லைனே நினைக்கிறேன். ஜெயா தொலைக்காட்சியில் மார்கழியில் மட்டும் தானே பார்க்கலாம். விஜய் தொலைக்காட்சியில் தினம் காலை 5 மணியிலிருந்து ஐந்தே கால் வரை ஶ்ரீரங்கம் தான் தரிசனம். :)

      Delete
  9. அறியாத தகவல் அம்மா... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி டிடி. வருகைக்கு நன்றி. காணோமேனு நினைச்சேன்.

      Delete
  10. உங்கள் தளம் எனது reader-ல் எப்படி விட்டுப் போயிற்று என்று தெரியவில்லை... இப்போது மறுபடியும் சேர்த்து விட்டேன்... இனி தொடர்கிறேன் அம்மா...

    ReplyDelete
    Replies
    1. கூகிள் தினம் ஒன்றை மாற்றுகிறதே, அதனால் இருக்குமோ?

      Delete