எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, December 22, 2015

போதும்டா சாமி! ஆளை விட்டால் போதும்! :(

ஒரு வழியா வந்து சேர்ந்துட்டோம். எங்கே போனேன்னு நினைக்கறீங்க? ஜக்குவைப் பார்த்துட்டு அப்படியே காளியம்மாவையும் பார்க்கணும்னு கிளம்பினோம். கிளம்பும்போதே சோதனை மேல் சோதனை! :( பயணச் சீட்டு உறுதியாகவில்லை. ஆகவே கீழ்ப் படுக்கை இருக்கை கிடைக்குமா கிடைக்காதா என்ற சந்தேகத்தில் இருந்தோம். ஒன்று கிடைத்தால் கூடப் போதும், நான் எப்படியோ பார்த்துக்கறேன்னு ரங்க்ஸ் சொல்லிட்டிருந்தார்.  கிளம்ப இருநாட்கள் இருக்கையில் இருக்கையை உறுதி செய்து செய்தி அலைபேசிக்கு வந்தது. ஆனால் அதில் படுக்கை இருக்கை எண்கள் இல்லை, கடைசியில் கிளம்புகையில் அலைபேசியில் தகவல் வந்தது, இரண்டுமே மேல்ப் படுக்கை இருக்கை என்று. அப்போதே கிளம்பும் உற்சாகம் வடிந்து விட்டது. என்றாலும் பயணச் சீட்டு வாங்கியாச்சு. தொலைதூரப் பயணம். நம்ம ரங்க்ஸுக்குப் பல வருடங்களாகக் காத்திருந்த பயணம். நான் தான் ஒவ்வொரு தரமும் ஒவ்வொரு காரணம் சொல்லி மறுத்துக் கொண்டு வந்திருந்தேன். ஆகவே இம்முறை பல்வேறு காரணங்களாலும் மறுக்க இயலாத சூழ்நிலையும் கூட! ஒரு வழியாகக் கிளம்பியாச்சு.

வழிக்கு வேண்டிய சாப்பாடைத் தயார் செய்து கொண்டு, பாத்திரங்களை எல்லாம் சுத்தம் செய்துவிட்டுப் பிள்ளையாரிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பி ஶ்ரீரங்கம் ஸ்டேஷனுக்குப் போயாச்சு. வண்டி ஶ்ரீரங்கம் வழியாகப் போவதால் அங்கே இரு நிமிடங்கள் நிற்கும். அங்கேயே ஏறிக்கலாம். மாலை நாலு இருபதுக்கு வண்டி வந்துவிட்டு நாலு இருபத்து மூன்றுக்குக் கிளம்பும். காத்திருந்தோம். வேறு சில வண்டிகளுக்கான அறிவிப்புகள் வர இந்த வண்டிக்கான அறிவிப்பே வரவில்லை.  கொஞ்சம் கவலையாகவே இருந்தது. ஏனெனில் இது வாரம் ஒரு முறையே செல்லும் வண்டி. ரத்து செய்துவிட்டார்களோ என்னும் எண்ணம் வந்தது. முதல் வாரம் தான் சென்னைப் பெருவெள்ளத்தின் காரணமாக இந்த வண்டி ரத்து செய்யப்பட்டிருந்தது. அதை நினைத்துக் கொண்டிருக்கையிலேயே நாங்க காத்திருந்த நடைமேடைக்கு ஒரு வண்டி வரும் சப்தம் கேட்டது.  ஏதோ சரக்கு வண்டியாக இருக்கும் என ரங்க்ஸ் சொல்ல இல்லை, நம்ம வண்டிதான் என நான் சொல்லக் கடைசியில் நடைமேடைக்கு வண்டி வருகையில் பார்த்தால் கடவுளே! நாங்க போக வேண்டிய வண்டி தான்.

அப்படியும் ரங்க்ஸுக்கு சந்தேகம் வந்தது! அறிவிப்பே வரலையே என அங்கே வண்டிக்குள் நின்றிருந்த ஒரு பெண்ணிடம் கேட்க அவள் உறுதி செய்தாள். அது மூன்றாம் வகுப்புக் குளிரூட்டப்பட்ட பெட்டி. நாங்க போக வேண்டியது இரண்டாம் வகுப்புக் குளிரூட்டப்பட்ட பெட்டிக்கு. அது எங்கேயோ இருந்தது. ஆகவே அந்தப் பெண்ணிடமே சாமான்களைக் கொஞ்சம் வாங்கி வைக்கச் சொல்லிவிட்டு இருவரும் வண்டியில் ஏறினோம். அங்கிருந்த ரயில்வே ஊழியரிடம் ஏ2 எங்கே எனக் கேட்க இந்த பி1, பி2, பி3 மூன்றையும் தாண்டிச் செல்ல வேண்டும் என அவர் சொல்லக் கஷ்டப்பட்டுக் கொண்டு சாமான்களைத் தூக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தோம். இதுக்கு முன்னால் இதைவிட அதிகமான சாமான்களைத் தூக்கி இருக்கோம் தான். ஆனால் அப்போ உடல், மனம் இரண்டுமே தெம்பாக இருந்தது. இப்போ அப்படி இல்லையே! சிரமமாகத் தான் இருந்தது. ஒரு வழியாக முக்கி, முனகிக் கொண்டு ஏ2 பெட்டிக்குப் போனோம். எங்கள் படுக்கை இருக்கை எண், 2,4 ஆகவே அங்கே சென்று பார்த்தால் 1,3 படுக்கை இருக்கைகளில் எங்கள் வயதையே ஒட்டிய கணவன்,, மனைவி, ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள் அந்தப் பெட்டி முழுவதும் சாமான்களைப் பரப்பிவிட்டுக் குடித்தனமே நடத்திக் கொண்டிருந்தார்கள்.

மாலை 4-30 மணி கூட ஆகவில்லை. படுக்கையும் போட்டுவிட்டு இருவரும் படுத்துக் கொண்டிருந்தார்கள். நாங்கள் நுழைவதைப் பார்த்துவிட்டு எங்களைப் பரம விரோதியைப் பார்ப்பது போல் பார்த்தார்கள். நாங்கள் எங்கள் படுக்கை இருக்கை எண்களைச் சொல்லவும் அரை மனதாக அந்த அம்மாள் அவர் கால்களைக் கொஞ்சமாக மடக்கிக் கொண்டு  எனக்குக் கொஞ்சம் போல் உட்கார இடம் கொடுத்தார்.  ரங்க்ஸ் நின்று கொண்டே இருந்தார். அந்த மனிதர் எழுந்திருக்கும் வழியாகத் தெரியவில்லை. அதுக்குள்ளாக  பயணச் சீட்டுப் பரிசோதிக்கும் ஊழியர் வந்து அவரை நகர்ந்து கொள்ளச் சொல்லிவிட்டு எங்கள் சீட்டுக்களைப் பரிசோதித்துவிட்டுக் காலியான இடத்தில் ரங்க்ஸை உட்காரச் சொல்லிவிட்டுச் சென்றார். ரங்க்ஸ் அவர் பின்னாலேயே போய் ஒரே ஒரு கீழ்ப்படுக்கை இருக்கையைக் கொடுக்கும்படி மிகவும் வேண்டிக் கேட்டுக் கொண்டார். அப்படிக் கிடைக்கலைனால் நான் உட்கார்ந்து கொண்டே வரேன் என நான் அறிவிப்புச் செய்தேன்.

ராஜஸ்தானிய ஜோடிக்குக் கவலை பிய்த்துக் கொண்டிருக்கிறது போல! என்னை டிடியிடம் நீயே போய்க் கேள், வண்டியில் நிறைய இடம் இருக்கிறது. பதினைந்தாம் எண்ப் படுக்கையிலிருந்து காலி தான். அங்கே போய் உட்கார் என என்னைக் கிளப்பிக் கொண்டிருந்தார்கள். நான் அசையவே இல்லை. அவங்களும் சாப்பிடப் போகிறோம் என்றெல்லாம் அறிவிப்புக் கொடுத்துப் பார்த்தனர். பழங்கள், பிஸ்கட்கள் எனப் பெட்டியிலிருந்து வரிசையாக வந்து சாப்பிடவும் ஆரம்பித்தனர். நான் முகத்தை வெளியே வைத்துக் கொண்டு திரும்பி உட்கார்ந்து விட்டேன். அதுக்குள்ளே ரங்க்ஸ் வந்து விழுப்புரம் வந்ததும் தரேன்னு சொல்லி இருக்கார் எனச் சொல்லி அந்த ராஜஸ்தான் ஜோடியின் ஆண் நபர் அருகே உட்கார்ந்தார். அந்த நபர் உடனே தன் காலைக் காட்டித் தனக்கு இருதய அறுவை சிகிச்சை ஆகி இருப்பதாகவும் காலை மடக்க முடியாது என்றும் தெரிவித்தார்.  நாலு மணிக்கே எப்படி மேலே போய் உட்காருவது?

ரங்க்ஸுக்கு மேலே போகும்போது உள்ளே நுழையவே தலை இடிக்கும். அதோடு உட்காரவும் முடியாது அவரால். படுத்துக்கத் தான் வேணும். நான்கரை, ஐந்துக்கேவா படுக்கிறது. கிடைச்ச இடத்தில் ஒண்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.  கொண்டு போன சாப்பாடை எடுத்துச் சாப்பிடக் கூட மனசு வராது போல் இருந்தது.  என்ன செய்ய முடியும்?

16 comments:

  1. யார் அந்த ஜக்கு+ காளியம்மா.?

    ReplyDelete
    Replies
    1. ஹா,ஹா, பொறுத்திருந்து பாருங்க ஐயா! :)

      Delete
  2. என்ன கொடுமை.. வட இந்தியர்கள் ரயில் பிரயாணத்தில் செய்யும் அராஜகங்கள் குறித்து ஏற்கெனவே படித்தவைகளும் நினைவுக்கு வருகின்றன. கையில் கொண்டு செல்லும் சுமையைக் குறைக்கக் கூடாதோ..

    ReplyDelete
    Replies
    1. ஹூம், இங்கே பரவாயில்லை! பிஹாரில் நம்மோட இருக்கையில் நம்மை உட்காரவே விடமாட்டாங்க! அங்கே டிடிஆர் சொன்னாலும் நடக்காது! :)

      Delete
  3. ஒழுங்கா முன்னாடியே புக் பண்ணறதுக்கென்ன? கீழ் பெர்த் கிடைக்கலேன்னு இன்னொரு நாள் போறது! எங்க ரங்குவை இப்படி படுத்தி இருக்கீங்க? கற்ற்ற்ற்ற்ற்ற்ற்!

    ReplyDelete
    Replies
    1. 120 நாட்கள்னு ரயில்வே சொல்லுது. நாங்க ஒரு பத்து நாட்கள் தாமதமாக 110 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு பண்ணினோம் தம்பி! :)அப்போவே காத்திருப்போர் பட்டியலில் போட்டுட்டாங்க. :)

      Delete
  4. பூரி ஜகந்நாதர் தரிசனம் நல்லபடி நடந்ததா?!...

    உங்கள் பயண அனுபவம் வருத்தம் தந்தது.நாங்களும் இது போல் பல தடவைகள் பட்டிருக்கோம்... ஒரு முறை, ஒரு வட இந்தியக் குடும்பம், எங்கள், கீழ் படுக்கையில், இது போல் குடித்தனமே நடத்திக் கொண்டு, எங்களை வேறு படுக்கைக்குப் போய் உட்காருங்கள் என்று கை காட்டி விட்டு அடமாக கால் நீட்டி உட்கார்ந்திருந்தார்கள். எங்களை உட்காரவே விடவில்லை. மற்றொரு முறை, காசிக்கு போன போது, காலை வேளையிலேயே, மிடில் பெர்த்தைப் போட்டு, படுத்துக் கொண்டு வேண்டுமென்றே ஒருவர் படுத்தினார். உயரம் அதிகமான என் மாமனாருக்கு கீழ்ப் படுக்கை.. அவரால் சரியாக உட்கார முடியாமல் குனிந்தவாறே அமர்ந்து வந்தார். திரு.ஸ்ரீராம் அவர்கள் சொல்வது போல், வட இந்தியர்களின் அட்டகாசம் என்பது சரியோ என்றே தோன்றுகிறது..

    ReplyDelete
    Replies
    1. ஜக்கு சமத்தாக இருக்கார், அண்ணாவோடயும், தங்கச்சியோடயும். :)

      Delete
  5. ஆரம்பம் உற்சாகமாக இருக்குமே கீதாவிஉன் பதிவுகளில் என்று நினைத்துக் கொண்டுவந்தேன்..
    இதென்ன அட்டூழியம். எப்படித்தான் சகித்துக் கொண்டீர்களோ.
    பகவான் தரிசனமாவது நல்லபடியாகக் கிடைத்திருக்க வேண்டும்
    என்று நம்புகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அதை ஏன் கேட்கறீங்க! ஒரே படுத்தல் தான் இந்தப் பயணம்! :(

      Delete
  6. மழை வெள்ளம் சமயம் கணிணியும் பாதித்துவிட்டது! நீண்டநாளுக்கு பிறகு இன்று உங்கள் பக்கம் வருகை! பூரி ஜகன்னாதர் ரொம்பவே சிரமப்படுத்திட்டார் போலிருக்கே! என்ன இருந்தாலும் ரங்க்ஸ் மாதிரி வராதில்லையா?

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம் ஜக்கு அவரைப் பார்க்கச் சிரமப்படுத்தவில்லை. பயணம் தான் சிரமமாகப் போய்விட்டது! :)

      Delete
  7. ’என் உடம்பெல்லாம் உப்புச்சீடை’ கதைபோலவே ( http://gopu1949.blogspot.in/2014/02/vgk-06.html ) தங்களின் இரயில் பயண அனுபவம் சுவையாக ஆரம்பித்துள்ளது. நல்ல நேரேஷன். தொடரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹிஹி, நன்றி, நன்றி. தொடருவேன்!

      Delete
  8. ம்ம் ஆரம்பமே ஒரு பனிப்போருடன் போல இருக்கே...ஹஹஹ் சில சமயங்களில் வட இந்தியப் பயணத்தில் மக்கள் இப்படித்தான்...தொடர்கின்றோம்.

    பயணத்திற்குப் பிறகு வருகை உங்கள் பக்கம். ஒவ்வொரு தளமாக வருகிறோம். மின் அஞ்சலுக்கு வந்துமுட்டி நின்றவைகளைப் பார்த்துவிட்டு...அப்படியெ நீங்களும் ஒரு இமெயில் சப்ஸ்க்ரிப்ஷன் கொடுக்க முடியுமா?

    ReplyDelete
    Replies
    1. வாங்க துளசிதரன்/கீதா, நீங்களும் பயணத்தில் இருந்தீர்களா? வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete