எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, December 08, 2015

அன்னமூர்த்தியைப் பிரார்த்தித்துக் கொண்டேன்!



இன்னமும் சென்னையில் நிலைமை சரியாகவில்லை. என் தம்பியோடு ஞாயிறன்று பேச முடிந்தது. சம்பந்திகள் மற்றும் நாத்தனார் ஆகியோரோடு பேச முடிந்தாலும் அவ்வளவு சுலபமாக இல்லை! :(  இது போல் இன்னும் எத்தனை பேர் தவிக்கிறீர்களோ தெரியலை. இப்போ இரு நாட்களாக இங்கேயும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.  சென்னையிலும் இன்னும் மழை பெய்யும் என்று சொல்கிறார்கள். கவலையும், பயமுமாக இருக்கிறது. யாருக்காகக் கவலைப்படுவது என்றே புரியாமல் ஒரே குழப்பமாகவும், பயமாகவும் உள்ளது. அந்த ஆண்டவன் ஒருத்தன் தான் துணை என நினைத்துக் கொண்டு அவனைச் சரண் அடைந்தோம். கும்பாபிஷேஹம் ஆனப்புரம் கோயிலுக்கே போகலை. பெரிய ரங்குவையும், நம்பெருமாளையும் பார்த்து ஏன் இப்படினு கேட்கணும்! எல்லோரையும் காப்பாத்துனு சொல்லணும். ஆகவே போகணும், போகணும் என நினைச்சது கடைசியில் நேற்று வாய்த்தது. மதியம் இரண்டு மணிக்கு மேல் கிளம்பினால் நாலுக்குள் வந்துடலாம்னு நினைச்சுக் கிளம்பினால் மழை கொட்ட ஆரம்பித்தது.

அவ்வளவு தான் என நினைத்து உட்கார்ந்துவிட்டோம். சிறிது நேரத்துக்கெல்லாம் மழை நின்றது. நம்ம ரங்க்ஸ் ஆட்டோ வைச்சுண்டு போயிடலாம்னு சொன்னார். ஆகவே ஆட்டோ வைத்துக் கொண்டு ரங்கா கோபுரம் அருகே இறங்கிக் கொண்டோம். மழை தூறிக் கொண்டு இருந்தது.  எனினும் மேலே சென்றோம். தாயார் சந்நிதிக்குச் செல்லும் வண்டி நின்றிருக்கவே முதலில் அங்கே போகலாமானு ரங்க்ஸ் கேட்டார். அங்கே போயிட்டு வரதுக்குள்ளே இங்கே முதியோருக்கான நேரம் வந்துடும்/கூட்டம் அதிகம் ஆகும் என்பதால் முதலில் இங்கே முடிச்சுக்கலாம் எனச் சொன்னேன். சரினு முதலில் பெரிய ரங்குவைப் பார்க்கவே போனோம்.  போகும்போதே துளசி குறிப்பிட்ட அன்னமூர்த்தியைப் பார்க்கணும்னு எண்ணம். எந்த இடம்னு சரியாப் புரியலை. கொடிமரத்துக்கிட்டேவா? கருட மண்டபமானு யோசித்துக் கொண்டே போனேன்.

உள்ளே போகிறதுக்குள்ளே கொடி மரத்தின் அருகிலேயே உள்ளே செல்லும் வழியை மாற்றி அமைத்திருந்தார்கள். தர்ம தரிசனம் செல்லுபவர்கள் இடப்பக்கமாகவும் பணம் கொடுத்து தரிசனம் செய்பவர்கள் வலப்பக்கமாகவும் செல்லவேண்டும் என்றிருந்தது. எப்போவும் உள்ளே போய்த் தான் உள் பிரகாரத்தில் பிரித்திருப்பார்கள். இது இப்போவே வளைந்து வளைந்து சென்றது. ரொம்பவே சிரமமாக இருந்தது. எனினும் சென்றோம். சீட்டு வாங்கும் இடத்துக்கு வரவே மூன்று சுற்றுக்கு மேல் சுற்ற வேண்டும்! :( 50 ரூச் சீட்டு வாங்கிக் கொண்டு சென்றோம். நல்லவேளையாக உள்ளே கூட்டம் அதிகம் இல்லை. நேரே துவாரபாலகர்கள் வாயிலுக்கு(சந்தனு மண்டபம்) சென்றோம். அங்கே சிறிதே நேரம் காத்திருக்க விரைவில் குலசேகரன் வாயிலையும் அடைந்தோம். வழக்கப்படி போகும்போதே பெரிய ரங்குவின் முக தரிசனத்தையும், நம்பெருமாளையும் பார்த்துக் கொண்டேன். உள்ளே சென்றதும் சிறிதே நிற்க அவகாசம் கிடைக்க அந்த அவகாசத்தில் பெரிய ரங்குவின் திருவடியையும் திருவடிக்கு அருகே இருக்கும் யாகபேரரையும் பார்த்துக் கொண்டேன். உபய நாச்சியார்களையும் பார்க்கையிலே இன்ப அதிர்ச்சி. ஒரு பட்டாசாரியார் எனக்குச் சடாரி சாதித்தார். பெருமாள் சந்நிதியில், பெருமாளுக்கு எதிரேயே சடாரிப் பிரசாதம் கிடைத்தது உண்மையிலேயே ஆனந்தமாக இருந்தது எனில் அடுத்த ஆனந்தம் இன்னொரு பட்டாசாரியார் அங்கேயே துளசிப் பிரசாதமும் கொடுத்தார்.

நம்ம ரங்க்ஸுக்கும் எல்லாமும் கிடைத்தது. மன நிறைவுடன் பெரிய ரங்குவுக்கும், நம்பெருமாளுக்கும் நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினோம். நம்பெருமாளைப் பார்த்துச் சிரிக்க முடியலை! :( மனம் வருத்தமாக இருந்தது. அனைவருக்காகவும் பிரார்த்தித்துக் கொண்டு வெளியே வந்து தீர்த்தப் பிரசாதம் வாங்கிக் கொண்டு தாயார் சந்நிதிக்குக் கிளம்பினால் கடவுளே!

அர்ஜுன மண்டபம், கிளி மண்டபம் வழியாகச் சென்ற வழி முற்றிலும் அடைக்கப்பட்டு கர்பகிருஹத்திற்குப் பின்னர் இருக்கும் வடக்கு வாயிலில் உள்ள தொண்டைமான் மேடு வழியாக வெளியே அனுப்பிக் கொண்டிருந்தார்கள். தொண்டைமான் மேடு உண்மையிலேயே மே ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏடு! குறைந்தது பத்துப்படியாவது ஏறணும். நல்லவேளையாக நடுவில் உள்ள தடுப்பில் கயிறு கட்டி இருக்க அதைப் பிடித்த வண்ணம் எல்லோருமே ஏற வேண்டி இருந்தது. இல்லை எனில் அந்தக் குறுகிய படிகளில் வழுக்கும். முழங்கால் முறியும். மேலே ஏறினால் பிரணவ விமானத்தின் இன்னொரு பக்கத்தின் தரிசனம் கிடைத்தது. அது தான் மேலே பகிர்ந்து இருக்கேன். எப்போவும் பர வாசுதேவரின் பக்கவாட்டுப் பக்கமே எடுக்க முடியும். இப்போ மூலஸ்தானத்தின் நேர் பின் பக்கம் எடுக்க முடிந்தது. அந்த வழியாக வெளியே வந்தால் தாயார் சந்நிதி போகப் பிரகாரம் சுற்றி வர வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். இது வரையிலும் பிராகாரம் சுற்றியதே இல்லை. இன்று அந்த ஆவலும் பூர்த்தி ஆகி விட்டது. பிராகாரம் சுற்றிக் கொண்டு கொடிமரத்தின் அருகே வரவேண்டும். அப்போது என்ன ஆச்சரியம்!

நான் பார்க்க நினைத்த அன்னமூர்த்தி சந்நிதி எதிரே பிரகாரம் முடியும் இடத்தில்! ஆச்சரியம் மேலோங்க படம் எடுக்கலாம்னு நினைச்சு நம்ம ரங்க்ஸைத் தேடினால் கொடிமரம் கிட்டேப் போயிட்டார். கத்திக் கூப்பிடணும்! சரி, இருக்கும் இடமோ தெரிஞ்சாச்சு! இன்னொரு நாள் படம் எடுத்துக்கலாம்னு விட்டுட்டேன்! துளசி எடுத்த படத்தைக் கீழே பகிர்கிறேன்.



அன்னமூர்த்தி என்றால் பிரம்மாவாம். ஆக பிரம்மாவும் இங்கே கோயில் கொண்டிருக்கார் போலனு நினைச்சால், சங்கு, சக்கரத்தோடு காட்சி அளிக்கிறார். இவரைக் குறித்த மேல் அதிகத் தகவல்களைத் திரட்டணும். அதன் பின்னர் வெளியே வந்து தாயார் சந்நிதிக்குச் செல்லத்தயாராக இருந்த வண்டியில் ஏறித் தாயாரைப் பார்க்கச் சென்றோம். தாயார் எப்போதும் போல் விரைவில் அருள் பாலித்தாள். மஞ்சள் பிரசாதம், தீர்த்தம், சடாரி வாங்கிக் கொண்டு கிளம்பினோம்.  தாயாரைப் பார்த்துவிட்டுத் திரும்புகையில் ஒரு சில கடைகளில் சில, பல பொருட்களையும் வாங்கிக் கொண்டு வீடு திரும்பினோம். நடை அதிகமாகப் போய்விட்டது நேற்று! மழை வேறு! ஆகையால் ரொம்பக் களைப்பாகப் போய் விட்டது! 

16 comments:

  1. நன்றி நன்றி நன்றி கீதா. முயற்சியின் விளைவு மகிழ்ச்சியே.
    அன்ன மூர்த்தி வெள்ளத்தைத் தடுத்தௌ நெற்போகத்தைக் குவிக்கட்டும். அன்பு வணக்கங்கள்..உடல் நலம் சரியாக வேண்டும் மா.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி. நன்றி.

      Delete
  2. எல்லாம் சீக்கிரம் நல்லபடி ஆகவேண்டும் என்ற எங்கள் பிரார்த்தனையும்...

    உங்கள் உடல்நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  3. ரொம்ப சந்தோஷம் கீதா. இனி வாழ்நாள்வரை ஒரு பிடி அன்னத்துக்குக் குறைவே இல்லை! கால் வலி தேவலையா? ஃபிப்ரவரி வரச்சொல்லிட்டான் ரெங்கன். மறக்காம யாகபேரரைப் பார்க்கணும்.

    ReplyDelete
  4. உடலின் உபாதையையும் மீறி தரிசனம் செய்யும் உங்களுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. அனைவரும் நலம் பெற வேண்டுவோம் இந்த மழை மதவாதத்தை ஒழித்திருக்கின்றது என்பது எனது கருத்து

    ReplyDelete
    Replies
    1. இன்று இங்கே சூரியன் கொஞ்சம் எட்டிப் பார்த்தான்! பின்னர் மறுபடி காணாமல் போய்விட்டான். :(

      Delete
  6. அனைவரின் நலனுக்காக பிரார்த்தனை செய்து வந்தது மகிழ்ச்சி. எல்லோரும் நலம்பெறவேண்டும் ரங்கா.
    உடல் நலத்தைப்பார்த்துக் கொள்ளுங்கள். சென்னையில் உள்ள எங்கள் உறவினர் மூலமாய் குடும்பத்தினர் அனைவரும் அவர்களால் ஆன பொருள் உதவி செய்தோம். மனதுக்கு நிம்மதி அளித்தது. ராமருக்கு அணில் உதவி செய்தது போல்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோமதி. இங்கேயும் குடியிருப்பு வளாகத்தில் பொருட்கள் சேகரித்து வழங்கப்பட்டது!

      Delete
  7. நாத்தனார் குடும்பமெல்லாம் ரொம்பவே கஷ்டப்பட்டுட்டாங்க... மூணு நாள், புழங்க, குடிக்க தண்ணீர் இல்லை. உணவு இல்லை.. ரெண்டு வயசானவங்க, (80, 82 வயது) அவங்க கஷ்டம் சொல்லி முடியாது.. யாரையும் தொடர்பு கொள்ளவே முடியலை.. ஒரு உறவுக்காரப் பையர், சென்னையில் வேலை செய்பவர், அலுவலகத்தில் தண்ணீர் புகுந்ததால், ஜன்னல் வழியாகக் குதித்து வெளியே நீந்தி வந்து, போட், லாரி, பேருந்துகள் என்றெல்லாம் பயணம் செய்து, ரெண்டு நாட்களுக்கப்புறம் ஊர் வந்தார். முழுப் பட்டினி!.. பணம் எடுக்க இயலாததால், இருக்கும் பைசாவை டிக்கெட்டுக்கு செலவு செய்திருக்கிறார்!. இப்படி பல கதைகள்..ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது..சென்னை மக்கள், விரைவில், இந்த கஷ்டத்தில் இருந்து மீண்டு வரணும்னு பிரார்த்திக்கிறேன்!..

    அடுத்த முறை, அன்னமூர்த்தியை கட்டாயம் தரிசிக்க வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்!..

    ReplyDelete
    Replies
    1. வாங்க, வாங்க, உங்களைப் பல நாட்களாகக் காணவில்லை என்றதும் சென்னை மழையில் மாட்டிக் கொண்டீர்களோ என நினைத்தேன். என் உறவினர்களும் ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கின்றனர்.

      Delete
  8. இதுபோல இயற்கையின் சீற்றங்களின் போதுதான் மக்களிடம் மனிதாபிமானத்தைக் காணமுடிக்றது. கூடவே ஆண்டவனின் அருளும் தேவைப்படுகிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆண்டவன் அருளுக்காக எப்போதும் பிரார்த்தனைகள் உண்டு. இயற்கைச் சீற்றத்தின் இந்த அளவு கோரம் எதிர்பாரா ஒன்று! :(

      Delete